May 26, 2010

கிழக்கு மொட்டைமாடிக்கூட்டம் : இந்திய மருத்துவக் கொள்கை

போலி மருந்துகளையும், காலாவதியான மருந்துகளையும் தேடிப்பிடித்து அழிக்கும் பணி ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவின் மருத்துவக் கொள்கை குறித்து விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் திரு. சுகுமாரனைத் தொடர்பு கொண்டோம்.

சுகுமாரன், FMRAI (Federation of Medical and Sales Representatives Association of India) அமைப்பின் அனைத்து இந்திய முன்னாள் துணைத் துலைவர். TNMSRA (Tamil Nadu Medical and Sales Representatives Association) அமைப்பில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர். இந்திய மருத்துவக் கொள்கைகள் குறித்து கூர்மையான விமரிசனங்களை பல்வேறு பொதுக்கூட்டங்களில் முன்வைத்து வருபவர். கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவும் விவாதிக்கவும் ஆர்வமாக இருக்கிறார்.
  • வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பல இந்தியாவில் சுதந்தரமாக விற்பனை செய்யப்படுவதாகச் சொல்லப்படுவது உண்மையா? இந்திய அரசு எப்படி இதனை அனுமதிக்கிறது?
  • ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட கிராமப்புறங்களில் ஏழை மக்கள் மீது மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் அவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவ்வப்போது வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டுகின்றன. எனில், இந்தியா ஒரு பரிசோதனைக் கூடமாக மாறிவருகிறதா?
  • பெருகும் நோய்கள், பெருகும் போலி மருந்துகள்.
  • பெருகும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள்.
ஆழமாகவும் அகலமாகவும் இன்னும் நிறைய விவாதிக்கலாம். அனைவரும் வருக.
  • தேதி : ஜூன் 4, வெள்ளிக்கிழமை
  • நேரம் : மாலை 6.30 மணி
  • இடம் : கிழக்கு மொட்டை மாடி.
  • முகவரி : 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18

2 comments:

Anonymous said...

Good topic

மகா said...

எக்சலண்ட். இந்தப் பதிவில் தென்படும் ஆதங்கமும் கோபமும் உங்கள் நூலில் வெளிப்பட்டால் அது நல்ல புத்தகமாக அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. வெறும் நல்ல படைப்பை எழுதிவிடுவதோடு நின்றுவிடாமல் அடுத்த கட்டத்துக்கும் நகரவேண்டும். இந்திய அரசியல் தலைவர்களைத் திருத்துவது எப்படி..? பன்னாட்டு நிறுவனங்களை சமாளிப்பது எப்படி..? மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது எப்படி..? எதுவும் தெரியவில்லை.