April 24, 2011

சாய் பாபா உயிர்த்தெழுந்தார்!


இதுவரை நைன்டி நைன் பர்சென்ட் இறைத்தன்மை வாய்க்கப் பெற்றிருந்த சாய் பாபா, தன் மரணத்தின் மூலம் நேற்று முழுமையான கடவுளாகப் பரிணமித்துவிட்டார்.  இயேசு கிறுஸ்துவுக்குக்கூட வாய்க்கப் பெறாத அற்புதம் இது. இறப்பில் இருந்து உயிர்த்தெழுந்து வருவதற்கு இயேசுவுக்கு மூன்று தினங்கள் தேவைப்பட்டன என்கிறது பைபிள். ஆனால் மறைந்த சில நிமிடங்களில் சாய் பாபா இதோ, நம் கண் முன்னால் முழுக் கடவுளாகிவிட்டார்.

அன்னாரின் பூதவுடல் இரு தினங்களில் புட்டபர்த்தியில் இருந்து மறைந்துவிடும் என்றாலும் அவர் புகழுடல் நீடித்து நிலைத்து வாழப் போகிறது. உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கண்ணீருடன் புட்டபர்த்தியில் திரண்டுகொண்டிருக்கிறார்கள். சாதி, மதம், மொழி, இனம், நாடு, நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்து ஒரு பெரும் கூட்டம் சாய் பாபாவுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறது. பக்தர்கள் மட்டுமல்ல பகுத்தறிவுவாதிகளும் பாராட்டும் கடவுளாக மாறியிருக்கிறார் சாய் பாபா. 

'சாமியார்களைப் பொறுத்தவரை, போலி யார் அருள்மிகு சாய் பாபா போன்ற அசலானவர்கள் யார் என்பதை என்னால் கண்டுபிடித்துவிட முடியும்.  சாய் பாபா மக்கள் நலனுக்காக உழைத்தவர். ஏழைகளின் துயரங்களைத் துடைக்க விரும்பியவர். இவர்களைப் போன்றவர்கள் புனிதர்களைக் காட்டிலும் உயர்வானவர்கள். இன்னும் சொல்லப்போனால் கடவுளுக்கு இணையானவர்கள்.' முதல்வரும் பகுத்தறிவுவாதியுமான கலைஞர் கருணாநிதியின் நெகிழ்ச்சியான அஞ்சலி இது.

சாய் பாபாவைக் கடவுளாக்கிய அம்சங்கள் மூன்று.

1) இறைத்தன்மை
2) மக்கள் ஊழியம்
3) ஆன்மிக ஊழியம்

சாய் பாபாவின் இறைத்தன்மைக்குச் சான்றளிக்க குறைந்தது ஒரு கோடி பேர் முன்வருவார்கள். சிறுவயதில் மண்ணை உருட்டி சுமையான மாம்பழமாக மாற்றியமைத்ததையும், காற்றில் லட்டு பிடித்ததையும் பரவசத்துடன் விவரிக்க பால்ய நண்பர்கள் இருக்கிறார்கள். கையில் இருந்து விபூதி, வாயில் இருந்து சிவலிங்கம், அடிவயிற்றில் இருந்து 24 காரட் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பாபா வரவழைத்துக் கொடுத்ததை நினைவுகூரவும் கொண்டாடவும் சில லட்சம் பேர் திரள்வார்கள். படுத்த படுக்கையாக இருந்த கணவனும், கைக்குழந்தையும், பெற்றோரும், சகோதரர்களும், நண்பர்களும் பாபாவின் அருள் கிடைத்து குணமடைந்ததை கண்ணீர் மல்கி காவியமாக்க மேலும் பல லட்சம் பேர் வருவார்கள்.

சென்னைக்குக் குடிநீர் சேவை அளித்த சத்ய சாய் பாபாவின் சாய் செண்ட்ரல் டிரஸ்டை உச்சி முகர்ந்து பாராட்டுகிறார் தமிழக முதல்வர்.  பெங்களூர் சத்ய சாய் டிரஸ்டின் வொயிட்ஃபீல்ட் மருத்துவமனையின் இலவச சேவைக்கு ஈடுஇணையில்லை என்கிறார்கள் கர்நாடக மக்கள். இலவச மருத்துவக் கல்லூரி, இலவச கல்வி, இலவசச் சாலை, இலவச குடிநீர், இலவச உணவு என்று சத்ய சாய் டிரஸ்ட் வழங்கி வரும் மக்கள் நலச் சேவைகளைப் பட்டியலிட இந்த இடம் போதாது. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர் அவர். இறைவனாகிப்போனவரும் அவரே.

சாய் பாபாவின் ஆன்மிக ஊழியத்தால் பலனடைந்தவர்களின் எண்ணிக்கையும் பல லட்சம் இருக்கலாம். ஆம் இவர் எனக்கு ஊழியம் செய்தார் என்று கடவுளே முன்வந்து சாட்சியம் சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது. தன் திறமையால் பழைய ஷீரடி சாய் பாபாவின் புகழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நிகழ்காலத்தின் ஒரே கடவுளாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டவர் புட்டபர்த்தி பாபா.

மன்மோகன் சிங், அப்துல் கலாம், சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர், வாஜ்பாய், கருணாநிதி என்று பாபாவின் புகழ் பாட பல நூறு பிரபலங்கள் இங்கே இருக்கிறார்கள்.

எல்லாச் சாமியார்களைப் போலவே இவர் மீதும் தொடக்கம் முதலே பல குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளன. மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் இறைத்தன்மையைக் கிழித்துக்காட்ட வீடியோ ஆதாரங்கள் உள்ளன. மக்கள் நலப் பணிகளுக்குப் பின்னால் உள்ள மிரள வைக்கும் சாய் டிரஸ்டின் கோடிக்கணக்கான சொத்துக் கணக்கு பற்றி பல செய்திகள் வெளிவந்துள்ளன. அவரது ஆசிரமத்தில் மர்மமான முறையில் கொலைகளும்கூட நடந்துள்ளன. ஆனால், அனைத்தையும் சாய் பாபா புறந்தள்ளியிருக்கிறார். 'ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள். அதையெல்லாம் நீங்கள் கேட்கலாமா? என் மீது சந்தேகப்படலாமா? அப்படி என் மீது சந்தேகப்படுபவர்களை மெய்யான பக்தர்கள் என்று நான் அழைக்க முடியுமா?'

அறிவியல் உலகம் வெளிப்படையாகவே சாய் பாபாவை சவாலுக்கு அழைத்திருக்கிறது. விபூதி, தங்கச் சங்கிலி, சிவலிங்கம் என்று எதையாவது ஒன்றை எங்கள் முன்னிலையில் வரவழைத்துத் தர முடியுமா என்று கேட்டு பல கடிதங்களை சாய் பாபாவுக்குச் சென்றிருக்கின்றன. சாய் பாபா அவற்றுக்குப் பதிலளிக்கவில்லை.  இனியும் பதிலளிக்கப்போவதில்லை.

'இதுவரை மனிதராக வலம் வந்த சாய் பாபா, இனி கடவுளாக வலம் வருவார்!' என்று நீட்டப்பட்ட மைக் முன்னால உணர்ச்சிவசப்பட்டார் ஒரு வெள்ளைக்கார மாது. இனி அவர் பிம்பம் இப்படித்தான் கட்டமைக்கப்படும். இனி அவர் இப்படித்தான் நினைக்கப்படுவார். வணங்கப்படுவார். ஏற்கெனவே பூஜையறையில் படமாக வைத்து அவரைக் கும்பிட்டுக்கொண்டிருப்பவர்கள் ஒரு மாலையையும் சாத்திவிட்டு, தேங்காய் உடைத்து முறைப்படி கும்பிடலாம்.

