May 2, 2011

ஒசாமா படுகொலையை ஏன் கண்டிக்கவேண்டும்?


இஸ்லாமாபாத்தில் இருந்து மேற்கே 150 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அபோடாபாத் என்னும் உட்புறப் பகுதியில் ஒசாமா பின் லேடன் நேற்று அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக ஒபாமா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 'ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலிவாங்கிய ஒசாமா பின் லேடன் என் ஆணையின்படி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டுள்ளார்.' ஒபாமா தொடர்கிறார். 'அமெரிக்கா இஸ்லாத்துக்கு எதிராக இந்தப் போரை நடத்தவில்லை, இனியும் அவ்வாறு செய்யாது என்பதை மீண்டும் உறுதிபடுத்திக்கொள்கிறோம்.'

அதாவது, இதுவரை நடந்ததும், தற்போது நடந்துகொண்டிருப்பதும், இனி நடக்கவிருப்பதும் தீவிரவாதத்துக்கு எதிரான போர்தானே தவிர இஸ்லாத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான போர் அல்ல. அப்படி யாராவது ஒருவேளை நினைத்திருந்தால் தவறுக்கு வருந்திவிடுங்கள். மேலும், நேற்று இரவு, கடாபியின் மகனும் மூன்று பேரப்பிள்ளைகளும் அமெரிக்க ஆதரவு நேடோ படைகளால் கொல்லப்பட்டதும்கூட தீவிரவாதத்துக்கு எதிரான போரின் தவிர்க்கமுடியாத ஓர் அத்தியாயம்தான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இராக், ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் என்று தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் இந்த நீண்ட போரின் தொடக்கப்புள்ளி 9/11 என்று வைத்துக்கொண்டால், அந்த 9/11 எதற்காக நிகழ்த்தப்பட்டது? தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டாவது அமெரிக்காவைத் தாக்கியழிக்கவேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் வரிந்துகட்டிக்கொண்டு போரில் குதிக்க என்ன காரணம்? பின் லேடன் எப்படி உருவானார்? அவரை வளர்த்தவர்கள் யார்? பயிற்சி கொடுத்து கொம்பு சீவி விட்டது யார்? ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து பின்னோக்கி போய்கொண்டே இருந்தால், அத்தனைக் காரணங்களுக்கும் விளைவுகளுக்கும் ஆதாரப் புள்ளியாக அமெரிக்கா திகழ்வதைக் காணமுடியும்.

யோசித்துப் பாருங்கள். மனிதகுலத்துக்கு எதிராக ஒசாமாவின் அல் காய்தா இழைத்த அத்தனைக் குற்றங்களையும் ஒபாமாவின் அமெரிக்கா இழைத்திருக்கிறது. இன்னமும், அல் காய்தா இழைக்காத ஆட்சிக்கவிழ்ப்புகளையும், அரசியல் படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் அமெரிக்கா சர்வ சாதாரணமாக நடத்தியிருக்கிறது. தொடர்ந்து நடத்திவருகிறது. என்றாலும், ஒசாமாவின் படுகொலையை இன்று ஒபாமாவால் தர்க்க ரீதியாக நியாயப்படுத்திவிட முடிகிறது. ஆம், என் கட்டளையின்படி அமெரிக்கப் படைகளால் ஒசாமா கொல்லப்பட்டார் என்று மைக் முன்னால் நின்று அறிவிக்கமுடிகிறது. மனிதகுலத்தின் எதிரி எங்களால் ஒழிக்கப்பட்டுவிட்டான் என்று பெருமிதம் கொள்ள முடிகிறது.

இந்தப் பெருமித உணர்வு அமெரிக்கா தாண்டியும் பரவிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. 'அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ, யாரால் அழிந்தால் என்ன? எப்படியும் தீவிரவாதிதான். ஒசாமா கொல்லப்பட்டதை இஸ்லாமியர்களே கொண்டாடும்போது, நாம் ஏன் வெத்துக்கு அமெரிக்காவைத் திட்டிக்கொண்டிருக்கவேண்டும்?' அதாவது, ஒசாமா தீவிரவாதி, குற்றவாளி. எனவே அவன் தண்டிக்கப்படவேண்டியவன். அவ்வளவுதான்.

டிசம்பர் 2006ல் இராக்கின் அதிபர் சதாம் உசேன் வேட்டையாடப்பட்டு, கைது செய்யப்பட்டு, போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டபோது வெளிப்பட்ட அதே நியாயவாத தர்க்கம். சதாம் குற்றமிழைத்தவன். எனவே, தண்டிக்கப்படவேண்டியவன். இராக் மீதும் ஆப்கனிஸ்தான் மீதும் பாகிஸ்தான் மீதும் இப்போது லிபியா மீதும் நடத்தப்படும் போர்களும் இதே முறையில்தான் நியாயப்படுத்தப்படுகின்றன.

தவறிழைத்தவன் தண்டிக்கப்படுவான். ஒற்றை வரி நியாயம். ஒற்றை வரி தர்மம்.

எனில், அமெரிக்காவின் தவறுகளுக்கு யார் தண்டனை அளிப்பது? நம் கண்முன்னே சீனியர் புஷ்ஷும் ஜூனியர் புஷ்ஷும் தற்போது ஒபாமாவும் இழைத்து வரும் போர்க்குற்றங்களை யார் விசாரிப்பது? யார் தண்டிப்பது? தவறிழைத்தவன் தண்டிக்கப்படுவான் என்னும் தர்மமும் நியாயமும் ஒபாமாவுக்குப் பொருந்தாதா? அல் காய்தாவுக்கான தர்மமும் அமெரிக்காவுக்கான தர்மமும் வெவ்வேறா?

என்றால், ஆம். சதாமின் படுகொலையைப் போலவே ஒசாமாவின் படுகொலையையும் உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டது. அமெரிக்கப் போரில் கொல்லப்பட்ட பல லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களின் படுகொலைகளும் இப்படித்தான் அமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. ‘

அல் காய்தாவையும் அமெரிக்காவையும் வெவ்வேறு கோணத்தில் இருந்து பார்க்க நாம் பழகிவிட்டோம். ஒசாமாவின் படுகொலையைக் கொண்டாடுவது மட்டுமே இப்போது நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரே வாய்ப்பு. இதை மீறி வேறு எந்தக் கேள்வியையும் எழுப்ப முடியாது. எழுப்பினால் குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் பறந்து வரும். அப்படியானால் நீ ஒசாமாவை ஆதரிக்கிறாயா? இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரிக்கிறாயா? இஸ்லாமிய ஷரியத் சட்டங்களையும் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களையும் காட்டாட்சியையும் ஆதரிக்கிறாயா?

எதற்கு ஆதரிக்கவேண்டும்? ஒசாமாவின் படுகொலையைக் கண்டிக்கிறேன் என்று சொன்னால் அது இஸ்லாத்தின் அத்தனைப் பிற்போக்குத்தனத்தையும், இஸ்லாமியர்கள் இழைத்த அத்தனை தவறுகளையும் ஆதரிப்பதாக ஏன் எடுத்துக்கொள்ளப்படுகிறது? இது ஒரு நூதன அரசியல் உத்தி அல்லவா? ஒன்று என்னுடன் இரு அல்லது அவர்களுடன் இரு என்னும் புஷ்ஷின் அயோக்கிய சித்தாந்தம் அல்லவா இது?

அமெரிக்காவா அல் காய்தாவா? இதுதான் இப்போது அமெரிக்கா எழுப்பியுள்ள கேள்வி. ஒசாமாவா ஒபாமாவா? தீவிரவாதமா தீவிரவாத எதிர்ப்பா? பயங்கரவாதமா ஜனநாயகமா? புத்திசாலித்தனமான இந்தக் கேள்வியை நம் பக்கம் நகர்த்திவிட்டு, மீண்டும் போரை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்துவிட்டது அமெரிக்கா.

ஒசாமாவின் படுகொலையை நாம் சுலபமாக ஏற்றுக்கொண்டுவிட்டால், அமெரிக்காவின் கை மேலும் வலுவாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அந்த வகையில், ஒசாமாவின் படுகொலையை நிச்சயமாகக் கண்டிக்கவேண்டும்.

83 comments:

மருதன் said...

ஒசாமா பின் லேடன் உருவான கதை http://www.vinavu.com/2011/05/02/osama-obama/

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

அமெரிக்கா சேர்த்துள்ள வண்டி வண்டியான பாவ கணக்குகளுக்கு தண்டனைகளை இனிதான் உருவாக்க வேண்டும்.போரினால் பொருளாதாரத்தை பெருக்கும் வல்லரசு மிகவும் கேவலமானது.அமெரிக்கர்களும் நாஜிக்கள் என்றழைக்கப்படும் நாள் நெருங்கிவிட்டது.

ahamed5zal said...

god knows who is the terrorist of world.

faidh said...

உசாமாவின் படுகொலையை கண்டனம் செய்ய இந்த கட்டுரையா அல்லது இஸ்லாமிய சட்டங்கள் பற்றி உங்கள் கருத்தை திணிப்பதிற்காகவா

ஹரன்பிரசன்னா said...

அமெரிக்காவின் 1000 பாவங்களில் ஒரு பாவம் இன்று கழிந்திருக்கிறது.

siruthuli said...

எப்போதுமே அவரவர் தரப்பு நியாயங்கள் என்பது உண்டு.
நியாய அநியாயங்கள் நாம் யாருக்கு நெருக்கமோ அதை பொருத்தது...
அல்லது எது நம் கருத்துக்கு நெருக்கமோ அதை பொருத்தது...

தாக்குதலின் போது தீவிர வாதிகள் என்ன சாதிக்கிறார்கள் ?
"கவன ஈர்ப்பு" தானே தவிர, தீர்வல்ல...
நியாயங்கள் பல உள்ள இயக்கங்களும் துப்பாக்கியால் நிச்சயம் வெல்ல முடியாது.
வெகு ஜன வாழ்க்கைக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் தீவிரவாத இயக்கங்கள் அம்மக்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி விடுகிறது...
சிறு சிறு வெற்றிகள் வரலாம் - ஆனால் அது எதிராளி மீண்டும் பலம் பெரும் வரை மட்டுமே...
பாதை தவறாய் இருந்தால் பயணம் நிறைவு பெறாது...

அது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது...

Anonymous said...

