July 24, 2011

நார்வே படுகொலை : பின்னணியும் பயங்கரமும்

நோபல் அமைதிப் பரிசு வழங்கும் அமைதிப் பூங்காவாகக் கருதப்பட்டு வந்த நார்வேயின் பிம்பம் இன்று சிதறிக்கிடக்கிறது. ஜூலை 22 அன்று Anders Brevik (கூகிளின் இப்போதைய பிரபலம்) நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் ஓஸ்லோ குண்டு வெடிப்பிலும் 93 பேர் (எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது) கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  'இந்தத் தாக்குதல் கொடூரமானதாக இருக்கலாம், ஆனால் அவசியமானது!'  என்று சரணடைந்த குற்றவாளி சாட்சியம் அளித்துள்ளார். முன்னதாக, 1500 பக்கங்களுக்கு மேல் நீளும் நீண்ட, விரிவான தன் விளக்க அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்.  சுருக்கமான ஒரு யூட்யூப் வீடியோவும். (தற்சமயம் அது நீக்கப்பட்டுள்ளது).

அல் காயிதாவோ வேறு எந்த இஸ்லாமிய அமைப்போ இந்தத் தாக்குதலில் சம்பந்தப்படவில்லை என்பது தெரிந்தவுடன் ஊடகங்கள் அலுப்படைந்து நார்வே படுகொலையைச் சற்றே பின்னுக்குத் த்ளளிவிட்டன. குற்றவாளி அன்டெர்ஸ் ஒரு இடதுசாரி அபிமானியாக இருந்திருந்தால்கூட நிம்மதி கிடைத்திருக்கும். அல்லது, ஒரு முஸ்லிமாகவாவது இருந்திருக்கலாம். இரண்டும் இல்லை. மாறாக, இஸ்லாமியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் அடியோடு வெறுக்கும் கிறிஸ்தவ அடிப்படைவாதியாகவும் வலதுசாரி தீவிரவாதியாகவும் அன்டெர்ஸ் இருந்து தொலைத்துவிட்டான். தன் மத, அரசியல் அடையாளங்களை ஒருவேளை அவன் வெளியிடாமல் இருந்திருந்தால், மனநலம் குன்றியவன் என்று சொல்லி வழக்கை முடித்துக்கொண்டிருக்கலாம். அதற்கும் இடமில்லாமல் போய்விட்டது.

பிரச்னை என்னவென்றால் நார்வேயில் 79 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், பழமைவாத கிறிஸ்தவ மதத்துக்கு அங்கே ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு வெள்ளையின நார்வே குடிமகனை, ஒரு வலதுசாரியை, ஒரு தீவிர கிறிஸ்தவ அபிமானியை தீவிரவாதியாக முன்னிறுத்துவது பல வகைகளில் அரசாங்கத்துககுச் சங்கடத்தையே ஏற்படுத்தும். மேலும், கொலையாளி அன்டெர்ஸ் முன்வைத்துளள காரணங்களும் அரசியலும் சித்தாநதமும் கிட்டத்தட்ட நார்வே அரசாங்கத்துககு ஏற்புடையவையே என்பதால் சங்கடங்கள் அதிகமாகின்றன.

நார்வே மட்டுமல்ல பல ஐரோப்பிய நாடுகள் அன்டெர்ஸின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மார்க்கெல் சிறிது காலத்துக்கு முன்பு வெளிப்படையாகத் தன் கவலையை பகிர்ந்துகொண்டார். 'Multikulti has failed'. இதன் பொருள் பன்முகக் கலாசாரம் தோல்வியடைந்துவிட்டது. இதன் விரிவான பொருள், பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் மக்கள் ஒரே நாட்டில் ஒன்றிணைந்து வாசிக்கும்  வாழ்வியல் முறை தோல்வியடைந்துவிட்டது. என்றால் ஒரு நாட்டில் பெரும்பான்மை ஆதிக்கத்தைத் தவிர்க்கமுடியாது. பெரும்பான்மையினருக்கு மட்டுமே முன்னுரிமையும், வசதி, வாய்ப்புகளும் கொடுக்கப்படும். அதுதான் இயற்கையானதும்கூட. பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும்கூட இதனை ஒப்புக்கொள்கின்றன.

இஸ்லாமியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் அன்டெர்ஸ் அடியோடு வெறுத்து ஒதுக்குவதை இந்தப் பின்னணியில்தான் நாம் பார்க்கவேண்டும். கூடுதலாக, அன்டெர்ஸ் ஒரு கிறிஸ்தவ அடிப்படைவாதியாகவும் இருந்திருக்கிறான். முன்பே பார்த்தபடி, நார்வேயில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகாரபூர்வமாக 79.2 சதவீதமாக இருந்தாலும், 20 சதவீதம் பேரே கிறிஸ்தவத்தை மெய்யாக ஏற்றுக்கொண்டு வழிபடுகிறார்கள். இது பல அடிப்படைவாதிகளைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. ஒரு நாட்டில் பெருமபான்மையினரின் மதம் தன் அதிகாரத்தை இழந்து வருகிறது என்றால் அந்தப் பெரும்பான்மையினர் தங்கள் அதிகாரத்தை இழந்து வருகிறார்கள் என்று பொருள். இதனை உணர்ந்தே அடிப்படைவாதிகளும் அவர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும் சரிந்துகொண்டிருககும் தங்கள் மத அதிகாரத்தைத் தூக்கிநிறுத்த முயற்சி செய்து வருகின்றன.

அன்டெர்ஸ் அவர்களில் ஒருவன். நார்வேயின் பெரும்பான்மையினர் மத நம்பிக்கை இல்லாமல் இருப்பதை, இஸ்லாம் ஒரு முக்கிய மதமாக வளர்ந்து வருவதை, இஸ்லாமியர்கள் செல்வாக்கு பெற்று வருவதை அவனால் சகித்துக்கொண்டிருககமுடியவில்லை. பன்முகக் கலாசாரம் ஒரு பிற்போக்கான சித்தாந்தமாக அவனுக்குத் தோன்றியிருக்கிறது. பெரும்பான்மையினரோடு சிறுபான்மையினரும் ஒன்றாக வாழமுடியும் என்னும் கருத்தாக்கம் அவன் மனத்தைப் போட்டு அரித்திருக்கவேண்டும். அரசியல்வாதிகளால் ஒன்றுமே செய்ய இயலாமல் இருப்பதைக் கண்டு அவன் ஆத்திரம் கொண்டிருக்கவேண்டும். அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளால் சாதிக்கமுடியாததை தன்னால் சாதிக்கமுடியும் என்று அவன் நம்பியிருக்கிறான்.

ஆத்திரமும வெறுப்புணர்வும் மட்டும் அன்டெர்ஸை உந்தித்தள்ளவில்லை. கண்மூடித்தனமான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடுவதோ, இறந்துபோவதோ அவன் நோக்கமாக இருந்திருக்கவில்லை. எதற்காக இந்தப் படுகொலை நடத்தப்பட்டது என்பதை நார்வே மக்கள் உணரவேண்டும் என்று அவன் விரும்பியிருக்கிறான். தன் சித்தாந்தத்தை அவர்கள் கற்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறான். இந்தப் படுகொலைகளுக்குப் பிறகாவது நார்வே பெருமபான்மையினர் எழுச்சி பெற்று இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும் அரசாங்கத்தின் செயலற்றத் தன்மைக்கு எதிராகவும் போராடவேண்டும் என்று அவன் எதிர்பார்த்திருக்கிறான். அந்த வகையில் வலுவான காரணங்களுடன் தெளிவாகத் திட்டமிடப்பட்டு இநத்ப் படுகொலைகள் அரங்கேறியிருக்கின்றன.

