இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தில் பேட்டி இந்த வார அவுட்லுக் இதழில் வெளிவந்துள்ளது. பேட்டியில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்கள்.
- அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த முயற்சியால் இலங்கையின் களச்சூழலில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.
- இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இலங்கை ஒரு நட்பு நாடு. இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது ஒரு தாற்காலிக பின்னடைவுதான்.
- இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று சிலர் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். (ஆனால் நாடாளுமன்றத்தில் இப்படி யாரும் குறிப்பிடவில்லை). இவ்வாறு சொல்பவர்களுக்கு இங்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை; இனப்படுகொலை என்றால் என்ன என்றும் புரியவில்லை.
- ஜெனிவா தீர்மானம் என்பது இலங்கைக்கு அவப்பெயரை உண்டாக்குவதற்கான முயற்சியே.
- இலங்கைமீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில சானல்கள் லண்டனில் இருந்தபடி வெட்டியும் ஒட்டியும் எடுத்த காட்சிகளைப் பார்த்து சிலர் இலங்கையைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
- பாலச்சந்திரன் ஒரு பங்கரில் இருப்பதைப் போன்ற படம் வெளிவந்திருக்கிறது. அது புலிகளின் பங்கராகக்கூட இருக்கலாம். அடுத்த காட்சியில் பாலச்சந்திரன் இறந்துகிடக்கிறார். இரண்டையும் எடுத்தது ஒரே காமிரா என்கிறார்கள். இருக்கலாம். ஆனால் ஒரே காமிராவை வைத்து இரு வேறு இடங்களில் காட்சிகளை எடுத்திருக்கமுடியும் அல்லவா?
- பாலச்சந்திரன் உள்பட பிரபாகரனின் குடும்பத்தினர் போரில் கலந்துகொண்டனர்.
- இலங்கை ராணுவத்தின் தரப்பில் சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். பொதுமக்களில் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம். காரணம் யார் புலிகள், யார் பொதுமக்கள் என்பதைக் கண்டறிவது சாத்தியமில்லாததாக இருந்தது.
- சர்வதேச சமூகம் சொல்வதைக் கேட்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், என்ன செய்யவேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம்.
2 comments:
கம்யூனிஸ்ட் பக்(புத்)தியை காண்பித்தாயிற்று.
இவர் என்றில்லை.உண்மை நிலவரத்தை இப்போவாவது கூற யாராவது இருக்கிறார்களா?
Post a Comment