ஒண்ட இடமில்லாத ஒழிய இடமில்லாத, நீட்டி படுக்க முடியாத, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒழு செய்துவிட்டு பல வேலை தொழுகையை நிறைவேற்றி, ஒரு நாளைக்கு ஒரு வேலை உணவு மட்டும் உண்டு பல நாட்கள் மலை முகட்டிலும், பாறை இடுக்குகளிலும், அடர்ந்த காட்டிலும், வேர்வை ஆறாக ஓடும் பாலைவனத்திலும், கையில் ஒரு குவாட்ஸ் கெடிகாரம் கூட கட்டாமல் ( சாட்டிலைட்டில் தெரிந்துவிடும் என்று ) வாழ்ந்த கடந்த கால வாழ்க்கை ஜனாப் ஒசாமா அவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தை வாங்கி தரும் என்பது நிச்சயம். அவருடைய சொத்துக்கும் பணத்திற்கும் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம். தனது சிறுநீரக உபாதை, நீரிழிவு இவற்றிற்கு கூட சரியான மருத்துவம் செய்ய முடியாமல் இந்த அமெரிக்கர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு, இறைவன் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தை கொடுப்பான். இத்தனை கஷ்ட்டங்களையும் அவர் தாங்கி பிடித்து இஸ்லாமிய சகோதரன் அமெரிக்கர்களால் சாக கூடாது என்று தான் தவிர அவர் எந்த சுய நலத்திர்க்ககவும் இத்தனை கஷ்ட்டங்களையும், துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்து செல்லவில்லை. தன் இனம் காக்கப்பட வேண்டும், உலகம் அழியும் வரை இஸ்லாம் தழைத்து நிற்கவேண்டும். உண்மையான ஷரியத்தை பின்பற்றி ஹராம், ஹலால், அறிந்து மக்கள் நன்மக்களாக வாழ்ந்து மரிக்க வேண்டும் என்ற ஒரே உயர் நோக்கம் தான்,, தவிர என் சகோதரர் ஒசாமாவிற்கு வேறு எந்த ஒரு உலக பதவிக்கோ,பணத்திற்கோ, ஆசைப்பட்டு இத்தனை துன்பத்தை தாங்கவில்லை, அவர் மறைந்தாலும், அவர் உழைப்பு வீண் போகாது, இறைவன் நாடினால் அவரை விட கண்ணியமான ஒரு அரனை ஏறபடுத்துவான். எந்த ஒரு மனிதனுடைய செயலும், ஒருவர் கண்ணோட்டத்தில் தவராகப்பட்டால் வேறு ஒருவரின் கண்ணோட்டத்தில் சரியாக படும் இது உலக நியதி.அவர் உண்மையான த்யாகி, தன்னலமற்ற த்யாகி,, அவரும் ஒரு விடுதலை விரும்பி தான், அமெரிக்காவின் அடி வருடிகளுக்கு பட்ட பின் புத்தி வரும், அவரை சாதாரண பிக் பாக்கெட் ரௌடியை விட கேவலமாக அவன் இவன் என்று வசனமெழுதிய அனைத்து மீடியாக்களுக்கும் இங்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

Anonymous said...

9/11க்கு மூளையாக இருந்தவன் ஒழிந்தான், 26/11க்கு மூளையாக இருந்தவர்களை எப்படி, எப்போது ஒழிப்பது என்பதுதான் கேள்வி.

கால்கரி சிவா said...

தாவூத் இப்ராஹாமிற்கு கொள்கை பரப்பு செயலாளர் தேவை படுகிறதாம். தாங்கள் மிக தகுதியானவர். விண்ணப்பிக்கலாமே?

siruthuli said...

To Anonymous :
அன்பை போதிக்கின்ற மேம்பட்ட மதம் இஸ்லாம்.

பல்வேறு தீவிர வாத செயல்களை புரிந்துதான் இஸ்லாத்தை காப்பாற்ற வேண்டுமா?

எங்கேனும் அப்படி எந்த மதத்திலாவது குறிப்பிட பட்டு இருகிறதா?

Twin tower-ல் வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொன்றுவிட்டதால் இஸ்லாத்தை காப்பாற்றி விட்டாயிற்றா?
இஸ்லாமியர்களின் மீதான மதிப்பை அல்லவா அவன் குறைத்தான்?

பாதுகாத்தலுக்கும் அழித்தலுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு...

பணம் இருந்தும் எளிய வாழ்கை என பாராட்டு - அது துறவு அல்ல... ஒளிந்து வாழும் வாழ்வு...

அவன் இவன் என்று குறிப்பிடுவது ஒரு தீவிரவாதியை அவமானம் செய்கிறதா?
உங்கள் சகோதிரர் என்று சொல்லி அதனால் கௌரவப் படுத்தி விட்டீர்கள். சபாஷ்.

இஸ்லாத்தின் உண்மையான போதனைகளை பின் பற்றுங்கள்...

விடுதலை என்பது நிலைக்க அஹிம்சை மட்டுமே தீர்வு...

Abdullah said...

புஷ், ஒபாமா போன்ற கயவர்களின் தீவிரவாதத்துக்கு ஒசாமாவின் (அப்பாவி பொது மக்களை கொள்ளும்) பதில் தீவிரவாதம்தான் தீர்வா? ஒருபோதும் இல்லை. சக்தி இருந்தால் மைக் முன் நின்று கொக்கரிக்கும் புஷ் ஒபாமா அயோக்கியர்களை கொள்ளலாம். முடியாது அல்லவா? அவர்களுக்கு எதிராக மக்கள் மனங்களில்
மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் சக்தியை திரட்டி போராட வேண்டும்.

உங்களில் ஒருவன் said...

Anonymousஇன் கருத்துக்களை நானும் 100 விழுக்காடு ஆதரிக்கிறேன்.

Anonymous said...

பில்லேடனுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை பாஸ். என்ன லேடன் ஒரு குழுவாக செய்கிறதை அமெரிக்க ஜனநாயகத்தின் பெயரால் செய்து முடிக்கிறது.அவ்வளவு தான் வித்தியாசம்.ஆப்கான் வியட்னாம் ஈராக் ஜப்பான் என்று அமெரிக்க செய்தது இன்னும் பல

அப்துல் அஸீஸ் said...

ஒரு மனித குல எதிரி ஒழிந்தான். இந்தக் கொலைகாரக் கூட்டத் தலைவனை ”அவர்” என்று அழைக்க வேண்டுமாம். இப்படித்தான் அப்துல் ஜப்பாரும் (கிரிக்கெட் போட்டிகளில் வர்னனையளராக இருந்தவர்) சொல்லிக்கொண்டிருந்தார். அந்த இடுகையே காணோம் இப்போது. முஸ்லிம் தீவிரவாதியா இருந்தா ”அவர்” எனச் சொல்ல வேண்டுமாம்.. தீவிரவாதிக்கும், பயங்கரவாதிக்கும் என்ன மரியாதை?

இந்தக் கொலைக்காக அமெரிக்காவை பாராட்ட முடியாது. அவர்கள்தான் இன்றைய உலக அமைதி சீர்குலைவுக்கு மூலகாரணம். இனிமேலாவது இன்னொரு ஒசாமாவை அமெரிக்கா தயாரிக்காமல் இருக்கட்டும்.

இங்கே ஹரன்பிரசன்னா என்பவர் சொன்னதுபோல அமெரிக்காவின் பல்லாயிரக்கணக்கான பாவங்களில் ஒன்று இன்று தொலைந்தது.

அன்புடன்,

அப்துல் அஸீஸ்

Anonymous said...

நாம் 'நான்' என்று குறிப்பிடும் போது அந்த 'நான்' என்பதை நம் அறிவு, குணம், மனம் ஆகிய 3ஐயும் சேர்த்தல்லவா குறிப்பிடுகிறோம்? உண்மையில் நம் அறிவு மற்றும் குணம் ஆகிய இரண்டில்தான் தனித்தன்மை உண்டு. மனம் என்பது உலகில் உள்ள அத்தனை மனிதனுக்கும் பொதுவான ஒன்றல்லவா? இங்குள்ள மனிதர்கள் யாவரரிடமும் பெரும்பாலும் செயல்படுவது புத்தி அல்ல மனம் தான். ஒரு சிறிய ஆதாரம். மனிதர்கள் யாருமே தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக் கொள்வதே இல்லை.இது போதும்தானே இவர்களிடம் பெரும்பாலான சமயத்தில் செயல்படுவது புத்தி அல்ல மனம் தான் என்பதை நிரூபிக்க? மனம் தனக்கு ஒரு ஞாயம் அடுத்தவனுக்கு ஒரு ஞாயம் என்று செயல்படும் தன்மையை தானே இயல்பிலேயே உடையதல்லவா? நீங்கள் நல்லவர். யார் என்றே தெரியாத என்னை நம்பி bloggerல் modificationsகளை செய்தீர்கள். உங்கள் அளவிற்கு கூட நான் நல்லவன் இல்லை. உங்கள் அளவிற்கு கூட நான் முகம் தெரியாதவர்களை நம்ப மாட்டேன். இப்படிப்பட்ட நல்லவர் ஆன மருதனாகிய நீங்கள் பேராசை பிடித்து குணம் திரிந்து ஒரு பெரிய தவறை செய்து விடுவதாய் கற்பனைச் செய்வோம். அந்த விஷயம் வெளியே தெரிந்தால் உங்கள் வாழ்வு அவ்வளவுதான் என்று கொள்வோம். அப்போது நல்லவரான நீங்கள் செய்த தவறுக்கு தண்டனைப் பெற்று செத்து அழிவோம் என்று நினைப்பீர்களா? அல்லது தப்பிக்க முனைவீர்களா? செத்து அழிவோம் என நீங்கள் முடிவு செய்து அத்தவறை ஒப்புக் கொண்டால் உங்களிடம் செயல்பட்டது உங்கள் குணம். அதாவது அப்போது நீங்கள் 'நான் மருதன்' என்று கூறினால் அது உங்கள் இதயத்தை குறிப்பது. மாறாக தப்பிக்க முனைவீர்கள் எனில் தப்பிக்க முனைவது 'மருதன்' அல்ல; உண்மையில் உலக மனிதர் யாவருக்கும் பொதுவான 'மனம்'.(மனம் எத்தனை தந்திரமானது என்பதை psychology படித்த நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.)தான் அழிந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து செய்த தவறை ஒப்புக் கொண்டவர்கள் உலகில் உண்டு. நான் "மருதனே, நீங்கள் எப்படிப்பட்டவர்?" என கேட்க்கப்போவது கிடையாது. இதயம் மனதை மிஞ்சி செயல்படுவது ஒரு குறிப்பிட்ட எல்லைவரை மட்டுமே என்று சொல்ல வருகிறேன். இதயம் மனதை மிஞ்சி சில மேலான மனிதர்களிடம் செயல்பட்டுள்ளது என்பதும் உண்மை. ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கு மனம்தான் இதயத்தை மிஞ்சி செயல்படும். இது மறுக்க முடியாத உண்மை தானே? அப்படி இருக்கும் போது நாம் ஏன் அமெரிக்காவை குறை சொல்ல வேண்டும்? இக்கட்டுரை வாசகனை அமெரிக்காவை எடை போடவே உதவுகிறது. மாறாக தன் யோக்கியதை என்ன, தன்னிடம் செயல்படுவது புத்தியா மனமா என்பதையெல்லாம் யோசிக்க வைக்கவில்லை.வாசகனை அவனுக்குள் உள்ளே துலாவி அவனை அவனே எடை போட இக்கட்டுரை உதவவில்லை...d...

கானகம் said...

//பாதை தவறாய் இருந்தால் பயணம் நிறைவு பெறாது...

அது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது...//

அருமை.

யாரோ ஒருத்தர் பேர் சொல்லாம உணர்ச்சி வசப்பட்டிருக்கார். பின்லாடந்தான் இஸ்லாமியர்களுக்கு வழிகாட்டி என்ற ரேஞ்சில்.. இனிமேல் பின்லாடர் என்றெ அழைப்போம்

siruthuli said...

To Anonymous :
அன்பை போதிக்கின்ற மேம்பட்ட மதம் இஸ்லாம்.

பல்வேறு தீவிர வாத செயல்களை புரிந்துதான் இஸ்லாத்தை காப்பாற்ற வேண்டுமா?

எங்கேனும் அப்படி எந்த மதத்திலாவது குறிப்பிட பட்டு இருகிறதா?