கடவுள் எப்படி உருவாகிறார் என்பதை சாய் பாபா தன் வாழ்வின் மூலமும் மரணத்தின் மூலமும் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். ஒரு சாமியாரர்ல் தன் வாழ்நாளில் லட்சம் கோடி சொத்தையும் அதைவிட அதிகமான மக்கள் கூட்டத்தையும் சம்பாதிக்கமுடிகிறது. அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தினரையும் தன் காலடியின் கீழ் குவித்து வைக்க முடிகிறது. ஒரே சமயத்தில் அம்பானிகளையும் ஏழைகளையும் பக்தர்களாகப் பெறமுடிகிறது. எப்படிச் சாத்தியமாகிறது இந்த அதிசயம்?

சாய் பாபா போன்றவர்கள் உருவாவதற்கான அத்தனைச் சாத்தியங்களையும் இந்து மதம் கொண்டிருக்கிறது. இந்து மதம் தனிநபர் வழிபாட்டையும் தெய்வமாக்கல் கோட்பாட்டையும் (deification) ஆதரிக்கிறது. தீமையும் இடர்பாடும் வாழ்வில் மிகும்போது கடவுள் கீழிறங்கி வந்து காப்பாற்றுவார் என்னும் பொய்யான வாக்குறுதியை இந்து மதம் முன்வைக்கிறது. இந்தக் கருத்தியலின் விளைவாக மக்கள் கடவுளையும் கடவுளின் அவதாரத்தையும் நம்புகின்றனர். நான் உங்களை மீட்பேன் என்று சொல்லி உதிப்பவர்களைக் கடவுளின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுடைய கண்கட்டு வித்தைகளை அற்புதங்களாக நம்பி ஏற்கிறார்கள்.

'கடவுள் மனித அவதாரம் எடுத்து வருவார் என்ற பரம்பரை நம்பிக்கையின் காரணமாக மனிதன் தன் கடமையினின்றும் சமூகப் பொறுப்புணர்விலிருந்தும் முற்றிலும் விடுவிக்கப்படுகிறான்'  என்கிறார் அம்பேத்கர். இறைவணக்கமும் வழிபாட்டு முறைகளும் மத குருக்களுக்கான அதிகாரத்தைத் தோற்றுவித்தன. எல்லாவித மூடப்பழக்க வழக்கங்களையும் உருவாக்கின. கேடுகெட்ட மதி படைத்த அந்த மத குருக்கள் இதன்மூலம் மக்களிடையே சரியான பார்வை வளர்வதை அழித்தனர். (அம்பேத்கர் ஓர் ஆய்வு, W.N. குபேர்.)

மத குருக்களாக முன்பு புரோகிதர்கள் இருந்தனர். இன்று பார்ப்பனர் அல்லாதவர்களும் சாமியார்களாக வலம் வருகின்றனர். அவர்கள், 'கண்ணுக்குத் தெரியாத சக்திகளுக்கும் ஆதரவற்ற மனிதர்களுக்கும் இடையில் இடைத்தரகராக இருக்கும் வெட்கக்கேடான புரோகிதத் தொழில் மூலம் பொருளீட்டி வாழ்கிறார்கள்.' என்கிறார் அம்பேத்கர். இந்து மதம் மட்டுமல்ல, கிறிஸ்தவம், இஸ்லாம் உள்பட அனைத்து பெரிய, சிறிய மதங்களுக்கும் பொருந்தக்கூடிய உண்மை இது.  'கடவுள் நம்பிக்கை மதக் குருமார் அமைப்பு முறையை (Priesthood) உருவாக்கியது. அது மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையில் அவன் மீது முழுமையான கட்டுப்பாட்டைச் செலுத்தியதோடு பூசாரித்தனத்துக்கும் வழிவகுத்தது' என்றார் அம்பேத்கர்.

இனிமேலும் சாமியார்களும் கடவுள்களும் உருவாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? அம்பேத்கரின் கருத்து இது. 'தீங்கான தன்மைகளுடைய மதம் அழிக்கப்படவேண்டும். அத்தகையதொரு மதத்தை தகர்த்து ஒழிப்பதற்காகப் பணியாற்றுவது என்பது மதத்துக்குப் புறம்பானதல்ல!' 

52 comments:

ஹரன்பிரசன்னா said...

கிறித்துவ மதம் பற்றித் தங்கள் கருத்து என்ன? ஏசுவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஏசு இருந்ததும் இறந்ததும் உயிர்த்தெழுந்ததும் உண்மையா? ஏசுவின் சித்திகள் பற்றி என்றாவது ஒருநாள் எழுதும் திட்டம் உண்டா? ஹிந்து மதம் அல்லாத பிற மதங்கள், சாய் பாபா போன்ற ஒருவர் உருவாகும் சூழ்நிலை உருவாக்கவே இல்லை என்று, பகுத்தறிவாளரும் முற்போக்காளருமான நீங்கள் நினைக்கிறீர்களா? ஹிந்துமதம் பற்றிப் பேசினால் கிறித்துவ மதம் பற்றியும் இஸ்லாம் பற்றியும் பேசவேண்டுமா என்று கேட்காதீர்கள். உங்கள் வலைத்தளத்திலிருந்து, இஸ்லாம் பற்றியும் கிறித்துவம் பற்றியும் நீங்கள் எழுதியிருக்கும் சுட்டிகளை எடுத்துத் தந்துவிட்டு, பிறகு அக்கேள்விகளைக் கேளுங்கள். நன்றி பீ செக் மருதன்.

கானகம் said...

//இந்து மதம் மட்டுமல்ல, கிறிஸ்தவம், இஸ்லாம் உள்பட அனைத்து பெரிய, சிறிய மதங்களுக்கும் பொருந்தக்கூடிய உண்மை இது. //

அடடே...மருதன் இந்த வரியில்தான் நீங்கள் நிற்கிறீர்கள். இந்துமதத்தை போட்டுச் சாத்திவிட்டு அப்படியே போகிற போக்கில் பிற மதங்களுகு ஒரு செல்லத்தட்டு..

கலக்கல் மருதன்.. போலி மதச்சார்பின்மை சங்கம் உருவாக்கி நீங்கள் வீரமணியையும் உறுப்பினராக்கிக் கொள்ளலாம்.

Anonymous said...

கடவுளுக்குமா சாவு? அப்படி என்றால் பிற உயிர்களை காக்க வேண்டி இவரிடம் சென்றவர்களின் கதி...
அடுத்த பாபா உருவாகுவாரா? இல்லை உருவாக்கபடுவாரா? இரண்டுமே மக்களுக்கு ஒன்று தான்... ஒருவேளை உருவாகினால் இவரால் 1993 -இல் கொல்லப்பட்ட ஒரு உயிர் மீண்டும் வரவேண்டும்...

வஜ்ரா said...

சாயிபாபாவை நான் நம்பாவிட்டாலும் ஒரு மனிதரின் அதுவும் மக்களுக்காக மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கல்வி நிலையம் எல்லாம் கட்டிய ஒரு மாமனிதரின் இறப்பில் அல்ப சந்தோசம் அடையும் அரைவேக்காடு அறிவிலிஜீவி நான் இல்லை. வாழ்க மதச்சார்பின்மை.

Amirtham surya said...

தனித்துவமான,தர்க்க ரீதியான கட்டுரை.சபாஷ் நண்பா..எனக்கும் கட்டுகளுடைத்த இப்படியான ஒரு படைப்பை எழுத ஆவல்.சூழ்நிலைகைதியின் சூட்சமம் உணர்கிறேன்.விடுதலையான் எழுத்தாளனாய் உன்னை உணர்கிறேன்.பாராட்டுக்கள்

Amirtham surya said...