அன்டெர்ஸின் கோபங்களையும் நியாயங்களையும் தர்க்கங்களையும் சித்தாந்த உண்மைகளையும் ஆர்.எஸ்.எஸ் கட்சியாலும் அதன் அடிப்பொடி அமைப்புகளாலும் நன்கு புரிந்துகொள்ளமுடியும். அவர்களுடைய கவலைகளைத்தான் அன்டெர்ஸ் பதவு செய்திருக்கிறார். அவர்களுடைய ஆதங்கங்களைத்தான் அன்டெர்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்து மத அதிகாரத்தை மீட்டெடுக்கவும் இந்து மதவாதத்தை மக்கள் மனத்தில் விதைக்கவும் இந்த இந்திய வலதுசாரி அமைப்புகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைத்தான் அன்டெர்ஸ் நார்வேயில் மேற்கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில், அன்டெர்ஸ் அவர்களுக்கு ஓர் அவதாரப் புருஷன். அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உண்மை இதுவே.

மேலதிக விவரங்களுக்கு:

1)  நார்வே படுகொலை பற்றிய பின்னணி தகவல்களை இங்கும், இந்தப் படுகொலைக்கான சித்தாந்தப் பின்னணி பற்றி இங்கும் கலையரசன் எழுதியிருக்கிறார்.

2) கொலையாளியின் ஆயிரம் பக்கச் சித்தாந்த விளக்கவுரை.

3) நார்வே படுகொலையை ஐரோப்பா பெரிதாக எடுத்துககொள்ளாது என்று வாதாடும் பிரவீன் ஸ்வாமியின் இன்றைய தி ஹிந்து கட்டுரை.

4)  நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாகின்றன.

13 comments:

தமிழ் said...

பிற தமிழ் ஊடகங்கள் எடுக்காத இப்பிரச்சனையின் வீரியத்தை உணர்த்தும் கட்டுரை.
TRP மீது மோகம் உள்ள ஊடகங்கள் மேல் உங்கள் எழுத்தால் சாட்டை சுழற்றுங்கள்.

Anonymous said...

ஏற்கனவே கேட்க விரும்பிய கேள்வி. இப்போது கேட்கிறேன். 'இடதுசாரி', 'வலதுசாரி' என்றால் என்ன?(எனக்கு உண்மையாகவே அர்த்தம் தெரியாது)

(உங்களின் இந்த கட்டுரையில் இடதுசாரி என்ற வார்த்தை வருகின்றது. நான் இந்த கட்டுரையை எழுதியிருந்தால் அந்த வார்த்தைக்கு பல பேருக்கு அர்த்தம் தெரியாதே என்ற பிரஞ்ஞை எனக்கு வந்திருக்கும். பிராக்கெட்டுக்குள் அதன் அர்த்தத்தையும் எழுதியிருப்பேன்(I don't know its meaning now). எழுதும் போதும் பேசும் போதும் உங்களுக்கு புரியும் விதத்தில் எழுதிக் கொண்டு(orபேசிக் கொண்டு)மட்டும் போகாதீர்கள்.பிளாகர் hackக்குகளை எழுதும் பல பேர் தங்களுக்கு புரியும் விதத்தில் எழுதிக் கொண்டு அடுத்தவர்களுக்கு புரியும் விதத்தில் எழுதி விட்டதாய் நினைக்கிறார்கள்.)

...d...

எழில் said...

நார்வே படுகொலை பற்றி தமிழில் நான் படித்த முதல் நல்ல கட்டுரை உங்களுடையதே

மருதன் said...

d :

நீங்கள் முன்பு இசை பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தீர்கள். எனக்கு அது பற்றி தெரியாததால் நான் பதிலளிக்கவில்லை.

இடதுசாரிகள், வலது சாரிகள் ஆகியவை பிரெஞ்சுப் புரட்சியின் போது இணைக்கப்பட்ட வார்த்தைகள்.

இடதுசாரிகள் என்பவர்கள் புரட்சிகர மாற்றத்தை, சமத்துவமான சமூகத்தை விரும்பியவர்கள். பிரெஞ்சுப் புரட்சியை இவர்கள் ஆதரித்தார்கள். இவர்கள் பிரெஞ்சு பாராளுமன்றத்தில் இடது பக்கம் அமர்ந்திருந்தனர்.

ஏற்றத்தாழ்வான சமூகச் சூழலே போதுமானது, அதை மாற்றவேண்டிய அவசியமில்லை என்று நினைத்தவர்கள் வலதுசாரிகள். இவர்கள் முடியாட்சியை ஆதரித்தார்கள். பாராளுமன்றத்தில் இவர்கள் வலது பக்கம் அமர்ந்திருந்தனர்.