Twin tower-ல் வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொன்றுவிட்டதால் இஸ்லாத்தை காப்பாற்றி விட்டாயிற்றா?
இஸ்லாமியர்களின் மீதான மதிப்பை அல்லவா அவன் குறைத்தான்?

பாதுகாத்தலுக்கும் அழித்தலுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு...

பணம் இருந்தும் எளிய வாழ்கை என பாராட்டு - அது துறவு அல்ல... ஒளிந்து வாழும் வாழ்வு...

அவன் இவன் என்று குறிப்பிடுவது ஒரு தீவிரவாதியை அவமானம் செய்கிறதா?
உங்கள் சகோதிரர் என்று சொல்லி அதனால் கௌரவப் படுத்தி விட்டீர்கள். சபாஷ்.

இஸ்லாத்தின் உண்மையான போதனைகளை பின் பற்றுங்கள்...

விடுதலை என்பது நிலைக்க அஹிம்சை மட்டுமே தீர்வு...

அருள்முருகன் said...

நல்ல நிலைப்பாடு எடுத்து அருமையாக எழுதியிருக்கிறீர்கள் மருதன். இந்த காந்தியவாதிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? ஒசாமா செய்தது மட்டும்தான் தீவிரவாதமா? ஒபாமா செய்தது? இதற்கு பதில் வருகிறதா பார்ப்போம்

K.R.அதியமான் said...

நண்பர் மருது,

சோவியத ரஸ்ஸியா பனிபோர் காலங்களில் செய்த லீலைகளுக்கு எதிர் வினைதான் அமெரிக்க ‘ஏதாதிபத்தியம்’ என்று அழைக்கப்படுவது. இன்று வேறு பாணியில் தொடர்கிறது.

ஆஃப்கானிஸ்தானை 1979 ரஸ்ஸியா அக்கிரமித்தன் விளைவாக சோவியத யூனியனே சிதறியதாக ஒரு கோண்டம் : http://faculty.washington.edu/aseem/afganwar.pdf

மேலும் சாதாம், ஆஃப்ஹன், அமெரிக்க பற்றி நான் முன்பு எழுதிய பதிவு : http://athiyamaan.blogspot.com/2008/10/blog-post_31.html

Anonymous said...

செகுவேராவிற்கு இணையான மாவீரன் ஒசாமாவின் மறுமைக்காக இறைஞ்சுவோம்.அமெரிகாவின் அநீதிக்கெதிராக போராடும் போராளிகளின் போராட்டங்களுக்கு துணை நிற்போம்.

NO said...

நண்பர் திரு அதியமான்,

திரு மருதன் போன்ற கம்யூனிச-மத அடிப்படை வாதிகளுக்கு நீங்கள் என்னதான் சொன்னாலும், உண்மைகள் கண்முன்னே இருந்தாலும் மூளையில் மட்டும் ஏறாது. ஏனென்றால் உண்மைகளை ஏற்றால், அவர்தம் இந்நாள் வரையான வாழ்வின் அர்த்தம் பொய்யாகிவிடும் என்ற பயம்!!

இந்த பதிவை பார்த்தவுடன் எனக்கு தோன்றிய விடயங்கள் இரண்டு!

வக்கிரம் = மருதன்
பாவம் = பத்ரி

(திரு பத்திரியை நான் ஏன் இதில் இழுக்கிறேன் என்றால், திரு மருதன் போன்றவர்களை எடிட்டராக வைத்துக்கொண்டு இவர் புத்தகம் வெளியிட்டால் அந்த பதிப்பகத்தின் intellectual integrity அகலபாதாளத்தில்தான் போகும் என்ற வருத்தம்தான். இதை சொல்ல எனக்கு உரிமை உண்டு ஏனென்றால் காசு கொடுத்து இந்த பதிப்பகத்தின் சில புத்தகங்களை படித்தவன், படிப்பேன் என்ற முறையில்! )

(எதிர்குரலுக்கும் ஒரு தார்மீக குரல் வேண்டும் சார். ஒரு தார்மிக இடம் வேண்டும் சார். அனால் திரு மருதன் எழுப்புவது ஒரு கடைந்தெடுத்த விக்கிரம் பிடித்த எதிர்க்குரல் என்று பெயர் கொடுத்த பிதற்றல் மட்டுமே. இவர் எழுதுவதை இனிமேலும் நான் படிக்க மாட்டேன்)

Anonymous said...

வில்லன் பராக் ஒபாமா ஒழிக, உலகத்தையே அச்சுறுத்தும் அமெரிக்க சர்வதிகாரம் ஒழிக, என்று எத்தனியோ மக்கள் குரல் கொடுத்தாலும் அது கிறிஸ்துவை வழிபடுகிறவர்களுக்கு புரியாது. கிறிஸ்துவை வழிபடுகிறவர்கள் என்ன பாவம் செய்தாலும் மன்னிக்க பட்டு வாழ்வார்கள், மற்ற அனைத்து மதத்தவர்களும் அவர்கள் செய்யும் கொடுமையை அனுசரித்துக்கொண்டு அவர்களுக்கு நன்மை செய்யாவிட்டால் ஒபாமாவிற்கு ஏற்பட்ட கதிதான், அநியாய கொலை, அத்துமீறிய இராணுவ படையெடுப்பு.
பாகிஸ்தானுக்கு தெரியாமல் அந்த நாட்டின் உள்ளே அமெரிக இராணுவம் நுழைந்தது ,கொன்று குவித்தது.எதற்கு இனி தனி நாடு, எல்லா நாடும் அமெரிக்க ஆளுமைக்கு உட்பட்டதே, முதலாளி அமெரிகாவிற்கு மற்ற நாட்டில் உள்ள அணைத்து மக்களும் சேவை செய்ய வேண்டும் என்று ஆண்டவன் தீர்ப்பு. இதை மீறுவோருக்கு உண்டு மரணம்.
இன்று உலகத்தில் இருக்கும் மற்ற அனைத்து மதத்தவர்களுக்கும் விழுந்தது செருப்படி, நெஞ்சில் ஆறாத வடு, ஏன்டா சாவறதுக்கு பதிலா அமெரிக்காவை ஆதரித்து உயிரையாவது பிச்சை எடுத்து காப்பாற்றி கொள்ளலாம் என்று ஆழ பதிந்து விட்டது.அமெரிக்க செய்யும் அராஜகங்களும், அந்நிய நாட்டின் மீது படை எடுத்தலும் தவறு என்று இனி பேச முடியாது. வாழ்க கிறிஸ்தவம். கிறிஸ்துவை வழிபடுகிரவனே உலகத்தை ஆள்வான்.

kalai said...

என்று ஒசாமா கொல்லப்பட்டதை கண்டிக்கவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒசாமாவை கண்டிக்கின்ற அதேவேளையில் ஒபாமா போன்றோரையும் (இவர்களின் பட்டியல் நீளமானது) சுட்டுக்கொல்ல வேண்டும் என்பதையும் அழுந்தி வலியுறுத்த வேண்டும்.
இனி, ராஜபக்‌ஷேவும், நரேந்திரமோடியும் கொல்லப்படுவது எப்போது?

Anonymous said...

வில்லன் பராக் ஒபாமா ஒழிக, உலகத்தையே அச்சுறுத்தும் அமெரிக்க சர்வதிகாரம் ஒழிக, என்று எத்தனியோ மக்கள் குரல் கொடுத்தாலும் அது கிறிஸ்துவை வழிபடுகிறவர்களுக்கு புரியாது. கிறிஸ்துவை வழிபடுகிறவர்கள் என்ன பாவம் செய்தாலும் மன்னிக்க பட்டு வாழ்வார்கள், மற்ற அனைத்து மதத்தவர்களும் அவர்கள் செய்யும் கொடுமையை அனுசரித்துக்கொண்டு அவர்களுக்கு நன்மை செய்யாவிட்டால் bin laden and family ku ஏற்பட்ட கதிதான், அநியாய கொலை, அத்துமீறிய இராணுவ படையெடுப்பு.
பாகிஸ்தானுக்கு தெரியாமல் அந்த நாட்டின் உள்ளே அமெரிக இராணுவம் நுழைந்தது ,கொன்று குவித்தது.எதற்கு இனி தனி நாடு, எல்லா நாடும் அமெரிக்க ஆளுமைக்கு உட்பட்டதே, முதலாளி அமெரிகாவிற்கு மற்ற நாட்டில் உள்ள அணைத்து மக்களும் சேவை செய்ய வேண்டும் என்று ஆண்டவன் தீர்ப்பு. இதை மீறுவோருக்கு உண்டு மரணம்.
இன்று உலகத்தில் இருக்கும் மற்ற அனைத்து மதத்தவர்களுக்கும் விழுந்தது செருப்படி, நெஞ்சில் ஆறாத வடு, ஏன்டா சாவறதுக்கு பதிலா அமெரிக்காவை ஆதரித்து உயிரையாவது பிச்சை எடுத்து காப்பாற்றி கொள்ளலாம் என்று ஆழ பதிந்து விட்டது.அமெரிக்க செய்யும் அராஜகங்களும், அந்நிய நாட்டின் மீது படை எடுத்தலும் தவறு என்று இனி பேச முடியாது. வாழ்க கிறிஸ்தவம். கிறிஸ்துவை வழிபடுகிரவனே உலகத்தை ஆள்வான்.

Ibnu Halima said...

ஏக இறையின் அருள் என்றென்றும் நம் மீது நிலவட்டுமாக
முதலில் ஒரு இஸ்லாமியனாக இருந்து ஒசாமா பின் லேடனுக்கு ஏற்பட்ட இந்த முடிவை வரவேற்கிறேன். அவரால் அநியாயமாக கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் கண்ணீருக்கு ஓரளவு நீதி கிடைத்திருப்பதையும் நினைத்து திருப்தி அடைகிறேன். பெரிய ரவுடி தனக்கு காரியம் ஆக வேண்டி சிறிய ரவுடிகளை உருவாக்குகிறான். பின்னர் சிறிய ரவுடி தன் கைமீறி போகும் போது பெரிய ரவுடியால் சிறிய ரவுடி கொல்லப்பட்டிருக்கிறான். எனவே இதில் கண்டிக்க வேண்டிய எந்தவொரு விசயமும் இல்லை மருதன். கட்டுரையோடு முழுவதும் உடன்படவில்லை என்றாலும் சில இடங்களில் உடன்படுகிறேன்.

Ibnu Halima said...

ஆனால் சிறிய ரவுடியை (ஒசாமாவை) விட மிக மோசமான பெரிய ரவுடி (அமெரிக்கா) எப்போது தண்டனை அனுபவிக்க போகிறான்? சிறிய ரவுடி கொன்றவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் என்றால் பெரிய ரவுடி அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மில்லியனில் வருகிறது. அவனுக்கு யார் தண்டனை வழங்க போகிறார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. பெரிய ரவுடி அமெரிக்காவை விட மோசமான கேட்டகிரி மனிதர்கள் பலரும் இவ்வுலகத்தில் உண்டு. இங்கே பின்னூட்டமிட்டவர்களிலும் உண்டு. அவர்கள் யாரெனில் அமெரிக்கா போடும் டாலர்களுக்காக எப்போதும் நாக்கை தொங்க விட்டுக் கொண்டிருப்பவர்கள். இந்த லிஸ்டில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஆட்சியாளர்கள், ஊடகத்தினர்கள், அதிகார வர்க்கத்தினர்கள் மற்றும் மேட்டுக்குடி உயர் சாதி வர்க்கத்தை சேர்த்துக் கொள்ளலாம். இவர்கள் ஒசாமாவை மட்டுமே குற்றம் சாட்டுபவர்கள். மறந்தும் அமெரிக்காவை கனவில் கூட எதிர்க்காதவர்கள். நாயைப் போன்று தன் அமெரிக்க எஜமானனுக்கு நன்றி விசுவாசம் காட்டுபவர்கள். நாய்களுக்கு தெரியாது தன் எஜமான் நல்லவனா கெட்டவனா என்று. ஆனால் இந்த மனித உருவில் இருக்கும் ஜந்துக்களுக்கு தெரிந்தாலும் தெரியாதது போல நடிப்பார்கள்.

