September 20, 2010

பசி, பஞ்சம், பி. சாய்நாத்

சென்ற வாரம், செப்டம்பர் 17, 2010 அன்று இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ஜெர்மன் ஹாலில் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பி. சாய்நாத், Slumdogs Vs Millionaires: Farm Crisis and food crisis in the age of inequality என்னும் தலைப்பில் உரையாற்றினார். அந்த உரையின் முழு வடிவத்தை இங்கே அளிக்கிறேன்.


அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 2005ல் பி. சாய்நாத் ஆற்றிய உரையின் முழு வடிவம் கீழே. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் இந்தியக் கிராமப்புறங்களை எப்படி மாற்றியமைத்திருக்கின்றன என்பதை பி. சாய்நாத் இங்கே ஆதாரபூர்வமாக விளக்குகிறார். உரையின் முடிவில் உள்ள கேள்வி பதில் பகுதிகள் முக்கியமானவை. எடிட் செய்யப்படாத முழுமையான வடிவம்.


பி. சாய்நாத்தின் பங்களிப்பை அறிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும். விக்கிப்பீடியா பக்கம் இங்கே.

தி ஹிந்து, ஃப்ரண்ட்லைன் ஆகிய இதழ்களில் சாய்நாத் எழுதும் கட்டுரைகள், இங்கே தொகுக்கப்படுகின்றன.

பி. சாய்நாத்தின் எழுத்துகளையும் பேச்சுகளையும் பரவலாக அனைவரிடமும் கொண்டு செல்லவேண்டியது நம் கடமை.

10 comments:

S.Rengasamy - cdmissmdu said...

சாய்நாத்தை அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டியது நம் கடமை.There are several Magsasay Award Winners for Journalism and Creative Writing from India.(http://www.scribd.com/doc/28018809/Inspiring-Indians-Magsaysay-Award-Winners) But Sainath is different. You will feel so close to him if you are from farming background.

மருதன் said...

S.Rengasamy - cdmissmdu : நன்றி. உங்கள் கல்லூரியில் பயிலும் சமூகவியல் மாணவர்களுக்கு அவசியம் பி. சாய்நாத்தை அறிமுகப்படுத்துங்கள். அவருடைய உரைகளை பொதுவில் ஒளிபரப்பி மேற்கொண்டு விவாதிக்கச் சொல்லுங்கள்.

Anonymous said...

Thanks for the links marudhan

Anisha Yunus said...

நன்றி மருதன் சார்.

நம்மால் எவ்வளவு தூரம் இயலுமோ அத்தனை தூரம் வரை பசியை அகற்ற பாடுபடுவோம் இன்ஷா அல்லாஹ்.

தோமா said...

Thanks lot Sir,.....

hariharan said...

இந்தியாவின் முக்கியமான் மக்கள் பிரச்சனைகளை குறிப்பாக கிராமப்புற விவசாயிகளைப் ப்ற்றி அதிகமாக கட்டுரை எழுதியிருக்கிறார்.சமூக அக்கறையுள்ள பத்திரிக்கையாளர் என்று இவர் முதலில் தெரிகிறார். இவருடைய “How right you are,Prime minister" என்ற கட்டுரை பொது விநியோகமுறை பற்றியும் மன்மோகன்சிங் உணவு தானியம் விநியோக சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட் அரசின் ‘பாலிசி’ விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற கருவை வைத்து ‘ஹிந்து’ வில் எழுதியிருந்தார், அதற்கு வந்த வாசகர்களின் கடிதங்களை ஒவ்வொன்றாக படித்தேன் 94 பேர் கருத்து சொல்லியிருந்தார்கள்,அனைவரும் சாய்நாத் அவர்களை பாராட்டியிருந்தார்கள் மன்மோகன்சிங் அரசை விமர்சித்திருந்தார்கள். நிச்சயமாக அவரின் மக்கள் சேவை தொடரவேண்டும், அதுவும் மீடியாவில்.

மருதன் said...

ஹரிஹரன் : நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம், வினவில் வெளிவந்துள்ளது.

http://www.vinavu.com/2010/09/16/how-right-you-are-manmohan-singh/

தீனதயாள் said...

மிகவும் உபயோகமான சுட்டிகளை அளித்திருக்கிறீர்கள். சாய்நாத் கட்டுரைகள் காட்டமாகவும் கிண்டலாகவும் உள்ளன. இப்படிப்பட்ட நல்ல பத்திரிக்கை யாளர்கள் இருப்பது அனைவருக்கும் நன்மை. அருந்திதி ராய் போல்

Anonymous said...

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html


(Hi marudhan, I can share your essays with my friends using email post link icon u have now in every posts only if i know my friends email id in my mind's memory...i know only 2 of my friends email id in memory...so place the tell a friend button below every posts as said in the above link of my dummy blog.)

Anonymous said...

Thanks Marudhan