தனித்துவமான,தர்க்க ரீதியான கட்டுரை.சபாஷ் நண்பா..எனக்கும் கட்டுகளுடைத்த இப்படியான ஒரு படைப்பை எழுத ஆவல்.சூழ்நிலைகைதியின் சூட்சமம் உணர்கிறேன்.விடுதலையான் எழுத்தாளனாய் உன்னை உணர்கிறேன்.பாராட்டுக்கள்

Anonymous said...

செத்துப்போன சில கிறித்தவர்களை அற்புதச்செயல்களை விளக்கி, ‘கானனைசேஷன்’ அப்டின்னு புனிதராக்கி விடுவதைக் கிழி கிழி என்று கிழித்து எழுதி இருந்தீங்களாமே அதன் URL தர முடியுமா?

களிமிகு கணபதி said...
This comment has been removed by the author.
கால்கரி சிவா said...

ஐயா உங்கள் அறிவிஜீவி தன்மையை காட்டிக் கொள்ள இதுவா நேரம். கோடிக் கணக்கான மக்கள் துயரத்தில் இருக்கும் போது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சும் நீர் எல்லாம் ஒரு அறிவுஜீவி...எப்படி ஐயா இப்படி எல்லாம் நடந்து கொள்கிறீர்கள்? வெட்கமாய் இல்லையா உங்களுக்கு.

உங்கள் குத்தலையும் கிண்டலையும் அடுத்த வாரம் வைத்துக் கொள்ளுங்கள்

வேதனையுடன்
கால்கரி சிவா

வரலாற்றில் இன்று!!! said...

maruthan nalla karuththu thaan. oru manithanai neengal kadavul ena solvathu, ungalin ariyat thanmayai kaattukirathu.

Thiruvithamcode said...

மக்களை ஏமாற்றும் சாய்பாபா: போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ

http://www.youtube.com/watch?v=Yblhsr1O4IQ&feature=player_embedded

களிமிகு கணபதி said...

மருதன்,

இந்தப் புரோகிதப் பிரச்சினை இந்து மதத்தில் மட்டுமல்ல, இசுலாமிலும், கிறுத்துவத்திலும் இருக்கிறது என்று நீங்கள் சொன்னது சரியே. எதற்காக ஹரன்ப்ரசன்னா இதைவைத்து உங்களைக் கலாய்க்கிறார் என்பது புரியவில்லை.

இந்தப் பிரச்சினை பௌத்த மதத்திலும் உண்டு. அதையும் சேர்த்திருக்கலாம்தான். அது மறைமுகமாக அண்ணல் அம்பேத்காரைக் குறை சொல்வதாக ஆகாது.

இன்னொன்று. நீங்கள் சொன்னது:

“'கடவுள் மனித அவதாரம் எடுத்து வருவார் என்ற பரம்பரை நம்பிக்கையின் காரணமாக மனிதன் தன் கடமையினின்றும் சமூகப் பொறுப்புணர்விலிருந்தும் முற்றிலும் விடுவிக்கப்படுகிறான்' என்கிறார் அம்பேத்கர்.”

இப்படி அம்பேத்கர் நிஜமாகவே சொன்னாரா, அப்படியே சொல்லி இருந்தாலும் எந்த காண்டெக்ஸ்டில் சொன்னார் என்பதையும் நீங்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

ஏனெனில், இந்தத் தகவலால் நீங்கள் அறிந்தோ அறியாமலோ இந்தக் கட்டுரையில் ஒரு உள்குத்து ஏற்பட்டு விட்டது.

சாயிபாபா போன்ற அவதாரங்களின் மேல் சமூகப் பொறுப்பைச் சுமத்திவிட்டு அவரது பக்தர்கள் பொறுப்பற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்ற தொனி தென்படுகிறது.

ஆனால், உண்மை என்ன?

எனக்குத் தெரிந்த ஒரு நாயர் சாதி கணவனும், ஐயங்கார் பெண்ணும் சாயிபாபாவின் பக்தர்களாக அறிமுகமாகிக் கலப்புத் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் மூலம் அவரை அறிந்த உறவினர்களில் கணவன் மனைவி இருவரும் பாபாவினால் கவரப்பட்டு அவர் சொன்ன வழியில் சமூக சேவை செய்ய குழந்தை பெறாத பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ முடிவு செய்து, அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சேரிகளுக்குச் சென்று இலவசமாக ட்யூஷன் சொல்லித் தருகிறார்கள். சாயிபாபாவின் பள்ளிகளில் அவர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் உண்டு.

கொள்கை சார்ந்த பரப்புரைகளை மீறியே உண்மை இருக்கிறது.அந்த உண்மையை நமக்கு அறிவிக்கவே சிலரின் வாழ்க்கை அமைகிறது. சாயிபாபா அவர்களில் ஒருவர்.

இந்து மதத்தில் ஆன்மீகப் பெரியவர்களால் சமூகப் பொறுப்பு தனிமனிதரிடம் அதிகமாவதைத்தான் நான் பெரும்பாலும் பார்க்கிறேன். வெற்றுச் சடங்குகளை முன்வைக்கும் புரோகிதர்களுக்கும், ஆன்மீகச் சிந்தனைகளை முன்வைக்கும் பெரியவர்களுக்கும் வித்தியாசங்கள் உண்டு. அந்த வித்தியாசங்களை நமது காழ்ப்புணர்வுகளும், தவறான புரிதல்களும் அறியவிடாது.

இந்த இரண்டு குறைபாடுகளிடமும் நீங்கள் கவனமாக இருந்தாலும், பழக்கதோஷத்தால் மூடத்தனம் முருங்கை மரம் ஏறுவதும் தவிர்க்க இயலாததே.

உங்களுடையது கொள்கை ரீதியான விமர்சனமாகப் படுகிறதே அன்றி, காழ்ப்புணர்வு சார்ந்த விமர்சனமாகத் தெரியவில்லை.

சாயிபாபாவின் நல்ல விஷயங்களைப் பற்றியும் நீங்கள் பேசி உள்ளீர்கள். கொள்கையினால் ஏற்பட்டுவிடும் தவறான புரிதல்களை சரி செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளீர்கள் என்றே எனக்குப் படுகிறது.

Jayadev Das said...

\\இதுவரை நைன்டி நைன் பர்சென்ட் இறைத்தன்மை வாய்க்கப் பெற்றிருந்த சாய் பாபா, தன் மரணத்தின் மூலம் நேற்று முழுமையான கடவுளாகப் பரிணமித்துவிட்டார். இயேசு கிறுஸ்துவுக்குக்கூட வாய்க்கப் பெறாத அற்புதம் இது. இறப்பில் இருந்து உயிர்த்தெழுந்து வருவதற்கு இயேசுவுக்கு மூன்று தினங்கள் தேவைப்பட்டன என்கிறது பைபிள். ஆனால் மறைந்த சில நிமிடங்களில் சாய் பாபா இதோ, நம் கண் முன்னால் முழுக் கடவுளாகிவிட்டார்.\\ ஸ்......அப்பா ...இப்பவே கண்ணைக் கட்டுதே.....இன்னும் என்னென்னவெல்லாம் கூத்தெல்லாம் பார்க்கப் போறமோ தெரிலையே?

Jayadev Das said...

\\'சாமியார்களைப் பொறுத்தவரை, போலி யார் அருள்மிகு சாய் பாபா போன்ற அசலானவர்கள் யார் என்பதை என்னால் கண்டுபிடித்துவிட முடியும்.\\ க்கும்... இம்பூட்டும் தெரிஞ்ச ஞானி உனக்கு இந்த பாபாவே போலிச் சாமியார் என்னும் உண்மை தெரியலையே ராசா!!