Ibnu Halima said...

சகோ faidh சொன்னது போன்று சந்தடி சாக்கில் இஸ்லாம் பிற்போக்குத்தனங்களை கொண்டிருக்கிறது என்று கட்டுரையில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அத்தகைய பிற்போக்குத்தனங்களை பற்றி நேரடி உரையாடலுக்கு வாருங்கள் என்று கூப்பிட்டால் எந்தவொரு பொதுவுடைமைவாதிகளும் வர மாட்டேன் என்கிறீர்கள். எது பிற்போக்குத்தனம் என்பதை மக்கள் முன்னிலையிலும் விவாதிக்கலாம் என்று தமிழக இஸ்லாமிய அறிஞர்கள் உங்களை மாதிரி பொதுவுடமைவாதிகளுக்கு, நாத்திகர்களுக்கு, கிறித்தவர்களுக்கு, இந்துத்துவவாதிகளுக்கு என பலருக்கும் பகிரங்கமாக அழைப்பு கொடுத்தும் அவ்வப்போது இணையத்திலும் அல்லது தம் கையில் இருக்கின்ற ஊடகத்திலும் பழைய பல்லவியையே பாடுகின்றீர்கள்.

Ibnu Halima said...

இனிவரும் காலம் அமெரிக்காவிற்கு கடினமானது. ஏனெனில் அமெரிக்கா உருவாக்கிய பொம்மை ஆட்சியாளகள் பல நாடுகளில் பதவியை விட்டும் விரண்டோடுகிறார்கள். இனி அந்த நாடுகளின் வளத்தை கொள்ளையடிப்பது கஷ்டமான விஷயம். மேலும் பொருளாதார நிலைமையும் அமெரிக்காவில் இன்னும் சகஜமான நிலைக்கு வரவில்லை. சரிந்த தன்னுடைய பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்காவால் அவ்வளவு சீக்கிரம் நிலை நிறுத்த முடியாது. தனக்கு டாலர் பிச்சை போடும் எஜமான் கஷ்டத்தில்ருக்கிறார் என்பதை விசுவாசமான ஜந்துக்களால் கண்டிப்பாக தாங்கி கொள்ள முடியாது. அதை ஏற்றுக் கொள்ளவும் மனம் இடம் கொடுக்காது. ஆனாலும் அமெரிக்கா என்ற பெரிய ரவுடி தீவிரவாதத்த்ற்கு எதிரான போர் என்று தனது ஆயுத வியாபாரத்தை திறம்படவே செய்து கொண்டிருக்கும். இவ்வளவு காலம் ஒசாமாவை காட்டி பயமுறுத்திய அமெரிக்க மற்றும் அதன் சார்பு ஊடகங்கள் இனிமேல் அய்மான் அல் ஜவாஹிரி என்ற நபரை தீவிரவாத முகமாக மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். இதற்காக தனது நாட்டின் குடிமக்களின் சில உயிர்களை கூட பலி கொடுக்க அமெரிக்க தயங்காது. ஒருவேளை அமெரிக்கர்கள் விழிப்படைந்து விட்டால் இருக்கவே இருக்கிறது இந்தியர்களின் உயிர்கள்.

மருதன் said...

ஒசாமா பின் லேடன் குறித்து சில கட்டுரைகள்.

1) The war - started to punish the perpetrators of the September 11 attacks - may well outlast the architect of those attacks.

http://english.aljazeera.net/indepth/2011/05/20115255840441224.html

2) Tariq Ali on Osama http://www.zcommunications.org/who-told-them-where-he-was-by-tariq-ali

3) Salman Rushdie on Osama http://www.businessinsider.com/salman-rushdie-its-time-to-declare-pakistan-a-terrorist-state-2011-5

4) Robert Fisk on Osama at 50 http://www.zcommunications.org/march-2007-robert-fisk-on-bin-laden-at-50-by-robert-fisk

5) Bin Laden Had Lost Relevance says Robert Fisk http://www.zcommunications.org/bin-laden-had-lost-relevance-by-robert-fisk

6) Osama : Not justice but vengeance http://www.zcommunications.org/justice-or-vengeance-by-phyllis-bennis

siruthuli said...

To Mr.Ananymous :
"செகுவேராவிற்கு இணையான மாவீரன் ஒசாமா" என புகழ்ந்து எழுதி சே-வை கேவலப்படுத்தியதை கண்டிக்கிறேன்...

Bin Laden refused to surrender and used his wife as "human shield"

ஒரு மாவீரன் செய்யும் செயலா இது?

siruthuli said...

சரித்திரம் மிக நீண்டது என்பதால் பழைய பல விஷயங்களையும் நாம் அலச வேண்டி உள்ளது...
அமெரிக்கா பல நாட்டு வளங்களை அபகரிக்கிறது என்று அமெரிக்கர்களை குற்றம் சுமத்துவோரே...
நம் நாட்டு வளங்களை முதலில் கொள்ளை அடிக்க ஆரம்பித்தது ஆப்கானிஸ்தான் முகமதிய மன்னர்களே...
இதை பற்றிய பல தகவல்களை நாம் "வந்தார்கள் வென்றார்கள்" போன்ற புத்தகங்களில் பெற முடிகிறது...
ஊடகங்கள் இல்லாத காரணத்தால் நிகழ்ந்த வன்முறை தாக்குதல்களும் கொலை வெறி தாண்டவங்களும் முழுவதும் தெரியவில்லை அவ்வளவுதான்... ஆனால் கிடைத்த ஆதாரங்களில் "பாலை நில மக்களின் தொழில் கொள்ளை" எனும் ஐவகை நிலங்கள் இயல்பு தெளிவாகிறது...
அவர்கள் பல தேசங்களில் செய்தது இப்போது அவர்களுக்கு... வரலாறு திரும்புகிறது என்பது இதுதான்...

தற்போது நம் கண்முன் நடப்பதால் - ஊடகங்கள் உள்ளதால் - கருத்து சுதந்திரம் இருப்பதால் நம்மால் குறைந்தது கண்டனத்தையாவது பதிவு செய்ய முடிகிறது... பண்டைய இந்தியாவில் கஜினி செய்த சோம்நாத் கோவில் போன்ற அட்டூழியங்களின் போது யார் கண்டனம் செய்திருக்க முடியும்?

வினை விதைத்தவன் வினை அறுக்கட்டும்...
இது அமெரிக்காவிற்கும் பொருந்தும்... ஆனால் கால நிர்ணயம்தான் தெரியவில்லை...

Ibnu Halima said...

சோம்நாத்தை பற்றி பேசியிருக்கும் சகோதரர் உண்மையான வரலாற்றையும் படித்து விட்டு வருதல் நலமே. சென்ற வாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் இதைக் குறித்து அருமையான கருத்தொன்றை சொல்லியிருக்கிறார். நடுநிலைமையான வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர் சோம்நாத் கோயில் கொள்ளை பற்றி ஒரு புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதையும் சகோதரர் படித்து விடுதல் நலம். ஏனெனில் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று தான் சான்றோர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

Ibnu Halima said...

பண்டைய காலத்தில் ஒரு மன்னன் வெற்றி பெறுவான் என்றால் தான் வெற்றி பெற்ற நாட்டின் வளங்களை தமதாக்கி கொள்வது இயல்பான ஒன்றாகவே இருந்துள்ளதை அறிவாரோ இந்த சகா. மதத்தின் அடிப்படையில் இத்தகைய குற்றசாட்டுகளை மிக சுலபமாக வைத்து விட்டு செல்வது எளிது. ஆனால் சோழ மன்னர்கள் பாண்டிய மன்னர்களை வென்ற போது கூட இத்தகைய செல்வங்களை தமதாக்கி கொண்டிருக்கின்றனர். இதற்கு எந்த மத சாயம் பூச போகிறார் இந்த சகா? இல்லை சாதிய சாயம் பூச போகிறாரா?

Ibnu Halima said...

எனவே தேவையற்ற சல்லியடிக்காமல் கட்டுரை சார்ந்து கருத்தை பதித்தல் நலம். அதை விடுத்து மத அடிப்படையில் பிளவு படுத்தும் வேலையை செய்வதற்கு வரலாற்றை திரிக்க வேண்டாமென்று சகோதரரை கேட்டுக் கொள்கிறேன்.

சந்துரு said...

எப்படியோ நீதி நிலை நாட்டப் ப்ட்டது. கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் சாவான்.
ஆனாலும் சமூகப் பொறுப்புள்ள எவனும் இப்படி கண்டனம் தெரிவிக்கமாட்டான்

Anonymous said...

http://marancollects-tamilebooks.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

srikrishnan said...

மருதன் அவர்களுக்கு

தங்கள் கட்டு​ரை​யை படித்த ​பொழுது எனக்குள் ​தோன்றிய கருத்துக்க​ளை கீழ்க்கண்ட என் வ​லைப்பூவில் எழுதியுள்​ளேன் வாய்ப்பிருந்தால் படிக்கவும்

http://naatkurippugal.wordpress.com/2011/05/03/osamamurder/

மருதன் said...

srikrishnan :

சுட்டிக்கு நன்றி.

இரு பாகங்களில் நீங்கள் எழுதிய கட்டுரைகளைப் படித்தேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அடிப்படை உண்மையையும் நான் ஏற்கிறேன்.

உலகம் முழுவதும் தற்போது நிலவும் போர்ச்சூழலுக்குக் காரணம் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்தான் என்பதை நீங்கள் நன்றாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள்.

ஒசாமாவைக் கொன்றதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டதாக அமெரிக்கா முழங்குவதை நிச்சயம் நான் ஏற்கமாட்டேன்.

தொடர்ந்து உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்து வாருங்கள்.

மருதன் said...

Ibnu Halima :

ஒசாமா படுகொலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று இந்திய முஸ்லிம்கள் முன்னால் மைக் நீட்டி கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது அபத்தத்திலும் அபத்தம்.

சோம்நாத் கோயில் பற்றிய ரொமிலா தாப்பரின் கருத்தை நான் ஏற்கிறேன். இஸ்லாமியர்கள் கோயில் இடிப்பாளர்கள் என்று பொத்தாம் பொதுவாகக் கூறப்படுவதையும் நான் எதிர்க்கிறேன்.

இஸ்லாமியர்களின் வாழ்வை 9/11 தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பற்றி பொதுப்புத்தியில் இப்போது உருண்டு திரண்டிருக்கும் கருத்தாக்கத்துக்கு மிகப் பெரிய காரணம் அமெரிக்கா. இது பற்றி விரிவாக எழுதமுடியுமா என்று பார்க்கிறேன்.

உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

Anonymous said...

ஒசாமாவின் உடலை அமெரிக்கா இப்படி கடலில் வீசியிருக்கவேண்டாம். என்னதான் தீவிரவாதியாக இருந்தாலும் இப்படியா ஒரு மனிதனை நடத்துவது?

ஹே ராம் said...

சிறுபான்மை சமூகம் என்ற ஒரே காரண்த்துக்காக இஸ்லாமை உயர்த்தி பிடிக்கும் மருதன் போன்றவர்கள் இப்படி தான் எழுதுவார்கள். இப்படி எழுதாவிட்டால் தான் நாம் ஆச்சரியம் கொள்ள வேண்டும்.

எழில் said...

நல்ல கட்டுரை மருதன்

Anonymous said...

இஸ்லாமில் பிற்போக்கு தனமே இல்லை என்கிறீர்கள் Ibnu Halima? ஒசாமா எந்த மதம்?

Ibnu Halima said...

@மருதன்,
அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய சார்பு உடகங்களின் தாக்கம் தான் பொதுமக்களிடம் அதிகமாக காணப்படுகின்றது. எனவே பொது மக்களிடம் இஸ்லாமியர்களை பற்றிய கருத்தியல் எதிர்மறையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். சில ஊடகங்கள் தெஹெல்கா, அல் ஜசீரா என்று சுய சார்புடையவயாக இருக்கலாம். ஆனால் இவை பரந்து விரிந்த சாம்ராஜ்யங்களை (பிபிசி, சி என் என் போன்று) கொண்டிருக்கவில்லை.

ஒசாமா கொலையை பற்றி முஸ்லிம்களிடம் கருத்துக்களை கேட்பதின் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருப்பதை அறியாமலில்லை. ஒசாமாவை இஸ்லாத்தின் ஒரு பிம்பமாக காட்டுவதற்கான முன்னோடி நடவடிக்கை இது. இந்த பொதுப்புத்தியில் ஊறியதால் தான் ஒரு அனானி ஒசாமா இஸ்லாத்தின் பிற்போக்குதனம் இல்லையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்?

Ibnu Halima said...

இஸ்லாத்தில் பிற்போக்குத்தனம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை வைக்கின்ற கனவான்கள் (இந்துத்துவாதிகளோ ,கிறித்தவர்களோ, பொதுவுடமைவாதிகளோ, நாத்திகர்களோ அல்லது இதர சித்தாந்தவாதிகளோ) யாராக இருந்தாலும் அவர்களிடம் நேரிடையாக கலந்துரையாட வாருங்கள் என தமிழக இஸ்லாமிய அறிஞர்கள் பகிரங்க அழைப்பை விடுத்திருக்கின்றனர். பொது மக்களின் முன்னிலையிலும் இஸ்லாத்தை பற்றி விவாதிக்கலாம் என்றும் சொல்லியிருக்கின்றனர். விவாதிப்பவர்கள் மருதன் போன்ற பொதுவுடமைவாதியாக இருந்தாலும் அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்துவவாதிகளாக இருந்தாலும் தயார் என்று அவர்கள் அறிவித்திருக்கின்றனர். மெய்நிகர் உலகில் சிலம்பாட்டம் ஆடுபவர்கள் மெய்யுலகில் ஆட தயாரா?

siruthuli said...

to திரு.Ibnu Halima ,

தங்களின் கருத்துக்களுக்கு நன்றி...
நான் சொல்வதுதான் சரி என்று சொல்லி உண்மையை புறம் தள்ளிவிடும் குறுகிய மனப் போங்கு என்னிடம் இல்லை...
நிச்சயம் நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகங்களை படிக்கிறேன்...
அதே சமயம் பாண்டிய சோழ மன்னர்கள் செய்ததாக நீங்கள் குறிப்பிடும் வளங்களின் கொள்ளை பற்றி
ஏதேனும் வரலாற்று ஆய்வு புத்தகங்கள் இருக்குமானால் அதையும் குறிப்பிடுங்கள்...

நான் மதங்களின் மீதான குற்றங்களை சுமத்துவதாக நீங்கள் நினைப்பதால் ஒன்று சொல்ல வேண்டி இருக்கிறது...
எங்கள் குடும்பத்தில் 3 மதங்களை சேர்ந்தவர்களும் உண்டு... எல்லாரும் அவரவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...

நாட்டிற்கு மதச் சாயம் பூச வேண்டாம்...
ஒரு மாபெரும் குற்றம் புரிந்தவன் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் தண்டிக்கபட வேண்டியவனே...

எவன் ஒருவன் தான் செய்த குற்றங்களுக்கு தன் இனத்தை கேடயமாக பயன் படுத்துகிறானோ அவன் உலக மகா கோழை...

ஆப்கானிஸ்தானியர்கள் உலகில் எந்த வன்முறையும் செய்ததே இல்லை என வாதிடுகிறீர்களா?

நீங்கள் நான் உட்பட இந்த நாட்டு சகோதரர்கள் பலரும் இங்கிருந்தவர்களே தவிர ஆப்கானிஸ்தானில் இருந்து
புலம் பெயர்ந்து வந்தவர்கள் அல்ல.

controversy -யாக எழுதுவதால் மட்டுமே கிடைக்கும் சுலபமான விளம்பரங்கள் இந்த கட்டுரைக்கும்
கிடைத்ததாகவே எண்ணுகிறேன்...

3000 பேரை கொன்ற ஒருவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என மருதன் நினைக்கிறார்?
அல்லது மனித குல மாணிக்கம் என அழைத்து சிறப்பு செய்ய வேண்டுமா...

கண்டனம் பதிவு செய்வதெல்லாம் இருக்கட்டும்...
என்னதான் செய்திருக்கலாம் என அவர் நிச்சயம் ஒரு கட்டுரை எழுதியே ஆக வேண்டும்...
அந்த பொறுப்பும் கடமையும் அவருக்கு உண்டு...

மருதன் said...

siruthuli :

1) திறந்த மனத்துடன் Ibnu Halima வுடன் நீங்கள் மேற்கொள்ளும் விவாதம் அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.

2) ஒசாமாவின் படுகொலையை மட்டும் கண்டிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது என்பதே என் நிலைப்பாடு. தீவிரவாதம் என்றால் அல் காய்தா, அல் காய்தா என்றால் இஸ்லாம் என்பதாக ஒரு சித்தாந்த வலை பின்னப்பட்டு அதன் காரணமாகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சில லட்சம்.

3) தீவிரவாத செயல்கள் என்பது தனிப்பட்ட சில குழுக்கள் மேற்கொள்வது மட்டுமல்ல, அரசு மேற்கொள்வதும்கூடத்தான். ஒசாமா கொல்லப்பட்டது சரிதான் என்று சொல்லும் யாரும் ஒபாமாவின் செயல்களை கேள்விக்கு உள்ளாக்குவதில்லை.

4) அல் காய்தா குறித்தும் பின் லேடன் குறித்தும் கலையரசன் எழுதியிருக்கும் சில கட்டுரைகளை வாசித்துப் பாருங்கள்.

http://kalaiy.blogspot.com/2009/01/blog-post_21.html#uds-search-results

5) ஒசாமாவின் கொலையின் மூலம் அமெரிக்கா உண்மையில் நீதி வழங்கியிருக்கிறதா அல்லது பழி தீர்த்துக்கொண்டிருக்கிறதா? அல்லது இரண்டும் ஒன்றுதானா?

6) நீதி என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன? ஒரு வழக்கை எடுத்துக்கொண்டு, இரு தரப்பு வாதங்களுக்கும் செவி சாய்த்து, குற்றவாளி யார் என்பதை முடிவுசெய்து தீர்ப்பு வாசிப்பது. நடந்திருப்பது என்ன? முதலில், அல் காய்தாதான் 9/11 தாக்குதலுக்குக் காரணம் என்பது சந்தேகத்துககு இடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டதா?

7) இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினால் அதற்கு மறுமொழி எப்படி இருக்கிறது என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். 'அமெரிக்கவை எதிர்க்கிறாய் என்றால் அல் காய்தாவை ஆதரிக்கிறாயா?'

8) தீவிரவாத செயல்களை நான் ஏற்கவில்லை. செப்டம்பர் 11 தாக்குதலை மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா மேற்கொண்ட ஆப்கன், இராக் போர்களையும்கூட நான் கண்டிக்கிறேன். இரண்டுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை என்கிறேன். 'தீவிரவாதிகளைக்' காட்டிலும் அமெரிக்காவை அதிகப் போர்க்குற்றங்கள் இழைத்திருக்கிறது என்பதே என் வாதம்.

Ibnu Halima said...

@siruthuli,
முதலில் நான் ஒசாமாவை எந்த இடத்திலும் ஆதரிக்கவில்லை. ஒசாமா பின்பற்றிய வழிமுறையை நான் எதிர்க்கிறேன் என்பதையும் முன்னரே பதிவு செய்திருக்கிறேன். ஆனால் சிறிய ரவுடி ஒசாமாவின் அழிவை எதிர்பார்க்கும் பலர் பெரிய ரவுடி அமெரிக்காவை பற்றி மூச்சு கூட விட மறுப்பதேன் என்பது தான் என்னுடைய கேள்வி.

பண்டைய மன்னர்களின் மனோபாவத்திற்கு மதச்சாயம் பூசியது தாங்கள் தான் என்பதை இப்படி இவ்வளவு விரைவாக மறுக்குறீர்கள். //நம் நாட்டு வளங்களை முதலில் கொள்ளை அடிக்க ஆரம்பித்தது ஆப்கானிஸ்தான் "முகமதிய" மன்னர்களே...// இதே கட்டுரையில் முதலில் இது தாங்கள் இட்ட கருத்து. இதில் வெறும் ஆப்கானிஸ்தானிய மன்னர்கள் என்றால் எவரும் அதைக் கண்டு கொள்ளப்போவதுமில்லை. ஆனால் வலிய மதத்தை திணித்தீர்கள். எனவே அதற்கான பதிலை தான் நான் மத வெறுப்பை ஏற்படுத்தாதீர்கள் என்று சொன்னேன். எனவே மதச்சாயம் பூச வேண்டாம் என்பதை உங்களை நோக்கி ஒருதடவை சொல்லிக் கொள்ளுங்கள்.

Ibnu Halima said...

//எவன் ஒருவன் தான் செய்த குற்றங்களுக்கு தன் இனத்தை கேடயமாக பயன் படுத்துகிறானோ அவன் உலக மகா கோழை...// இந்த வார்த்தைகளில் நூறு சதவீதம் உடன்படுகிறேன்.

//ஒரு மாபெரும் குற்றம் புரிந்தவன் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் தண்டிக்கபட வேண்டியவனே...// கண்டிப்பாக அவன் தண்டிக்கப்பட வேண்டியவனே. ஆனால் அவன் அந்த மதத்தை சார்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக அந்த மதத்திலுள்ள மற்றவர்களும் ஊடகங்களாலும் பல ஆட்சியாளர்களாலும் துன்பத்திற்கு உள்ளாக்கபடுவது எந்த வகையில் நியாயம்?

