May 18, 2009

பிரபாகரன்

பிபிசி நேற்றே Obituary வெளியிட்டுவிட்டது. சிஎன்என் ஐபிஎன், ராய்டர்ஸ், அசோஷியேட்டட் பிரஸ் தொடங்கி சர்வதேச ஊடகங்கள் பலவும் ஊர்ஜிதம் செய்துவிட்டன. இலங்கை ராணுவம் அளித்த தகவலின்படி என்று தொடங்கி தமிழ் சானல்கள் நேற்று ஃப்ளாஷ் நியூஸ் ஓட்ட ஆரம்பித்துவிட்டன. இலங்கையின் அதிகாரபூர்வமான ராணுவத் தளம் Prabakaran Shot Dead என்று செய்தி வெளியிட்டுவிட்டு பிறகு அவசரமாக நீக்கியும்விட்டது.

முன்னதாக, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி, அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவன் ஆகியோரின் மரணத்தை அறிவித்தது இலங்கை ராணுவம். பிரபாகரன் பற்றி விதவிதமான செய்திகள் முன்னுக்குப் பின் முரணாக வலம் வர ஆரம்பித்தன. சயனைட் அருந்திவிட்டார். தப்பிச் சென்றிருக்கலாம். இன்னும் நாங்கள் அவரை நெருங்கவில்லை. பிறகு, அந்த அறிவிப்பு. உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடற்படைப் பிரிவுத் தலைவர் சூசை ஆகியோருடன் சேர்ந்து தப்பிச்செல்லும்போது பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றவர்களும் இறந்துபோனார்கள்.

சர்வதேச மீடியாவுக்கு இலங்கை அளிப்பதுதான் நியூஸ். களத்துக்கு நேரில் சென்று சரிபார்த்து உண்மைச் செய்தியை வெளியிடும் நிலையில் அவர்கள் இல்லை. அப்படியே விரும்பினாலும், இலங்கை ஒருவரையும் உள்ளே அனுமதிக்கப்போவதில்லை. எனவே, பிரபாகரன் கொலை, இலங்கை ராணுவம் தகவல் என்று இலங்கையின் மவுத்பீஸாக மாறி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.

நேற்று மாலையே மறுப்புகள் இணையத்தில் வெளிவர ஆரம்பித்துவிட்டன. தமிழர்களைப் பலவீனப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் பிரசாரப் போரை உதாசீனம் செய்யுங்கள். நம்பத்தகுந்த ஆதாரங்கள் வெளிவரும் வரை காத்திருப்போம். வதந்திகளை உலவவிடவேண்டாம். கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்வோம். சென்னையில், பழ. நெடுமாறனிடம் இருந்து முதல் தகவல் நேற்று வெளிவந்தது. பிரபாகரன் ஆரோக்கியமாக இருக்கிறார். எந்த வதந்தியையும் நம்பவேண்டாம்.

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று நேற்று இணையத்தில் செய்தி வெளியிட்ட தி ஹிந்து, Prabakaran believed dead என்று தலைப்புச்செய்தியில் சிறிய திருத்தத்தைக் இன்று கொண்டுவந்திருக்கிறது. மற்றபடி, பக்கத்துக்குப் பக்கம் அலசல். இயக்கத்தின் வீழ்ச்சிக்கு வேறு யாரும் காரணமல்ல, பிரபாகரனேதான் என்கிறது ஒரு கட்டுரை. கருணாவின் பிரிவு அவர்களுக்குப் பெரிய அடி என்கிறது ஒரு பெட்டிச் செய்தி. ரணில் விக்கிரமசிங்கேவோடு ஒத்துப்போயிருந்தால் மகிந்த வந்திருக்க மாட்டார், இயக்கமும் அழிந்து போயிருக்காது என்கிறது ஒரு ஆய்வு கட்டுரை. லெட்டர்ஸ் டு தி எடிட்டரில் ஒரே பாராட்டு மழை. இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதத்தை நசுக்கிய மகிந்தவுக்கு வாழ்த்துகள். மகிந்தவிடம் இருந்து நம் அரசியல்வாதிகள் ஒரு சில பாடங்கள் படித்துக்கொள்ளவேண்டும்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக இயக்கம் இன்று அறிவித்திருக்கிறது. சானல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சர்வதேச தொடர்பாளர் செ. பத்மநாபன் இதை உறுதிசெய்திருக்கிறார். பாராளுமன்றத்தில் இன்று காலை ஆற்றிய உரையில் மகிந்த ராஜபக்ஷே பிரபாரகன் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம். போர் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. தமிழர்கள் எங்கள் எதிரிகள் அல்ல. தமிழர்களைப் பாதுகாப்பது என் கடமை, என் பொறுப்பு. சிங்களம், தமிழ் இரண்டிலும் பேசி கைத்தட்டல் வாங்கியிருக்கிறார்.

