March 22, 2012

ஃபிரண்ட்லைன், இந்தியா டுடே, தெஹல்கா மற்றும் பல

Fountain Ink என்னும் பெயரில் சென்னையில் இருந்து புதிய பத்திரிகை வெளியாகியிருக்கிறது.  ரீடர்ஸ் டைஜஸ்ட் அளவில் 126 பக்க வண்ணப் புத்தகம். ஆரம்ப இதழ்களுக்கு சலுகை விலையாக ரூ. 5 வைத்திருந்தார்கள். தெலுங்கானா பற்றியும் காஷ்மிர் பற்றியும் வெளியான நீண்ட கட்டுரைகள் வாசிக்க இலகுவாக இருந்தன. விற்பனைக்கான முதல் இதழ் சென்ற வாரம் கிடைத்தது. விலை, ரூ.20.  உள்ளடக்கத்தோடும் வடிவமைப்போடும் காகிதத் தரத்தோடும் ஒப்பிடும்போது, இது நிச்சயம் சகாய விலைதான். அதிக விவரங்களுக்கும் முந்தைய இதழ்களுக்கும் இங்கே செல்லவும்.

இன்றைய தேதியில், நீண்ட கட்டுரைகள் என்பதே அபூர்வமாகிவிட்டன. அவுட்லுக்கில் அருந்ததி ராய் எழுதினால் மட்டும் நீண்ட கட்டுரைகள் வெளிவரும். சமீபத்திய உதாரணம், Capitalism:A Ghost Story. இந்தியா டுடே அக்கப்போர்களையே அதிகம் அலசுகிறது. ஒரே ஆறுதல், எம்.ஜே. அக்பர் எடிட்டோரியல் டைரக்டர் ஆனபிறகு, ஜெயலலிதாவை எதிர்த்தும் மோடியைக் கண்டித்தும்கூட கட்டுரைகள் வருகின்றன.

தெஹல்கா பரவாயில்லை. தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் காணக்கிடைக்கும் சங்கதிகளைக் கடந்து, விரிவாக ரிப்போர்டிங் செய்கிறார்கள். செய்திகளைத் தேடிச் செல்கிறார்கள். முந்தித் தருவதற்கு முயற்சிக்கிறார்கள்.

ஏனோ வீக் படிப்பதற்கு ஏற்றாற்போல் இல்லை.

தர அடிப்படையில், முதலிடம் என் தேர்வில், ஃபிரண்ட்லைன். விரிவான கவர் ஸ்டோரி; வேறு எங்கும் காணக்கிடைக்காத விரிவான புத்தக விமரிசனங்கள் (ஏ.ஜி. நூரணியின் பல விமரிசனங்கள், மூன்று அல்லது நான்கு இதழ்களுக்குத் தொடரும்); சர்வதேச செய்திகள் / அலசல்கள்; இலக்கிய விவாதங்கள்; பொருளாதாரம்; சுற்றுச்சூழல்; பயணம் என்று விரிவான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது ஃபிரண்ட்லைன். சினிமாவும் விளையாட்டும் கிடையாது என்பது இன்னொரு ஆறுதல். அயல்நாட்டு இதழ்கள் தவிர்த்துவிட்டு பார்த்தால், எனக்குத் தெரிந்து, நீண்ட Obituary ஃபிரண்ட்லைனில் மட்டுமே கிடைக்கிறது.

ஃபிரண்ட்லைனுக்குப் பிறகு Fountain Ink ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. அதற்கு ஒரு காரணம், அதன் Narrative Journalism. வாசித்துப் பாருங்கள்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! பகிர்வுக்கு நன்றி !

Anonymous said...

உங்களை உங்கள் வாசகர்கள் மறந்து விடாமல் இருக்க அவ்வப்போது ஒரு சிறு கட்டுரையாவது எளிது விடுகின்றீர்கள் :)

Anonymous said...

ஃரண்ட் லைன் - இலைமறை காய்மறையாக உண்மை வெளிப்படும்.
மற்றவை உண்மைப் பற்றாக்குறையால் பரிதவிப்பவை.
நாவிற்கேற்ற ருசி. அவ்வளவுதான்.
வழிப்போக்கன்

Anonymous said...

மிக்க நன்றி தோழரே!என்னை போன்ற ஆங்கில புத்தகங்கள் வார இதழ்கள் பற்றி அவ்வளவாக தெரியாதவர்களுக்கு இது மிக சிறந்த அறிமுகம்!