நியாயமாகப் பார்த்தால் பிபிசி ஒளிபரப்பியிருக்கவேண்டும். நாங்கள் எந்த விதச் சார்பு நிலையையும் எடுக்கமாட்டோம். நடுநிலையுடன் செய்திகளை அளிப்போம் என்றெல்லாம் வாய் கொள்ளாமல் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அந்நிறுவனம் அப்படி ஒரு சம்பவமே நடக்காதததுபோல் அமைதியாக இருந்துவிட்டது. வேறு எந்த மீடியாவிலும் செய்தி வரவில்லை. கார்டியன் ஒரு துணுக்குச் செய்தியை மாத்திரம் வெளியிட்டது. அதுவும்கூட முழுமையான ஒரு பதிவு அல்ல.
பிப்ரவரி 28, 2008 அன்று தொடங்கியிருக்கிறார்கள். காஸா முனைக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு அது. ஒட்டினாற்போல் ஒரு திறந்தவெளி மைதானம். குழந்தைகள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதிகம் சத்தம் எழுப்பாதபடி அவர்கள் தலைக்கு மேலே படர்ந்த அந்த விமானம் சட்டென்று குண்டுகளை வீசிவிட்டு கடந்து சென்றுவிட்டது. நான்கு சிறுவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டனர். மேலும் மூன்று பேர் ரத்தம் சொட்டச்சொட்ட அலறிக்கொண்டு ஓடிபோயிருக்கிறார்கள். இறந்து போனவர்களில் எட்டு வயது குழந்தையும் அடக்கம்.
தாக்கியிருப்பது இஸ்ரேல் ராணுவம். விளையாடிக்கொண்டிருப்பவர்கள் சிறுவர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பிறகே குண்டுகள் வீசப்பட்டிருக்கவேண்டும். காரணம், அந்தப் போர் விமானங்கள் தலைக்கு மேலே மிக அருகில் பறந்து சென்றிருக்கின்றன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் காலம் காலமாக யுத்தம் தொடர்ந்துகொண்டு இருப்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால், சமீப காலமாக மீடியாவில் செய்திகள் அதிகம் வராததால், பாலஸ்தீனம் அமைதியாகத்தான் இருக்கிறது போலும் என்று உலகம் நினைத்துக்கொண்டிருந்தது.
பாலஸ்தீனத்தில் இருந்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த வெள்ளை அறிக்கை இந்த அனுமானத்தைச் சிதறடித்திருக்கிறது. ஜூன் 2007 தொடங்கி ஜூன் 2008 வரை கிட்டத்தட்ட 70 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில், கவனிக்கப்படவேண்டிய விஷயம், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகள். விளையாடிக்கொண்டிருந்தவர்கள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள். கடைத்தெருவில் ஓடிக்கொண்டிருந்தவர்கள். தெரு முனையில் கூடி கதை பேசிக்கொண்டிருந்தவர்கள்.
எனில், இஸ்ரேல் அரசாங்கத்தின் நோக்கம்தான் என்ன? குழந்கைளைத் தேர்ந்தெடுத்துக் கொல்லும் ராணுவ ஆபரேஷன் மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்? இத்தனைக் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும்போது, செய்தித்தாள்களும் இணையத்தளங்களும் டிவி சானல்களும் என்ன செய்துகொண்டிருந்தன?
அல் ஜசீராவைப் பற்றி இங்கே அவசியம் குறிப்பிட்டாகவேண்டும். மத்தியக் கிழக்குச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடும் நிறுவனம் இது. பாலஸ்தீன குழந்தைகள் தாக்குதல் குறித்து விரிவாக அல் ஜசீரா செய்தி ஒளிபரப்பியது.சில வீடியோ காட்சிகளையும் இணையத்தளத்தில் இணைத்திருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளும். ஒரு குழந்தை திக்கித்திணறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது. என் பெயர் இன்னது. நான் இங்கே குடியிருக்கிறேன். என் கண் முன்பே என் அப்பாவை அவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.
இஸ்லாமியர்களின் குரல், அல் ஜசீரா. ஆனால், பிபிசி போல் உலகெங்கும் பிரபலமான அமைப்பு அல்ல இது. அல் ஜசீராவின் இணையத்தளத்தை தினந்தோறும் கவனித்து வருபவர்களுக்கு மாத்திரமே அது தரும் செய்திகள் சென்றடையும். பாலஸ்தீன் குறித்து அல் ஜசீரா அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வந்தபோதும் பரவலான உலகக் கவனத்தை அவை ஈர்க்கவில்லை.
