February 10, 2009

ஈழக்குறிப்புகள் : ஈழமும் இந்தியாவும்

1) ஒரு வேளை ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால், இந்தியா ஈழப்போராட்டத்தை ஆதரித்திருக்குமா?

ஆதரித்திருக்காது. ஈழத்தமிழர்கள் நலன் மீது இந்தியாவுக்குத் துளி அக்கறையும் கிடையாது. அக்கறைகொள்வதால் லாபம் எதுவும் இல்லை என்பதுதான் காரணம். மாறாக, இலங்கை அரசுக்கு ஆதரவு அளிப்பது பல வழிகளில் லாபம் அளிக்கக்கூடியது. இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்வதை நியாயப்படுத்த ராஜீவ் காந்தி இன்று காங்கிராஸால் பயன்படுத்தப்படுகிறார்.

2) பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஈழம் பற்றிய இந்தியாவின் பார்வை மாறுமா?

ஈழப் பிரச்னையில் காங்கிரஸின் கொள்கைக்கும் பா.ஜ.கவின் கொள்கைக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. தவிரவும், பா.ஜ.க. அகண்ட பாரதக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் கட்சி. ஆளும் சிங்களக் கட்சியின் கொள்கை, அகண்ட இலங்கை. அந்த வகையில், நரேந்திர மோடிக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் நிறைய ஒற்றுமைகள். சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து இவர்கள் கவலைப்படமாட்டார்கள். அவர்களை அழித்தொழிக்கவே விரும்புவார்கள். பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவேன் என்று முழங்கும் பா.ஜ.க.வுக்கும் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்களர்களைக் குடியேற்றும் இலங்கை அரசுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்ன?

3) இந்தியா இதற்கு முன்னால் பலமுறை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்திருக்கிறதே? இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் ஈழப்போராட்டத்தை அங்கீகரித்து ஆதரித்திருக்கிறார்களே? புலிகளுக்கு விசேஷ பயிற்சிகளையும் அளித்திருக்கிறார்களே? தமிழர்களின் நலன்மீது அக்கறை இல்லாமலா இவை சாத்தியமாயிற்று?

இதற்கான விடையை மன்மோகன் சிங் அரசே பல முறை தெளிவாகச் சொல்லிவிட்டது. இலங்கைக்கு இன்று நாங்கள் ஆயுதங்கள் வழங்கவில்லை என்றால் சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையை கைக்குள் போட்டுக்கொண்டுவிடும். அதற்காகவாவது நாம் இலங்கை அரசுடன் ஒத்துழைத்துதான் தீரவேண்டும். இதன் பொருள், இலங்கை மீது அதிகாரம் செலுத்த இந்தியா விரும்புகிறது என்பதுதான். உலகத்தின் பிக் பிரதராக அமெரிக்கா எப்படித் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறதோ, அப்படியே இந்தியாவும் தன்னை ஆசியாவின் பிக் பிரதாக முன்னிறுத்திக்கொள்ள விரும்புகிறது. வர்த்தக ரீதியிலும் (இலங்கை மார்க்கெட்டை முழுவதுமாகப் பிடித்துக்கொள்ளலாம்), ராணுவ ரீதியிலும் (படைத்தளங்கள் அமைத்துக்கொள்ளலாம்) இலங்கை முக்கியத்துவம் கொண்ட பிரதேசம். இன்னொரு நாட்டுக்கு இலங்கையை விட்டுக்கொடுக்கமுடியாது. குறிப்பாக, எதிரி நாடுகளுக்கு.

