May 20, 2009

பிரபாகரனும் பட்டாசுகளும்

இன்று இலங்கையில் அரசாங்க விடுமுறை. ராணுவத்தினர் தவிர மற்றவர்கள் வீடுகளில் தங்கியிருந்து கொண்டாடிக்கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு அனைத்து பகுதிகளிலும் அரசாங்க கொடி பட்டொளி வீசிப் பறக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

இதுவரை நடைபெற்ற படுகொலைகள் அனைத்தையும் தனது தேசியக்கொடிக்குள் புதைத்து மறைத்துவிட்டது இலங்கை. விடுதலைப் புலிகள் அழிந்தொழிந்த இந்த வெற்றி தருணத்தை கொண்டாடுங்கள், பிரபாகரனின் மரணத்தைக் கொண்டாடுங்கள் என்று இலங்கை அறிவித்த மறுகணமே கொழும்பு வீதிகளில் பட்டாசுகள் படபடவென்று வெடிக்க ஆரம்பித்துவிட்டன. சிங்கள மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கிகொண்டனர். வீதிகளில் இறங்கிவந்து அகமகிழ்ந்து உரக்கப் பேசிக்கொண்டனர். கைகுலுக்கி, கட்டியணைத்துக்கொண்டனர். தொலைக்காட்சிகளில் காணக்கிடைத்த காட்சிகள் இவை.

இதைவிட அச்சமூட்டக்கூடிய இன்னொரு காட்சி இல்லை. போர் தொடங்கி ஊடகங்களில் காணக்கிடைத்த திரைக்கோப்புகளிலேயே மிகவும் கொடூரமானதாக நான் கருதுவது இதைத்தான். இந்தக் கொண்டாட்ட மனோபாவத்தை எப்படி உருவாக்கிக்கொண்டார்கள்? எப்படிப் புன்னகை செய்யமுடிந்தது? எப்படி இனிப்பு உட்கொள்ள முடிந்தது? இலங்கை அரசாங்கத்தின் செய்தி உண்மை என்றே எடுத்துக்கொண்டாலும், அழிந்துபோனவர்கள் புலிகள் மாத்திரம்தானா? மலையாக குவிந்து கிடக்கும் பல ஆயிரக்கணக்கான சடலங்களை ஒருவருமே கணக்கில் கொள்ளவில்லையா? அல்லது அவர்களுக்கும் சேர்த்தேதான் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களா? பின்வாசலில் வரிசை வரிசையாக சடலங்கள் கிடத்தப்பட்டிருக்கும்போது, முன்வாசலைத் திறந்து வைத்துக்கொண்டு கொண்டாட முடிவது எப்படி? இதைவிட கொடூரம் வேறு என்ன இருக்கமுடியும்? ஒரே நாடு ஆனால் இனம் வேறு என்பதால் அவர்கள் எதிரிகளாகிவிட்டார்களா? அவர்கள் எதிரிகள் ஆகிவிட்டார்கள் என்பதால் அவர்கள் மரணத்தைக் கொண்டாடலாமா?

இனவெறியின் உச்சம் என்று இதனை அழைக்கமுடியும். நாம் வெறுக்கும் ஓர் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, நாம் கொண்டாடவேண்டும். அரசாங்கம் இப்படித்தான் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் எந்தவித குற்றவுணர்வும் யாருக்கும் இல்லை. பல ஆண்டுகளாக அங்கே அதிகாரபூர்வமாகக் கற்பிக்கப்படும் பாடம் இது. குழந்தைக்குப் பால் புகட்டுவது போல் மக்களுக்கு இனவெறியைப் புகட்டியிருக்கிறார்கள். ஒரு மனிதனை அவர்களால் ஒரு மனிதனாகப் பார்க்கமுடியவில்லை. அவன் தமிழன். ஆகவே, என் எதிரி. என் எதிரியின் மரணத்தை நான் கொண்டாடுவதில் என்ன தவறு? இரண்டு புலிகள், இருநூறு மக்கள் கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளிவந்தால், அட இரண்டு புலிகள் ஒழிந்துவிட்டார்கள் என்று அவர்களால் குதூகலிக்கமுடிகிறது. அந்த இரண்டோடு ஒட்டிக்கொண்டு இறந்த இருநூறு அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

