இனி வரும் காலங்களில் எப்படிப்பட்ட வேலைகளுக்கு டிமாண்ட் அதிகம் இருக்கும்? வேகமாக மாறிவரும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப கீழ்வரும் புதிய வேலைகளுக்கு ஆள்கள் தேவைப்படலாம் என்கிறது அவுட்லுக். (ஜூன் 25, 2012 இதழ் கல்விச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இந்தப் பதிவில் இடம்பெறும் செய்திகள் அவுட்லுக் இதழிலுருந்து தொகுக்கப்பட்டவை).
- டே கேர் சர்வீஸ். குழந்தைகள், பெற்றோர், முதியோர் என்று வீட்டில் இருப்பவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு நம்பிக்கைக்குரிய திறமையான ஆள்களைப் பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நர்ஸிங் மற்றும் கல்வி சார்ந்த டிப்ளமோ இருப்பவர்களுக்கு இந்தப் பணி பொருத்தமாக இருக்கும்.
- சைபர் லாயர்கள். பெருகும் இணையக் குற்றங்கள் தொடர்பான சட்டங்களைக் கற்று தேர்ந்தவர்களுக்கு எல்ல எதிர்காலம் இருக்கிறது.
- பர்சனல் ஷாப்பர்கள். ஹோட்டல், சினிமா உள்ளிட்ட துறையினர் லேட்டஸ்ட் உடைகள் மற்றும் நாகரிக பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். ஒரே பிரச்னை எது லேட்டஸ்ட், எது நாகரிகம் என்று தேடிப் பார்த்து மதிப்பிட்டு ஷாப்பிங் செய்ய நேரம் இல்லை. இதையே ஒரு வேலையாக எடுத்துச் செய்பவர்களுக்கு நிச்சயம்
- சோஷியல் மீடியா ட்ராக்கர்ஸ். நிறுவனங்களுக்கு உதவிகரமாக, நெட்டில் உலாவி அவர்களுடைய பிராண்ட் இமேஜ் பாதுகாப்பாக இருக்கிறதா, ஏதாவது விதிமீறல்கள் நடந்திருக்கின்றவா, துறை சார்ந்த அப்டேட்ஸ் என்ன போன்றவற்றை ஆராய்ந்து தகவல் அளிக்கவேண்டும்.
- ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ். யோகா, மூச்சு பயிற்சி, கிடார், மலையேற்றம் என்று எதுவாக இருந்தாலும் ஓகே. கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி அவர்களுடைய பணியாளர்களை ஈர்த்துவிட்டால் கை நிறைய லாபம்.
- கிராஸ்ரூட் ஆக்டிவிஸ்ட்ஸ். சமூக அறிவியல் துறைகளில் டிகிரி வாங்கிவிட்டால் போதும். தொகுதி பிரச்னைகள் குறித்து ஓரளவுக்குத் தெரிந்திருப்பது நல்லது. கட்சிகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டிருக்கின்றன என்பதால் விஷயம் அறிந்த, ஓடியாடி வேலை செய்யக்கூடிய இளைஞர்கள் தேவைப்படுவார்கள்.
0
ஐஐடி பிரச்னைகள். தீவிர மனஅழுத்தம் காரணமாக பல மாணவர்கள் மதுவையும் போதை மருந்துகளையும் தற்கொலையையும் நாடிச்செல்கிறார்கள். அதுவரை நன்றாகப் படித்துக்கொண்டிருந்த பளிச் மாணவர்கள்கூட ஐஐடியில் நுழைந்தவுடன் மனஅழுத்தத்துக்கு உள்ளாவதற்குக் காரணம் வகுப்பறையில் உள்ள ஒவ்வொருவரும் பளிச் மாணவர் என்பதுதான். தவிர, ஆசிரியர்கள், குடும்பம், சமூகம் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்பார்ப்புகள் பெருகுவதால், உடலையும் மனத்தையும் அளவுக்கு அதிகமாக வருத்திக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
டெல்லி ஐஐடியில் 850 மாணவர்களில் 600 பேருக்கு உளவியல் சார்ந்த கவுன்சிலிங் தேவைப்பட்டிருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
20 ஆண்டுகளுக்கு முன்னால் ஐஐடியில் ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் இருந்தனர். இன்று 300 பேர் இருக்கிறார்கள். ஆசிரியர்களின் எண்ணிக்கை அதற்கேற்ப உயரவில்லை.
0
வெளிநாடு போதும் இந்தியாவுக்கு வந்துவிடலாம் என்று முடிவு செய்து திரும்பிய பல என்ஆர்ஐ.க்களை இந்தியா அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏன் இந்தியா பிடிக்கவில்லை என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்: இந்தியப் பொருளாதாரம் சரியில்லை. எல்லாரும் பாஸுக்கு ஆமாம் சாமி போடுகிறார்கள். புரொபஷனலிஸம் இல்லை. அரசு இயந்திரம் படுத்தி எடுக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களுக்கும் லஞ்சம். அமெரிக்காவைவிட இங்கே அதிகம் செலவழிக்கவேண்டியிருக்கிறது. எனவே சேமிக்க முடியவில்லை.
0
கொல்கத்தாவாசிகள் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் பொரிபர்தனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்க் தெரு பாலியல் பலாத்காரம், பேராசிரியர் மஹபத்ரா கைது செய்யப்பட்டது ஆகிய சம்பவங்கள் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களை வெறுப்படையச் செய்துள்ளது. மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லவேண்டியது படிப்பதற்காக, அரசியல் செய்வதற்கல்ல என்னும் மமதாவின் புகழ்பெற்ற வாக்கியத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று சொல்லி கல்லூரிகளில் முக்கிய இடங்களில் அமர்ந்திருப்பவர்களை அகற்றியிருக்கிறது மமதா அரசு. 'நான் டிஎம்சியை ஆதரிக்கிறேன்' என்று முழக்கமிடாதவர்களை கட்சி மாணவர்கள் அடிக்கிறார்களாம்.
0
லேப்டாப் அல்லது டாப்லட் வைத்திருக்கும் யாரும் இனி ஹார்வர்டிலோ எம்ஐடியிலோ படிக்கமுடியும். edX என்னும் புதிய ஈ படிப்பகம் இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது. எம்ஐடி பாடங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களுக்கும் MITx டிகிரியும் ஹார்வர்ட் பாடங்கள் கற்றவர்களுக்கு HarvardX டிகிரியும் வழங்கப்படும். பிற சர்வதேசப் பல்கலைக்கழகங்களும் இப்படிப்பட்ட ஈ டிகிரிகளை விரைவில் வழங்கும் என்கிறார்கள்.
0
உலகளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழங்களின் பட்டியலில் ஐஐடிகள் தவிர வேறு எந்த இந்திய கல்வி நிலையங்களும் இடம்பெறவில்லை. மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், கணிதம் என்று பல துறைகளில் இந்தியா பின்தங்கியுள்ளது.

1 comment:
நல்லதொரு தொகுப்பு ! வாழ்த்துக்கள் ! நன்றி !
Post a Comment