தி சண்டே லீடரில் வெளிவந்த லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கத்தின் தமிழ் வடிவம் இங்கே. ஜனவரி 8, 2009 அன்று காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். என்று, எவ்வாறு நிகழும் என்பதை மாத்திரம்தான் லசிந்தவால் முன்கூட்டியே ஊகிக்கமுடியவில்லை. மற்றபடி, தன் மரணத்தை அவர் எதிர்பார்த்திருந்தார். நிச்சயம் அரசாங்கம்தான் பொறுப்பாளி என்று தெளிவாக எழுதியும் வைத்திருந்தார்.
ராஜபக்ஷேவை மகிந்த என்று அழைக்கும் வெகு சிலரில் ஒருவர் லசந்த விக்கிரமதுங்க. ராஜபக்ஷேவின் ஆட்சியை தீவிரமாக விமரிசனம் செய்து அவர் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களுள் முதன்மையானவரும் அவரேதான். பெரும்பான்மையினரின் பார்வையை பதிவு செய்கிறோம் என்னும் பெயரில் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைலைகளை லசிந்த விக்கிரமதுங்க நியாயப்படுத்தவில்லை. நம் நண்பர்தானே என்பதற்காக கண்டும் காணாமலும் இருந்துவிடவில்லை. புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான போரில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தான் என்பதை அழுத்தமாகப் பலமுறை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ராஜபக்ஷேவை கடுமையாகக் கண்டித்தும் இருக்கிறார். மிரட்டல்கள், அடிதடிகள், தாக்குதல்கள் எதுவும் அவரைத் தடுத்துநிறுத்திவிடவில்லை. எனவே கொல்லப்பட்டார்.
லசந்த விக்கிரமதுங்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர். ராஜபக்ஷேவை விமரிசனம் செய்ததைப் போலவே புலிகளையும் அவர் விமரிசனம் செய்திருக்கிறார். நான் எடிட்டர், நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும் என்று தன்னுடன் பணிபுரிபவர்களை லசிந்த என்றும் அடக்கி ஆட்கொண்டது கிடையாது. பத்திரிகையாளர்கள் உண்மையை பயமின்றி எடுத்துக்கூறவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. தி சண்டே லீடர் செய்தியாளர்களுக்கு அளவற்ற சுதந்தரத்தை அவர் அளித்திருந்தார்.
லசிந்த விக்கிரமதுங்கவைப் போலவே என். ராமும் ஒரு எடிட்டர். இந்தியாவின் தேசியப் பத்திரிகையாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொள்ளும் தி ஹிந்துவின் எடிட்டர் இன் சீஃப். என். ராமும் புலிகள் எதிர்ப்பாளர். ஆனால், என்றாவது லசிந்தவைப் போல் நாணயத்தின் இரு பக்கங்களை அவர் பார்த்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் இதுவரை பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து ஒரு சிறிய பெட்டிச் செய்தியையாவது தி ஹிந்துவில் யாரேனும் கண்டதுண்டா?
இது தேசிய அவமானம் என்பதாக மங்களுர் பப் விவகாரம் பற்றி நீட்டியும் முழக்கியும் தலையங்கம் எழுதிய தி ஹிந்து இலங்கை ராணுவத்துக்கு இந்தியா அளிக்கும் தார்மீக ஆதவை என்றாவது சுட்டிக்காட்டி சாடியிருக்கிறதா? இலங்கை ராணுவம் போரில் சிறு முன்னேற்றம் கண்டாலும் ஆஹா வீழ்ந்தது முல்லைத்தீவு, அடுத்து கிளிநொச்சிதான் என்று கிளர்ச்சியுடன் எழுதிக்கொண்டு போகிறது தி ஹிந்து. புலிகள் இத்தோடு ஒழிந்தார்கள், இனி அவ்வளவுதான் என்று வாரத்துக்கு இருமுறையாவது செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
லெட்டர்ஸ் டு தி எடிட்டர் பகுதியிலும் கடுமையான தணிக்கை. இருபது கடிதங்கள் வெளியானால் அதில் பத்தொன்பது தி ஹிந்துவை ஆதரித்து வந்திருக்கும். ஸார், மிகவும் சரியாகச் சொன்னீர்கள். புலிகள் ஒழிக்கப்படவேண்டியவர்கள். புலிகள் ஆயுதம் ஏந்துவதால்தான் இத்தனை பிரச்னையும். ராஜபக்ஷே அப்பழுக்கற்ற தியாகி. அவர் அளிக்கும் வாய்ப்புகளை புலிகள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகள் புலிகளிடம் பேசி, ஆயுதங்களை துறக்கச் செய்யவேண்டும். மற்றபடி, தனி ஈழம் அமையும் என்று சொல்வதற்கில்லை.
