நான்

படித்தது முதுகலை ஆங்கில இலக்கியம். எழுத்துப்பணி தொடங்கியது கல்கியில். கிழக்கு பதிப்பகத்தில் 2006ம் ஆண்டு உதவி ஆசிரியராக இணைந்தேன். தற்சமயம், கிழக்கின் ஆசிரியர்.

முதல் நூல் திபெத்தின் அரசியல் போராட்ட வரலாறு. ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா தொடங்கி மால்கம் எக்ஸ் வரையிலான புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் தொடர்ச்சியாக வெளிவந்தன. சமீபத்திய புத்தகம், முதல் உலகப் போர்.

சே குவேராவின் வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

உள்ளும் புறமும் என்னும் தலைப்பில் கல்கியில் ஓராண்டு காலம் இந்திய அரசியல் களம் குறித்து பத்தி எழுதியுள்ளேன்

பாஸ்போர்ட் என்னும் தலைப்பில் ஆனந்த விகடனில் ஒன்றரை ஆண்டுகள் சர்வதேச அரசியல் குறித்த கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

குமுதம் ரிப்போர்ட்டரில் அரசியல் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

அம்ருதா மாத இதழில் எழுதிக்கொண்டிருக்கும் தொடர் : முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டங்கள்.

தமிழ்பேப்பர் டாட் நெட் இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கும் தொடர் : தோழர் - பிரெட்ரிக் எங்கெல்ஸின் வாழ்வும் பணியும்.

தொடர்புக்கு : marudhan at gmail dot com