Jayadev Das said...

\\சாய் பாபாவைக் கடவுளாக்கிய அம்சங்கள் மூன்று.\\ இவரு மனுஷந்தேன் ராசா, மனுஷன் மனுஷனாவே இருக்கட்டும், கடவுலாக்கிடாதீங்க கண்ணுங்களா...

Jayadev Das said...

\\சிறுவயதில் மண்ணை உருட்டி சுமையான மாம்பழமாக மாற்றியமைத்ததையும், காற்றில் லட்டு பிடித்ததையும் பரவசத்துடன் விவரிக்க பால்ய நண்பர்கள் இருக்கிறார்கள். கையில் இருந்து விபூதி, வாயில் இருந்து சிவலிங்கம்\\ இதெல்லாம் மேஜிக் ட்ரிக்கு ராசா, கத்துகிட்டா நீ கூட பண்ணலாம், ஆனா வருமானம் வரட்டுமேன்னு சாமியாராக முயற்சி மட்டும் பண்ணிடாதே!

Jayadev Das said...

\\அடிவயிற்றில் இருந்து 24 காரட் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பாபா வரவழைத்துக் கொடுத்ததை நினைவுகூரவும் கொண்டாடவும் சில லட்சம் பேர் திரள்வார்கள். \\ 24 காரட் சுத்தமான தங்கத்தில் நகை செய்யவே முடியாதுன்னு முட்டப் பசங்க நினைசுகிட்டு இருக்காங்களே, ஆனா உங்க பாபாவால மட்டும் இது முடியுதா ராசா?

Jayadev Das said...

\\படுத்த படுக்கையாக இருந்த கணவனும், கைக்குழந்தையும், பெற்றோரும், சகோதரர்களும், நண்பர்களும் பாபாவின் அருள் கிடைத்து குணமடைந்ததை கண்ணீர் மல்கி காவியமாக்க மேலும் பல லட்சம் பேர் வருவார்கள்.\\ ஆஸ்பத்திரியில் படுக்கையில கிடந்தப்போ அங்கு கொடுக்கப் பட்ட பிராண வாயு, மருதுகளின் டியூப்கள் தான் ராசா இவரையே காப்பாத்திகிட்டு இருந்துச்சு. ஊர்ல எல்லாத்தையும் குணப் படுத்தத் தெரிஞ்ச இவரு நாலு தடவை ஆஸ்பத்திரியில் செத்து பொழச்சு வந்தாரே ராசா?

Jayadev Das said...

\\சென்னைக்குக் குடிநீர் சேவை அளித்த சத்ய சாய் பாபாவின் சாய் செண்ட்ரல் டிரஸ்டை உச்சி முகர்ந்து பாராட்டுகிறார் தமிழக முதல்வர். பெங்களூர் சத்ய சாய் டிரஸ்டின் வொயிட்ஃபீல்ட் மருத்துவமனையின் இலவச சேவைக்கு ஈடுஇணையில்லை என்கிறார்கள் கர்நாடக மக்கள். இலவச மருத்துவக் கல்லூரி, இலவச கல்வி, இலவசச் சாலை, இலவச குடிநீர், இலவச உணவு என்று சத்ய சாய் டிரஸ்ட் வழங்கி வரும் மக்கள் நலச் சேவைகளைப் பட்டியலிட இந்த இடம் போதாது. \\ எனாதான் செய்தாலும் மனுஷன் கடவுளாக முடியாது ராசா.

Jayadev Das said...

\\மன்மோகன் சிங், அப்துல் கலாம், சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர், வாஜ்பாய், கருணாநிதி என்று பாபாவின் புகழ் பாட பல நூறு பிரபலங்கள் இங்கே இருக்கிறார்கள்.\\ மன்மோகன் சிங் & கருணாநிதி இந்த இரண்டு கல்லூளி மங்கனுங்களும் புகழுகிரானுங்க என்னும் போதே தெரிஞ்சுக்கணும், ஆள் எப்படிப் பட்டவனா இருப்பான்னு.

Jayadev Das said...

\\எல்லாச் சாமியார்களைப் போலவே இவர் மீதும் தொடக்கம் முதலே பல குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளன. மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் இறைத்தன்மையைக் கிழித்துக்காட்ட வீடியோ ஆதாரங்கள் உள்ளன. மக்கள் நலப் பணிகளுக்குப் பின்னால் உள்ள மிரள வைக்கும் சாய் டிரஸ்டின் கோடிக்கணக்கான சொத்துக் கணக்கு பற்றி பல செய்திகள் வெளிவந்துள்ளன. அவரது ஆசிரமத்தில் மர்மமான முறையில் கொலைகளும்கூட நடந்துள்ளன.\\ அதே போல எல்லாச் சாமியார்களைப் போலவே ஐவரும் பிராடு தான், ஒரே வித்தியாசம், மத்தவங்களுக்கு கேமராவை வச்சானுங்க, இந்தாளுக்கு வைக்கல அவ்வளவுதான்.

Jayadev Das said...

\\அறிவியல் உலகம் வெளிப்படையாகவே சாய் பாபாவை சவாலுக்கு அழைத்திருக்கிறது. விபூதி, தங்கச் சங்கிலி, சிவலிங்கம் என்று எதையாவது ஒன்றை எங்கள் முன்னிலையில் வரவழைத்துத் தர முடியுமா என்று கேட்டு பல கடிதங்களை சாய் பாபாவுக்குச் சென்றிருக்கின்றன. சாய் பாபா அவற்றுக்குப் பதிலளிக்கவில்லை. \\ ஒன்னும் வேணாம், ஆயிரக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கச் செயின் வேண்டாம், ஐம்பது ருப்பாய் மதிப்புள்ள பூசணிக்காயை வரவழைக்கச் சொல்லுங்கள், அது போதும்.
\\இனியும் பதிலளிக்கப்போவதில்லை.\\ செத்ததுக்கப்புறம் ஏங்க போயி பதிலளிப்பாறு, நீங்க ரொம்ப சரியா சொல்லிட்டீக!!

Jayadev Das said...

\\'இதுவரை மனிதராக வலம் வந்த சாய் பாபா, இனி கடவுளாக வலம் வருவார்!' என்று நீட்டப்பட்ட மைக் முன்னால உணர்ச்சிவசப்பட்டார் ஒரு வெள்ளைக்கார மாது. இனி அவர் பிம்பம் இப்படித்தான் கட்டமைக்கப்படும். இனி அவர் இப்படித்தான் நினைக்கப்படுவார். வணங்கப்படுவார். ஏற்கெனவே பூஜையறையில் படமாக வைத்து அவரைக் கும்பிட்டுக்கொண்டிருப்பவர்கள் ஒரு மாலையையும் சாத்திவிட்டு, தேங்காய் உடைத்து முறைப்படி கும்பிடலாம்.\\ இந்த இழவுதான் காலங் காலமா நடக்குதே, ஒருத்தன் மாத்தி ஒருத்தன் வந்துகிட்டேதான இருக்கானுங்க, இதுல இருந்து விடுபட வழி இருக்கான்னு பாருங்களேன்?

Jayadev Das said...