சிறிதும் சளைக்காமல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ராஜபக்ஷேவிடம் பேசி ஏதாவது மேட்டர் வாங்கி முதல் பக்கத்தில் போட்டுவிடுகிறார் என். ராம். 'தமிழர்களை நான் அவசியம் பாதுகாப்பேன். இந்தியா இனி அவர்களைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. உங்கள் எல்லோரையும்விட தமிழர்கள் மீது எனக்கு அளவுகடந்த பாசமும் நேசமும் உண்டு. எங்கள் எதிரி விடுதலைப் புலிகள். அவர்கள் மீது மட்டும்தான் நாங்கள் யுத்தம் தொடுத்துக்கொண்டிருக்கிறோம். இடையில் எப்போதாவது, பை மிஸ்டேக் சில சிவிலியன்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.'
என். ராமின் பத்திரிகை தர்மத்துக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் பத்திரிகை தர்மத்துக்கும் ஏன் இத்தனை பெரிய வித்தியாசம்? அதற்கான காரணத்தை லசந்தவே சொல்லியிருக்கிறார். 'உயர்பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்துக்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனச்சாட்சி.' லசிந்த தன் மனச்சாட்சியின் அழைப்பை இறுதிவரை நிராகரிக்கவி்ல்லை.
(தொடரும்)
7 comments:
What is the use of writing this in Tamil? Most people who read mostly in Tamil know this. The Hindu readers are from mainly English reading elite. To counter the lies and propaganda of The Hindu one should use the same tool, i.e., English. I have written letters to the Editor several times. Except one time, my letters were never published. Here is my last unpublished letter to The Hindu.
----------------
Dear Sir,
The title of yesterday's editorial is apt ("Discourse in desperation", Dec 1, 2008). The discourse of the editorial is indeed borne out of desperation. In the absence of any small news in three days that could even remotely link the recent Mumbai carnage with the LTTE, The Hindu is trying desperately to create one, at least conceptually.
Since the assassination of former Prime Minister Rajiv Gandhi there has been hardly any incidence in India in 17 years that could be attributed to LTTE. During the same period there have been a number of terrorist attacks widely believed to have been carried out by outfits based in Pakistan, including the most recent one in Mumbai, killing several hundred Indians. This sharp contrast is a clear indication of how the Indian intelligence agencies and coast guards have failed miserably in preventing the real threats on the Arabian coast while harping on the imaginary threats from across the Palk Strait. It is time for the Indian Tamils who provide moral support to their fellow Tamils in Sri Lanka to highlight the misplaced priorities of the Indian state in fighting foreign terrorists who strike Indian targets with impunity and the media's obsession in portraying even Tamil refugees as terror suspects.
Sincerely,
M. Sundaramoorthy
nice.
எதிர்பாராத புதிய கோணத்தில் ஒப்பிட்டிருக்கிறீர்கள். இறுதி வரி நச்.
அன்புள்ள சுந்தரமூர்த்தி,
உங்களைப் போலவே பலரும் தி ஹிந்துவுக்குப் பல்வேறு கடிதங்களை, கண்டனங்களை அனுப்பியிருக்கிறார்கள். மருந்துக்குக்கூட ஒன்றையும் அவர்கள் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ளவி்ல்லை. பிற விஷயங்களில் மாற்றுக் கருத்துக்கு அவ்வப்போது இடமளிக்கும் தி ஹிந்து இலங்கை விவகாரத்தில் மட்டும் விடாப்பிடியாக இருக்கிறது. தி ஹிந்து பதிப்பிக்காத கடிதங்களை, வலைப்பதிவில் வெளியிடுங்கள். உபயோகமாக இருக்கும். உங்கள் கருத்துக்கு நன்றி.
excellent analysis. expecting next despatch of article
திரு சுந்தரமூர்த்தியின் கூற்று வேடிக்கையாகத் தோன்றுகிறது. 17ஆண்டுகளாகப் புலிகளால் எந்தத் தொந்தரவும் ஏறபட்டதுண்டா? என்று வினவுகிறார். காரணம் தேடவேண்டியதில்லை. புலிகளின் பாச்சா எனி பலிக்காது என்று புலிகளுக்கே தெரியும். புலிகளின் மனமாற்றத்தால் ஏற்பட்டதல்ல அது என்பதுதான் உண்மை.
சமீபத்தில் அரசு கேள்வி பதில்களில் கூட இந்த கேள்வி இடம்பெற்றது . அதற்க்கு அவர் சொன்ன பதில் " லசந்தாவின் ஆவி அவர்களை ஆசிர்வதிக்கட்டும் " . மருதன் , தங்களின் விடுதலை புலிகள் புத்தகத்தை வரி விடாமல் மனப்பாடம் செய்திருக்கிறேன் .
Big fan of yours :D
Post a Comment