நாளடைவில், ஒருவருடைய அரசியல் நிலைப்பாட்டை வைத்து அவர் வலதுசாரி என்றும் இடதுசாரி என்றும் அழைக்கப்பட்டார்.

Anonymous said...

What is the connection between Norway and RSS? Why are you dragging RSS here? You intellectuals cant write anything without damaging the name of RSS. Can you?

மருதன் said...

நார்வே படுகொலை எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டது. இந்தப் படுகொலைக்கான காரணத்தை திங்கள் அன்று நீதிமன்றத்தில் சொல்லப்போவதாக அன்டெர்ஸ் கூறியிருக்கிறார்.

தீவிரவாதிகளைக் காட்டிலும் தேசியவதிகளால்தான் உலகில் அதிக பாதகங்கள் நேர்ந்திருக்கின்றன என்கிறது இந்த அல்ஜசீரா கட்டுரை. http://english.aljazeera.net/indepth/opinion/2011/07/201172482841769458.html

கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன் said...

கவலை தரக்கூடிய போக்கு.

நார்வே படுகொலை பற்றி தமிழில் நான் படித்த முதல் நல்ல கட்டுரை உங்களுடையதே

Anonymous said...

அப்படியே இன்னொரு கேள்வி

பொருள்முதல்வாதி என்றால் என்ன? கருத்து முதல்வாதி என்றால் என்ன?...d

NO said...

// தீவிரவாதிகளைக் காட்டிலும் தேசியவதிகளால்தான் உலகில் அதிக பாதகங்கள் நேர்ந்திருக்கின்றன என்கிறது இந்த அல்ஜசீரா கட்டுரை. //

தீவிரவாதிகளை காட்டிலும், தேசியவாதிகளை காட்டிலும் பல பல பல மடங்கு பாதகங்கள் ஏற்ப்படுத்தியது கம்யூனிச கோரத்தாண்டவமே!! இதை சொல்ல அல்- ஜசீரா வேண்டாம். உலகில் உள்ள அனைத்து நடுநிலை சரித்திர ஆசிரியர்களும் வாசகர்களும் போதும்!!!!

மருதன் என்றோர் மனிதரடா
கண்கள் இருந்தும் அவர் குருடரடா

கரைந்த கட்டிடங்கள் கண்முன்னே
சிதைந்த கனவுகளும் நம் முன்னே
உடைந்த உலகங்கள் உளுத்த பின்னே
உயிருடன் இருக்கு பார் பிணமென்றார்
அதன் இதயம் எத்தனை கனமென்றார்

மருதன் என்றோர் மனிதரடா
கண்கள் இருந்தும் அவர் குருடரடா

செத்த சாய்ந்து சாக்கடைக்குள்
சத்தமுடன் போயின சக்கைகள்

வெத்து வேட்டு வம்பர்கள்
விற்று பிழைக்க வழிதேடி
நச்சு நதியில் கைவிட்டார்
வந்த கழிவை திரையிட்டார்

மருதன் என்றோர் மனிதரடா
கண்கள் இருந்தும் அவர் குருடரடா

மாண்டவர் புதைந்த மண் மணக்குமோ
உங்கள் ஆண்டவர் படைத்த மரணங்கள் சிறக்குமோ
கொலைகளுக்கு கொள்கை பெயர் சூட்டினார்
கொடூரத்திற்கு குரல் கொடுப்போம் என போற்றினார்

மருதன் என்றோர் மனிதரடா
கண்கள் இருந்தும் அவர் குருடரடா

ஸ்டாலினுக்கும் மாவோவிற்கும் காவடி தூக்குவார்
அவர்தம் செய்த கொலைகளுக்கு கரவொலியும் எழுப்புவார்

நச்சுக்கு கொடிதூக்கி நால் திசையிலும் அதன் நாமம் பாடும்
நல்லவன் சொல்லுகிறான் கேளுங்கள்
தேசியம் பேசுபவன் பாதகனாம், நாடு நலம் நினைப்பவன் கிராதகனாம்

மருதன் என்றோர் மனிதரடா
கண்கள் இருந்தும் அவர் குருடரடா

See how skillfull Mr Marudhan projects the henious acts of a madman as a representation of people who talk about their Nation. Such communist ideologues and lackeys and their proxy's in the intelectual circuit excell in this type of duplicity. The modus operandi of this tribe is quite well know now. Fortunately none gets drawn into such crap as most of the communists originals and their plants inside the society have become extinct. The remaining once lilke Mr. Marudhan keep pouring such nonsense that nobody bothers to read!!