//ஆப்கானிஸ்தானியர்கள் உலகில் எந்த வன்முறையும் செய்ததே இல்லை என வாதிடுகிறீர்களா?//
எந்த இடத்திலாவது ஆப்கானிஸ்தானியர்கள் வன்முறை செய்ததில்லை என்று சொல்லியிருக்கிறேனா? பின்னர் எதற்காக இந்த திரித்தல்?

Ibnu Halima said...

//3000 பேரை கொன்ற ஒருவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என மருதன் நினைக்கிறார்?// 3000 பேரை கொன்ற ஒசாமாவிற்கு தண்டனை கிடைத்து விட்டது. ஆனால் மில்லியன் கணக்கில் மக்களை கொன்ற அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனையை நாம் தர போகிறோம்? ஒருவேளை இறந்த 3000 பேரும் டாலர் நாட்டினார்கள். ஆகையால் அதற்கு பழி தீர்க்கலாம். ஆனால மில்லியன் கணக்கில் இறந்தவர்கள் வளரும் நாடுகளை சேர்ந்த ஏழைகள். எனவே சிறு அனுதாபம் மட்டும் தெரிவித்து விடலாம் என்று சொல்லுகிறீர்களா? இல்லை இறந்தவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். எனவே கண்டுகொள்ள தேவையில்லை என்று சொல்ல போகிறீர்களா?

//நீங்கள் நான் உட்பட இந்த நாட்டு சகோதரர்கள் பலரும் இங்கிருந்தவர்களே தவிர ஆப்கானிஸ்தானில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் அல்ல. // நீங்களாவது நானும் மண்ணின் மைந்தன் தான் என்று ஒத்துக் கொண்டீர்களே.

முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World' said...

சகோ.மருதன் அவர்களுக்கு,

நான் ஒசாமா பற்றி எந்த பதிவும் இடவில்லை. இதற்குமுன் யாருடைய பதிவிலும் பின்னூட்டமும் போட வில்லை. காரணம், எனக்கு யாரும் அல்காய்தா உறுப்பினர் அடையாள அட்டையை பின்னூட்டத்தில் வழங்கி விடக்கூடாது என்பதற்காக... :) (உங்களுக்கு தர மாட்டார்கள்)

அதனால், ட்விட்டரில் மட்டும் இப்படி கேட்டிருந்தேன்...

///'பயங்கரவாதி' ஒசாமா காலி.! அடுத்து.? ஜார்ஜ் W புஷ்? தாவூத் இப்ராஹிம்.? நரேந்திர மோடி.? மஹிந்தா ராஜபக்சே.? இவர்களில் யார்..?///--பொதுவாக... :)

உங்கள் இடுகையை இப்போதுதான் வாசித்தேன். 'ஒசாமா ஒழிப்பு' குறித்தான நம் கருத்து ஓர் அலையில் இருப்பது கண்டு மகிழ்ச்சி.

ஆனால்.... சகோ.மருதன்,

பதிவில் தங்களின்....

///இஸ்லாமிய ஷரியத் சட்டங்களையும் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களையும் காட்டாட்சியையும் ஆதரிக்கிறாயா?///

...இக்கருத்து தான் சிலரை பதிவின் சாயத்தை இஸ்லாமிய எதிர்ப்பாக உணர வைத்திருக்கிறது.

ஏனெனில், "ஒசாமா பின் லேடன் செய்த செயல்கள் யாவும் இஸ்லாமிய அடிப்படைகளினால் ஆனவை" என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று படிப்பவரை புரிந்து கொள்ள வைக்கிறது.

எனில், இந்த கருத்தை இஸ்லாம் பற்றி அறியாத மக்களிடம் இஸ்லாமிய அடிப்படை அறியாமல் உங்கள் கருத்தை 'உண்மைக்கு புறம்பாக' நீங்களும் திணிக்கிறீர்களே சகோ.மருதன்.

ஒபாமா, புஷ் மாதிரியே..?!

siruthuli said...

To திரு. Ibnu Halima
முகமதிய என்று நான் குறிப்பிட்டது உண்மை... ஆனால் அது பெயரின் ஒரு பகுதியாக நான் கருதினேன்...
நீங்கள் குறிப்பிட்டபின் refer செய்தேன்... அது...
The name Muhammad means "Praiseworthy"

எப்படியாகிலும் உங்களின் மத உணர்வுகளை காயப்படுத்தி என் கருத்துக்கள் இருக்குமாயின் என் மன்னிப்புகளையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறேன்.
கருத்துக்கள் மோத வேண்டிய இடத்தில் மதத்தை மோத விடுவதில் அர்த்தமில்லை.

//ஆனால் அவன் அந்த மதத்தை சார்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக அந்த மதத்திலுள்ள மற்றவர்களும் ஊடகங்களாலும் பல ஆட்சியாளர்களாலும் துன்பத்திற்கு உள்ளாக்கபடுவது எந்த வகையில் நியாயம்? //

மதத்தின் பெயரால் போர் என தீவிர வாதிகள் தொடங்குவது அந்த மதத்தை உண்மையாக பின்பற்றி நடப்பவர்களுக்கு அவப்பெயரை பெற்று தருகிறது... ஊடகங்கள் இதில் பெரும் பங்கு வகிப்பது உண்மை...

நான் முன்பு குறிப்பிட்ட படி "வெகு ஜன வாழ்க்கைக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் தீவிரவாத இயக்கங்கள் அம்மக்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி விடுகிறது...". இதில் தங்களுக்கு உடன்பாடு உண்டு என நம்புகிறேன்...

மதம் பற்றிய (நீங்கள் குறிப்பிட்ட) விவாதங்கள் நடந்து அதனால் குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது... ஏனெனில் யாரேனும் ஒருவர் தான்தோன்றி தனமாக கருத்து சொல்லின் அது ஒரு கலவரத்தில் முடிய நூறு விழுக்காடு வாய்ப்பு உள்ளது...

எனவே தங்களைப் போன்ற சகோதிரர்கள் வீணாக தோன்றிய அவப் பெயரை ஆக்க பூர்வமாக களைய சிறு அளவிலேனும் முன் வர வேண்டும்...

நிச்சயமாக ஒரு யோசனை தோன்றும் போது அதை செயல் படுத்தி முயலலாம்.

சின்ன ரவுடி - பெரிய ரவுடி - இந்த விஷயத்தில் ரவுடியாக இருப்பதே தவறு தான்...

அங்கிருக்கும் அமெரிக்காவை கண்டிக்கும் நாம், நம் பக்கத்து தெருவில் இருக்கும் பேட்டை ரவுடியை கூட ஒன்றும் செய்ய முடிவதில்லை என்பது வேதனைக்குரியது...

ஒரு போலி டாக்டரின் மீது புகார் கொடுத்ததற்கே நான் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது...
நம்மை சுற்றி உள்ள மிகச் சிறிய வட்டத்தில் போராடவே தலை சுற்றுகிறது...

முதலில் கண் முன் நடக்கும் நாம் ஈடுபட இயலும் விஷயங்களில் போராடும் மனோபாவம் அனைவரின் மனத்திலும் ஏற்படுமாயின் பெரிய ரவுடிகளும் ஓர் நாள் அடங்க முடியும் என நான் நம்புகிறேன்...

மருதன் said...

சகோ. முஹம்மத் ஆஷிக் :

நான் எழுதியிருப்பதை சற்றே கவனமாகப் பாருங்கள்.

//அல் காய்தாவையும் அமெரிக்காவையும் வெவ்வேறு கோணத்தில் இருந்து பார்க்க நாம் பழகிவிட்டோம். ஒசாமாவின் படுகொலையைக் கொண்டாடுவது மட்டுமே இப்போது நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரே வாய்ப்பு. இதை மீறி வேறு எந்தக் கேள்வியையும் எழுப்ப முடியாது. எழுப்பினால் குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் பறந்து வரும். அப்படியானால் நீ ஒசாமாவை ஆதரிக்கிறாயா? இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரிக்கிறாயா? இஸ்லாமிய ஷரியத் சட்டங்களையும் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களையும் காட்டாட்சியையும் ஆதரிக்கிறாயா?//

அமெரிக்காவை எதிர்த்தால் இதுபோன்ற 'குற்றச்சாட்டுகள்' வெளிவரும் என்றே நான் எழுதியிருக்கிறேன்.

ஒசாமாவைக் காட்டிலும் அமெரிக்காவே கூடுதல் தவறுகள் இழைத்திருக்கின்றன என்பதே என் கருத்து.

Aanand said...

பின்லேடன் படம் போலி : கார்டியன் பத்திரிகை உறுதி


வாஷிங்டன், மே 3 பின்லேடன் இறந்ததாக பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட புகைப்படங்கள் போலி என சில செய்தி நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்லேடன் இறந்த நிலையில் காட்டப்பட்ட புகைப்படத்தின் கீழ்பகுதி அவரது உண்மையான புகைப்படம் என்றும் மேல்பகுதி மற்றொரு சடலத்தின் புகைப்படமாக இருக்கலாம் என்றும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ராணுவ நடவடிக்கையில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையின்போது தெரிவித்திருந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட பின்லேடனின் உடல் கடலில் வீசப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பின்லேடனின் இறந்ததாக வெளியிடப்பட்ட புகைப்படம் போலி என செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் குறித்த புகைப்படங்கள் முதலில் பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்தது.

அந்தப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பின்லாடனின் குண்டு பாய்ந்த முகம் என்று பாகிஸ்தான் இணையதளம் வெளியிட்ட படத்தை, அனைத்து ஊடகங்களும் எடுத்துக் கொண்ட கொஞ்ச நேரத்தில், அந்த படத்தில் உண்மையில்லை; இரண்டு வருடத்திற்கு முன் இறந்த ஒருவரின் முகத்தோடு 'மார்பிங்' முறையில் உருவாக்கிய படமே இது என்று, அதற்கான ஆதாரத்துடன், லண்டனில் இருந்து வெளியாகும், 'கார்டியன்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. புகைப்பட ஆதாரத்துடன் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டுரையை படிக்கும் போது ஒபாமா தான் புகழ் பெற வேண்டும் என்று ஏமாற்றுகிறார என்ற சந்தேகம் வருகிறது.

தீவிரவாத ஒழிப்பு என்று அமெரிக்க கூறுவது உண்மை இல்லை. தீவிரவாத ஒழிப்பு என்று மற்ற நாட்டின் வளங்களை அபகரிக்க அமெரிக்க செய்துள்ள சூழ்ச்சியினால் இந்தியர்கள் நாம் நிறைய இழந்து இருக்கிறோம், குறிப்பாக நமது இயற்கை வளங்கள் தாரளமாக அந்நிய நாட்டு நிறுவனகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றன, இதை எதிர்த்த மக்கள் தீவிரவாதிகள் என்று அநியாயமாக கொன்று குவித்துள்ளது அமெரிகாவின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் அரசு.

இந்தியாவின் பிரதமரையும் முக்கிய அமைசர்களையும் அமெரிக்காவின் அங்கிகரதிர்க்கு பிறகே நியமனம் நடந்துள்ளது என்பதை விகி லீக்ஸ் இணையம் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் நாம் படு பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை நாம் உணராவிட்டால் காலம் உணர்த்திவிடும்.ஆனால் அன்று நாம் இருப்போமா?

siruthuli said...

