November 1, 2013

மோடி வாய் திறந்து பேசுவாரா?

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு நரேந்திர மோடி பங்குபெற்று உரையாற்றிய எந்தவொரு நிகழ்ச்சியிலும், தேர்தலில் வென்றால் தன் கட்சியின் செயல்திட்டம் என்னவாக இருக்கப்போகிறது என்பதைக் கோடிட்டுக்கூடக் காட்டவில்லை.

1) பாஜகவின் பொருளாதாரக் கொள்கை என்ன? அது எந்த வகையில் காங்கிரஸிடம் இருந்து மாறுபடப்போகிறது?

2) காங்கிரஸின் சமூகநலத் திட்டங்களை விமரிசிக்கும் பாஜக அவற்றை நிறுத்தி வைக்கப்போகிறதா? அல்லது மாற்றங்களுடன் தொடரப் போகிறதா?

3) கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், தொழில்நுட்பம், கட்டுமானம் போன்ற துறைகளில் என்னென்ன திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன?

4) பலரும் மெச்சும் 'குஜராத் மாடல்' என்பது என்ன? இதை நரேந்திர மோடி எங்காவது விளக்கியிருக்கிறாரா? இந்த மாடலைத்தான் அவர் இந்தியா முழுவதற்கும் எடுத்துச் செல்லவிருக்கிறாரா? எப்படி?

5) குறைந்தது, இந்துக்களுக்காவது அவர் ஏதாவது சிறப்புத் திட்டங்கள் வைத்திருக்கிறாரா? ராமர் கோயில் கட்டப்போகிறாரா? பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வருவாரா? ஆம் எனில் அவற்றையெல்லாம் பொதுவெளியில் வைத்து விவாதிக்க அவர் தயாரா?

6) வெளியுறவுத் துறை கொள்கை எப்படி இருக்கப்போகிறது? பாகிஸ்தானையும் சீனாவையும் என்ன செய்வதாக உத்தேசம்? அமெரிக்காவுடனான உறவு எப்படி இருக்கப்போகிறது?

7) உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயம் போன்ற காங்கிரஸ் கொள்கைகள் தொடரப்போகின்றனவா? அல்லது பாரதப் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடித்து அந்நிய வணிகங்களைக் கத்தரித்துவிடப்போகிறார்களா?

மேடைக்கு மேடை 'மௌன் மோகன் சிங்' என்று கிண்டலடிக்கும் நரேந்திர மோடி எங்காவது வாய் திறந்து இவை குறித்து பேசியிருக்கிறாரா? ஒருவேளை நான்தான் கவனிக்கவில்லை என்றால் அவரை உயர்த்திப் பிடிக்கும் நண்பர்கள் யாராவது உதவுவார்களா?

4 comments:

முனைவர் ப. சரவணன், மதுரை. said...

பேரன்புள்ள திரு. மருதன் அவர்களே!
“எனக்கு ஒரு வாய்ப்புக்கொடுங்கள்“ என்பதே திரு. மோடியின் பிரச்சாரம்.வாய்ப்புக்கிடைத்தால் என்ன செய்யலாம் என்பது குறித்து அவருக்கு இப்போதும் எப்போதும் தெரியப்போவதில்லை.
காங்கிரஸ் தன் அலட்சியப்போக்கால் ஒரு மாற்று அரசியலை உருவாக்கிவிட்டது என்பதுதான் உண்மை.
தங்கள் சரவணன்

Anonymous said...

மோடியை ஆதரிக்கும் எல்லா நண்பர்களிடமும் நான் முன்வைக்கும் கேள்விகளை மிக அழகாக அடுக்கி உள்ளனர். மோடியோ யாரோ அடுத்த ஆட்சிக்கு வந்தாலும் இதே அரசுக் கொள்கைகளே தொடரும் கொள்ளையடிப்பவர் மட்டுமே மாறுவார். உண்மையிலேயே இந்த கொள்கைகைளை மூட்டை கட்டுவோம், என்று புதிய கொள்கைகளை அடையாளம் காட்டினால் நிச்சயம் மோடியை ஆதரிக்கலாம். ஆனால் இதே கொள்கையில் இந்தியாவை மாற்றுவோம் என்று சொன்னால் ஒரே மாற்றம் மட்டுமே வரும் இன்னும் கொஞ்சம் கோவில்களும் குழப்பங்களும்.

புகழேந்தி K

Anonymous said...

Mr.Marudhan

What would be the agenda, if RED Brothers come to power ? Will they thrown out all IT companies? ( bcoz, they are working for US) Will they close all PVT companies? Or they will make INdia like another BENGAL/Kerala? Or they give the Border lands to china as there also their brothers ruling? PICHAI EDUPOMA ellorum - Arvind

BalajiS said...

UPA said they will reduce prices within 100 days in 2009. Please ask congress first and get the answer.

Now he is questioning about the promises made by UPA in 2009.

Question the rulers first.
Then come to ask Modi.

Modi will spell out his plan once parliament elections are declared.

You can give your inputs to BJP manifesto here.



http://bjpelectionmanifesto.com/