எப்படி கிடைக்கும் இலங்கை? நட்பாக இருப்பதன் மூலம். அல்லது, மிரட்டுவதன் மூலம். இரண்டையும் இந்தியா செய்து பார்த்திருக்கிறது. புலிகளையும் பிற இயக்கங்களையும் வளர்த்துவிட்டு, அவர்கள் மூலம் இலங்கையை மிரட்டி இருக்கிறது. அதனால் புலிகள் பலனடைந்தனர் என்றாலும் இந்தியாவின் நோக்கம் அதுவல்ல. கொஞ்சியும் இருக்கிறது இந்தியா. இந்தா கச்சத்தீவு என்று அன்று அள்ளிக்கொடுத்ததன் மூலம். தமிழர்கள் மீது தாக்குதல் தொடுங்கள், கண்டுகொள்ளமாட்டோம் என்னும் நிலைப்பாட்டை இன்று எடுத்துள்ளதன் மூலம். வழிமுறைகள் மாறலாம். நோக்கம் ஒன்றேதான்.

ஒருவேளை, விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை அரசாங்கத்தை முற்றிலுமாகக் கைப்பற்றி ஆட்சியமைத்துவிட்டால், இந்தியா உடனே புலிகள் மீதான தடையை விலக்கி, புலிகளை ஆதரிக்க ஆரம்பித்துவிடும். பிரபாகரனா ராஜபக்ஷேவா என்பதல்ல கேள்வி. அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

4) ஈழம் உருவாவதை தி.மு.க. ஆதரிக்குமா?

ஈழக்கோரிக்கையை ஆதரிக்கவேண்டுமானால் மத்திய அரசாங்கத்தை எதிர்த்தாகவேண்டும். தி.மு.க.வுக்கு இதில் ஆர்வம் இல்லை என்பது வெளிப்படை. யாராவது பிரிவினை கோஷம் போட்டால் ஒழித்துவிடுவோம் என்று இந்தியா முன்னர் மிரட்டியபோது, அவசரஅவசரமாகப் பெரியாரின் தனி திராவிட நாடு கொள்கையை கைகழுவியது தி.மு.க. தனிதேசக் கொள்கையை தி.மு.க. என்று்ம் ஆதரிக்காது.

(தொடரும்)

10 comments:

TAMILSUJATHA said...

//ஒருவேளை, விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை அரசாங்கத்தை முற்றிலுமாகக் கைப்பற்றி ஆட்சியமைத்துவிட்டால், இந்தியா உடனே புலிகள் மீதான தடையை விலக்கி, புலிகளை ஆதரிக்க ஆரம்பித்துவிடும். பிரபாகரனா ராஜபக்ஷேவா என்பதல்ல கேள்வி. அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.//

ரொம்ப சரியான பார்வை!

குகன் said...

பாரிஸ்டாவை ஆதரித்த அமெரிக்கா, அவர் வீழ்ச்சி பிறகு பிடல் கேஸ்ட்ரோவுடன் அமெரிக்க பேச்சு வார்த்தை நடத்த வில்லையா...!!!

இலங்கை விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவை போல தான்.

ஆ.ஞானசேகரன் said...

///உலகத்தின் பிக் பிரதராக அமெரிக்கா எப்படித் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறதோ, அப்படியே இந்தியாவும் தன்னை ஆசியாவின் பிக் பிரதாக முன்னிறுத்திக்கொள்ள விரும்புகிறது./// உங்கள் கணிப்பு சரி என்றே தோன்றுகின்றது

Anonymous said...

ஈழத்தமிழர்கள் நலன் மீது இந்தியாவுக்குத் துளி அக்கறையும் கிடையாது. அது வேறு விடயம். ஆனால் கேவலமான கொடுமையான புலிகளை உலகத்தில் யாருமே ஆதரிக்க முடியாது. கூடாது.அது அழிவை மட்டும்தான் இலங்கை தமிழருக்கு தரும்.

somasundaram said...

“ஒரு வேளை ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால், இந்தியா ஈழப்போராட்டத்தை ஆதரித்திருக்குமா?ஆதரித்திருக்காது.”

அருமையான கருத்து.