Well you cannot cheat all the people all the time. But why should I worry. Only Mr. Badri has to.

ssv said...

i think writers(who should be interested in history and world view ) should make films.then only international views can be obtain in Tamil films. what you say?

மருதன் said...

d :

எது உலகில் முதலில் தோன்றியது? கருத்தா அல்லது பொருளா? இந்த உலகம் எப்படித் தோன்றியது? கடவுள் படைத்ததாலா? எனில் முதலில் தோன்றியவர் கடவுளா?

கருத்துமுதல்வாதம் கடவுளை ஏற்கிறது. கடவுளே நம்மையும் பிற பொருள்களையும் படைத்தார் என்று நம்புகிறது. பொருள்முதல்வாதம் கடவுள் வாதத்தை மறுக்கிறது. பொருளே பிரதானம் என்கிறது. இது மிகவும் அடிப்படையான, சுருக்கமான விளக்கம். மேற்கொண்டு அறிய ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய மார்க்சிய மெய்ஞானம் வாசியுங்கள். NCBH வெளியீடு.

இரா.தீபக் / R.Deepak said...

@Anonymous 1
Bravik's manifest states that Right Wing ideologists should look at RSS and should work with RSS. He idolises RSS. He advises them Infact he has made recognition medals in Varanasi. I hate to give a Hindu link but I dont have any other link for this

http://www.thehindu.com/news/national/article2293829.ece

http://www.breakingnewsonline.net/news/10133-norway-killer-anders-behring-breivik-hails-hindutva.html

@மருதன்
உங்கள் கட்டுரை மிகவும் தட்டையாக எழுதப்பட்டிருக்கிறது. வெளிநாட்டவர் பிரச்சினை ஐரோப்பாவில் விவாதித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு வாழ்க்கை பிரச்சனை.அவர்கள் வேலைகள் பறிபோய் கொண்டிருப்பதோடு, குடுயேருபவர்கள் அந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு கட்டுபடாமல், தங்கள் சட்ட திட்டங்களை அங்கே திணிக்க முயல்கிறார்கள் என்பது தான் ஐரோப்பிய மக்களின் வாதம். பெரும்பாலும் இளைஞர்கள் தான் வெளிநாட்டவர்கள் மீது வன்முறையை பிரயோகிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் வெளிநாட்டவர்களோடு சேர்ந்து ஒரு சுமூகமான தீர்வுக்கு வர வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

பிரிட்டனில் பிரிட்டிஷ் நேஷனல் பார்ட்டி(BNP) எனும் தீவிர வலதுசாரி கட்சி, ஐரோப்பிய பார்லிமெண்டில் இரண்டு இடங்களை வெண்ற போது பிரிட்டிஷ் மக்களே திகைத்து, அவர்களுக்கு எதிராக விழிப்புணர்வை பரப்பினர். நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 2% வாக்குகளே BNP பெற முடிந்தது. அக்கட்சியின் தலைவர் Mick Griffinsஐ dick என்று ஒரு குடுமகனால் நேருக்கு நேர் பிபிசி கேள்வி நேரத்தில் கேட்க முடிந்தது.

தட்டையாக ஐரோப்பிய கிருத்தவர்கள் முஸ்லீம்களையும் மற்ற நாட்டவர்களையும் வெறுக்கிறார்கள் என்று சொல்வது அவர்கள் பிரச்சனையை நாம் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே காட்டும். வெளிநாட்டவர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அதிருப்தியை நியாயப்படுத்தும்.

UKKASHA said...

VERY GOOD NADUNILAIYAANA KATTURAI