February 9, 2010

காந்தியால் துயருறும் பெண்கள்


காந்தி குறித்த எனது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக, தி கார்டியன் இதழில் வெளிவந்த Michael Connellan-ன் கட்டுரையை ரவிபிரகாஷ் தனது வலைப்பதிவில் மொழிபெயர்த்து அளித்துள்ளார். நன்றியுடன் இங்கே அதனை மீள்பதிவு செய்கிறேன்.

0

காந்தியால் துயருறும் பெண்கள்


பெண்ணுரிமைக்காக இந்தியா தயாரானபோது, மோகன்தாஸ் காந்தி அதைப் பின்னுக்கு இழுத்தார்; தவிர, பெண்கள் தொடர்பான அவரது நடத்தையும் விசித்திரமாகவே இருந்திருக்கிறது.

மோகன்தாஸ் காந்தியின் நினைவு தினம் சனிக்கிழமையன்று வருகிறது. அவர் மிகவும் வியப்புக்குரிய ஒரு மனிதர். அவர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்ட உதவி, தன் நாட்டை சுதந்திர நாடாக்க வழிவகை செய்தார். இந்தியா அவரை புனித ஆத்மா என்றும் மகாத்மா என்று வழிபட்டது; இன்றைக்கும் வழிபடுகிறது. அவர் மிகுந்த தைரியம் உள்ளவராகவும், புத்திச் சாதுர்யம் நிரம்பியவராகவும், தன் மக்களிடத்தில் கருணை கொண்டவராகவுமே மேற்கத்திய நாடுகள் அவரைப் பார்க்கின்றன.

ஆனால், காந்தி ஒழுக்கக் கோட்பாடுகளில் மிகக் கடுமையாகவும், இன்பங்களைத் துய்ப்பதைக் கடுமையாக எதிர்ப்பவராகவும், பெண்களை வெறுப்பவராகவுமே இருந்தார். பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் ஒரு பெரிய நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதை அவர் உறுதிப்படுத்த விரும்பினார். பெண்கள் பிறப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் அச்சுறுத்தும் ஒரு நாடாகவே அவர் இந்தியாவை வைத்திருக்க விரும்பினார். 1949-ல் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘காந்தி - சில எண்ணங்கள்’ (Reflections on Gandhi) என்கிற கட்டுரையில், ‘அப்பாவிகள் என்று நிரூபணமாகிற வரையில், மகான்களைக்கூடக் குற்றவாளிகளாகத்தான் பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இருக்கலாம்.

காந்தி உடலுறவை அடியோடு வெறுத்தார். வம்ச விருத்திக்காக மட்டுமே உடலுறவு கொள்ளலாம்; வேறு எந்த வகையிலும் பாலியல் உறவு கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். காம இச்சைகளை அடக்கத் தவறினால், அது மலச்சிக்கல் போன்ற உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் போதித்தார். உடலுறவு வைத்துக் கொள்வது ஆரோக்கியத்துக்குத் தீங்கானது என்றும், உடலுறவுச் சுதந்திரம் என்பது இந்தியர்களை மனிதர்களாக வாழவே தகுதியற்றதாகச் செய்துவிடும் என்றும் அவர் நம்பினார். ‘சமய நெறிகள் காரணமாக இல்லற இன்பத்தைத் துறந்துவிட்டு வாழ்வது ஒரு நரகம்’ என்றார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால், அப்படியொரு இன்பம் துறந்த நாடாகத்தான் காந்தி தன் நாட்டைக் காண விரும்பினார். தன் மனைவியிடம்கூடக் கலந்தாலோசிக்காமல், இல்லற இன்பத்தைத் துறப்பதென அவர் தன்னிச்சையாக முடிவெடுத்தார்.

காந்தி பெண்களை ஆண்களுக்கு நிகராக மதித்தார் என்றும், சுதந்திரப் போராட்ட காலத்தில் பெண்கள் செலுத்திய பங்களிப்பைப் போற்றினார் என்றும், காந்தி மற்றும் அந்தப் புனிதரைப் பற்றிக் கட்டுரை எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆம்பிளைத்தனமான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொடுமைக்கு எதிராக அவர் கையாண்ட அஹிம்சா ரீதியான எதிர்ப்பை பெண்மைக்குரிய கொள்கையாக அவர் மதித்துக் கொண்டாடினார். ஆனால், பாலியல் உறவுகள் குறித்தான அவரின் கவலைகள், அவரை பாலுறவுகளுக்கு எதிராக அதிர்ச்சியான கொள்கைகளை எடுக்கச் செய்தன. பெண்களின் உடம்பு குறித்த அவரது சிந்தனை கோணலாக இருந்தது. ரீத்தா பானர்ஜி ‘செக்ஸ் அண்ட் பவர்’ என்கிற தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போல, ‘பெண்களின் ஆன்மா காம உணர்வுக்குத் திரும்புவதன் காரணமாகவே அவர்களுக்கு மாதாந்திர உதிரப் போக்கு நிகழ்கிறது என்று காந்தி நம்பினார்’.