ஆக பிரபாரகன் பத்திரமாக எங்கோ இருக்கிறார் என்னும் நிம்மதிப் பெருமூச்சுடன் தமிழ்ச் சமூகம் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்துள்ளது. எனில், அவர் எங்கே?

0

பிரபாகரன் எங்கே என்னும் கேள்வி இப்போதைக்கு முக்கியமானது அல்ல. பிரபாகரன் குறித்த கவலையும் அர்த்தமற்றதே. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்று யோசித்த தினம் அன்றே தன் மரணம் குறித்து அவர் சிந்தித்திருப்பார். திட்டமிட்டும் இருப்பார்.

பிரபாகரனின் மரணம் குறித்த வதந்தியை பரப்பிவிட்டதன் மூலம், நேற்று அங்கே நடைபெற்ற மாபெரும் தாக்குதல்களை, அழிவுகளை இலங்கை மிகக் கவனமாக மறைத்திருக்கிறது. நேற்று மதியம் தொடங்கி கூகிளில் அதிகம் தேடப்பட்ட இரு வார்த்தைகள், பிரபாகரன், விடுதலைப் புலிகள். இதைத்தான் இலங்கை எதிர்பார்த்தது. தமிழர்களின் தவிப்பு, குழப்பம், பீதி, அதிர்ச்சி. பிறகு, மகிழ்ச்சியும்கூட. நீ தவிக்கும் நேரத்தில், நீ மயங்கி கிடக்கும் நேரத்தில் நான் இங்கே என் இறுதி கட்ட விளையாட்டை நடத்திமுடித்திருப்பேன்.

முடித்துவிட்டார். வெற்றி என்று அறிவித்தும்விட்டார். அடுத்து தேசத்தைக் கட்டுமானம் செய்யப்போகிறோம், சர்வதேச அமைப்புகள் எங்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஐ.நாவின் ஒத்துழைப்பை வேண்டியிருக்கிறார். ஜப்பான், 50 மில்லியன் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவிடம் இருந்து பலமடங்கு அதிக அளவில் உதவி கிடைக்கும்.

நோக்கம் நிறைவேறிவிட்டது. இனி பிரபாகரன் எங்கிருந்தால் அவருக்கு என்ன? யாருக்கெல்லாம் அவர் தேவைப்படுகிறாரோ அவர்கள் கூகிள் செய்துகொள்ளட்டும்.

0

நேற்று, இன்று. இந்த இரு தினங்களில் வெளிந்த அத்தனை செய்தித்தாள்களையும், அத்தனை ஆய்வுக் கட்டுரைகளையும், அத்தனை லெட்டர்ஸ் டு தி எடிட்டர்களையும், அத்தனை அரசியல் சவடால் அறிக்கைகளையும், சர்வதேச ஆய்வாளர்களின் அத்தனை கணிப்புகளையும் பிரபாகரனும் அவர் இயக்கத்தினரும் இந்நேரம் மறுவாசிப்பு செய்துகொண்டிருப்பார்கள். வருந்துவதற்கும், பரீசீலனை செய்வதற்கும், நகைப்பதற்கும், பழைய அத்தியாயங்களைப் புரட்டிப் பார்ப்பதற்கும், தவறுகளைக் கண்டுகொள்வதற்கும், புதிய படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் அவற்றில் இருக்கின்றன.

20 comments:

எம்.ஏ.சுசீலா said...