\\ஒரு சாமியாரர்ல் தன் வாழ்நாளில் லட்சம் கோடி சொத்தையும் அதைவிட அதிகமான மக்கள் கூட்டத்தையும் சம்பாதிக்கமுடிகிறது. அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தினரையும் தன் காலடியின் கீழ் குவித்து வைக்க முடிகிறது. ஒரே சமயத்தில் அம்பானிகளையும் ஏழைகளையும் பக்தர்களாகப் பெறமுடிகிறது. எப்படிச் சாத்தியமாகிறது இந்த அதிசயம்?\\ இழிச்சாவா பசங்க எல்லா இடத்திலும் இருப்பதால் முடிகிறது.

Jayadev Das said...

\\ தீமையும் இடர்பாடும் வாழ்வில் மிகும்போது கடவுள் கீழிறங்கி வந்து காப்பாற்றுவார் என்னும் பொய்யான வாக்குறுதியை இந்து மதம் முன்வைக்கிறது.\\ அப்போ பகவத் கீதை சொல்வதை உம்மால் ஏற்க முடியாதா? இதைத்தான் அந்த பாபா உமக்குச் சொல்லிக் கொடுத்தானா?

Jayadev Das said...

\\
இனிமேலும் சாமியார்களும் கடவுள்களும் உருவாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? அம்பேத்கரின் கருத்து இது. 'தீங்கான தன்மைகளுடைய மதம் அழிக்கப்படவேண்டும். அத்தகையதொரு மதத்தை தகர்த்து ஒழிப்பதற்காகப் பணியாற்றுவது என்பது மதத்துக்குப் புறம்பானதல்ல!' \\ பாபாவுக்கு ஜால்ரா அடிப்பதில் ஆரம்பித்து, ஆப்பு வைப்பதில் வந்து கதையை முடித்துள்ளீரே!!

Anonymous said...

சாய் பாபாவை அவரது பக்தர்கள் வணங்குகின்றனர் அல்லது போற்றுகின்றனர். அதனால் உங்களுக்கு என்ன கெட்டுப் போய் விட்டது. உங்களிடம் வந்து என்னை வணங்கு என்று சொன்னாரா? ”நீங்கள் எல்லாம் பாவிகள்” என்னை வணங்கினால் உங்கள் பாவம் போய் புண்ணியனாகி விடுவீர்கள் என்று கூறினாரா? இல்லை, மக்களை அடிமைப்படுத்தி, தந்திரமாக ஏமாற்றினாரா? நல்லது தானே அய்யா செய்திருக்கிறார்? பாராட்ட மனம் இல்லை என்றால் தூற்றாமலாவது இருக்கலாமே?

பாபாவைக் கண்டு ஏன் இந்தப் பொறாமை என்பதுதான் தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு இந்த வயதிலும் தலையில் ‘கரு கரு’வென்று முடியிருப்பது காரணமாக இருக்குமோ? -:)

Anonymous said...

உன்னை போன்ற அதிமேதாவிகள் சாய் பாபா மக்களை ஏமாற்றினாரா, மக்களின் மூட நம்பிக்கையை வளர்த்தாரா என்பது போன்ற கேள்விகளைக் கேட்கும் போது, சாய் பாபா அவருடைய ட்ரஸ்ட்களின் மூலம் எவ்வளவு நல்ல காரியங்களை செய்து வந்தார் என்பதை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்க வேண்டும்? ஏழைகளின் உதவிக்காக ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓபன் ஹார்ட் சர்ஜரி வரை அவருடைய சூப்பர் ஸ்பெஷால்ட்டி மருத்துவமனைகளில் நடந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலும் குடிதண்ணீர் வழங்குவதில் ஏரளாமான உதவிகளை அவருடைய ட்ரஸ்ட் செய்து வருகிறது. வசதி இல்லாத மாணவர்களின் படிப்பு வசதிக்காக அவருடைய பல்வேறு கல்வி நிறுவனங்கள் உதவி வருகின்றன.

தன்னை பகுத்தறிவுக் காவலன் என்று காட்டிகொள்ளும் நம் முதல்வரைப் போன்றவர்கள் கூட தமிழ்நாட்டு குடிதண்ணீருக்காக சாய் பாபாவின் உதவியைத்தான் நாடினார்கள். நம்முடைய துணை முதல்வர் ஸ்டாலின் வெட்கமே இல்லாமல், சென்னையில் கூவம் ஆறு சுத்தப்படுத்தும் பணிக்கு சாய் பாபாவிடம் பொருளுதவி கேட்பதாக பொது மேடைகளில் முழங்கினார். பகுத்தறிவை மக்களிடையே வளர்க்க முற்படும் அரசியல் கட்சிகள், அதனுடைய தலைவர்கள் யாராவது இதைப் போன்று தனக்கு வரும் வருமானத்தை செலவிட முன் வருவார்களா? இதற்கு முன் யாராவது செய்திருக்கிறார்களா? ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு குடிதண்ணீர் வருவதற்காக சாய் ட்ரஸ்ட் ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது என்று இன்றைய இரங்கல் செய்தியில் முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்.

புட்டபர்த்திக்கு போகும் எந்த பக்தனும் கட்டாயமாக பொருளுதவி செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அங்கு வந்து குவியும் பொருளுதவி எல்லாமே பக்தர்கள் தாமாகவே முன்வந்து வழங்கும் நன்கொடைகள்தாம். கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கையை வளர்த்து, வருமானத்தை பெருக்கிக் கொண்டு, சுயநலத்தோடு வாழும் எவ்வளவோ சாமியார்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், சாய் பாபா அவ்வகைச் சார்ந்தவரல்ல. உலகெங்கும் பரவியுள்ள அவருடைய தொண்டு நிறுவனங்களே அதற்கு சாட்சி. ஒருவர் மீது சேற்றைவாரி தூற்றும் முன் அவர் செய்த நல்ல காரியங்களை நினைவு கூற மறுப்பது அதிமேதாவிகளுக்கு நியாயமாகப்படுகிறதா? அல்லது மனிநிலை சரியில்லாதவர்களுடன் பழகிப்பழகி அவருக்கும் மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா?

Anonymous said...

கண்ணுக்குத்தெரியாத ஒரே இறைவனை நம்பி குண்டு வைத்து உடல் சிதறடிக்கும் சுன்னி வஹாபி இஸ்லாமிஸ்டுகள் கூட்டம் எப்படி ஏழைகளையும் பணக்காரர்களையும் ஒரே மாதிரி ஈர்க்க முடிகிறது என்று நீங்கள் அதிசயித்ததுண்டா? ஏன், புனிதர்களாக்கி வணங்குவது கத்தோலிக்கத்தில் இல்லையா? தர்கா வழிபாடு இஸ்லாத்தில் இல்லையா? அற்புத சுகமளிக்கும் ஜெபகூட்டங்களுக்கு கூடும் கூட்டம் பகுத்தறிவின்பாற்பட்டதோ? அல்லது இப்படிப்பட்டவர்களின் மூட நம்பிக்கை சாய்பாபா பக்தர்களின் நம்பிக்கையை விட உயர்வான மூட நம்பிக்கையோ?

ஏன் பேத்துகிறீர்கள்? முற்போக்கு நமநமப்பு யோசிக்கவே விடாதோ?

அருணகிரி.

அரவிந்தன் நீலகண்டன் said...

