September 19, 2011

காஷ்மீர்: முதல் போரின் கதை

காஷ்மீரிகளுக்கு மட்டுமல்ல பாகிஸ்தானியர்களுக்கும் இந்தியர்களுக்கும்கூட மறக்கமுடியாத தினம் அது. அக்டோபர் 27, 1947. காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை மவுண்ட்பேட்டன் அங்கீகரித்த தினம். இந்தியா காஷ்மீருக்குத் தன் படைகளை அனுப்பிவைத்த தினம். பாரமுல்லாவில் உள்ள செயிண்ட் ஜோசப் மடாலயத்தையும் மருத்துவமனையையும் பதான் பழங்குடிகள் சூறையாடிய தினம்.

இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுடனும் சேரமாட்டேன் என்று தனித்திருந்த காஷ்மீர் மன்னர் ஹரி சிங் வேறு வழியின்றி இந்தியாவிடம் அடைக்கலம் புகுந்தார். தன்னுடைய ராணுவத்தைக் கொண்டு பதான்களை எதிர்க்கமுடியாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. பதான்களை மறைமுகமாகக் காஷ்மீருக்குச் செலுத்தியதே பாகிஸ்தான் என்னும் சூழலில் அந்தப் பக்கத்தில் இருந்து உதவிக் கோரமுடியாது. எனவே, இந்தியாவைத் தொடர்புகொண்டார்.

உடனடியாகப் படைகளை அனுப்பவில்லை இந்தியா. மாறாக, ஹரி சிங்கிடம் கத்தி முனையில் பேச்சுவார்த்தை நடத்தியது. 'காஷ்மீர் ஒரு சுதந்தர சமஸ்தானம். இந்நிலையில், எப்படி இந்தியப் படைகளை காஷ்மீருக்கு அனுப்புவது? முறைப்படி இந்தியா இதில் தலையிடவேண்டுமென்றால், காஷ்மீர் இந்தியாவுடன் முதலில் இணையவேண்டும்.'  ஹரி சிங்குக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒப்புக்கொண்டார். இந்தியா படையெடுத்து வந்து பதான்களையும் பின்னர் பாகிஸ்தானையும் விரட்டியது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பாகமானது. அன்று தொடங்கி இன்று வரை காஷ்மீருக்காக இரு நாடுகளும் உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. இன்று வரை தீர்க்கப்படாத பிரச்னையாக காஷ்மீர் நீடித்துக்கொண்டிருக்கிறது. பிரச்னையைத் தீர்ப்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் தீவிரத்தை அதிகப்படுத்தியிருக்கின்றவே தவிர குறைக்கவில்லை.

அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளி அக்டோபர் 27, 1947. ஆண்ட்ரூ ஒயிட்ஹெட் (Andrew Whitehead) எழுதிய A Mission in Kashmir இந்த ஒற்றை தினத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. அக்டோபர், நவம்பர் இந்த இரு மாதங்களில் காஷ்மீரில் நடைபெற்ற சம்பவங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சார்பாக இல்லாமல் காஷ்மீருக்குச் சார்பாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம்.