மீடியா லென்ஸ் என்னும் நிறுவனம் இதற்கு விடை கண்டுபிடிக்கப் புறப்பட்டது. மீடியா என்று வந்துவிட்டால் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் அனைத்து செய்திகளையும் வெளியிடுவதுதானே தர்மம்? எந்தச் செய்தியை வெளியிடவேண்டும் எந்த செய்தியை வெளியிடக்கூடாது என்று யார் முடிவு செய்கிறார்கள்? ஏன்?
கார்டியனில் பாலஸ்தீன் குறித்து எழுதிய கட்டுரையாளருக்குச் செய்தி ஒன்றை அனுப்பியது மீடியா லென்ஸ். ஐயா, உங்கள் கட்டுரையை வாசித்தோம். பலரும் வெளியிடாத அந்தச் செய்தியை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால், இத்தனைக்கும் காரணமான இஸ்ரேல் ராணுவத்தைப் பற்றி நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லையே. ஏன்? குழந்தைகள் இறந்துபோனார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். எப்படி, யாரால் என்பதையும் எழுதியிருக்கவேண்டாமா? கட்டுரையாசிரியரிடம் இருந்து பதிலில்லை.
அடுத்து, பிபிசியைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அன்புள்ள ஜெரிமி போவன், பிபிசியின் மத்திய கிழக்கு எடிட்டர் நீங்கள்தானே? சமீபத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து வெளிவந்திருக்கும் வெள்ளை அறிக்கையை வாசித்தீர்களா? எத்தனைக் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? நீங்கள் ஏன் இந்த அறிக்கையைப் பற்றி ஒரு வரி கூட விவாதிக்கவில்லை? சமீப காலங்களாக, பாலஸ்தீனில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களை கிட்டத்தட்ட தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருவதற்கு என்ன காரணம்? தொலைக்காட்சியில் மட்டுமல்ல, இணையத்தளத்திலும் ஒரு செய்தியையும் நீங்கள் வெளியிடவில்லை. ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா? உங்களை விட எத்தனையோ மடங்கு சிறிய நிறுவனம் அல் ஜசீரா. அவர்களுக்கு இருப்பும் பொறுப்புணர்வில் ஒரு சிறிய அளவாவது உங்களுக்கு இருக்கவேண்டாமா?
பதிலில்லை. வெள்ளை அறிக்கையை வாசித்து அதிர்ந்து போன பலரும் பிசியைத் தனித்தனியாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். செய்திகளை எந்த அடிப்படையில் பிபிசி தேர்ந்தெடுக்கிறது? எந்த அடிப்படையில் ஒளிபரப்புகிறது? தவறு செய்தது இஸ்ரேல் என்பதால் கண்டும்காணாமலும் இருந்துவிட்டீர்களா? அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் இல்லை. அமெரிக்கா இல்லாமல் பிரிட்டன் இல்லை. எனவேதான் அடங்கிபோய்விட்டீர்களா?
எந்தவொரு விளக்கத்தையும் பிபிசி அளிக்காததால், க்ளாஸ்கோ மீடியா க்ரூப் என்னும் நிறுவனம் பிரிட்டனில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. மத்திய கிழக்கு பற்றி வெளிவரும் செய்திகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இஸ்ரேல், பாலஸ்தீன் இரு தரப்புச் செய்திகளும் உங்களை வந்தடைகின்றதா? 2000 பேரிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள். பாலஸ்தீன் பற்றி எங்களால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. இஸ்ரேல் பற்றிய ஒரே சார்பான செய்திகள்தான் கிடைக்கின்றன. பாதிக்கப்படுபவர்கள் பாலஸ்தீனர்கள் என்பதால் அவர்களை நிறைய ஃபோகஸ் செய்யவேண்டும். 95 சதவீதத்தினரின் வருத்தம் இது.
