November 5, 2008

ஒபாமா, அமெரிக்கா பற்றி ஃபிடல் காஸ்ட்ரோ

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய தினம் (நவம்பர் 3, 2008) ஃபிடல் காஸ்ட்ரோ கிரான்மாவில் எழுதிய கட்டுரையின் சாரம்.

அமெரிக்கா

0 அமெரிக்கா ஒரு சக்தி வாய்ந்த நாடு. உலகின் மொத்த மக்கள்தொகையில் அமெரிக்கர்கள் ஐந்து சதவீதம். ஆனால் உலகின் பெரும்பாலான வளங்களை (எண்ணெய், கனிமங்கள், உற்பத்தி பொருள்கள் ஆகியவை) அதிகமாக உறிஞ்சிக்கொள்பவர்கள் அமெரிக்கர்களே.

0 ஆயுத உற்பத்தியில் முதலிடம். உலகின் எந்த மூலையையும் குறிவைத்து கபளீகரம் செய்யும் ஆற்றல் கொண்ட ஏவுகணைகள் அமெரிக்காவிடம் உள்ளன.

0 ஆற்றல் வாய்ந்த நபர்களை உலகம் முழுவதிலும் இருந்து திரட்டி தனக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது அமெரிக்கா. அந்த வகையில் அமெரிக்கா ஒரு ஒட்டுண்ணி தேசம்.

0 அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்கர்களின் நிலைமையில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. அவர்களை ஒடுக்கியே வைத்துள்ளது அரசு.

அமெரிக்கர்கள்

0 சமீபத்திய பண நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்கர்கள் இராக்கைவிட பொருளாதரத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். வேலை நிரந்தரமாக இருக்குமா? வங்கிகளில் உள்ள சேமிப்பு பத்திரமாக இருக்குமா? ஓய்வூதியம் ஒழுங்காக வருமா? காசு கொடுத்து பொருள்கள் வாங்கும் திறன் குறையுமா?

பாரக் ஒபாமா

0 அரை ஆப்பிரிக்கர். உயர்கல்வி படித்தவர். மெக்கெயினைவிட புத்திசாலி, அறிவாளி, கற்றறிந்தவர்.

0 தன் எண்ணங்களை அமெரிக்க வாக்காளர்களிடையே அழுத்தமாகப் பதிவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்.

0 நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமையைக் குறைப்பதாகச் சொல்லியிருக்கிறார். அமெரிக்க வரிப்பணத்தைக் கொண்டு புஷ் இராக்கில் நடத்திருவரும் யுத்தத்தை கண்டித்திருக்கிறார். அமெரிக்க வீரர்களை இராக்கில் இருந்து திரும்பப்பெற்றக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். செம்படம்பர் 11 தாக்குதலுக்கும் இராக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் அவர் இப்படிச் சொல்லியிருக்கலாம்.

0 உலகம் முழுவதையும் பாதித்துக்கொண்டிருக்கும் பிரச்னைகள் பற்றி ஒபாமா கவலைப்படுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. ஜான் மெக்கெயின் இன்னமும் மோசம். முன்னாள் போர் விமானியான இவர், வியட்நாம் மீது டன் கணக்கில் குண்டுகள் வீசியிருக்கிறார். இவரை நம்ப முடியுமா?

0

க்யூபாவின் அதிபர் ரால் காஸ்ட்ரோவைச் சந்தீப்பீர்களா என்று கேட்டபோது ஒபாமா அளித்த பதில் இது.

ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தவரை க்யூபாவில் சுதந்தரம் இருந்ததில்லை. நல்ல வேளையாக இப்போது அங்கே ஆட்சி மாறியிருக்கிறது. இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், க்யூபா மீது அமெரிக்கா முன்வைத்த பொருளாதாரத் தடைகள் அப்படியே நீடிக்கும். நான் அதை மாற்றமாட்டேன்.

6 comments:

அக்னி பார்வை said...

ஓபாமா கருபினத்தை சேர்ந்த்வர் என்பதை தவிற கவனிக்க பட வேண்டிய ஒன்ரு அவர் ஒரு அமெரிக்கர்..

OSAI Chella said...

His victory is a not total change in the imperialistic policies of the American Creed Mindset which still obama talked .... stressed in the victory speech .. oh poor america... your creed has created hell out there... from Cuba to Iraq.. from Pakistan to Ukrain . Now the great captalism sucked in the dreamy country and ppl are realising more about their Bubles! So it is just a begining of "We are not alone" thought change that decended a few feets of altitude from that Moon Walking Country! .

But one thing ... IMO ... He will definitely be a lesser evil than the Bush .. for sure!

Anbudan
Osai Chella

surya said...

ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்கத்தின் ஆசைகள் விழைவுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்த வெற்றி.

அதிபரை மையமாகக் கொண்ட அமெரிக்க அரசிய்ல் அமைப்பு பெருமள்விற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருளுதவியைச் சார்ந்த அரசிய்ல் அமைப்பு. Corporate Funded) என்பது உலகறிந்த ரகசியம். இந்தப் பின்ன்ணியில் மத்தியதர வர்க்கத்தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது.

இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவாலகளைவிடக் கடுமையானவை. அவரே அவரது பிராசரத்தின் போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜன்நாயகக் கட்சி வேட்பாளரை அம்ர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது.

சூர்யா
சென்னை

புருனோ Bruno said...

//But one thing ... IMO ... He will definitely be a lesser evil than the Bush .. for sure!//

வழிமொழிகிறேன்

அக்னி பார்வை said...

நீங்கள் படித்த புத்தகங்கள் பற்றியத் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்..

உங்கள் பதிவுக்காக கத்திருக்கிறேன்..

அக்னி பார்வை said...

இந்த சனிக்க்ழமை சென்னையில் பதிவர் சந்திப்பு நடைபறா உள்ளது அவசியம் வரவும் அஙு சந்திக்கலாம்..

மேலும் விபரங்களுக்கு..

9940644162 என்ற என் எண்ணுக்கு தொடர்புக்கொள்ளவும்..
அல்லது..
http://www.athishaonline.com/