எம்.ஏ.சுசீலா,புதுதில்லி.
வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பிரச்சினையை நடுநிலையோடு அணுகியிருக்கிறீர்கள். செய்திகளை உணர்வுகளின் வழியாக மட்டுமே எதிகொள்வதால் நேரிடும் அபாயத்தைத் தங்கள் பதிவு நுட்பமாக முன் வைக்கிறது.
http://www.masusila.blogspot.com

Venkatesh Kumaravel said...

தெளிவான சரத்துகளை முன்வைக்கும் கட்டுரை. இப்போது எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்கள் எத்துணை பேர்? இவர்களின் நிலை என்ன?

butterfly Surya said...

தெளிவான பதிவு.

மாலன் said...

1.உங்கள் பதிவு வெளியாகி சில மணி நேரத்திற்குள் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற தொலைக்காட்சிகள் + பொதிகை அவரது உடலைக் காட்டிவிட்டார்கள். அது அவரது உடலே அல்ல என அடுத்துச் சொல்ல முற்படுவார்கள்.DNA டெஸ்ட் என்றால் அதையும் மறுப்பார்கள். நம்ப விரும்பாதவர்களுக்கு எத்தனௌ ஆதாரங்களும் போதாது. நம்ப விரும்புக்றவர்களுக்கு ஆதாரமே தேவையில்லை.கருத்துத் தெரிவிக்க நீங்கள் இன்னும் சில மணி நேரங்கள் காத்திருந்திருக்கலாம்.ஊடகங்களுக்குத்தான் வியாபார அவசரம். பதிவுகளுக்கென்ன அப்படி ஒரு முடை?
2.அவர் இறந்துவிட்டார் என்று சொல்லுபவர்களிடம் ஆதாரம் கேட்பவர்கள் அவர் உயிரோடு இருக்கிறார் என்பவர்களிடம் ஆதாரம் கேட்பதில்லை. என்ன விசித்திரம்!

3.அவர் இறந்து விட்டாரா இல்லையா என்பது இப்போது முக்கியமில்லை என்ற வாதத்தை விளங்கிக் கொள்ள இயலவில்லை. அவர் இல்லையென்றால் புலிகளை வழி நடத்தப்போவது யார்? புலிகள் இல்லாமல் ஈழம் என்ற தனிநாடு கோரிக்கை என்ன ஆகும்?
4.இதுதான் முடிவென்றால் இதை சில நாட்களுக்கு முன்னரே எடுத்திருந்தால் ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைத்திருக்கலாம் என்ற எண்ணம் இந்தச் செய்தியைக் கேட்ட போது உங்கள் மனதில் ஓடவில்லையா?

Anonymous said...

i doubt the video released by sri lanka. the face looks young. who is he? where is real prabakaran?

Raman K said...

// வருந்துவதற்கும், பரீசீலனை செய்வதற்கும், நகைப்பதற்கும், பழைய அத்தியாயங்களைப் புரட்டிப் பார்ப்பதற்கும், தவறுகளைக் கண்டுகொள்வதற்கும், புதிய படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் அவற்றில் இருக்கின்றன. //

thoughtful remarks. those tigers who are left should read this. its high time they introspect.

சுதர்ஸன் said...

// பாராளுமன்றத்தில் இன்று காலை ஆற்றிய உரையில் மகிந்த ராஜபக்ஷே பிரபாரகன் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. //

இது ஆச்சரியமாக இருக்கிறது மருதன். பிரபாகரனை நிஜமாகவே அவர்கள் கொன்றிருநதால் இதை தான் முதலில் அறிவித்திருப்பார்கள். சந்தேகமாக இருக்கிறது

Anonymous said...

Watch Headlines Today now. they are raising some questions on prabhakaran's death

தயாளன் said...

நேதாஜி போல் பிரபாகரன் மர்மமும் நீடிக்கும். அவரை கொன்றதன் வாயிலாக அவரை ஆதர்சன புருஷராக மாற்றியிரு்க்கிறது இலங்கை ராணுவம்.

Anonymous said...

I wont believe that praba is dead!

சுந்தரப்பாண்டியன் said...