வழக்கம் போலவே மேம்போக்கான பார்வை மருதன். சாய்பாபா உருவாக காரணம் இந்து மத கருத்தியல் என்கிறீர்கள். அவதாரக் கோட்பாடு எல்லா மதங்களிலும் உண்டு. வெவ்வேறு விதங்களில். இறைவன் அல்லது இறைத்தூதர் அல்லது இறை மகன் வருவார் எனும் நம்பிக்கை. எந்த ஒரு காலகட்டத்திலும் நீங்கள் மேற்கத்திய சமூகங்களில் குறைந்தது ஒரு மூன்று டஜன் ‘நான் தான் இரண்டாம் ஏசு’ என்கிற ஆசாமிகளை பார்க்கலாம். இஸ்லாமிய சப்-கல்ட்களை பார்க்கலாம் மெகுதி வந்துவிட்டார் என. மைத்ரேய புத்த கோட்பாட்டின் அடிப்படையில் தானே புத்தரின் இறுதி அவதாரம் என கூறுவோரைக் காணலாம். எனவே இந்து மதத்தில் மட்டுமே இது உண்டு என சொல்வது அறியாமையை பறை சாற்றுவது. ஹிந்து மதம் என்பது பிற மதங்களைப் போல ஒற்றைக் கோட்பாடுகள் கொண்டதல்ல. ஹிந்து மதத்திலேயே அவதாரக் கோட்பாட்டை மறுதலிக்கும் பல முக்கிய மார்க்கங்கள் உண்டு. தூய வேதாந்தம் மற்றும் சைவ சித்தாந்தம் அவதாரக் கோட்பாட்டை ஏற்பதில்லை. பக்தி வைணவத்தில் அவதாரக் கோட்பாடு முக்கிய இடம் பெற்றது. பக்தி வைணவ சமூக இயக்கங்களிலிருந்து உருவான கபீரே அம்பேத்கரின் முக்கிய உத்வேகமாக அமைந்தார். அவதாரக் கோட்பாடு மக்களின் முயற்சியையும் உத்வேகத்தையும் அழித்துவிடுவதான குற்றச்சாட்டு ஹிந்துத்துவர்களாலேயே வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக டாக்டர்.ஹெட்கேவார். எனவே கறுப்பு வெள்ளை என எளிமைப்படுத்தி விளையாடும் ஆபிரகாமிய சடுகுடு இங்கே உதவாது. பாபா தன்னை கடவுள் என்று சொன்ன போது ஷீர்டி சாய்பாபாவின் மறு அவதாரம்/வருகை என்றும் ’நீயும் கடவுளே உணர்ந்து கொள்’ என்றும் சொன்னார். நான் சாய்பாபாவை நம்பவில்லை. ஆனால் அவரால் கோடிக்கணக்கான மக்கள் நல்ல தண்ணீர் அருந்தினார்கள். அரசாங்கங்களால் செய்ய முடியாததை அவர் செய்தார். அந்த மனிதர்களெல்லாம் தங்கள் பக்தர்களாகிவிடுவார்கள் என அவர் செய்யவில்லை. மதம் மாற்ற அன்னிய ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் அவர் செயல்படவில்லை. மந்திரத்தில் மாங்காய் எடுப்பது, மார்க்ஸியத்தில் பஞ்சங்களை உருவாக்கி கோடிக்கணக்கானவர்களை கொல்வதுடன் ஒப்பிடும் போது சப்பை மேட்டர். அப்படி தனிமனித ஒழுக்கமோ பொது வாழ்வில் மனிதநேயமோ இல்லாத மார்க்சியவியாதிகளை விதந்தோதும் ஒருவருக்கு, அன்னிய ஏகாதிபத்திய மதங்களின் சாம்ராஜ்ய விஸ்தரிப்பைக் குறித்து முணுமுணுக்கக் கூட முதுகெலும்பில்லாத ஒருவருக்கு பாபாவை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்பது இயல்பாக எழும் கேள்வி.

மருதன் said...

ஹரன்பிரசன்னா:

அனைத்து பெரிய, சிறிய மதங்களைச் சேர்ந்த சாமியார்களுக்கும் பொருந்தக்கூடிய உண்மைகளையே இந்தக் கட்டுரையில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இது சாய் பாபா என்னும் இந்து சாமியாருக்கு மட்டும் பொருந்தாது. இது போன்ற சாமியார்கள் இஸ்லாத்தில் இருந்து தோன்றினாலும் சரி கிறிஸ்தவத்தில் இருந்து தோன்றினாலும் எதிர்க்கப்படவேண்டியவர்களே, அம்பலப்படுத்தப்படவேண்டியவர்களே.

சாமியார்கள் என்னும் இடைத்தரகர்கள் தோன்றுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் மதங்கள் கொண்டிருக்கின்றன.

மருதன் said...

அரவிந்தன் நீலகண்டன், வஜ்ரா, கால்கரி சிவா மற்றும் பெயரற்ற சில நண்பர்கள் சாய் பாபா அறக்கட்டளையின் 'மக்கள் சேவைகளைக்' குறிப்பிட்டு, 'இவற்றையெல்லாம் ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

தோராயமாக ஒரு லட்சம் கோடி சொத்தை சாய் பாபா எப்படிச் சேர்த்தார் என்னும் கேள்விக்கு விடை கண்டுபிடித்தால், இந்த சொற்ப இலவச உதவிகளை அவர் ஏன் செய்ய நேர்ந்தது என்பது தெரியவரும்.

அரசியல்வாதிகள் இலவசங்கள் மூலம் வோட்டு சம்பாதிப்பது போல் சாமியார்கள் அறக்கட்டளைகள் மூலம் பக்தர்களைச் சம்பாதிக்கிறார்கள் என்பது என் கருத்து.

ஹரன்பிரசன்னா said...

மருதன், நான் பீ செக் என்று எழுதியது குறித்து, ஒரு நண்பர் சுட்டிக்காட்டியபோதுதான் அதன் விபரீதம் புரிந்தது. நான் சாதாரணமான அர்த்தத்தில் மட்டுமே எழுதினேன். தவறுக்கு வருந்துகிறேன். உள்வட்ட ப்ரிபாஷைகளில் பீ செக் என்பது கிண்டல் தொனி கொண்டது. அநாகரிகமான அந்த பிரயோகத்துக்கு மன்னிக்கவும்.

மற்றபடி, அனைத்து கருத்துகளும் அப்படியேதான் உள்ளன - உங்கள் தேற்றிக்கொள்ளும் மறுமொழிக்குப் பிறகும்!

அரவிந்தன் நீலகண்டன் said...

//சாமியார்கள் இஸ்லாத்தில் இருந்து தோன்றினாலும் சரி கிறிஸ்தவத்தில் இருந்து தோன்றினாலும் எதிர்க்கப்படவேண்டியவர்களே, அம்பலப்படுத்தப்படவேண்டியவர்களே//

மெய் சிலிர்க்கிறது உங்கள் கருத்தியல் நேர்மையை நேர்கொள்ளும் போது. டிஜிஎஸ் தினகரன் செத்த போது தோழர் மருதன் இணையத்தில் எழுதிக் கொண்டுதான் இருந்தார். எனவே டி.ஜி.எஸ் தினகரன் செத்த போது அவர் எழுதிய கட்டுரைக்கு இப்போது லிங்கு தந்து அவரது அம்பலப்படுத்தலில் இருக்கும் மதச்சார்பின்மையை நிலை நிறுத்தப் போகிறார். நான் துண்டை காணோம் துணியைக் காணோம் என்று புறமுதுகு காட்டி ஓடப்போகிறேன்.

அருள்முருகன் said...

காட்டமான நல்ல கட்டுரை மருதன். அம்பேத்கரின் கருத்து துணையோடு சாய் பாபா போன்ற போலிகளை அம்பலப்படுத்தும் முறை அருமை.

Anonymous said...

சாய் பாபாவின் பாவி, ச்சே ஆவி உங்களை சுமமா விடாது

வஜ்ரா said...

அவர் இறந்துவிட்டார், பார்த்தாயா இந்துக்கள் எவ்வளவு மூடர்கள் என்று. போன்ற அல்ப சந்தோசம் அடையும் உங்கள் மனநிலையைத் தான் சுட்டிக்காட்டினேன். இதை நீங்கள் ஒரு 10-15 நாட்கள் கழித்துப் பதித்திருந்தால் அதைக்கூட சொல்லியிருக்கமாட்டேன்.