எனில், மக்கள் எதைத் தெரிந்துகொள்ளவேண்டும் எதைத் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதை மீடியா உலகம்தான் முடிவு செய்கிறது. மீடியா என்றால் பிபிசி போன்ற பெரும் நிறுவனங்கள். அவர்கள் எதை அளிக்கிறார்களோ அதை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயத்தில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். பலமான ஓர் இனத்தால் மட்டுமே இன்னொரு இனத்தை ஒடுக்கிவைக்கமுடியும். பாலஸ்தீனை இஸ்ரேல் ஒடுக்குவது போல. இஸ்ரேலுக்கு ராணுவ பலம் மாத்திரமல்ல உலகளவில் செல்வாக்கும் இருப்பதால்தான் மீடியாவை அவர்களால் தேவைக்கேற்ப உபயோகித்துக்கொள்ள முயல்கிறது.
பாதிக்கப்படுபவர்களின் செய்திகளை வெளியிட்டுவருவதால் அல் ஜசீரா இதுவரை சந்தித்துள்ள பிரச்னைகள் ஏராளம். அவர்கள் அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தொலைபேசி மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அனைத்தையும் கடந்துதான் இயங்கிக்கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.
நாங்கள் தருவதுதான் செய்தி. நாங்கள் அளிக்கத் தவறும் செய்திகளை வேறு யார் அளித்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுதான் மீடியா உலகம் வழங்கும் நீதி. பிபிசி போன்ற பெரும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு இருக்கிறது. மக்களிடையே நல்ல பெயரும் செல்வாக்கும்கூட இருக்கிறது. மாறுபட்டு சிந்திக்கும் இணையத்தளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. வலைப்பதிவாளர்களின் தளங்கள் கடத்தப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. செல்வாக்கில்லாத சிறு பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவான உண்மை இது.
பிபிசி, சிஎன்என், டைம், கார்டியன் போன்ற நிறுவனங்களிடம் இருந்துதான் பாலஸ்தீன் பற்றியும் இராக் பற்றியும் ஆப்கனிஸ்தான் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகம் தினம் தினம் தெரிந்துகொள்ளமுயல்கிறது.
November 29, 2008
November 18, 2008
நேருவின் சர்ச்சைக்குரிய சிபாரிசு
1948ம் ஆண்டு நேருவும் பிரிட்டிஷ் அரசரின் அலுவலகமும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களை தி ஹிந்துவில் வெளியிட்டிருக்கிறார் நட்வர் சிங். எனக்கு நேருவை மிகவும் பிடிக்கும். ஆனாலும் இப்படிப்பட்ட கடிதத்தை நேரு எழுதியிருப்பது அவருக்கு நல்லதல்ல. நட்வர் சிங்கின் வருத்தம் இது.
அது ஒரு சிபாரிசுக் கடிதம். இதுவரை அச்சில் வரவில்லையாம். சுருக்கம் இது. அன்புள்ள மன்னா, மவுண்ட்பேட்டனும் எட்வினா மவுண்ட்பேட்டனும் இதுவரை இந்தியாவுக்கு ஆற்றியிருக்கும் சேவை மகத்தானது. அவர்களை நினைத்து நாங்கள் பூரித்துப்போயிருக்கிறோம். தக்க முறையில் அவர்களுக்கு அரசர் ஏதாவது செய்யவேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன். செய்வீர்களா?
மன்னரும் பதில் அனுப்பியிருக்கிறார். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், வேறு இடத்தில் இருந்து எனக்கு வேறு மாதிரியான ரிப்போர்ட் வந்திருக்கிறது. தவிரவும், மவுண்ட்பேட்டன் தம்பதியை நாங்கள் நன்கு அறிவோம். அவர்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டிருக்கும் கௌரவமே போதும் என்று நினைக்கிறேன்.
எட்வினா மவுண்ட்பேட்டன் மீது ஏற்பட்ட வசீகரத்தால் நேரு சில தவறான முடிவுகளை (இந்தக் கடிதம் உள்பட) எடுத்திருப்பதாக நட்வர் சிங் சொல்கிறார். வருந்தவும் செய்கிறார்.
நட்வர் சிங்கின் கட்டுரைக்குக் கடுமையான எதிர்வினைகள் வந்திருக்கின்றன. அதெப்படி எங்கள் நேரு மாமாவைப் பற்றி எப்படித் தவறாகச் சொல்லலாம்? அவரைப் பற்றி சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக, இதை ஏன் சொல்லவேண்டும்? அதுவும் இந்த நேரத்தில்? (குழந்தைகள் தினத்தையொட்டி வெளிவந்த கட்டுரை அது).