அமெரிக்கா ஒவ்வொரு நாட்டிலும் தன்னாட்டு (பன்னாட்டு) நிறுவனங்களுக்கு வியாபாரத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகளோடு இணக்கம் காணப்பட்டால் ஒப்பந்தம் போடுகிறது இல்லையென்றால் அரசியல் நிர்ப்பந்தம் செய்கிறது.அதேபோன்றுதான் இந்திய அரசும் உள் நாட்டு பெருமுதலாளிகளுக்கான சந்தையை இலங்கையில் தேடுகிறது, அதற்கான பிரதி உபகாரத்தை இலங்கைக்கு ராணுவ உதவிகளையும் அரசியல்(தமிழினம் அழிவதை கண்டுகொள்ளாமல் இருப்பது)ரீதியாகவும் உதவுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதற்கான காரணம் தேடுவதில் தான் நம் அரசியல் கட்சிகளிடம் மாற்றுக்கருத்து நிலவுகிறது.

தமிழினம் அழியவேண்டும் என்ற ஆசை இந்திய அரசிற்கு இல்லை மாறாக இந்திய முதலாளிகளுக்கு சந்தை வேண்டும்.

Arnold Edwin said...

நடுநிலையான கருத்துக்கள். நிச்சயமாக இந்தியரின் உதவியால் ஈழம் உருவாகும் வாய்ப்புகளில்லை.

Anonymous said...

அன்புள்ள வலை நண்பர்களே,
இலங்கையிலே நடக்கும் இனப்படுகொலைக்கு நாம் ஏதாவது செய்ய முடியாத என்று நினைகிரீர்கள, அதற்காக முத்துகுமாரை போல் உயிர் தியாகம் எல்லாம் செய்ய வேண்டாம். http://www.megaupload.com/?d=LCVNYAT9 இந்த slideshow- வை download செய்து உங்கள் நண்பர்களுக்கு குறிப்பாக உங்கள் வடஇந்தியா அல்லது வெளிநாட்டில் உள்ள பிற நாட்டு நண்பர்களுக்கு அதிலும் குறிப்பாக lobbying power -இல் உள்ள நண்பர்களுக்கு இமெயில் அனுபவும். நான் எனது UN மற்றும் பல பன்னாட்டு அமைப்புகளில் வேலை செய்யும் பல நண்பர்களுக்கு அனுபினேன் அது அவர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஏனென்றால் LTTE என்பது எந்த ஒரு குறிகொள்ளும் இல்லாத தீவிரவாத அமைப்பு என்றே நம்பவைக்கப்பட்டுள்ளது. ஆகவே பன்னாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம். Nithy Toronto

தமிழ் தொண்டன் said...

// யாராவது பிரிவினை கோஷம் போட்டால் ஒழித்துவிடுவோம் என்று இந்தியா முன்னர் மிரட்டியபோது, அவசரஅவசரமாகப் பெரியாரின் தனி திராவிட நாடு கொள்கையை கைகழுவியது தி.மு.க. தனிதேசக் கொள்கையை தி.மு.க. என்று்ம் ஆதரிக்காது. //

சரியா சொன்னிங்கா... தமிழின தலைவர் சிறந்த சுயனலவாதி, இவருக்கு பதவி, பணம் பிறகு குடும்பம் ... இதற்காக தமிழையும், தமிழர்களையும் விற்றலும் விற்றுவிடுவர் ....

Tamizhagan said...

Dear Marudhan,

Well written article!, please let others know about the genocide of Tamils in Eelam (similar to vietnam and other tragic places recent report suggests that tamil peoples are bombed with chemical weapons/cluster bombs etc). Our India and other countries are complicitly involved in this crime. Like Vietnam they want to kill as many as they can before they realise their futile attempt.
''Those who cannot learn from history are doomed to repeat it'' (George Santayana).

Anonymous said...

I am a tamilian from India. Lot of tamilians like me was against the brutal assassination of Mr. Rajiv Gandhi and revoked our soft corner for LTTE. Sri sabarathnam or K. Padmanabha or similar ealam leaders are not singhalese. Prabakaran is nobody but a cruel person, who is blood thirsty and trying to evolve as a dictator by using tamils. suffering only because of Prabakaran.

Mr.Rajiv's brutal assasination in the land of tamilnadu cannot be ignored as easy as it is potrayed by some ltte favoring writers. We will not forgive this brutal action.