இரண்டரை லட்சம் தமிழர்கள் அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. இவர்களை இன்னும் இலங்கை மீட்டெடுத்து குடியமர்த்தவில்லை. காரணம், இந்தக் கும்பலில் புலிகளும் கலந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்களாம். எப்படி அடையாளம் கண்டு அவர்களைப் பிரித்தெடுக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அதுவரை அந்த இரண்டரை லட்சம் தமிழர்களும் தவிக்கவேண்டியதுதான். ஆனால், இது அங்கே எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. காரணம், அடைபட்டிருப்பவர்கள் எதிரிகள்.

அடிப்படை மனித பண்புகள்கூட இல்லாதவர்களால் மட்டுமே இப்படிச் சிந்திக்கமுடியும். செயலாற்றவும்முடியும். இப்படிப்பட்ட ஒரு சமூகத்தைத்தான் இலங்கை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சமூகம் இருந்தால்தான் அரசாங்கத்தால் தமிழினம் மீது போர் தொடுக்கமுடியும். அழிக்கமுடியும். தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கவும்முடியும்.

தமிழர்கள் மீது ராணுவப் போரையும் சிங்களர்கள் மீது பிரசாரப் போரையும் இலங்கை பலகாலகமாகத் தொடுத்துவருவதால்தான் இந்தக் கொண்டாட்டம் சாத்தியமாகியிருக்கிறது. இலங்கையின் இந்தப் போருக்கு இரு இனங்களுமே இரையாகிவிட்டன.

இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல இனவெறியை தக்கவைத்துக்கொண்டும் உரம் போட்டு வளர்த்துக்கொண்டும் இருக்கும் சிங்கள சமூகமும் இந்தக் கொடுமைகளுக்குப் பொறுப்பேற்கவேண்டும்.

நடந்துகொண்டிருக்கும் போர் (ஆம், இன்னும் போர் முடியவில்லை) இனவெறுப்பு என்னும் பயங்கர ஆயுதத்தைக்கொண்டு நடத்தப்படுகிறது. எனவேதான் இத்தனை சேதம். எனவேதான் இத்தனை கொண்டாட்டம்.

இலங்கையின் கம்பங்களில் பறந்துகொண்டிருப்பது தேசியக்கொடி மாத்திரமல்ல. சிங்கள பேரினவாதத்தின் கொடியும்தான்.

11 comments:

butterfly Surya said...

இறந்தது பிராபகரன் அல்ல என்று வெளியிட்ட கண்ணொளி காட்சிக்கு youtube தளத்தில் உள்ள ஒரு பின்னூட்டம் மட்டும் சில உங்கள் வாசிப்பிற்கு:

nigga he is wearing clothes that doesnt fit him because he is fat as a fucking pig. and if u see close enough SLA did a good job with blowing his skull out on the top thats why u cant fucking see his pig skull u fucking moron! Oh trust me he is dead u fucking tamil pussy thats waht happen when u mess with SINHALESE.. now pack ur shit and get the fuck back to tamil naudu fuckers! yes yes limpy fucks get the fuck out of SRI LANKA! LIONS PRIDE!!!!!!!

shamaragje u tamil limpy fuck first off all learn how to spell its not singhalese u fuck ITS SINHALESE! and second SLA are not going to burn this motherfucker they are thinking about about cuttin this pig belly up and stuffing him with wool so that future generations of ur limpy tamils up north can see wat happened to the fat belly munching so called king of the tamil race.. LOL nigga got fucked over! lmao . AS of all u pussy tamil niggas pack ur shit get the fuck back to TAMIL NADU


அவர்கள் யாரென்பதற்கு ஒரு சோறு பதம்...????


மேலும் பார்க்க படிக்க சுட்டி:

http://www.youtube.com/watch?v=dRRZrB6bB-I&feature=player_embedded

பதி said...