பாடப்புத்தகங்கள் முன்வைக்கும் இந்திய சுதந்தரப் போராட்ட வரலாறை மட்டுமே வாசித்திருப்பவர்கள் இந்தக் கடிதங்களை வாசித்து அதிர்ச்சியடையலாம். நிஜ வரலாறைத் தேடவும் ஆரம்பிக்கலாம்.

November 5, 2008
ஒபாமா, அமெரிக்கா பற்றி ஃபிடல் காஸ்ட்ரோ
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய தினம் (நவம்பர் 3, 2008) ஃபிடல் காஸ்ட்ரோ கிரான்மாவில் எழுதிய கட்டுரையின் சாரம்.
அமெரிக்கா
0 அமெரிக்கா ஒரு சக்தி வாய்ந்த நாடு. உலகின் மொத்த மக்கள்தொகையில் அமெரிக்கர்கள் ஐந்து சதவீதம். ஆனால் உலகின் பெரும்பாலான வளங்களை (எண்ணெய், கனிமங்கள், உற்பத்தி பொருள்கள் ஆகியவை) அதிகமாக உறிஞ்சிக்கொள்பவர்கள் அமெரிக்கர்களே.
0 ஆயுத உற்பத்தியில் முதலிடம். உலகின் எந்த மூலையையும் குறிவைத்து கபளீகரம் செய்யும் ஆற்றல் கொண்ட ஏவுகணைகள் அமெரிக்காவிடம் உள்ளன.
0 ஆற்றல் வாய்ந்த நபர்களை உலகம் முழுவதிலும் இருந்து திரட்டி தனக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது அமெரிக்கா. அந்த வகையில் அமெரிக்கா ஒரு ஒட்டுண்ணி தேசம்.
0 அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்கர்களின் நிலைமையில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. அவர்களை ஒடுக்கியே வைத்துள்ளது அரசு.
அமெரிக்கர்கள்
0 சமீபத்திய பண நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்கர்கள் இராக்கைவிட பொருளாதரத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். வேலை நிரந்தரமாக இருக்குமா? வங்கிகளில் உள்ள சேமிப்பு பத்திரமாக இருக்குமா? ஓய்வூதியம் ஒழுங்காக வருமா? காசு கொடுத்து பொருள்கள் வாங்கும் திறன் குறையுமா?
பாரக் ஒபாமா
0 அரை ஆப்பிரிக்கர். உயர்கல்வி படித்தவர். மெக்கெயினைவிட புத்திசாலி, அறிவாளி, கற்றறிந்தவர்.
0 தன் எண்ணங்களை அமெரிக்க வாக்காளர்களிடையே அழுத்தமாகப் பதிவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்.
0 நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமையைக் குறைப்பதாகச் சொல்லியிருக்கிறார். அமெரிக்க வரிப்பணத்தைக் கொண்டு புஷ் இராக்கில் நடத்திருவரும் யுத்தத்தை கண்டித்திருக்கிறார். அமெரிக்க வீரர்களை இராக்கில் இருந்து திரும்பப்பெற்றக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். செம்படம்பர் 11 தாக்குதலுக்கும் இராக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் அவர் இப்படிச் சொல்லியிருக்கலாம்.
0 உலகம் முழுவதையும் பாதித்துக்கொண்டிருக்கும் பிரச்னைகள் பற்றி ஒபாமா கவலைப்படுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. ஜான் மெக்கெயின் இன்னமும் மோசம். முன்னாள் போர் விமானியான இவர், வியட்நாம் மீது டன் கணக்கில் குண்டுகள் வீசியிருக்கிறார். இவரை நம்ப முடியுமா?
0
க்யூபாவின் அதிபர் ரால் காஸ்ட்ரோவைச் சந்தீப்பீர்களா என்று கேட்டபோது ஒபாமா அளித்த பதில் இது.
ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தவரை க்யூபாவில் சுதந்தரம் இருந்ததில்லை. நல்ல வேளையாக இப்போது அங்கே ஆட்சி மாறியிருக்கிறது. இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், க்யூபா மீது அமெரிக்கா முன்வைத்த பொருளாதாரத் தடைகள் அப்படியே நீடிக்கும். நான் அதை மாற்றமாட்டேன்.

Subscribe to:
Posts (Atom)