எல்லோரும் தியாகங்களுக்குத் தயாராகுங்கள் என்று விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறார் ஒபாமா. அமெரிக்கா அளித்த bail-out package போதாது, மேலும் கேட்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றன சில அமெரிக்க நிறுவனங்கள். கார் நிறுத்தும் இடங்களில் பெட்டி, படுக்கையோடு ஒதுங்கிக்கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள்.
இதை முதலாளித்துவத்தின் சரிவாகக் கொள்ளமுடியாது, நமக்குத் தேவை புதிய முதலாளித்துவம் என்கின்றன சில பொருளாதார ஏடுகள். கீன்ஸ் மாடல்தான் இப்போதைய தேவை என்கிறார்கள் சில நிபுணர்கள். கீன்ஸின் பொருளாதாரக் கொள்கையின்படி, முதலாளித்துவ நிர்வாக முறையில் தேக்கம் ஏற்பட்டால், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவேண்டும். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் அரசாங்கம் நிறைய முதலீடு செய்யவேண்டும். தனியார் நிறுவனங்கள் தத்தளி்க்கும்போது அரசாங்கம் கைகொடுத்துத் தூக்கிநிறுத்தவேண்டும். நம்முடைய இப்போதைய தேவை இதுதான் என்கின்றன அமெரிக்க நிறுவனங்கள்.
Forbes பில்லியனியர் பட்டியலில் இருந்து 332 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் பணக்காரர்களின் செல்வமும் 23 சதவீதம் வரை குறைந்துள்ளதாம். இன்னொரு பக்கம், பாகிஸ்தான், பங்களாதேஷ், மடகாஸ்கர், ஐஸ்லாந்து, பிரிட்டன், ஃபிரான்ஸ், கிரீஸ் என்று உள்நாட்டு கலகங்களால் மூழ்கடிக்கப்படும் நாடுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
Forbes பட்டியல் வேண்டுமானால் சுருங்கலாம். கொந்தளிக்கும் நாடுகளின் பட்டியல் குறையாது என்றே தோன்றுகிறது.
2 comments:
:(
Don't beleive,OBAMA to PUSH no difference.
Post a Comment