பதான்கள் தாக்குதலில் பாகிஸ்தான் வகித்த பாத்திரம் அனைவருக்கும் தெரிந்ததே.
  • பதான்களைப் பாகிஸ்தான் காஷ்மீருக்குள் செலுத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஜின்னாவே இதனைக் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த பலர் பதான்களின் கூட்டத்தில் கலந்திருந்ததற்கும் ஆதாரங்கள் உள்ளன. (அதிகாரபூர்வமாக அவர்கள் 'விடுப்பில்' இருந்தனர்). 
  • பாக் அரசு பதான்களுக்கு அளித்த ஆயுதங்கள், 'காணாமல் போனவையாக' ராணுவப் பதிவேட்டில் குறிக்கப்பட்டன.
  • பதான்கள் பின்வாங்குவது தெரிந்ததும் கூடுதலாகப் பல ராணுவ வீரர்களைப் பாகிஸ்தான் அனுப்பிவைத்தது.இதற்கும் ஆதாரம் உள்ளது. 
  • ஸ்ரீநகரைப் பதான்கள் கைப்பற்றவேண்டும் என்று பாக் விரும்பியது.  பதான்கள் நகரங்களைச் சூறையாடாமல் இருந்திருந்தால், இந்தக் கனவு நிறைவேறியிருக்கக்கூடும் என்றும் காஷ்மீர் பாகிஸ்தானுட்ன் இணைந்திருக்கவும்கூடும் என்றும் பல பாகிஸ்தானியர்கள் கருதினார்கள். 
பதான்களின் தாக்குதலை இந்தியா தனக்கு அளிக்கப்பட்ட அரிய வாய்ப்பாகவே பார்த்தது.
  • இந்தியாவுடன் சேரமாட்டேன் என்று முரண்டு பிடித்த ஹரி சிங் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
  • இந்திய ராணுவத்தை காஷ்மீரில் இறக்கியதன் மூலம், காஷ்மீரில் தன் கால்களை ஆழமாகப் பதித்துக்கொண்டது இந்தியா. 
  • பதான் தாக்குதல் குறித்த செய்திகள் இந்திய அரசால் மிகைப்படுத்தப்பட்டன. பாகிஸ்தானின் நிழலில் தங்கியிருப்பதுகூட கொடூரமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று காஷ்மீரிகளுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. 
  • பிடிபட்ட பதான் பழங்குடிகளிடம் இருந்து 'பெறப்பட்ட' உண்மைகளை இந்தியா உலகம் முழுவதும் எடுத்துச் சென்றது. இந்திய ராணுவம் மட்டும் வந்திராவிட்டால் காஷ்மீர் கூண்டோடு சிதைந்துபோயிருக்கும் என்னும் உணர்வை அனைவர் மனத்திலும் ஏற்படுத்தும் வகையில் உளவியல் ரீதியான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன.
  • பதான் தாக்குதல் குறித்து வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், இந்திய அரசுக்கு அனுகூலமான விஷயங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. 
ஆக மொத்தம், பாகிஸ்தானின் நோக்கங்களுக்கும் இந்தியாவின் நோக்கங்களுக்கும் வித்தியாசமே இல்லை. 
  • காஷ்மீரை எப்படியாவது கையகப்படுத்தவேண்டும். மக்களின் விருப்பம் முக்கியமல்ல. பலவந்தப்படுத்தியாவது அவர்களை இணைத்துவிடவேண்டும்.
  • பாகிஸ்தான் குறுக்கு வழியில் பதான்களை அனுப்பி வைத்தது. இந்தியா குறுக்கு வழியில் யோசித்து, ஹரி சிங்கின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டது. 
  • இது தாற்காலிக ஏற்பாடுதான் என்றார் நேரு. பதான்களின் எழுச்சி அடக்கப்பட்டதும் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், காஷ்மீர் யாருடன் சேரவேண்டும் என்பதை காஷ்மீரிகள்தான் முடிவுசெய்யவேண்டும் என்றும் நேரு அறிவித்தார். ஆனால், அவருடைய வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. 
  • காஷ்மீர் மக்களின் துன்பத்தை, எதிர்பார்ப்பை, விருப்பத்தைப் புரிந்துகொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் இன்றுவரை மறுத்துவருகிறது.
  • காஷ்மீர் எங்களுடன் இணையவேண்டும் என்றுதான் விரும்புகிறது என்று இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். காஷ்மீர் இந்தியாவின் தவிர்க்கவியலாத பாகம் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.
மன்னர் ஹரி சிங்கின் இணைப்பு ஒப்பந்தம் குறித்த சர்ச்சையையும் ஆண்ட்ரூ ஒயிட்ஹெட் தன் புத்தகத்தில் விரிவாக அலசுகிறார். ஹரி சிங்கின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்ட பிறகுதான் இந்தியா தன் படைகளைக் காஷ்மீரில இறக்கியதா? இதற்கு ஆதாரம் இருக்கிறதா? படைகளை இறக்கியபிறகு, முன்தேதியிட்ட ஒப்பந்தத்தில்தான் ஹரி சிங் கையெழுத்திட்டார் என்று வாதிட்டால் அதை இந்தியாவால் மறுக்கமுடியுமா? வி.பி. மேனன் ஹரி சிங்கைச் சந்தித்த தேதி, நேரம் இரண்டிலும் உள்ள முரண்பாடுகள் சொல்லும் உண்மை இதுதானே? எனில், பதான்களின் படையெடுப்பைப் போலவே அவர்களுக்கு எதிரான இந்தியப் படையெடுப்பும்கூட சட்டவிரோதமானதுதான் இல்லையா?