தென்னாப்பிரிக்காவில் தங்கி, அந்த அரசின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து காந்தி போராடிக்கொண்டு இருந்த காலத்தில், இரண்டு பெண்கள் ஓர் இளைஞனைத் தொடர்ந்து பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்ததைக் கண்டார். அந்தப் ‘பாவக் கண்கள்’ சுத்திகரிக்கப்படவேண்டுமானால், அந்த இரண்டு பெண்களின் தலையை மொட்டை அடித்துவிடும்படி அவர் அவனுக்கு ஆலோசனை சொன்னார். காந்தியே தனது கட்டுரை ஒன்றில் இந்த நிகழ்ச்சியைப் பெருமையோடு குறிப்பிட்டு, பாலியல்ரீதியான தாக்குதல்களுக்குப் பெண்கள்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிற செய்தியை எல்லா இந்தியர்களுக்கும் தெரிவித்துள்ளார். அத்தகைய கொள்கைதான் இன்னமும் நீடித்துள்ளது. 2009-ம் ஆண்டு கோடையில், வட இந்தியாவில் உள்ள கல்லூரிகள் பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, பெண்கள் மேற்கத்திய நாகரிக உடையான ஜீன்ஸ் அணிவதைத் தடை செய்தன. அத்தகைய உடைகள் அந்த வளாகத்தில் உள்ள ஆண்களின் காம உணர்ச்சியைத் தூண்டுகின்றனவாம்.

கற்பழிக்கப்பட்ட இந்தியப் பெண்கள் மனிதர்களுக்குண்டான தகுதியை இழந்துவிடுகிறார்கள் என்று நம்பினார் காந்தி. குடும்ப மற்றும் சமூக நன்மைக்காக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தங்கள் மகள்களை அப்பாக்கள் கொல்வதைக்கூட அவர் நியாயம் என்று வாதாடினார். தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டார். ஆனால், அவரது கொள்கைகளின் பாதிப்பு இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் அவமானம் கருதித் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் நாளேடுகளில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. கர்ப்பத்தடை மாத்திரை மற்றும் சாதனங்களுக்கு எதிராகவும் யுத்தம் செய்தார் காந்தி. அவற்றைப் பயன்படுத்தும் பெண்களை விபசாரிகளுக்கு நிகராகக் கருதினார்.

தனது சொந்த காம உணர்வுகளின் மீதே யுத்தம் செய்து அவற்றை அழுத்தப் பார்க்கும் எந்தவொரு ஆண் மகனையும் போலவே, பெண்கள் தொடர்பான காந்தியின் நடத்தை மிக மிகப் புதிராக ஆகிப்போனது. தன் காம இச்சையைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தன்னால் முடிகிறதா என்று பரிசோதித்துக் கொள்ளும் பொருட்டு, நிர்வாணமான ஓர் இளம்பெண் மற்றும் தன் உடன்பிறந்தவரின் மகளோடு படுத்து உறங்கினார். இந்தச் செயல் அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் கடுங் கோபத்தையும் ஏற்படுத்தியது. காந்தியின் மனைவி இதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

பெண் என்பவள் அவளை உடைமையாக்கிக் கொண்டுள்ள ஆணுக்குப் பெருமையோ சிறுமையோ தேடித் தரும் ஒரு ஜந்து என்பது மாதிரியான ஒரு மனப்போக்கைத்தான் அடுத்த தலைமுறைக்குப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார் காந்தி. இதுவும்கூட இன்னமும் தொடர்கிறது. உலக பொருளாதார மன்றத்தின்படி, ஆண்-பெண் சமத்துவப் பட்டியலில் இந்தியா மிக மிகக் கீழே இருக்கிறது. இத்தகைய ஒரு ஆணாதிக்கத்தை எதிர்த்து இந்திய சமூகப் போராளிகள் யுத்தம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். வரதட்சிணைக் கொடுமைகளுக்கு எதிராகவும், வரதட்சிணை சாவுகளுக்கு எதிராகவும் அவர்கள் போராடுகிறார்கள். பதின்பருவ காதலர்களை இகழ்பவர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். எய்ட்ஸுக்கு எதிராகப் போராடுகிறார்கள். பெண் குழந்தைகள் பிறப்பதைத் தடுப்பதற்கு எதிராகவும், பெண் சிசுக் கொலைக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.

இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் வார்த்தைகளில் சொன்னால், “இந்தியாவில் நடக்கும் வன்முறை மற்றும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகளில் பத்துக்கு ஒன்பது, பாலியல் ரீதியான கட்டுப்பாடு காரணமாகவே நிகழ்கின்றன”. செக்ஸ் மற்றும் பெண்களின் பாலுறவு விருப்பங்கள் தொடர்பாக இந்தியாவில் ஆழமாகப் படிந்து கிடக்கும் இத்தகைய பிரச்னைக்குரிய மனப்போக்குக்கு காந்தியை மட்டும் நாம் தனிப்பட்டுக் குற்றவாளியாக்க முடியாது. ஆனால், தமது ஆளுமையும் புகழும் தொடர்ந்துகொண்டு இருந்த போதிலும், பாலுறவுச் சுதந்திரத்தை இந்தியா எப்போதுமே அனுபவிக்கக் கூடாது என்பதற்காகப் போராடி, அதில் வெற்றியும் பெற்றார் காந்தி. அகிம்ஸா முறையிலான அரசியல் புரட்சிக்கு உள்ள சக்தியை உணர்ந்துகொண்டது காந்தியின் மேதைமை. ஆனால், பெண்களுக்கு எதிரான அவரது எண்ணங்களில் உள்ள வன்முறையானது எண்ணற்ற கௌரவக் கொலைகளையும், அளக்க முடியாத துயரங்களையும் வழங்கியிருக்கிறது.

நினைவில் கொள்ளுங்கள், புனிதர் என்று இங்கே யாரும் இல்லை.

7 comments:

vijayan said...

காந்தி புனிதரா இல்லையா என்பதை காலம் தீர்மானிக்கட்டும்.அவர் தன் கருத்தை வெளியிட்டார்.அதை யாருக்கும் அவர் சிபாரிசு செய்யவில்லை.

Anonymous said...

ithellam romba overa illai
gandhi sonna ellaththaiyum kettu nadakkura madhiri.medhavi thanam ippadui korai solrathu moolam kaata ninaikreenga pola

GoodJob said...

காந்தியா... அது ஒரு சுயநலவாதி...தன் கருத்தை, அதிகாரத்தை நிலைநாட்டவே உண்ணவிரதம் இருந்தது... சுபாஷ்.. நல்ல தலைவர் இல்லையா? சுபாஷ் காங்கரஸ்ல தலைவர் பதவிக்கு போட்டியிட்டப்ப அவரை எதிர்த்து..ஆள் நிக்கவச்சி...அரசியல் பண்ணினவர்(தேர்தல்ல சுபாஷ் ஜெயிச்சது...காந்தி அரசியலுக்கு விழுந்த அடி)

Anonymous said...

How can you even think of judging Gandhiji? He is not just human. Mahatma

Nithya said...

Hello Mr.Marudhan,

Today if you are able to speak/write negatively about a father of a nation (when you are living in the same nation) without any fear, he is the major reason for it. He only got you that freedom. Do not forget that.

Personally you might have different opinion on him, but at least you would have respected him as this whole country is accepted him as 'Father of Nation'.

I do not understand the notion of this article. What you are trying to show from this? Do you want to erase the name of ‘Gandhiji’ from Indian history by showing him as a rude man? If so, you are an idiot. Most of the readers know well about Gandhiji than you. No one will hear you.

People like you are the viruses which cause the current problems in nation. You pass the wrong things about our culture, leaders, etc. to the next generation and just erase the fruitful parts.

Do not misuse internet and technologies. Even if you are not able to do anything useful, just keep quite. That will mean more to this society.

He had tremendous number of good qualities to admire. Light them up for the readers. Compared to our current politicians and the political situation, without any doubt he was/is one of the GREATEST LEADER of our nation.

-Nithya

Unknown said...

மருதன்
காந்தியை பற்றி நீங்கள் கூறியுள்ள கருத்துக்களை படித்தேன், இந்த அளவுக்கு தைரியமாக உங்கள் கருத்தை சொன்னதற்கு என் பாராட்டுகள்.
அவர் நம்முடைய தேச பிதா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, நம்முடைய சுதந்திரத்திற்கு பாடு பட்டார் என்பதும் உண்மையே . அதே சமயம் உங்கள் கருத்துக்களும் உண்மையே, தேச பிதா என்பதற்காக அவர் செய்த தவறுகள் நியாயம் ஆகிவிடாது. இதை ஒப்புக்கொள்ள மனமிள்ளதவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. எப்பவோ கிடைக்க வேண்டிய சுதந்திரம் இவர் ஒருவரால் மட்டுமே தள்ளி போயிற்று . அஹிம்சை என்று சொல்லி சொல்லி ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவே செயல் பட்டார். இப்படி இவரை பற்றி சொல்வதற்கு நிறையவே உள்ளது.
உங்கள் எழுத்து பணி மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

எந்த தலைவரையும் விமர்சிக்க கூடாது என்பது இந்த நாட்டில் உள்ளவர்களின் மனபோக்க உள்ளது.. ஜெயகாந்தன் போல பலர் வந்தால் தான் உருப்படும்..நீங்கள்தொடருங்கள்..