உங்களிடம் மாற்று மதங்களின் குப்பையை கிளரும் திராணியோ, துப்போ இல்லை..ஆகவே, நீங்கள் ஏன் அவர்களைச் சொல்லவில்லை, இவர்களைச் சொல்லவில்லை என்று அல்பத்தனமாக நான் கேட்க மாட்டேன்.

ஏதோ உங்களால் முடிந்த யூஸ்ஃபுல் இடியட் வேலையை சிறப்பாகச் செய்கிறீர்கள். நடத்துங்கள்.

அ சகன் said...

கணம் மருதன் அவர்களுக்கு,

-
கண்ணுக்குத் தெரியாத சக்திகளுக்கும் ஆதரவற்ற மனிதர்களுக்கும் இடையில் இடைத்தரகராக இருக்கும் வெட்கக்கேடான புரோகிதத் தொழில் மூலம் பொருளீட்டி வாழ்கிறார்கள்.' என்கிறார் அம்பேத்கர்.
-

கண்ணுக்கு தெரியாத சக்தி இருக்கிறது என்று அம்பேத்காரே கூறியுள்ளார். அந்த கண்ணுக்குத் தெரியாத சக்திகளைத்தான் மக்கள் கடவுள்களாக வழி படுகின்றனர். ஒரு வெற்றிடத்தை கும்பிடுவதைவிட அவற்றிற்கு ஒரு வடிவம் கொடுத்து சிலைகளாக வடிவமைத்து கும்பிடுகிறார்கள். மதங்களையும் கடவுள்களையும் ஒழித்துவிட்டு, இந்த கண்ணுக்குத் தெரியாத சக்திகளை என்ன செய்வது என்று நீங்கள் அறிந்து எனக்கு சொல்ல வேண்டியது. கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகளும் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அவற்றையும் என்ன செய்வது என்று சொல்ல வேண்டியது.

அ சகன்.

கால்கரி சிவா said...

//தோராயமாக ஒரு லட்சம் கோடி சொத்தை சாய் பாபா எப்படிச் சேர்த்தார் என்னும் கேள்விக்கு விடை கண்டுபிடித்தால், இந்த சொற்ப இலவச உதவிகளை அவர் ஏன் செய்ய நேர்ந்தது என்பது தெரியவரும்//

ஐயா மருதன் தாங்கள் எத்தனை கோடிகளை தந்து ஏமாந்தீர்கள் இந்த கேள்வியை கேட்பதற்கு

Anonymous said...

பலவீனமான மனம் கொண்ட மக்கள் இருக்கும் வரை சத்ய சாய் பாப போன்ற போலிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள். மதங்களை தூய்மைப்படுத்தவோ, நிராகரிக்கவோ அதனால் பலன் பெற்றும் வரும் எவனும் விடமாட்டான். இப்படியான பாபாக்களுக்கு வால் பிடிக்கும் அல்லகைகளின் தொல்லைத் தாங்காதுங்கோ !

Anonymous said...

அன்னாரின் பூத உடல் மறைந்தே விட்டது!!!!!

Anonymous said...

உங்கள் கருத்தை 100 % ஏற்றுக்கொள்கிறேன்

சுழியம் said...

//...தோராயமாக ஒரு லட்சம் கோடி சொத்தை சாய் பாபா எப்படிச் சேர்த்தார் என்னும் கேள்விக்கு விடை கண்டுபிடித்தால், இந்த சொற்ப இலவச உதவிகளை அவர் ஏன் செய்ய நேர்ந்தது என்பது தெரியவரும்...//

மருதன்,

கிறுத்துவ, துலுக்க அமைப்புகள் எதுவும் தங்கள் சொத்து, வரவு செலவு விபரங்களைத் தணிக்கை செய்ய அனுமதிப்பதில்லை என்ற உண்மை ஒருபக்கம் இருக்கட்டும்.

நீங்கள் சொல்லுகிற இந்த ஒரு லட்சம் கோடி (உண்மையில் இந்தக் கணக்கு தப்பு. அவருடைய அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பு இன்னும் அதிகம்.) என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பு. லெனின், ஸ்டாலின், மாவோ, காஸ்ட்ரோ இவர்கள் சேர்த்து வைத்ததுபோல மறைக்கப்படுகிற சொத்து மதிப்பு இல்லை. சாயிபாபா ட்ரஸ்ட்டின் சொத்து மதிப்பின் ஒவ்வொரு காசுக்கும் கணக்கு உள்ளது. அதில் குழறுபடி இருந்தால் எப்போதோ சீன-ரஷ்ய அடிமைகளும், கிறுத்துவ-இசுலாமிய அடிமைகளும் அவற்றை வெளியே சொல்லி பேரை நாறடித்து இருப்பர். அங்கு வாய்ப்பில்லாததால்தான் அவர்கள் வேறு மட்டமான முறைகளில் முயல்கிறார்கள்.

சாயிபாபாவிடம் உள்ள சொத்து வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட சொத்து என்பதைக் கவனிக்கவும். தமிழ் நாட்டை ஆளும் முதல்வர் 45 கோடி சொத்து உள்ளதாகக் கணக்குக் காட்டுகிறார். ஆனால், உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு என்பது யாரும் அறிந்த ரகசியம்.
ஆட்சிப் பொறுப்பே இல்லாத ஜெயலலிதாவோ 53 கோடி கணக்குக் காட்டுகிறார். போன தேர்தலில் காட்டியதைவிட 300% அதிகம். எப்படி? அதை விட்டுவிடுவோம். அதைப் பற்றி எழுதினால், அம்மா ஆட்டோ அனுப்புவார். அய்யா அடுத்த உலகிற்கே ஆளை அனுப்புவார்.
அந்தக் காலத்தில் இருந்து ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவிலில்தான் ஆண்டியாக இருக்கிறான்.

இன்னொன்று. கிறுத்துவ, இசுலாமிய, இந்து மதங்களில் உள்ள புரோகிதர்களைப் பற்றிப் பேசினீர்கள். இந்தப் புரோகிதர்கள் அவர்களது மதக் கருத்துக்களைச் சடங்குகளை விற்றுப் பிழைப்பவர்கள். உண்மைதான். அதுபோல கம்யூனிஸத்தின் மதக் கருத்துக்களை, சித்தாந்தங்களை விற்றுப் பிழைப்பவர்களும் புரோகிதத் தொழில்தான் செய்கிறார்கள்.

விளைவு நல்லதாக இருக்கும்வரை புரோகிதத் தொழில் மோசமானது இல்லைதான். ஒரு புரோகிதருக்கு மற்ற புரோகிதர்களைப் பிடிக்காது என்பது தொழில் முறைப் போட்டி என்பது தெரிந்த விஷயமும்கூட. ஆனால், போட்டியானது உண்மையான கருத்துக்களை நேர்மையாக முன்வைத்துத்தான் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அறிவீன ஜீவனம்தான் அஃது.

அப்படி ஒரு வாழ்க்கை வாழ்வது மிக வேதனையான அனுபவம். அவசியம்தானா?

Jayadev Das said...