நேரடி களஆய்வின் மூலம் ஆண்ட்ரூ ஒயிட்ஹெட் தனது புத்தகத்தைக் கட்டமைத்திருக்கிறார். பதான்கள் தாக்குதல் குறித்து அப்போது வெளிவந்த பத்திரிகை செய்திகள், அரசு குறிப்புகள், ஆவணங்கள், அறிக்கைகள் ஆகியவற்றை பரிசீலிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றின் நம்பகத்தன்மையையும் அவர் கேள்விக்கு உட்படுத்துகிறார். தன்னால் இயன்ற அளவுக்கு சார்பு எடுக்காமல் புத்தகத்தை நகர்த்திச் செல்கிறார்.

ஆனால், இங்குள்ள பலரும் காஷ்மீரை ஒற்றை பரிமாணத்தில் காணவே விரும்புகிறார்கள். அவ்வாறு பார்க்க அவர்கள் பழக்கப்பட்டு போயிருக்கலாம். பாகிஸ்தானையும் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளையும் அவர்களால் சுலபத்தில் கண்டிக்கமுடிகிறது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் விடுவிக்கப்படவேண்டும் என்பதில் அவர்களுக்கு மாற்று கருத்து கிடையாது. அதே சமயம், இந்தியாவின் காஷ்மீர் ஆக்கிரமிப்பு அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. காஷ்மீரிகளின் தொடர் சுயநிர்ணயப் போராட்டத்தையும் அதன் காரணமாக வெடிக்கும் வன்முறையையும் அவர்கள் கலவரமாகத்தான் பார்க்கிறார்கள். ராணுவனத்தினரின் அத்துமீறல்கள் அவர்களைப் பதறச் செய்யவில்லை. காஷ்மீர் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது பற்றி வெளிவரும் செய்திகள் அவர்களைக் கொதிப்படையச் செய்யவில்லை. தேசபத்தி என்னும் கண்ணாடியை அணிந்துகொண்டு காஷ்மீரைக் கவனிப்பதால் ஏற்பட்ட கோளாறு இது. 

ஆண்ட்ரூ ஒயிட்ஹெட்டின் A Mission in Kashmir, காஷ்மீர் பிரச்னையின் தொடக்கப்புள்ளியைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. இந்தப் புத்தகத்தின் மூலம் நாம் பெறவேண்டிய பாடம் ஒன்றுதான். காஷ்மீர் இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சொந்தமானதல்ல. அது காஷ்மீரிகளுக்குச் சொந்தமானது. முடிவெடுக்கவேண்டியவர்கள் அவர்கள். அவர்கள் மட்டும்தான்.

குறிப்புகள் :
  1. A Mission in Kashmir, Andrew Whitehead, Penguin Global, 304 pages. 
  2. A Mission in Kashmir புத்தகத்தின் அதிகாரபூர்வ தமிழ் மொழிபெயர்ப்பை கிழக்கு விரைவில் வெளியிடவிருக்கிறது. 
  3. Andrew Whitehead's blog
  4. A Mission in Kashmir : Full Text  

38 comments:

SURYAJEEVA said...

முகமூடி கிழியும் என்று எதிர்பார்க்கலாமா

அ.சிதம்பரம் said...

Anna i accept whatever u have written. U have finished saying that the people in kashmir must decide whom it must belong to.

My opinion is : consider the ppl living in KASHMIR at 1947. They are the true owners. Will they be still there. Now there are our army ppl plus the Pak Terror groups(as shown by media, no offence on me!) and some people. Can they now decide whom KASHMIR must belong to. Will it be right. Many might have migrated too... So it is best for KASHMIR to be with INDIA.

British has evidently used the DIVIDE and RULE policy well , which they implemented to separate pak and kashmir too. So what is your final Solution u suggest

சுப்ரியா said...

நல்ல ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி தோழர்

ஆர்.கே said...

படிக்க ஆவலாக இருக்கிறேன் மருதன். இது போன்ற நூல்கள் தமிழில் நிறைய வர வேண்டும். ஆர்வத்தை துண்டும் வகையில் அறிமுகக் கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். அன்புடன், ஆர்.கே

Anonymous said...

Good post

கதிரவன் said...

நூல் அறிமுகத்திற்கு நன்றி. பதிவுடன் முழுக்க உடண்படுகறேன்.

//ஆக மொத்தம், பாகிஸ்தானின் நோக்கங்களுக்கும் இந்தியாவின் நோக்கங்களுக்கும் வித்தியாசமே இல்லை. //
//பதான்களின் படையெடுப்பைப் போலவே அவர்களுக்கு எதிரான இந்தியப் படையெடுப்பும்கூட சட்டவிரோதமானதுதான் இல்லையா?//
அருமையான வரிகள். இந்திய தேசிய மனநிலை, இதை ஏற்பதற்கு வேண்டிய நேர்மையை தடுக்குமே?

