மாவோ பதவியேற்றபிறகு, திபெத்துக்காக உருவாக்கப்பட்ட ஒன்பது முக்கிய கட்டளைகள் இவை.
1) மதச் சடங்குகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்.
2) நிலப்பிரபுத்துவத்தைக் கொண்டாடும் புத்தகங்கள் நீக்கப்படவேண்டும்.
3) பிரார்த்தனைக் கொடிகள், ஊதுபத்திகள் போன்றவை ஒழிக்கப்படவேண்டும்.
4) மக்கள் பிரார்த்தனைகளில் நேரம் செலவிடக்கூடாது. மந்திர தந்திரவாதிகளை நாடக்கூடாது.
5) தலாய் லாமாவின் அனைத்து புகைப்படங்களையும் மக்கள் அழித்துவிடவேண்டும்.
6) அரசாங்கம் ஏற்று நடத்தும் ஒரு சில மடாலயங்கள் தவிர்த்துப் பிறவற்றைப் பொது மக்கள் பயனுள்ள முறையில் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
7) துறவிகள் நவீன கல்வியறிவு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
8) துறவிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவேண்டும். பயனுள்ள வகையில் அவர்கள் பிறரைப் போல உழைக்க முன்வரவேண்டும்.
9) அறிவியல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அறிவியல் அறிவை ஊட்டும் திரைப்படங்கள் திரையிடப்படவேண்டும்.
1 comment:
என்ன இது, உங்களுடைய முன்னைய பதிவான 'மாவோவின் மதநம்பிக்கை' என்ற பதிவிற்கு முரணாக இது உள்ளதே ? அப்படியென்றால், மாவோவினை குற்றம் கூறுகிறீர்களா ?
அறிவுடைநம்பி.
Post a Comment