January 11, 2009

அத்வானியின் ஆர்.எஸ்.எஸ்

இந்திய அரசியல்வாதிகளின் சுயசரிதைகளில் காணப்படும் சில பொதுவான அம்சங்கள் இவை. சொந்த கதை என்பதை தாண்டி பிரசாரம் தூக்கலாக இருக்கும். எடுத்த தவறான முடிவுகள் அனைத்துக்கும் சப்பைக்கட்டு காரணங்கள் அடுக்கப்பட்டிருக்கும். எதிர்க்கட்சிகள் கூர்மையாக விமரிசிக்கப்படுவார்கள். சாதனைகள் அலங்காரமாக அடுக்கப்பட்டிருக்கும். சுயவிமரிசனம் துளியும் இருக்காது. சாரே ஜஹான் சீ அச்சா நெடி தூக்கலாக இருக்கும். அத்வானியின் My Life, My Country புத்தகத்தை இன்னமும் நான் வாசிக்கவில்லை. வாசிப்பேனா என்று தெரியவில்லை.

தீவிரமான பிரசாரத்தில் இறங்கிவிட்டார் அத்வானி. ஒரு ப்ளாக் ஆரம்பித்திருக்கிறார். ரங்கநாதானந்தா என்னும் இந்துமதத் துறவி பற்றிய உரை ஒன்று இருக்கிறது. சுவாமி சுவாமி என்று புல்லரித்திருக்கிறார். ஆதி சங்கராச்சாரியாரின் நவீன கால வெர்ஷன் இவர்தானாம்.

தேர்தல் பிரசாரத்துக்காக மட்டுமல்ல மதப்பிரசாரத்துக்காகவும் இந்த வலைப்பதிவு பயன்படப்போகிறது. குவிந்திருக்கும் அத்வானிஜி ஜிந்தாபாத் கமெண்ட்ஸை மேலோட்டமாக ஓட்டிப் பார்த்தேன்.

இறுதி வரி மிகவும் பொருத்தம். ரசித்தேன். If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

3 comments:

Anonymous said...

//இறுதி வரி மிகவும் பொருத்தம். ரசித்தேன். If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed! //

அபாரம்.

சரவணகுமரன் said...

:-)

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

எழுத்து நடையில் கலக்குகிறீர்கள்.

நல்ல விஷயம் தான்.

ரத யாத்திரை என்ற போர்வையில் இரத்த யாத்திரை நடத்த எந்த மதமும் போதிக்கவில்லை. ஹிந்து மதத்தை தங்களுடைய நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளும் சங்க் பரிவார், rss, காவி உலகங்கள் இதை புடிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு குஜராத் ஒரு எடுத்துக்காட்டு