Ramachandranwrites said...

சிகப்பு கண்ணாடி அணிந்தவர்களால் வேறு எப்படி பார்க்க முடியும் ? முதலில் பாக் மக்கள் அவர்களுக்காக முடிவு எடுக்கும் நிலைக்கு வரட்டும், அதன் பிறகு இதனை பார்ப்போம். இந்த தீவிரவாதிகளால் உயிரை, உடமையை இழந்த ஹிந்து மக்களைப் பற்றி நீங்கள் எங்காவது எழுதியது உண்டா ?

Ramesh said...

Kashmir is better to join either with Pakistan or with India. Otherwise China might occupy them. But let them decide where they want to join. Make a opinion poll with people and take decision, no matter how big the loss to India. We have to keep the promise to them

ஹரன்பிரசன்னா said...

// காஷ்மீர் இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சொந்தமானதல்ல. அது காஷ்மீரிகளுக்குச் சொந்தமானது. முடிவெடுக்கவேண்டியவர்கள் அவர்கள். அவர்கள் மட்டும்தான்.//

இந்திய வெறுப்பு மட்டுமே இக்கட்டுரையின் அடிநாதம் என்பதற்கு இந்த ஒரு வரி போதும். காஷ்மீரிகள் இந்தியகளே, எனவே காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமே!

மருதன் said...

ஹரன் : காஷ்மீரிகள் இந்தியர்களே என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவர்கள் பாகிஸ்தானியர்களே என்று அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அவர்களைக் கேட்பதுதானே முறை? பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் தங்கள் இருப்பைக் குறித்தும் எதிர்காலம் குறித்தும் அவர்கள் முடிவெடுக்கக்கூடாதா? அதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாதா?

மருதன் said...

Ramesh : கருத்துக் கணிப்புதான் சரியான வழி என்றாலும் இன்று வரை இந்தியா அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறது. பயம் தவிர வேறு என்ன காரணமாக இருக்கமுடியும்? காஷ்மீரிகளை நல்ல முறையில் நடத்தி வந்திருக்கிறோம் என்னும் நம்பிக்கை இந்தியாவுக்கே இல்லையே!

மருதன் said...

Ramachandranwrites : காஷ்மீரிகளே முடிவு செய்துகொள்ளட்டும் என்று நான் சொன்னது, இந்துக்களையும் சேர்த்துதான்.

ஹரன்பிரசன்னா said...

மருதன், ரொம்ப நல்ல விதமாகக் கேட்பது போலக் கேட்கிறீர்கள். காஷ்மீர் இந்தியாதான். உதாரணமாக உங்களைப் பார்த்து நீங்க இந்தியரா என்று கேட்டால் இல்லை என்று சொல்லக்கூடும். ஒரு பெரிய கூட்டமேகூட சொல்லக்கூடும். உடனே தமிழ்நாடு இந்தியாவுக்கு சொந்தமில்லை என்றாகிவிடுமா? இந்தியரல்ல என நினைப்பவர்கள் அவர்களது சொந்த நிலம் என எதை நினைக்கிறார்களோ அதை நோக்கிப் போகவேண்டியதுதான். தான் பிறந்த பூமி காஷ்மீர் என்றால், இந்தியராக இங்கே இருக்கவேண்டியதுதான். ஏனென்றால், இந்தியா பாகிஸ்தனிலிருந்து பிரிந்துவரவில்லை. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றது.

ஹரன்பிரசன்னா said...

தீண்டாமை வேண்டுமா வேண்டாமா, தலித் கோவில் நுழைவு வேண்டுமா வேண்டாமா, எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது வேண்டுமா வேண்டாமா என்று ஒவ்வொன்றுக்கும் ஓட்டு வைத்தா முடிவு எடுத்தீர்கள்? இதில் மட்டும் என்ன ஓட்டு? இந்த ஓட்டெடுப்பே தேவையற்றது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியோ என்ற சந்தேகம் கொள்ளும் இந்திய வெறுப்பு மனநிலைக்குத்தான் இதெல்லாம் தேவை. இல்லையென்றால் எதற்கு ஓட்டெடுப்பு?

மருதன் said...

ஹரன் : ஓட்டெடுப்புதான் நியாயமானது என்றும் இந்தியா காஷ்மீரை இணைத்துக்கொண்டது தாற்காலிகமான ஓர் ஏற்பாடுதான் என்றும் நேரு ஏன் சொன்னார்? அதற்கான அவசியம் என்ன வந்தது?