//அடிப்படை மனித பண்புகள்கூட இல்லாதவர்களால் மட்டுமே இப்படிச் சிந்திக்கமுடியும். செயலாற்றவும்முடியும். //

இதற்கு சற்றும் சளைத்தது அல்ல பிராந்திய வல்லாதிக்க போட்டியில் ஈடுபட்டுள்ள "இந்தி"யர்களின் மனப்பாங்கு... Rediff, Dinamani, Dinamalar பக்கங்களில் செய்திகளுக்கு வந்துள்ள கருத்துக்களை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்...

//இலங்கையின் கம்பங்களில் பறந்துகொண்டிருப்பது தேசியக்கொடி மாத்திரமல்ல. சிங்கள பேரினவாதத்தின் கொடியும்தான். //

அதை தளரவிடாமல் உயர்த்திப் பிடிப்பதில் பிணந்தின்னி தேசமான "இந்தி"யாவுக்கு இருக்கும் பங்களிப்பையும் சற்றே குறிப்பிட்டிருக்கலாம்...

Anonymous said...

30 வருடம் இலங்கையில் பல கொலைகள் தற்கொலைத்தாக்குதல்கள், என்று நடத்திவிட்டு இன்று அவர்களிடமிருந்து பரிதாபத்தை எதிர்ப்பார்ப்பவர்களை எப்படிவேண்டுமானலும் திட்டலாம். வண்ணத்துப்பூச்சியார் இலங்கை சிங்களவர்களின் தராதரத்தைப்பற்றிப் பேசுவதாக எண்ணி அவரையே அவர் தரம் தாழ்த்திக்கொள்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் (இது தமிழர்களுக்கு).

சிங்களவர்கள் என்ன ஏசு க்களா ? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுவதற்கு ?

அவர்களும் மனிதர்கள் தான். உங்களுக்கு வரும் ஆத்திரம், கோபம் எல்லாம் அவர்களுக்கும் வரும்.

What is needed now is Reconciliation. Not empty rhetorics that are thrown by Pro-LTTE bloggers.

Prakash said...

மிக முக்கியமான பதிவு , சேர்த்து வையுங்கள். சிங்களத்தின் " territorial intergrity ( as pranab puts it ) க்கு எதிராக ( ஆகையால் இந்திய இறயான்மைக்கு எதிராக நீங்கள் பேசியதற்காக கைது செய்யப்படலாம். ஜெனைஙாயகமும் , சம உரிமையும் இல்லாத ஒரு நாடு , அதான் ஒடுக்கப்பட்ட தேசியத்தை மொத்தமாக நசுக்குவதற்கு துணைபோகும் நாட்டை " கொலைகார" நாடு என்று விளிக்காமல் , எவ்வாறு விளிப்பது ?

சிவசங்கரி said...

சிங்கள இனம் புரியும் அக்கிரமங்களை சொல்லி மாளாது மருதன். எனக்கு அனுபவங்கள் உண்டு. ஜூலை 1983 ஒன்று போதாதா அவர்கள் யோக்கியதைக்கு?

Anonymous said...

தலைவா www.tamilwin.com போய் பாருங்க நல்ல சேதி வந்திருக்கு

சுதிர் said...

சிங்களர்களின் முகத்திரையை கி்ழித்துக்காட்டு்ம் கட்டுரை. அவங்க திருந்துவாய்ங்கன்னு நினைக்கிறீங்க?

Anonymous said...

Hatred is mixed in Sinhalese blood. none can do anything about this. even god cant save tamil people fate. this is happeing from ramayana period

Anonymous said...

//
Hatred is mixed in Sinhalese blood. none can do anything about this. even god cant save tamil people fate. this is happeing from ramayana period
//

Oh, I see so much love towards Sinhalese in Tamil blood!!

Anonymous said...

சிங்களவர்களும், தமிழர்களும் தம் மத்தியில் இருக்கும் இனவாதிகளை நிராகரிப்பது தான் பிரச்சினை தீர ஒரே வழி.

Siril said...

மருதன், தமிழர்களுக்கும் எல்டிடிஇ இனவுணர்வைத் தான் ஊட்டிவந்துள்ளது. ஆனால், அதிகமான இழப்புகள் தமிழர்களுக்கே என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. உங்கள் விடுதலை புலிகள் புத்தகம் படித்தேன். சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.