இலங்கையில் இருந்து வெளிவரும் தி சண்டே டைம்ஸ் இதழில் கடந்த ஞாயிறு அன்று வெளியான எடிட்டோரியல் இது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதை அடுத்து இது எழுதப்பட்டிருக்கிறது. சில பகுதிகள்.
இந்தியாவின் ஆதரவு :
காங்கிரஸ் வந்தால் என்ன பிஜேபி வந்தால் என்ன? விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரில் இருவருமே கொழும்புக்கு ஆதரவு அளிக்கத்தான் போகிறார்கள்.
தமிழக அரசியல்வாதிகள் :
இலங்கை, ஈழம், தமிழர்கள் என்றெல்லாம் பேசிய தமிழ் அரசியல்வாதிகள் ஒட்டுமொத்தமாக தோற்றுவிட்டார்கள்.
இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி ஈழம் பெற்றுத்தருவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா குறிப்பிட்டபோது காங்கிரஸ், பிஜேபி இரண்டும் மௌனம் சாதித்தன.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஜெயலலிதா பெரியளவில் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை அளித்தன. இறுதியில் என்ன நடந்தது? கருணாநிதி ஜெயலலிதாவை வீழ்த்தினார். ஈழப்பிரச்னை எந்த வகையிலும் ஜெயலலிதாவுக்கு உதவி செய்யவில்லை.
கருணாநிதியும் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்தான். அவ்வாறு ஆதரித்ததால் இலங்கைத் தமிழர்கள் அவர் மீது எத்தனை அதிருப்தி கொண்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். அந்த தவறை அவர் மீண்டும் செய்யவில்லை. ஈழத்துக்கான வீரமுழுக்கங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை.
மின்சாரத் தடை, வேலையில்லா திண்டாட்டம், ஏழை போன்ற பிரச்னைகளைத் தீர்க்கமுடியாததால், இந்த தோல்வியை மறைக்க தமிழக அரசியல்வாதிகள் ஈழத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த தேர்தல் முடிவு அவர்கள் கண்களைத் திறந்து வைப்போம் என்று நம்புகிறோம்.
தமிழக வாக்காளர்கள் :
உள்ளூர் மீடியா இலங்கைக்கு எதிராக நிறைய சவடால்களை அள்ளி வீசியபோதும், தமிழக வாக்காளர்கள் அவற்றை காதில் போட்டுக்கொள்ளவில்லை.
மகிந்த ராஜபக்ஷே :
நல்லவேளையாக, நம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவுக்கு இந்தியாவில் எதிரிகள் மாத்திரமல்ல விசிறிகளும் சமஅளவில் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போருக்கு அவர்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள்.
3 comments:
//நம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவுக்கு இந்தியாவில் எதிரிகள் மாத்திரமல்ல விசிறிகளும் சமஅளவில் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போருக்கு அவர்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள்.//
இது தான், இந்த தலையங்கத்தின் ஹைலைட் !!!!!
:)
வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டால் வெற்றி கூட பெறலாம். அதற்காக உழைக்க சிங்கள ரத்னாக்களும் தினமலங்களும் தவமிருக்கின்றன... என்ன, ஏதேனும் ஒரு திராவிட கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும். அவ்வளவே...
புதிய தகவல் மருதன். சிங்கள point of view பற்றி இன்னும் எழுதுங்கள்
Overview of US restaurants. Subway
Post a Comment