March 2, 2009

அரசியலின் கதை : இரண்டு

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான காரணத்தை முன்னிறுத்தினாலும் இவர்கள் அனைவரும் சொல்லவருவது இதைத்தான். அரசியல் எனக்கானது இல்லை. அரசியல்வாதிகள் வேறு ஜாதிக்காரர்கள். அது வேறு துறை. வேறு இனம். எனக்கு அரசியல் வேண்டாம். ஆளை விடுங்கள். கதவை இழுத்து மூடிக்கொண்டுவிட்டால் அரசியல் விவகாரங்கள் எதுவும் தன்னை பாதிக்காது என்பது இவர்கள் நம்பிக்கை. தவிரவும், தனக்கு அரசியல் தெரியாது என்று சொல்லிக்கொள்வதில் பலருக்குப் பெருமையும் கர்வமும் கூட உண்டு.

அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பது இதைத்தான். இதையேதான். அரசியல் தெரியாது அரசியல் புரியாது அரசியல் பிடிக்காது என்று முகம் சுளித்து ஒதுங்குபவர்களைத்தான் அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களை உருவாக்கத்தான் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். எல்லோரும் அப்படி இருந்துவிட்டால் பிரச்னை இருக்காது. யாரும் கேள்விகேட்க மாட்டார்கள். யாரும் கொடி பிடித்து போராட்டம் நடத்த மாட்டார்கள். யாரும் விமரிசிக்க மாட்டார்கள். போதாது?

அரசியல் சாக்கடை என்கிறாயா? ஆமாம் இது சாக்கடைதான். உள்ளே வராதே. நாங்கள் அடாவடிக்காரர்கள் என்கிறாயா? சரியாகத்தான் சொல்கிறாய். நாங்கள் விவகாரமானவர்கள்தான். எச்சரிக்கை! எங்களை நெருங்காதே. உன் பிரச்னைகளை என்னிடம் கொண்டு வராதே. ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார். அரசியல் உனக்குப் புரியாது. புரிந்துகொள்ள முயற்சிக்காதே.

எனில், முயற்சி செய்பவர்களின் கதி? என் சமூகத்தைப் பற்றி நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆர்வத்துடன் இருப்பவர்கள் என்ன ஆகிறார்கள்? செய்தித்தாள்கள்களை வாசிக்கிறார்கள். டிவி பார்க்கிறார்கள். இணையத்தளங்களில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை கிரகித்துக்கொள்கிறார்கள். அரசியல் பற்றி அதிகம் விவாதிப்பவர்களாகவும் கவலைப்படுபவர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். தேர்தலுக்குத் தேர்தல் தவறாமல் ஓட்டுபோட்டு ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.அரசியல் அரங்கில் நடைபெறும் அனைத்து சிறிய பெரிய மாற்றங்களையும் உன்னிப்பாக இவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சரி. அரசியல் பற்றிய இவர்கள் புரிதல் என்ன? அரசியல் ஆர்வலர்களான இவர்கள் அரசியலை எப்படிப் பார்க்கிறார்கள்? இவர்களது பங்களிப்பு என்ன? சமூகத்தை மாற்ற இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

(தொடரும்)

பின் குறிப்பு : கட்டுரையின் நீளம் கருதி அத்தியாயங்களை சிறு பகுதிகளாகப் பிரித்து அளிக்கிறேன்

8 comments:

Suresh said...

Arumaiyana pathivu :-) ungalin tamilish votekum nandri thodarvom nam natpai

Kalaiyarasan said...

//தனக்கு அரசியல் தெரியாது என்று சொல்லிக்கொள்வதில் பலருக்குப் பெருமையும் கர்வமும் கூட உண்டு.//


அரசியலற்ற மக்களை சிந்திக்க தூண்டும் கட்டுரை, மருதன். அப்படியானவர்கள் முன் வைக்கும் நியாயங்களையும், அது ஏன் தவறு என்ற விளக்கங்களும் விரிவாக கொடுத்தால் நல்லது என நினைக்கிறேன். " நாகரீகமடைந்த ஜனநாயக" மேற்குலக நாட்டு மக்கள் பலரும் தமக்கு அரசியல் தேவையில்லை, அல்லது அது பற்றி எதுவும் தெரியாது, என்ற மனப்பான்மையை கொண்டுள்ளனர். தேர்தல்களில் சராசரி 35% மக்களே வாக்களிக்கின்றனர்.

மருதன் said...

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களையும் இணைத்து விரிவாக எழுத முயற்சி செய்கிறேன் கலையரசன். அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி நிற்பவர்கள் பலர். ஆனால், அரசியல் ஒருவரையும் விட்டு விலகி நிற்பதில்லை. பாராளுமன்றம், கட்சி, தேர்தல் போன்ற அமைப்புகள் மட்டும்தான் அரசியல் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசியலின் தளம் மிகவும் விரிவானது, நுட்பமானது என்பதை விளக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

hariharan said...

சரியான கூற்று,

"அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பது இதைத்தான். இதையேதான். அரசியல் தெரியாது அரசியல் புரியாது அரசியல் பிடிக்காது என்று முகம் சுளித்து ஒதுங்குபவர்களைத்தான் அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களை உருவாக்கத்தான் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். எல்லோரும் அப்படி இருந்துவிட்டால் பிரச்னை இருக்காது. யாரும் கேள்விகேட்க மாட்டார்கள். யாரும் கொடி பிடித்து போராட்டம் நடத்த மாட்டார்கள். யாரும் விமரிசிக்க மாட்டார்கள்."

Need Vote only from Peoples, for that they are ready to pay as"market rate" because some parties sees politics (election) is a investment and power is a profit.
"KING REFLECTS THE COMMANMAN"

butterfly Surya said...

தேர்தல் வரும் நேரத்தில் சிறு விழிப்புணர்ச்சியாவது வரட்டும்..


Too much short.. Plz Consider...

வாழ்த்துகள்.

Anonymous said...

நிறுத்தாமல் தொடர்ந்து எழுதுங்கள் மருதன். நிச்சயம் பலருக்கும் உபயோகப்படும். அரிஸ்டாடில், ரூஸோ போன்ற பெயர்களை அறிந்திருக்கும் அளவுக்கு அவர்கள் சித்தாந்தங்களை பலரும் அறிந்திருக்கவில்லை. விரிவாக அலசி எழுதுங்கள். நன்றி. வாழ்த்துகளும்.

Anonymous said...

Keep writing good stuff as always. I haven't read Amrudha.

Anonymous said...

pls explain what is communism in detail. these translated books are scary. if people dont understand communism, how will they support it?