ஹரன்பிரசன்னா said...

என்னவோ நீங்கள் நேருவை ரோல் மாடலாக வைத்துக்கொண்டு செயல்படுவது போல சொல்கிறீர்களே ஐயா. நேரு சொன்னதையெல்லாம் ஏற்கிறீர்களா என்ன? ஒவ்வொன்றாகப் பேசுவோம்! காந்தியே சொல்லியிருந்தாலும் அது தவறு. நேரு ஒரு அரசியல்வாதி. அதிலும் இடது சித்தாந்தத்தால் கவரப்பட்டவர். அவ்வப்போதாவது இப்படி எதாவது உளறாவிட்டால் சித்தாந்தத்துக்கு என்னதான் மரியாதை சொல்லுங்கள்!

மருதன் said...

ஹரன் : இதை நீங்கள் சொல்வீர்கள் என்று நினைத்தேன். இந்தியா குட்டிச்சுவராக இன்று இருப்பதற்குக் காரணமே சோவியத் மீது நேருவுக்கு இருந்த ஈர்ப்புதான் என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் விஷயத்தில் நேரு செய்தது நம்பிக்கை துரோகம்.

ஹரன்பிரசன்னா said...

பாகிஸ்தான் இந்தியாவுடன் சேர்ந்திருக்கவேண்டுமா பிரிந்திருக்கவேண்டுமா என இந்தியா முழுவதும் வாக்கெடுப்பு நடத்தி, இந்தியாவுடன் சேர்ந்திருக்கவேண்டும் என்று முடிவெடுத்தால், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க சம்மதிப்பீர்களா? காஷ்மீர் காஷ்மிரிகளுக்கு சொந்தமானது, பாகிஸ்தான் இந்தியாவுக்கு சொந்தமானது, சரியா? விதண்டாவாதமே இந்திய வெறுப்புக்கு அடிப்படை என்றால், அதை அகண்ட பாரதக் கண்ணோட்டத்தோடும் செய்யமுடியும்!

ஹரன்பிரசன்னா said...

நம்பிக்கைத் துரோகம் செய்ததற்கு சோவியத் ஈர்ப்பு காரணம் என்கிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை. :-) அது ஒரு அரசியல்வாதியின் நம்பிக்கைத் துரோகம். என்ன, இந்த நம்பிக்கைத் துரோகம் நல்லதாகிப் போனது. நேருவுக்கு ஆழ்மனத்தில் இந்தியப் பாசம் இருந்தது. அது வெளிவந்து இந்தியாவில் காஷ்மீர் தேவையாவுக்கு வாக்கெடுப்பு நடத்தவிடாமல் செய்தது. இதைத்தான் இறைச்செயல் என்கிறேன் நான். :-)

மருதன் said...

//பாகிஸ்தான் இந்தியாவுடன் சேர்ந்திருக்கவேண்டுமா பிரிந்திருக்கவேண்டுமா என இந்தியா முழுவதும் வாக்கெடுப்பு நடத்தி...///

ஏன் இந்தியாவிடம் நடத்தவேண்டும்? பாகிஸ்தானிடம் அல்லவா நடத்தவேண்டும்?

ஹரன்பிரசன்னா said...

போர் தேவையா என இந்தியாவிடம்தான் நடத்தவேண்டும். எனவேதான் போர் எனக் குறிப்பிட்டேன்! ஒரு விதண்டாவாதத்தை எப்படி நேர்மையாக அணுகுகிறீர்கள் பாருங்கள். இதுவும் கோட்பாட்டுப் பிரச்சினையே!

கார்த்திக் said...

மருதன், ஹைதராபாத் நிசாம் பாகிஸ்தானுடன் இணைய முடிவெடுத்தபோது மக்கள் போராட்டம் காரணமாகவே இந்திய ராணுவம் உள்ளே நுழைந்து அப்பகுதியை இந்தியாவுடன் இணைத்தது. அதுபோல காஷ்மீர மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பமில்லையெனில் ராஜா ஹரி சிங் இந்தியாவுடன் இணைய முடிவெடுத்தபோதே போராடி இருப்பார். அப்போதைய மக்களின் விருப்பம் இவ்வாறாக இருந்ததை உணர்ந்த நேரு இக்கு ஒப்புக்கொண்டிருக்கமாட்டார் என்பதும் சரிதானே..