மருதன் இந்த செய்தியைப் பாருங்கள்

http://sakyabuddhan.blogspot.com/2009/05/blog-post_19.html

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

Anonymous said...

http://www.paristamil.com/tamilnews/?p=9877

go through this site. i dont think he is dead

asfar said...

தெளிவான பதிவு.
but if u write few days back, it would be better than this..
anyhow we couldn't get exact results yet. we hope his deat is true regarding srilankan medias..

Anonymous said...

See the last picture.,

http://www.army.lk/detailed.php?NewsId=494

தமிழ் நாடன் said...

//அவர் இறந்துவிட்டார் என்று சொல்லுபவர்களிடம் ஆதாரம் கேட்பவர்கள் அவர் உயிரோடு இருக்கிறார் என்பவர்களிடம் ஆதாரம் கேட்பதில்லை. என்ன விசித்திரம்!//
இன்று அவர் இறந்துவிட்டார் என்று சொல்லுபவர்கள் இதற்கு முன்னரும் பலமுறை அவரை கொன்றவர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. மேலும் உங்களைப்போன்றவர்கள் அவர்களுக்கு இறையாண்மையுள்ள நாடு என்று மாறி மாறி சான்று கொடுத்துள்ளீர்கள். அப்படிப்பட்ட இறையாண்மையுள்ள ஒரு நாடு இப்படி தான்தோன்றித்தனமாக கற்பனைக்கதைகளை சொல்லக்கூடாது. அதனால்தான் ஆதாரம் கேட்கின்றனர். மேலும் சர்வதேச சமூகத்திடம் நிதி கேட்டு அனுதினம் கையேந்தும் ஒரு நாடு சர்வதேச பார்வையாளர்களை கூட போர்ப்பகுதியில் அனுமதிக்கவில்லையே ஏன்?
மேலும் இருபத்திநான்கு மணிநேரமும் குண்டுமழை பொழியும் ஒரு போர்க்களத்தில் நிற்கும் போராளியிடம் போஸ் கொடுக்கச்சொல்லி போட்டோ ஆதாரெல்லாம் கேட்க உங்களைப்போன்றவர்களால்தான் முடியும்.

உங்களைப்பொன்றோர்களின் கேள்விகளுக்கு தனிப்பதிவில்தான் பதில் சொல்ல வேண்டும்.

Anonymous said...

If really he is dead, all must accept the news.Otherwise nobody can give a homeage to that man.(Including his family members).

Anonymous said...

Malan,

you are asking uncomfortable questions which they do not like.

//அவர் இறந்துவிட்டார் என்று சொல்லுபவர்களிடம் ஆதாரம் கேட்பவர்கள் அவர் உயிரோடு இருக்கிறார் என்பவர்களிடம் ஆதாரம் கேட்பதில்லை. என்ன விசித்திரம்! //

Its all for security reasons.

//DNA டெஸ்ட் என்றால் அதையும் மறுப்பார்கள்.//

They will question on how they got the DNA sample when he was alive? They wont agree that his son is dead and his sample can be matched with his fathers.

In the last 6 months every effort to prop up superman image of Prabhakaran has failed miserably. Every defeat was just a retreat to hit back strongly, and that never has happened somehow. Loosing territory is just a ploy, well they lost everything.

Prakash said...

மாலன் , இலங்கையில் மரபணு சோதனை புரிய வசதியே இல்லையாமே ? யாருடன் பொருத்தி பார்பார்கள் ? நம்ப வேண்டும் என முடிவு எடுத்துவிடில் , கே.பி.சுந்தராம்பாள் ஆர்.பி.சௌத்ரி படத்தில் நடித்ததை கூட நம்பலாம். அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை சரவதேச பத்திரிக்கை சமூகம் இலங்கையில் சென்று ஆய்வு நடத்திதான் கண்டறிய வேண்டும். அதற்க்கு இலங்கை அவர்களை அனுமதித்தால் தானே ?

sankarkumar said...

maruthan sir.
what u saying is correct
sankarkumar

Anonymous said...

hm...., there are still people who believe that man never landed on moon.

http://www.google.co.in/search?hl=en&q=neil+armstrong+moon+hoax&btnG=Google+Search&meta=&aq=4&oq=neil+armstrong+moo