அது சரி, இந்து மதத்திற்கும் சாய் பாபாவிற்கும் என்ன சம்பந்தம்னு புரியலையே? ஸ்ரீமத் பாகவதத்தில் இறைவனின் அவதாரங்கள் என்னென்ன என்ற விவரங்கள் உள்ளன, எங்கு தோன்றுவார் அவருடையை தாய் தந்தையார் யார் என்றும் சொல்லப் பட்டுள்ளன. ஸ்ரீ கிருஷ்ணருக்கு அப்புறம் கல்கி அவதாரம் வருகிறது, அதுவும் இன்னமும் நான்கு லட்சத்து இருபத்தெட்டாயிரம் வருடங்கள் கழித்து சம்பால் என்னும் ஊரில் விஷ்ணுயஷா என்ற அந்தணர் வீட்டில் தோன்றுவார் என்றும் சொல்கிறது. [ஸ்ரீமத் பாகவதம் 12.2.19-20] இவர்களுக்கு நடுவில் வேறு அவதாரம் இருப்பதாக எந்த ஆதாரத்தையும் ஸ்ரீமத் பாகவதம் தரவில்லை. இந்த பாபா தன்னைக் கடவுள் என்று தன்னைத் தேடி வரும் ஆடுகளை நம்ப வைத்தவர், இவரை இந்துமதத் துரோகி என்று வேண்டுமானால் கூறலாம், இந்துமதக் காவலன், போதகன், கடவுள் என்பது அவரவர் உள்ளக் கிடக்கையே தவிர உண்மை அல்ல.

மருதன் said...

Jayadev Das :

இந்து மதம் என்பது ஒரு 'சமுத்திரம்' என்பதால் அதிலிருந்து நிறைய கிளைகள் உற்பத்தியாகிக்கொண்டிருக்கின்றன. அதிலொரு கிளைதான் சாய் பாபா. இந்து மதத்தை ஏற்று பாபாவை நிராகரிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், பாபாவை ஏற்று இந்து மதத்தை நிராகரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்ட கோணத்தில் இருந்த பார்த்தால் அவரை இந்து மத விரோதி என்றும் அழைக்கமுடியும்.

Jayadev Das said...

இந்த மேஜிக் வித்தை செய்யும் புட்டபர்த்தி புசு புசு முடி வச்ச சாய்பாபா, தலையில் கர்சீப் கட்டிய ஷிர்டிக் காரன், திருவண்ணாமலை ரமணன், வடலூர் விளக்கு புடிச்சுகிட்டு உட்கார்ந்திருப்பவன், அமெரிக்காவில் ஒரு மீட்டிங்கில் பேசி அதை வச்சே காலத்தை ஒட்டிய தலப்பாக் கட்டு, பாழுங் கலை "Art of Killing" தாடிக் காரன், இலங்கையில் இருந்து வந்து திருச்சி விராமலையில் மடம் போட்டு பெண்களைக் கற்பழித்த நடிகர் செந்திலின் ஜெராக்ஸ், ஷங்கர் ராமனைப் போட்டுத் தள்ளிய காஞ்சிபுரத்தான், நான் பீடி குடித்தால் என் வாயில் வாசனை வராது, நீ குடித்தால் வாசனை வரும் அதனால் நான் தான் கடவுள் என்ற யாகாவா முனி, கட்டிப் பிடி வைத்தியம் பண்ணும் கேரளாக் காரி, யாரும் கல்யாணம் பண்ணாதீங்கோ, புள்ளைகுட்டி பெத்துக்காதீங்கோ என்று சொல்லும் பிரம்ம கிழவிகள், உன்னைக் கதவைத் திறந்து ஆனந்தத்தை வரவழைக்கச் சொல்லிவிட்டு, அவன் கதவைப பூட்டிக் கொண்டு ரஞ்சிதானந்தம் பார்த்தவன், விபச்சாரிகளை செவ்வாடைத் தொண்டர்கலாக்கி மறுவாழ்வு கொடுத்த மேழ்மருவதூர்க்காரன், நாலு லட்சம் வருஷத்துக்கு ஆப்புறம் வரவேண்டிய கல்கி இப்பவே ஆணும் பெண்ணுமா வந்துட்டோம் என்று சொல்லித் திரியும் புருஷன் பெண்டாட்டி பொறம்போக்குகள் .............. ஐயோ அப்பா என் கையே வலிக்குதப்பா.. இது முடியாத லிஸ்டா இருக்கேப்பா... இதெல்லாம் இந்து மதத்தின் கிளைகள்...!!! இதை நாங்க நம்பனும்??? ஹா..ஹா..ஹா... இதெல்லாம் இந்து மதத்தில் கலந்து விட்டா சாக்கடைகள், இந்து மத்தத்தை இத்தனை அயோக்கியர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள், இவங்க கிட்ட இருந்த மீட்க வேண்டும்....... ஆனா ஜனக பூம் பூம் மாடுகள் மாதிரி இருக்காங்களே, யாரு காப்பாத்துவாங்களோ தெரியலையே!!

சுழியம் said...

//....இந்து மத்தத்தை இத்தனை அயோக்கியர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள், இவங்க கிட்ட இருந்த மீட்க வேண்டும்....... ஆனா ஜனக பூம் பூம் மாடுகள் மாதிரி இருக்காங்களே, யாரு காப்பாத்துவாங்களோ தெரியலையே!!

...//

வைணவத் தோல் போர்த்திக்கொண்ட கிறுத்துவக் கழுதைப்புலிகளைத் தவிர மற்றவர்கள் காப்பாற்றுவார்கள்.

கவலைப்படவேண்டாம் கிறுத்துவ நண்பரே.

Jayadev Das said...

@ சுழியம் said...

அப்போ நான் போட்ட பின்னூட்டத்தை சரியாகப் படிக்கவில்லை அல்லது உங்களுக்குப் புரியவில்லை. மேலே சொல்லியுள்ள அத்தனை பேரும் ஒருத்தரோடு ஒருத்தர் ஒத்துப் போக மாட்டார்கள். ஆளுக்கு ஒரு கொள்கை, யார் வேண்டுமானாலும் வருவார்கள், நான் தான் கடவுள் என்பார்கள், நீங்கள் எல்லோரும் கடவுள் என்பார்கள், பீடி குடித்து வாய் நாறவில்லை அதனால் நான் கடவுள் என்பார்கள், நம்ப வேண்டும். வாயில் இருந்து லிங்கம் எடுப்பார்கள், கையைக் காற்றில் அசைத்து மோதிரம், வாட்ச் எடுப்பார்கள் இவர்களெல்லாம் கடவுள். அப்படிப் பார்த்தால் தெரிவில் அஞ்சுக்கும் பத்துக்கும் வித்தை காட்டி பிழைப்பவனே கடவுளாகிவிடுவான். இந்து மதம் என்றொரு பொறம்போக்கு நிலம், யார் வேண்டுமானாலும் வளைத்துப் போட்டுக் கொண்டு என்ன வேண்டமானாலும் செய்யலாம். இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் எதைச் சொன்னாலும் தலையை ஆட்டிக் கொண்டு போகும் ஒரு பூம் பூம் மாட்டுக் கூட்டம், இவங்க எமாந்தாங்க, ஏமாந்துகிட்டே இருக்காங்க, இன்னும் ஏமாறுவாங்க. இளிச்சவாப் பசங்க இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருந்துகிட்டே இருக்கத்தான் போகிறான், இந்த பாபா போன நாளைக்கு இன்னொரு பாபா வருவான், அவதாரம் எடுப்பன் எல்லா கூத்தும் நடக்கத்தான் போகிறது. அதைச் சொன்னால் அதைப் போர்த்தியவன், இதைப் போர்த்தியவன் என்பீர்கள். போங்க சார்.

Anonymous said...

Happy May Day to all communists!!!!!!!!!!!!!!!

manoj said...

sai babha is a great.There is no more words in dictionary. -vajiviniki

navaneethan said...

sai has 99.9% god ability

navaneethan said...

sai has 99.9% god ability