சிக்னல் தொலைந்து இருபத்து நான்கு மணி நேரங்களுக்குப் பிறகு, வொய்.எஸ்.ஆரின் ஹெலிகாப்டரை கண்டறிந்திருக்கிறார்கள். வரலாற்றின் மிகப் பெரிய தேடுதல் வேட்டை என்னும் தலைப்பில் சிஎன்என்-ஐபிஎன், டைம்ஸ் நவ், ஆஜ் தக் என்று டிவி சானல்கள் கடந்த இருபத்து நான்கு மணி நேரங்களாக, நொடிக்கு நொடி ஃப்ளாஷ் நியூஸ் அளித்துக்கொண்டிருந்தன. அதி நவீன வரைபடங்கள், பொம்மை ஹெலிகாப்டர் பறந்து செல்லும் காட்சி, வழித்தடம், காணாமல் போன பகுதி, ஆந்திர மக்களின் உணர்வுகள், அரசியல் அறிக்கைகள், நம்பிக்கைகள், அச்சங்கள். கடைசியாக, மும்பை தாஜ் தாக்குதலின்போது வெளிப்பட்ட பரபரப்பு இப்போது மீண்டும்.
பிறகு, யூகங்கள். இதில் மாவோயிஸ்டுகளின் சதி இருக்கலாம். அவர்கள் விமானத்தை வீழ்த்தியிருக்கலாம். ரெட்டியை கடத்தியிருக்கலாம். ஏதேனும் கோரிக்கைகள் வைப்பார்கள், பார்த்துக்கொண்டே இருங்கள். நடந்திருப்பது விபத்துதான் என்று அடுத்தடுத்து செய்திகள் வெளிவர ஆரம்பித்ததும், மாவோயிஸ்ட் பீதி மறைந்துவிட்டது.
ஆகவே இப்போதைய ஃபோகஸ், அந்த ஹெலிகாப்டர் மீது. முன்னரே பழுதாகியிருந்ததாமே. பறக்க லாயக்கற்றது என்று ஒதுக்கியிருந்தார்களாமே. போயும் போயும் இதிலா ரெட்டியை ஏற்றி அனுப்பினார்கள்? எனில், இதைப் பாதுகாப்பு, தொழில்நுட்ப தோல்வி என்று கொள்ளலாமா? சந்திரபாபு நாயுடு 'ஐடி புரட்சி' நடத்திக்காட்டிய ஆந்திரத்திலா இப்படியொரு போதாமை?
நொறுங்கிய ஹெலிகாப்டர்களையும் உடல்களையும் கண்டறிய இரண்டாயிரம் வீரர்களும் 11 விமானங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசின் உதவியை முன்னரே கோரியிருந்தால், தேடுதல் வேட்டை சீக்கிரம் முடிந்திருக்கக்கூடும். பிரபாகரனையும் புலிகளையும் கண்டுபிடிப்பதற்கான நாங்கள் அளித்த அதிநவீன ராடார் சாதனங்களில் ஒன்றிரண்டை அளிக்கவும். ரெட்டியைக் கண்டறிந்துவிட்டு மீண்டும் தந்துவிடுகிறோம் என்று விண்ணப்பித்துக்கொண்டிருக்கலாம். இந்திய அரசாங்கத்தால் வெளிப்படையாகக் கேட்கமுடியாமல் போனாலும், தி ஹிந்து ராமை அணுகியிருந்தால் நிச்சயம் அவர் உதவியிருப்பார். அல்லது, முரளிதர் ரெட்டிக்கு ஒரு மெயில் தட்டிவிட்டிருக்கலாம்.
2 comments:
ராஜசேகர் ரெட்டியை அவருடைய பாதுகாப்பு அதிகாரியின் அலைபேசியிலிருந்து வந்த சிக்னலை வைத்து கண்டுபிடித்து இருக்கிறார்கள். பிரபாகரனையும், அவருடைய செய்மதி போனிலிருந்து அவர் பத்மநாபனுடன் பேசும் போது கண்டறிந்து இருக்கிறார்கள். தமிழ்செல்வன் மீதான தாக்குதல், செய்மதியிலிருந்து பெறப்பட்ட தகவல்களை எப்படி தாக்குதலுக்கு பயன்படுத்துவது என்பதற்கான ஒரு ஒத்திகை ! ஒத்திகையும் வெற்றி ! உண்மையான ஆபரேசனும் வெற்றி. பிரபாகரனுக்கு செய்மதி போன்ற வசதிகளை மேற்குலகம் அளித்ததே அவரைக் காட்டிக் கொடுக்கத்தான்.
Respected sir,
I am working with TCS Bangalore, I feel crying for Ealam and indian goverment moto so that i am trying to make people understand about the Ealam issues. It's about simple humanity and mercy to feel sorry for people who is suffering.But these basic things also not possible from my colleague and even my parents.
sir my doubt or question is why this genocide not making on impact on tamil people? Which is stopping them? or what they are looking for? Some north indians are happy for Srilankan Victory.
Post a Comment