January 12, 2009

கட்சிகளின் கதை 1 : தி.மு.க.

MiniMax வெளியீடாக வந்திருக்கும் கட்சிகளின் கதை வரிசையில் முதலாவதை இன்று வாசித்தேன். தி.மு.க. எழுதியிருப்பவர் ஆர். முத்துக்குமார். பெரியாரிடம் இருந்து தொடங்கும் இந்நூல், தி.மு.க. மீது வைக்கப்படும் விமரிசனங்களில் முடிவடைகிறது. எளிமையான, சுருக்கமான அறிமுகம். தமிழகக் கட்சிகளின் வரலாறு பற்றி (இந்திய கட்சிகள் பற்றியும்) அதிகம் தெரிந்துவைத்துக்கொள்ளாத என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் உதவக்கூடிய வரிசை இது.



அடுத்து, அ.தி.மு.க. படிக்கப் போகிறேன். இந்த வரிசையை விரிவாகவும் கிழக்கில் முத்துக்குமார் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதுபோன்ற புத்தகங்கள் அதிகம் தமிழில் இல்லை. அல்லது, நான் பார்க்கவில்லை. கட்சிகளே வெளியிடும் வரலாறுகளை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.

இப்போதைய அரசியல் சூழலை, பிரச்னைகளை, சவால்களை, கட்சிகளின் வரலாறோடு பொருத்திப் பார்க்கும்போதுதான் முழுமையான சித்திரம் கிடைக்கு்ம். அந்த வகையில், இந்த வரிசை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

1 comment:

Anonymous said...

முரசொலி மாறன் எழுதியதை படித்திருக்கிறேன். அது விரிவாக இருக்கும். இதை வாங்கி பார்க்கிறேன். ஆசிரியர் கட்சி அனுதாபி இல்லை என்றால் கட்சி வரலாறு சரியாக வந்திருக்கும்.