திரு. மருதன்,
தங்களின் பதிலுக்கு நன்றி.
ஆனால் நான் தங்களிடமிருந்து ஒரு தெளிவான கட்டுரையை எதிர்பார்கிறேன்...
இது சரி இல்லை என்று சொல்வது சுலபம்... "எது சரி" என்ற விளக்கமே நான் வேண்டுவது...

ஒருவனை குற்றவாளி என சொல்லும்போது "நீ யார் - யோக்யமா?" என திருப்பி கேட்பதால் மட்டும் தன்னை நிரபராதி ஆக்கி விட முடியாது...
அப்படி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டே இருக்க வேண்டியதுதான்...

வெறும் சிருஷ்ட்டிப்பு மட்டுமே ஒரு கற்பனையான குற்றச் சாட்டை எங்கோ உலகின் மூலையில் இருக்கும் அமைப்பு மீதோ மனிதன் மீதோ சுமத்தி விட முடியுமா என்ன? அப்படி ஒரு தனிப்பட்ட மனிதன் மீது ஒரு அரசாங்கத்திற்கு என்ன பகைமை?

கொஞ்சம் தெளிவான விளக்கங்களுடன் (தங்களின் தனிப்பட்ட கருத்துக்கள் தவிர்த்து - நடு நிலையாய்) ஒரு கட்டுரையை எழுத வேண்டுகிறேன்...

முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World' said...

நல்ல கருத்து சகோ.மருதன்..!

இத்துடன்.... ஒசாமா பின் லேடன் செய்த பயங்கரவாத செயல்களாக கூறப்படுபவை... (ஏனெனில்... அந்த ஆள் கூறுவதாகத்தான் ஒளி/ஒலி ஊடகத்தில் அறிவிப்பார்கள்) ...யாவும் இஸ்லாமிய அடிப்படையிலானவை அல்ல என்பதை நாம் அழுத்த்த்த்த்த்த்தந்திருத்த்த்த்த்த்த்த்த்த்மாக பதிக்க வேண்டும் சகோ. மருதன்.


"வகுப்புக்கு கட்டடித்து விட்டு ஒரு மாணவன் பலான சினிமாவுக்கு போகிறான் என்றால் அது அந்த பள்ளிக்கூட பாடத்திட்டத்தின்படிதான்" --என்று வலிய திணிக்கப்படும் கருத்தை நாமாவது எதிர்க்க வேண்டும் சகோ. மருதன்.

1-அதற்கு முதலில் நாம் அந்த பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் இந்த 'கட்டடித்து-சினிமா போகும்' ஷரத்து இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதை நாம் பாடத்திட்டம் அறியாத மக்கள் மனதில் கற்பிக்க வேண்டும்.

2-அதைவிடுத்து, 'இந்த பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்களே அப்படித்தான் இருப்பார்கள்' என்றும் சொல்லக்கூடாது.

நீங்கள், இரண்டாவதைத்தான் எதிர்த்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி சகோ.

முதலாவதையும் செய்யுமாறும்--அதை தங்கள் எழுத்தின் மூலம் பதியுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில், இஸ்லாம் பற்றி முஸ்லிம்கள் கூறுவதைவிடவும் பிறர் கூறுவதையே உண்மை என்று அறியும் காலம் இப்போது பதிவுலகில் நடைமுறையில் காண்கிறேன்..!

ஆகையால் உண்மைகளை தங்களை போன்றவர்கள் உரக்க சொல்ல வேண்டும் என்று ஆவல் கொண்டிருக்கிறேன்.

இதைத்தான் நான் ரொம்ப காலமாக பல நடுநிலையாளர்களிடம் சொல்லிக்கொண்டும் இருக்கிறேன்.

தங்கள் வலைப்பூவிற்கு வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள், சகோ.மருதன்.

Anonymous said...

//ஏனெனில், இஸ்லாம் பற்றி முஸ்லிம்கள் கூறுவதைவிடவும் பிறர் கூறுவதையே உண்மை என்று அறியும் காலம் இப்போது பதிவுலகில் நடைமுறையில் காண்கிறேன்..!//

:-) :-) :-)

Akkalur Ravi said...

ஒசாமா கொல்லப்பட்டது குறித்த இடதுசாரிகளின் அதிகாரபூர்வமான அறிக்கை ஏதும் என் கண்ணிற்கு படவில்லை. ஆனால் உங்களது கட்டுரையின் மையக்கருத்து இடது சாரிகளும், மனிதநேயம் மிக்கவர்களும் கொண்டிருக்க வேண்டிய எண்ணத்தை பிரதிபலிக்கிறது. வன்மையான குரல்.

அக்களூர் இரவி

எழில் said...

//வாஷிங்டன், மே 3 பின்லேடன் இறந்ததாக பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட புகைப்படங்கள் போலி என சில செய்தி நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
//

ஆரம்பத்திலேயே இது தெரிந்துவிடடது. அமெரிக்கா ஒன்றும் கேணை இல்லையே புகைப்படம் வெளியிட? புகைப்படத்தை வைத்து கொண்டு அவரை மாவீரர் ஆக்கிவிட்டால் என்ன செய்வது எனும் பயம் தான் காரணம்

Anonymous said...

//ஒசாமாவைக் காட்டிலும் அமெரிக்காவே கூடுதல் தவறுகள் இழைத்திருக்கின்றன என்பதே என் கருத்து.//

கட்டுரையை முழுவதும் ஏற்காமல் போனாலும் இதை மறுக்க முடியாது

தீக்கனல் said...

சுடச்சுட இணையத்தில் வலம் வரும் கட்டுரை இது மருதன். Congrats

இஸ்லாம் நண்பன் said...

அன்புக்குரிய முஹம்மத் ஆஷிக் அவர்களே, இஸ்லாம் மதத்தில் உள்ள நல்ல அம்சம் ஒன்றிரண்டை சொன்னால் நாங்களும் பயனடைவோம் அல்லவா?

Aanand said...

அமெரிக்கா "தீவிரவாத ஒழிப்பு" என்ற பெயரில் ஆப்கனில் செய்துகொண்டுள்ள போர் உண்மையில் தீவிரவாதிகளை அழிபதர்க்கல்ல,ஆப்கனை ஆக்ரமிபதன் மூலம் பெட்ரோலிய குழாய்களை ஆப்கன் வழியாக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கொண்டுசெல்லல் அதன் மூலம் கோடிகளை சம்பாதித்தல் என்ற முறையில் செய்து கொண்டுள்ளது. இது போல உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அமெரிக்க போர் செய்து கொண்டுள்ளது. டாலர் தேசம் புத்தகம் படித்தால், இன்னும் நிறைய தெரிந்து கொள்ள முடியும்.
அமெரிக்கா என்றாலே மற்ற தேசத்துக்கு அது அழிவுதான். மற்ற தேசத்தில் குழப்பங்களை உண்டாகுதல் , உள்நாட்டு போர்களை உருவாக்குதல் அதன் மூலம் நீண்ட காலத்திற்கு அமெரிக்காவிற்கு வருவாயை உண்டாக்குதல் என்பதற்காகவே C.I.A உடன் அமெரிக்க ப்ரெசிடென்ட் வேலை செய்கிறான். இவங்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால், உலகத்தில் கிறிஸ்தவர்கள் நிறைய இருப்பதால், இயேசு இவர்கள் செய்யும் பாவங்களை சுமப்பதால் மற்ற தேசதவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.

Anonymous said...

dear if america kill mahinda rajapakse dont u like it? no of the cuntries are pure

Ibnu Halima said...

@siruthuli,
//மதத்தின் பெயரால் போர் என தீவிர வாதிகள் தொடங்குவது அந்த மதத்தை உண்மையாக பின்பற்றி நடப்பவர்களுக்கு அவப்பெயரை பெற்று தருகிறது...// பயங்கரவாத எண்ணம் கொண்டவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை மதப் பின்னணியுடைய அங்கீகாரம். அந்த அங்கீகாரத்தை ஊடகங்கள் முஸ்லிம் மதத்தை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்கின்ற பயங்கரவாதிகளுக்கு மட்டும் மிக சுலபமாக கொடுத்து விடுகிறது. ஆனால் மாலேகான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு, சம்ஜவ்தா இரயில் குண்டு வெடிப்பு, ஒரிசா பாதிரியார் ஸ்டெயின்ஸ் எரிப்பு, குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை உட்பட பல செயல்கள் இந்து மதத்தின் நலனுக்காக தான் செய்ததாக குற்றவாளிகள் சொல்லுகிறார்கள். அதை தான் தெஹெல்கா அப்பட்டமாக படம் பிடித்தும் காட்டியது. ஆனால் இவை இந்து தீவிரவாதம் என்று பெரும்பாலான ஊடகங்கள் சொல்லவில்லை. இதைப்போன்று நாகாலாந்தில் கிறிஸ்தவத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்ற மிகப்பெரிய தீவிரவாத குழுவே செயல்படுகிறது. மற்ற மத பண்டிகைகள் கொண்டாட பல இடத்தில் தடையும் விதித்துள்ளனர் அந்த தீவிரவாதிகள். ஆனால் நாகலாந்தில் கிறித்தவ தீவிரவாதம் என்று எந்த ஊடகமும் குறிப்பிடவில்லை. அப்படி சொல்ல வேண்டுமென்று முஸ்லிம்களாகிய நாங்களும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதையே ஒரு முஸ்லிம் பெயருடையவன் செய்தால் அதற்கு மத சாயம் பூசப்படுகிறது. அத்தகைய மத சாயத்தை ஒசாமா போன்ற பயங்கரவாதிகளும் எதிர்பார்க்கிறார்கள். ஒசாமாவின் ஆசையை ஊடகங்களும் நிறைவேற்றுகின்றன. மதத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு மதத்திலும் பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முஸ்லிம் பெயர் தாங்கிகளை மட்டும் ஊடகங்கள் குறி வைத்து தீவிரவாதத்திற்கு இஸ்லாமிய மத சாயம் பூசுகின்றது. இது தான் அமெரிக்காவின் வெற்றியும் கூட.

Ibnu Halima said...

//மதம் பற்றிய (நீங்கள் குறிப்பிட்ட) விவாதங்கள் நடந்து அதனால் குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது... ஏனெனில் யாரேனும் ஒருவர் தான்தோன்றி தனமாக கருத்து சொல்லின் அது ஒரு கலவரத்தில் முடிய நூறு விழுக்காடு வாய்ப்பு உள்ளது... // ஏற்கெனவே பல இடங்களில் இத்தகைய நேரடி கலந்துரையாடல்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. எந்தவொரு அசம்பாவிதமும் நடந்ததில்லை. கிறித்தவ குருமார்களுடனும், இந்து ஆன்மீக தலைவர்களுடனும் நேரடி கலந்துரையாடல்கள் நடந்திருக்கிறது. எனவே உங்களுக்கு ஐயம் தேவையில்லை. தமிழகத்திலும் இவ்வாறான நேரடி கலந்துரையாடல்கள் நடந்திருக்கிறது. எனவே இஸ்லாம் பற்றி குற்றச்சாட்டுகளை இணையத்தில் அடித்து விடுபவர்கள் நேரடியாக தமிழக இஸ்லாமிய அறிஞர்களுடன் நேரடியாக விவாதிப்பதே சாலச்சிறந்தது.

Ibnu Halima said...