கார்த்திக் said...

மருதன், ஹைதராபாத் நிசாம் பாகிஸ்தானுடன் இணைய முடிவெடுத்தபோது மக்கள் போராட்டம் காரணமாகவே இந்திய ராணுவம் உள்ளே நுழைந்து அப்பகுதியை இந்தியாவுடன் இணைத்தது. அதுபோல காஷ்மீர மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பமில்லையெனில் ராஜா ஹரி சிங் இந்தியாவுடன் இணைய முடிவெடுத்தபோதே போராடி இருப்பார். அப்போதைய மக்களின் விருப்பம் இவ்வாறாக இருந்ததை உணர்ந்த நேரு இக்கு ஒப்புக்கொண்டிருக்கமாட்டார் என்பதும் சரிதானே..

கார்த்திக் said...

மருதன், ஹைதராபாத் நிசாம் பாகிஸ்தானுடன் இணைய முடிவெடுத்தபோது மக்கள் போராட்டம் காரணமாகவே இந்திய ராணுவம் உள்ளே நுழைந்து அப்பகுதியை இந்தியாவுடன் இணைத்தது. அதுபோல காஷ்மீர மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பமில்லையெனில் ராஜா ஹரி சிங் இந்தியாவுடன் இணைய முடிவெடுத்தபோதே போராடி இருப்பார். அப்போதைய மக்களின் விருப்பம் இவ்வாறாக இருந்ததை உணர்ந்த நேரு Plebisciteக்கு ஒப்புக்கொண்டிருக்கமாட்டார் என்பதும் சரிதானே..

மருதன் said...

கார்த்திக் : இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமல்ல சமஸ்தானங்களும்கூட மக்களிடம் இருந்து விலகியே இருந்தன. கலகம் என்றதும் ஊரைவிட்டு ஓடிய ஹிரி சிங்கை மக்கள் எப்படி நம்புவார்கள்? எப்படிஅவர் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள்? பிரிவினையின்போது மக்கள் பகடைக்காய்களாகவே கருதப்பட்டனர். அங்கும், இங்குமாகப் பிடித்து இழுக்கப்பட்டனர். லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். அந்த வகையில் சமஸ்தானங்களும் சரி, விடுதலை பெற்ற அரசுகளும் சரி, பிரதேங்களில் மட்டுமே கவனம் செலுத்தின.

Ramachandranwrites said...

இஸ்லாத்தின் செல்வாக்கும் அதிகரித்தது. இன்று ஐரோப்பாவிலேயே ரஷ்யாவில்தான் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம். ‘சுதந்தரமாக வழிபட முடிகிறது, பொதுவெளிகளில் மத ஊர்வலங்கள் நடத்த முடிகிறது.’ என்கிறார்கள் ரஷ்யர்கள். அதே சமயம், வாகாபிஸம் உள்ளிட்ட புதிய மதப்பிரிவுகள் தோன்றியதையும் செசன்யா போன்ற இடங்களில் மதக்கலவரங்கள் பெருகியதையும் அவர்கள் வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதுவும் நீங்கள் பதிவு செய்தது தான், ரொம்பவும் முன்னால் இல்லை, இதற்க்கு முந்தைய பதிவுதான்.

Ramachandranwrites said...

நான் சொன்னது, இந்துக்களையும் சேர்த்துதான்.



அப்போ, அங்கே இருந்து துரத்தப் பட்ட ஹிந்துகளை எப்படி கணக்கில் எடுக்கப் போகிறீர்கள் ?

மருதன் said...

Ramachandran : இஸ்லாமிய மதவெறி கொண்டு இயங்கிய, இயங்கி வரும் குழுக்களின் இருப்பை நான் கேள்விக்கு உட்படுத்தவில்லை. காஷ்மீரின் பாகிஸ்தான் ஆதரவுடனும் அவர்களுடைய ஆதரவு இல்லாமலும் இயங்கி வரும் மதவெறி இயக்கங்களின் செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதே சமயம், இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளையும் நான் இத்துடன் இணைத்தே பார்க்கிறேன். இருவருடைய செயல்பாடுகளிலும் வேறுபாடுகள் இல்லை என்பதையும் என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.

இந்து மதவெறி, இஸ்லாமிய மதவெறி இரண்டும் காஷ்மீரை நாசமாக்கிக்கொண்டிருக்கிறது. ஒன்றை விலக்கி வைத்துவிட்டு இன்னொன்றைப் பற்றி பேசமுடியாது. ஏற்பீர்கள்தானே?

