September 22, 2008

யார் கம்யூனிஸ்ட்?

ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு கம்யூனிஸ்டா? சே குவேரா? ஹியூகோ சாவேஸ்? இவர்களை எப்படி மதிப்பிடுவது? புரட்சியாளராகவா? கம்யூனிஸ்ட் தலைவர்களாகவா? கலகக்காரர்களாகவா? ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகவா? இவர்களுடைய அடையாளம் என்ன?

நான் எழுதிய ஹியூகோ சாவேஸ் புத்தகம் பற்றிய விமரிசனம் ஒன்று இன்று காலை என் பார்வைக்கு வந்தது. அந்த விமரிசனத்தின் முடிவில் சிலர் இந்தக் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

சற்று ஆழமாக அலசவேண்டிய விஷயம் இது. அடுத்தடுத்த தினங்களில், ஒவ்வொருவரையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு மதிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

புத்தக விமரிசனங்கள் : மோதிப்பார். முதல் காம்ரேட்.
நான் ரசித்த ஒரு வலைத்தளம்.

1 comment:

K.R.அதியமான் said...

வணக்கம் மருதன்,

கம்யூனிஸ்டாக அனைவரையும் மாற்றுவது முடியாது என்பதே வரலாறு தரும் பாடம்.
மேலும் ஸ்டாலின் ப‌ற்றிய‌ உங்க‌ளில் நூலை ப‌ற்றி நேரில் சொல்ல‌ வேண்டும் என்று நினைத்திருந்தேன். பார்க்க‌ :

http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html

கம்யூனிசமும், மனித உரிமை மீறல்களும் (Museum of Communism)