//ஒரு போலி டாக்டரின் மீது புகார் கொடுத்ததற்கே நான் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது... // சகோ மனம் தளர வேண்டாம். தீமைக்கு எதிராக போராடும்போது பல்வேறு இன்னல்கள் வந்து தான் தீரும். ஏனெனில் வெறுமனே நல்லது செய் என்று யாருக்காவது போதித்தால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் தீமைக்கு எதிராக களமிறங்கும் போது குடைச்சல்களையும் துன்பங்களையும் கொடுப்பதற்கு தயங்க மாட்டார்கள். எனவே தொடர்ந்து போராடுங்கள் சகோதரரே. கண்டிப்பாக இறைவன் துணை நிற்பான்.

//வெகு ஜன வாழ்க்கைக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் தீவிரவாத இயக்கங்கள் அம்மக்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி விடுகிறது// கண்டிப்பாக சகோதரரே. இந்த வார்த்தையில் முழுவதும் உடன்படுகிறேன்.

siruthuli said...

To Ibnu Halima ,
தங்களின் நம்பிக்கைக்கு நன்றி...
மேலும் நான் சகோதரன் அல்ல "சகோதரி" என தெரிவித்துக் கொள்கிறேன்...

இஸ்லாம் நண்பன் said...

//எனவே இஸ்லாம் பற்றி குற்றச்சாட்டுகளை இணையத்தில் அடித்து விடுபவர்கள் நேரடியாக தமிழக இஸ்லாமிய அறிஞர்களுடன் நேரடியாக விவாதிப்பதே சாலச்சிறந்தது.//

இதுபோன்ற விவாதங்கள் இதற்கு முன்னால் எப்போது நடைபெற்றன? அதில் யார் பங்கேற்றார்கள்? இஸ்லாத்தை பற்றிய அவர்கள் பார்வை இந்த விவாதங்களுக்கு பிறகு மாறியிருக்கிறதா? தகவல் சொல்லுங்களேன் திரு Ibnu Halima

Anonymous said...

Long live Osama!

Ibnu Halima said...

@siruthuli,
பெயரை வைத்து அடையாளம் காண முடியவில்லை. எனவே சகோதரன் என்று அழைத்தேன். இனி திருத்திக் கொள்கிறேன் சகோதரி.
@இஸ்லாம் நண்பன்,
//இதுபோன்ற விவாதங்கள் இதற்கு முன்னால் எப்போது நடைபெற்றன? அதில் யார் பங்கேற்றார்கள்? //
தமிழகத்தில் இருபது வருடங்களுக்கு முன்னாலேயே கிறிஸ்தவ போதகர் நெல்லை ஜெபமணி அவர்களுடன் பி.ஜைனுல் ஆபிதீன் என்னும் இஸ்லாமிய அறிஞர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை பற்றி பொது மக்கள் முன்னிலையில் விவாதித்திருக்கின்றனர். இந்தியாவை சார்ந்த மருத்துவர் ஜாகிர் நாயக் புகழ் பெற்ற அனைத்து கிறித்தவ குருமார்களுடனும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றார். மேலும் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடன் பெங்களூருவில் மிகப்பெரிய திறந்தவெளி மைதானத்தில் நேரடி கலந்துரையாடலை நிகழ்த்தியிருக்கின்றார். இரண்டு வருடங்களுக்கு முன்பாக பெரியார் திக வை சார்ந்த சகோதரர்களுடன் நாத்திகம் மற்றும் இஸ்லாம் குறித்து நேரடி விவாதத்தினை பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நடத்தியிருக்கிறார்.

Ibnu Halima said...

//இஸ்லாத்தை பற்றிய அவர்கள் பார்வை இந்த விவாதங்களுக்கு பிறகு மாறியிருக்கிறதா? // விவாதம் அல்லது கலந்துரையாடல் முடிந்த கையோடு யாரும் தங்களது நிலையை உடனே மாற்றிக் கொள்வதில்லை. சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் விவாதத்தில் பார்வையாளர்களாக கலந்து கொள்பவர்கள் குற்றச்சாட்டு குறித்த தெளிவான விளக்கங்களை இரு தரப்பிடமிருந்தும் பெறுவதினால் மனமாற்றமோ அல்லது குறைந்தபட்சமாக காழ்ப்புணர்ச்சியோ இல்லாமல் ஆக கூடும். விவாதத்தில் பங்கு பெறுபவர் நேர்மையாளராக இருப்பின் இத்தகைய பொய் குற்றச்சாட்டுகளை இனிமேலும் வேறெங்கும் வைக்கவும் மாட்டார். குறைந்தபட்சம் காழ்ப்புனர்ச்சியாவது களையப்படும் இத்தகைய நேரடி கலந்துரையாடல் அல்லது விவாதத்தினால்.

இஸ்லாம் நண்பன் said...

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி திரு இப்னு. இன்னும் ஒரு சந்தேகம். வாஹாபிசம் என்று சொல்லப்படுவது என்ன? அது கொடூரமான சட்டமா?

Ibnu Halima said...

@இஸ்லாம் நண்பன்,
இஸ்லாத்தில் இசங்கள் இல்லையெனினும் இஸ்லாமிய அறிஞர்கள் சிலருடைய புரிதலில் ஏற்பட்ட கோளாறால் இத்தகைய இசங்கள் இருப்பதாக பிற மதத்தினர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தை பொறுத்தவரை அடிப்படை "குர்ஆனும் உண்மையான ஹதீஸ்களும்" தான். வேறெந்த அறிஞர்களின் கருத்தும் இஸ்லாத்தின் அடிப்படையாக இருக்க முடியாது. ஆனால் சிலர் அறிஞர்களின் கூற்றையும் இஸ்லாத்தின் அடிப்படையாக கொள்வதின் விளைவு இத்தகைய இசங்கள். ஷியாயிசம், சன்னியிசம் என்பதெல்லாம் இதன் விளைவுகளே. இத்தகைய இசங்களை ஒவ்வொரு காலமும் சில அறிஞர்கள் மறுத்து அவற்றை ஒழிக்க முன்முயற்சி எடுத்திருக்கின்றனர். அவர்களில் இப்னு தைமியா , முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் போன்ற அறிஞர்கள் முக்கியமானவர்கள். ஆனால் இசங்களை நம்புகின்றவர்கள் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் சொன்ன இசங்கள் இல்லை இஸ்லாத்தில் (குர்ஆன் & ஹதீஸ் மட்டுமே இஸ்லாம்) என்ற கோட்பாட்டை கூட "வஹ்ஹாபிசம்" என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Anonymous said...

Good article Marudhan.

இஸ்லாம் நண்பன் said...

உங்கள் விளக்கத்துக்கு நன்றி Ibnu Halima

Anonymous said...

//இயேசு இவர்கள் செய்யும் பாவங்களை சுமப்பதால் மற்ற தேசதவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.//

ஆனந்தின் இந்த வரி அருமை

Anonymous said...

//இயேசு இவர்கள் செய்யும் பாவங்களை சுமப்பதால் மற்ற தேசதவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.//

ஆனந்தின் இந்த வரி அருமை

எழில் said...

பாகிஸ்தான் எல்லையை அமெரிக்கா அனுமதியின்றி கடந்தது சரியா?

Anonymous said...

Only Allah should save pakistan here after

Anonymous said...

@ எழில்,

//பாகிஸ்தான் எல்லையை அமெரிக்கா அனுமதியின்றி கடந்தது சரியா?//---ஹலோ... மிஸ்டர் எழில்... நீங்க கோமாவில் கிடந்தீர்களா..? எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்..?

மற்றவர்கள் எல்லாம், அமெரிக்காவின் கால் செருப்பு என்றால்... அந்த பாகிஸ்தான்காரன் அந்த செருப்பில் ஒட்டி இருக்கும் நாற்றம் எடுத்த நரகல்..!

அமெரிக்காகாரன் தன் வீட்டு கழிவறைக்கு செல்ல எதற்கு கழிவறையிடம் எல்லாம் அனுமதி வாங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்..?

தன் முதல் எதிரியான பயங்கரவாதி ஒருத்தனை தன் அதிகார வரம்புக்குட்பட்ட பிரதேசத்திலேயே (அமெரிக்காவின் அறிவிக்கப்படாத ஒரு குப்பைக்கழிவு மாகாணம்தான் பாகிஸ்தான்) இத்தனை நாள் வைத்து இருந்ததுக்கு அமெரிக்க அரசு அதிகாரத்தில் உள்ள ஒரு அமெரிக்கனாவது ஒபாமாவை எதிர்த்து மூச்சு விட்டானா..?

இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற உலக மகா பொய்... "ஜார்ஜ் புஷ்ஷுக்கும் உலக வர்த்தகமைய தகர்ப்புக்கும் சம்பந்தம் இல்லை" என்பது..!

இனியாவது ஜார்ஜ் புஷ் சொல்வதை நம்பாமல்... அமெரிக்க அறிவியலாளர்கள், அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள், அமெரிக்க கல்விமான்கள் சொல்வதை நம்புங்கள்... அதற்கு...

இந்த வீடியோவை பொறுமையாக செவிமடுத்து பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=7E3oIbO0AWE

உலகம் ஏமாற்றப்பட்டது எளிதாக கண்ணுக்கும் காதுக்கும் தெரியவரும்..! சிந்திக்காமலேயே..!

உலகத்துக்கெல்லாம்... ஒசாமாவும் தாலிபானும் பாமியான் சிலையை தகர்த்தபின்னர்தான் வில்லன்கள்.

எனக்கு, ரஷ்யவோடு போரிட அமெரிக்க அடியாளாக ஆயுதம் தூக்க இவனுங்க அவன் போட்ட எலும்புத்துண்டை கவ்வி திண்ணபோதே இவனுங்க வில்லன்கள்..!

உலகத்துக்கெல்லாம்... ஒசாமா, 9/11-க்கு பிறகுதான் பயங்கரவாதி.

எனக்கோ... ஒரு நாட்டின் அதிபரை சில தனி நபர்கள் கொன்று பிணத்தை தூக்கில் ஏற்றி முச்சந்தியில் அந்த பிணம் நாறும்படி தொங்க வைத்தது... அமெரிக்காவிற்கும் அவனின் அடிவருடிகளுக்கும் வேண்டுமானால் இன்பமாக இருந்திருக்கலாம்... எனக்கு அன்று முதலே இவனுங்க பயங்கரவாதிகள்..!

Anonymous said...

//
அமெரிக்காகாரன் தன் வீட்டு கழிவறைக்கு செல்ல எதற்கு கழிவறையிடம் எல்லாம் அனுமதி வாங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்..?
//

அமேரிக்காவின் கழிவறை ஏன் இந்திய துணைக்கண்டத்தில் இருக்கவேண்டும் ? #டவுட்டு.

//
ரஷ்யவோடு போரிட அமெரிக்க அடியாளாக ஆயுதம் தூக்க இவனுங்க அவன் போட்ட எலும்புத்துண்டை கவ்வி திண்ணபோதே இவனுங்க வில்லன்கள்..!
//
என் வீட்டுக்கன்னுக்குட்டி என்னோடு மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி...என் கண்மனி


அது இப்ப ஃபிஷ் ஃபுட் ஆகிப்போச்சுதடி கண்மணீய்ய்ய்ய்...கண்மணி.

மருதன் said...

ஒசாமா கொல்லப்பட்டது பற்றி நோம் சாம்ஸ்கி.

http://www.guernicamag.com/blog/2652/noam_chomsky_my_reaction_to_os/