மருதன் said...

Ramachandran : மீண்டும் சொல்கிறேன். காஷ்மீரின் எதிர்காலத்தை காஷ்மீரிகள்தான் தீர்மானிக்கவேண்டும். என்றால், காஷ்மீரின் முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைவரும் வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கவேண்டும்.

Ramachandranwrites said...

ஆளே இல்லாத கடையில டீ அத்தர மாதிரி சொல்லுறேங்க, இருக்கிற மக்களை விரட்டி விட்டு, மதிய கிழக்கு தீவிரவாதிகளை வைத்துக் கொண்டு வாக்கு எடுங்க அப்படின்னா என்ன அர்த்தம். காஷ்மீரைப் பிரித்துக் கொடுக்கலாம் என்ற மனப்பான்மை முற்றிலும் தீமை விளைவிக்க செய்வது. இஸ்லாமிய தீவிரவாத செயல்களை இவ்வளவு கேட்டதற்கு பிறகுதான் நீங்கள் ஒத்துக் கொண்டு உள்ளீர்கள். அதுவும் உங்கள் பதிவில் இருந்து சுட்டிக் காட்டியதால், இல்லை என்றால் அதனையும் புறம் தள்ளி இருப்பீர்கள். ஸ்டாலின் போன்ற ஒரு திடமான தலைவர் ருசிய நாட்டிற்க்கு இருந்தால் நீங்கள் சரி என்பீர்கள், இந்தியாவிற்கு என்றால் தவறு என்பீர்களா ?

Ramachandranwrites said...

ஆளே இல்லாத கடையில டீ அத்தர மாதிரி சொல்லுறேங்க, இருக்கிற மக்களை விரட்டி விட்டு, மதிய கிழக்கு தீவிரவாதிகளை வைத்துக் கொண்டு வாக்கு எடுங்க அப்படின்னா என்ன அர்த்தம். காஷ்மீரைப் பிரித்துக் கொடுக்கலாம் என்ற மனப்பான்மை முற்றிலும் தீமை விளைவிக்க செய்வது. இஸ்லாமிய தீவிரவாத செயல்களை இவ்வளவு கேட்டதற்கு பிறகுதான் நீங்கள் ஒத்துக் கொண்டு உள்ளீர்கள். அதுவும் உங்கள் பதிவில் இருந்து சுட்டிக் காட்டியதால், இல்லை என்றால் அதனையும் புறம் தள்ளி இருப்பீர்கள். ஸ்டாலின் போன்ற ஒரு திடமான தலைவர் ருசிய நாட்டிற்க்கு இருந்தால் நீங்கள் சரி என்பீர்கள், இந்தியாவிற்கு என்றால் தவறு என்பீர்களா ?

Anonymous said...

//இந்து மதவெறி, இஸ்லாமிய மதவெறி இரண்டும் காஷ்மீரை நாசமாக்கிக்கொண்டிருக்கிறது.//
இந்து வெறி காஷ்மீரத்தில் அப்படி என்ன செய்தது?


--கணேஷ்

வே.தமிழரசன் said...

இந்தியா இந்தியா என்று வாய் கிழிய பேசும் அனைவரும் அறிந்ததா அறியாத ஒன்றா? இந்தியா என்று ஒரு நாடு எப்பொழுதுமே இருந்தது இல்லை என்று. வெள்ளைக்காரர்கள் செய்த நாடு இந்தியா. அதற்கு முன்னால் சிறு சிறு நாடுகள் சில காலம் பேரு நாடுகள். சுததந்திரம் பற்றி தெரியாத.. இனம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் வேண்டுமானால் 'இந்திய' துதி பாடலாம். காஷ்மீர் ஒரு தனி நாடு.. இந்தியா அவர்களிடம் நியாயமான முறையில் நடந்து இருந்தால் அவர்கள் சண்டை என் போடுகின்றர்கள்? காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்து உள்ளது அவர்கள் விடுதலை போராட்டம் நடத்துகின்றர்கள். நான் பள்ளரிடம் கேட்பது உண்டு இந்திய பண்பாடு என்று கூறுவது என்ன என்று. அவர்களுக்கு தெரியவில்லை அப்படி ஒன்று இல்லை என்று. இங்கு இருப்பது தெலுங்கர் பண்பாடு, தமிழர் பண்பாடு, காஷ்மிரி பண்பாடு, கருநாடக பண்பாடு, ஒரிசா பண்பாடு மட்டுமே! இந்திய பண்பாடு என்பது இவர்களை போன்ற/இந்தியர்கள் என்று இல்லாத ஒன்று. இந்திய என்ற ஒரு நாடு நடத்தும் அக்கிரமம் காஷ்மீர், மணிபூர் போன்று எண்ணற்ற இடங்களில் எண்ணில்லடங்கா!

வே.தமிழரசன் said...

இந்தியா இந்தியா என்று வாய் கிழிய பேசும் அனைவரும் அறிந்ததா அறியாத ஒன்றா? இந்தியா என்று ஒரு நாடு எப்பொழுதுமே இருந்தது இல்லை என்று. வெள்ளைக்காரர்கள் செய்த நாடு இந்தியா. அதற்கு முன்னால் சிறு சிறு நாடுகள் சில காலம் பெரிய நாடுகள். சுதந்திரம் பற்றி தெரியாத.. இனம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் வேண்டுமானால் 'இந்திய' துதி பாடலாம். காஷ்மீர் ஒரு தனி நாடு.. இந்தியா அவர்களிடம் நியாயமான முறையில் நடந்து இருந்தால் அவர்கள் சண்டை என் போடுகின்றர்கள்? காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்து உள்ளது அவர்கள் விடுதலை போராட்டம் நடத்துகின்றர்கள். நான் பலரிடம் கேட்பது உண்டு 'இந்திய பண்பாடு' 'இந்திய பண்பாடு' என்று கூறுவது என்ன என்று. அவர்களுக்கு தெரியவில்லை அப்படி ஒன்று இல்லை என்று. இங்கு இருப்பது தெலுங்கர் பண்பாடு, தமிழர் பண்பாடு, காஷ்மிரி பண்பாடு, கருநாடக பண்பாடு, ஒரிசா பண்பாடு மட்டுமே! இந்திய பண்பாடு என்பது இவர்களை போன்ற/'இந்தியர்கள்' என்று இல்லாத ஒன்று. இந்திய என்ற ஒரு நாடு நடத்தும் அக்கிரமம் காஷ்மீர், மணிபூர் போன்ற இடங்களில் எண்ணில்லடங்கா!

Anonymous said...

Hi - I am afraid I can't read your blog so I'm, not sure what you have said about my book on Kashmir. The book is coming out in a Tamil edition - which is very pleasing. Thanks for your interest, and the links to my site.

Andrew Whitehead
awkashmir(at)gmail-dot-com

Anonymous said...

கஷ்மீர் மக்கள் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு நாற்பது வருடங்கள் முன்னரே காஷ்மீர் மன்னருக்கு எதிராக போராடினார்கள். காஷ்மீர் மன்னர் அரசு வேளைகளில் ஹிந்துக்களை அதிகமாக பணி அமர்த்தினர்.முஸ்லிம்கள் 85 விழுக்காடு இருந்தும் அவர்கள் அரசு வேலை வாய்ப்புகளில் அவர்கள் புறக்கணிக்கபட்டனர்.காஷ்மீர் விடுதலை போராட்டம் 1947 இல் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அல்ல. நாற்பது ஆண்டுகள் முன்பாகவே காஷ்மீர் மன்னரிடம் இருந்து விடுதலைக்காக ஆரம்பிக்க பட்டது.இன்று அவர்கள் இந்திய மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலைக்காக போராடுகிறார்கள்.. - முஹமது ரபி

Anonymous said...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்ல உள்ள மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராடவில்லை. ஏனெனில் பாகிஸ்தான் காஷ்மீர் போராட்டத்துக்கு முழு அதரவு கொடுத்துள்ளது.ஆனால் இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு எதிராக போராடுகிறார்கள். ஏனெனில் இந்தியா காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக உள்ளது. காஷ்மீரின் எதிர்காலத்தை காஷ்மீரிகள்தான் தீர்மானிக்கவேண்டும். என்றால், காஷ்மீரின் முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைவரும் வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கவேண்டும்.மக்களின் விருப்பமே முக்கியம் மன்னரின் விருப்பம் அல்ல.காஷ்மீரின் ஹிந்துக்கள் மற்றும் புதிச்கள் காஷ்மீர் விடுதலை தான் விரும்புகிறார்கள் ..காஷ்மீர் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே சுதந்திரம் பெற்றுவிட்டது. முஹம்மத் ரபி .

கார்த்திக் said...

Muhammad Rabi (Rafi?, Can you please substantiate your claim by quoting few authentic 'historical' evidence?