May 10, 2009

ஈழமும் தமிழக அரசியலும்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் 3200 தமிழர்கள் இறந்துவிட்டதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இரண்டாயிரம் என்கின்றன வேறு சில இணையக்குறிப்புகள். தி ஹிந்து 300 மட்டுமே என்கிறது. அதுவும்கூட புலிகளின் தாக்குதலால்தானாம்.

போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டதாகத திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறது சன் டிவி. மக்கள் தொலைக்காட்சியிலும் ஜெயா டிவியிலும் மட்டுமே இலங்கை பற்றிய செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

ஈழத்தை கையில் எடுக்காமல் இருப்பது திமுகவின் அரசியல். ஈழத்தைக் கையில் எடுத்தது ஜெயலலிதாவின் அரசியல். இலங்கைக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர்களை சாமர்த்தியமாகத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் ஜெயலலிதா. இலங்கை அரசுக்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக கிளம்பி்கொ்ண்டிருக்கும் எதிர்ப்பலைகளைத் தனக்கான ஆதரவு அலையாக மாற்றிக்கொள்ளத் துடித்துக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றே தீருவேன் என்று ஒவ்வொரு மேடையிலும் அடித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.

கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி, அத்வானி, மாயாவதி என்று இன்று முன்னணியில் உள்ள எந்த இந்திய அரசியல் தலைவராலும் தனிஈழம் பெற்றுத்தரமுடியாது என்பதுதான் நிஜம். தனிஈழம் அமைவதை எப்படி இலங்கை விரும்பாதோ அதேபோல் இந்தியாவும் விரும்பாது. ஒருவேளை ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தாலும் இந்தியாவின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்திருக்கும்.

ஈழம் குறித்த மயக்கத்தில் ஜெயலலிதா தமிழகத்தை ஆழ்த்திக்கொண்டிருக்கும் அதே சமயம், தேர்தலுக்குள் தாக்குதலை இறுதிகட்டத்துக்குக் கொண்டுசென்றுவிடவேண்டும் என்னும் முனைப்புடன் இலங்கை அரசு முன்னேறிக்கொண்டிருக்கிறது.

6 comments:

Anonymous said...

//ஒருவேளை ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தாலும் இந்தியாவின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்திருக்கும்.//

Can you please explain on what basis you have concluded this?

மருதன் said...

இந்தியாவுக்கு இலங்கை என்பது ஒரு சந்தை. இந்திய பெரும் நிறுவனங்கள் பல அங்கே ஊடுருவியிருக்கின்றன. அவர்கள் நலன் கெடக்ககூடாது என்பது முக்கியம். தவிரவும், இலங்கைத் தமிழர்களின் தனி தேசக் கோரிக்கையை ஆதரித்தால் பிறகு, காஷ்மீர், அஸாம், மணிப்பூர் என்று இந்தியா முழுவதிலும் இருந்து தனி தேசக் கோரிக்கை கூடுதல் வலிமையுடன் ஒலிக்க ஆரம்பிக்கும். இலங்கை ஒன்றுபட்ட இலங்கையாக இருப்பதுதான் பல வழிகளில் இந்தியாவுக்கு வசதி

Anonymous said...

//ஒருவேளை ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தாலும் இந்தியாவின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்திருக்கும்.//

hm...., at least the bloodbath would not have occurred.

தமயந்தி said...

ella arasial katchigalum nijamagave thamizharukaga pesukiraragala ..ilaye.. tamil unarvaal nirambiya seeman kuuda jeyalaithavai namugirar..aiyo paavam

Anonymous said...

surely india is conducting this war. everyone is aware of that yet no action is taken to stop

Anonymous said...

Marudhan, you and your ilk are also partly responsible for the current carnage. You indiscriminately supported the LTTE and its activities, created a hallow around them amongst popular media. LTTE had squandered multiple times to reach a amicable peaceful situation. The so called intelligentsia has failed to influence the LTTE leadership towards a peaceful agreement. You ended up being paid/unpaid PR agents for the LTTE. The world has lost its appetite for tolerance towards LTTE like organizations and this message has not yet been driven. Eelam is Dead, Long live the LTTE seems to be your motto.