January 2, 2011

நடந்தது ஒரே போர்!


அன்புள்ள அப்பா, அம்மா, சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு,

நான் சொல்லப்போவதைக் கேட்டு தயவு செய்து என்னைக் குரூரமானவனாக நினைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் அனைவரும் இதற்கு மனத்தளவில் தயாராவது அவசியம். அமைதியாகவும் துணிச்சலாகவும் இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். கெட்ட செய்தி உங்களைத் தேடி வந்தால் அதைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியடையக்கூடாது என்பதற்காக இப்போதே இதை சொல்லிவிடுகிறேன்.

நீங்கள் இனி என்னைப் பார்க்கமுடியாது. ஒருவேளை நான் திரும்பி வந்தால், நிச்சயம் அது மகிழ்ச்சிகரமான தருணமாக இருக்கும். கடவுளிடம் இருந்து கிடைத்த எதிர்பாராத பரிசாக அதனை எடுத்துக்கொள்ளலாம்... நான் என் கடமையை நிறைவேற்றுவதற்காகச் செல்கிறேன்... என்னுடன் இருக்கும் தோழர்களும் இதே உணர்வுடன் இருக்கிறார்கள்... அன்பானவர்களே, இந்த முக்கியமான தருணத்தில், இந்த நாட்டில் உயிர் வாழ்வதற்காக நீங்கள் அனைவரும் பெருமைப்படவேண்டும்.

Walter Limmer, ஜெர்மன் சிப்பாய்
ஆகஸ்ட் 7, 1914

செப்டம்பர் 24, 1914 அன்று லக்ஸம்பர்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் லிம்மர் இறந்துபோனார்.

0

முதல் உலகப் போரில் மைய நாடுகள் அணி தோல்வியடைந்தது. எனில், நேச நாடுகள் அணி வென்றதா? இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது கடினம். ஒரு வகையில், முதல் உலகப் போரில் வெற்றியாளர்களே இல்லை என்றும் சொல்லலாம். சில புதிய பிரதேசங்களையும் காலனிகளையும் நேச நாடுகளுக்குக் கிடைத்தன என்றாலும் அவற்றை அவர்களால் வெற்றிகரமாக ஆளமுடியவில்லை.

முதல் உலகப் போரின் விளைவாக, பிரிட்டனின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது. அமெரிக்கா, அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. மேற்கு ஆசியாவில் இன்றுவரை அமைதி திரும்பவில்லை.

முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போரைக் கொண்டு வந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால், 1914 தொடங்கி 1945 வரை ஒரே ஒரு உலகப் போர்தான் நிகழ்த்தப்பட்டது. மத்தியில் சில ஆண்டு இடைவேளையுடன்.

1 comment:

பிரகாஷ் said...

முதல் உலகப் போர் புத்தகம் படிக்க ஆவலாக இருக்கிறன். கண்காட்சியில் உங்களை சந்திக்கிறேன் . பிரகாஷ்