November 9, 2015

பிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை!

பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவடைகிறது.

  • நாங்கள் தோற்றதற்குக் காரணம் அரித்மெடிக். நிதிஷ் குமாரின் பர்சனாலிட்டியும் லாலுவின் ஓட்டு வங்கியும் அவர்களுக்கு உதவியிருக்கிறது. 
  • ஆர்எஸ்எஸ் இடஒதுக்கீட்டுக்கு எதிரியல்ல. அப்படி அவர்கள் சொல்லவும் இல்லை. அப்படி மக்கள் நினைத்தால்தான் நாங்கள் தோல்வியடைந்தோம் என்று சொல்லமுடியாது. அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
  • நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தேர்தல் பிரசாரங்களில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டது எப்படித் தவறாகும்?
  • வெற்றிக்கு அனைவரும் பொறுப்பேற்பது போல் தோல்விக்கும் அனைவரும் பொறுப்பேற்கவேண்டும். மோடி அல்லது அமித் ஷாவைத் தனிமைப்படுத்தி குற்றம்சாட்டமுடியாது.
  • பிகார் எங்களைத் தடுத்து நிறுத்தாது. பொருளாதாரச் சீர்திருத்தங்களை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்.
  • நிதிஷ் நிச்சயம் எங்களுடைய ஜிஎஸ்டி மசோதாவை ஏற்பார் என்று நம்புகிறேன். காங்கிரஸுடன் அணிசேர்ந்துவிட்ட ஒரே காரணத்துக்காக அவர் இதனை எதிர்ப்பார் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில் இது அவருக்குத்தான் உபயோகமாக இருக்கும். பிகார் வளர்ச்சியடையும்.
  • ஓர் அரசியல்வாதியாக இருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். தேர்தல் பிரசாரங்களில் சில சமயம் உதிரி வாசகங்கள் சிலவற்றைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அந்த உதிரி வாசகங்கள் எங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டன என்று ஏற்க இயலாது.
  • சிலரால் யோசித்து, புத்திசாலித்தனமாகப் பேசமுடியாது. ஆனால் அவர்களைத்தான் மீடியா வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குற்றங்கள் அங்கும் இங்கும் நடைபெறுகின்றன. தாத்ரி போல் ஏற்கமுடியாத விஷயங்களும் நடைபெறுகின்றன. அவற்றுக்கும் இப்படிப் பேசுபவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
  • இந்தியாவில் சகிப்புத்தன்மையில்லை என்று சொல்வதை ஏற்கமுடியாது.
  • மோடியின் நம்பகத்தன்மை குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுவதை ஏற்பதற்கில்லை.
  • மூடிஸ் வெளியிட்ட அபாய அறிவிப்பு தவறானது.


No comments: