January 18, 2012

ஜெய் பீம் காம்ரேட் : நாளை திரையிடப்படுகிறது

புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநரான ஆனந்த் பட்வர்தனின் புதிய திரைப்படம், Jai Bhim Comrade நாளை திரையிடப்படுகிறது. இது அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அல்ல. தலித் மக்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளை பற்றியது. குறிப்பாக, 1997ல் மும்பையில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட காவல்துறை துப்பாக்கிச் சூடு பற்றியது. இதைக் கண்டித்து விலாஸ் கோக்ரே என்னும் பாடகர் தற்கொலை செய்துகொண்டார்.


தலித் மக்கள் எப்படி இசையைத் தங்களுடைய ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படம் அடிக்கோட்டிட்டு காட்டுகிறது. படத்தை எடுத்து முடிக்க ஆனந்த் பட்வர்த்தனுக்கு 14 ஆண்டுகள் பிடித்தன. 


திரைப்படம் : JAI BHIM COMRADE, மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் ஓடக்கூடியது.


இடம் : பாலமந்திர் ஜெர்மன் ஹால், பிரகாசம் சாலை, அபிபுல்லா சாலை நடிகர் சங்கம் அருகில், ஜி.என். செட்டி சாலை அருகில். தி. நகர்


தேதி, நேரம்: ஜனவரி 20, மாலை 5 மணிக்கு


மேலும் அறிய


Inheriting injustice : A chilling film on India's Dalits
Anand Patwardhan : Wikipedia
சென்னையில் ஆனந்த் பட்வர்தன்


திரையிடலுக்குப் பிறகு ஆனந்த் பட்வர்தனுடன் உரையாடலாம்.


அனைவரும் வருக!

No comments: