September 18, 2009

ஒரு முக்கிய அறிவிப்பு

என் ஜிமெயில் ஐடி (marudhan@gmail.com) மூன்று தினங்களுக்கு முன்பு களவாடப்பட்டுவிட்டது. களவாடியவர், என் ஐடியைப் பயன்படுத்தி என் அட்ரெஸ் புக்கில் உள்ள சிலரிடம் (குறிப்பாக, பெண்களிடம்) சாட் செய்திருக்கிறார்.

என் ஐடியில் இருந்து சமீபத்தில் யார் யாருக்கு என்னென்ன மெயில்கள் சென்றிருக்கின்றன என்று தெரியவில்லை. சத்தம் போடாமல் மெயில் அனுப்பிவிட்டு அதை டெலீட்டும் செய்திருந்தால், என்னால் அதைக் கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விடும்.

இனி, கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

மாற்று ஏற்பாடு செய்யப்படும்வரை, என் தற்போதைய ஐடி பயன்பாட்டில் இருக்கும். என்றாலும், அடுத்த பதினைந்து தினங்களுக்கு நான் சாட்டைப் பயன்படுத்தப்போவதில்லை.

இடையில், என் ஐடியில் இருந்து சந்தேகப்படும்படி ஏதாவது மெயில், சாட் வந்தால், பதிலளிக்க வேண்டாம்.

நிலைமை சீரானதும் தெரியப்படுத்துகிறேன்.

3 comments:

butterfly Surya said...

தகவலுக்கு நன்றி. மெயில் ஐடியை மாற்றி விடுங்கள்.

Anonymous said...

BE CAREFUL WITH HACKERS MARUDHAN. THEY CAN MAKE YOUR LIFE HELL LOT OF PROBLEM

கிருபாநந்தினி said...

மெயில் ஐ.டி. திருட்டுப் போகிறது என்று அடிக்கடி கேள்விப்படுகிறேன். எப்படி இது சாத்தியம்? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்!
- கிருபாநந்தினி