December 21, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி / நூல் அறிமுகம் 2 - காப்புரிமை


காப்புரிமை குறித்து தமிழில் வெளிவரும் முதல் புத்தகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட இரு மாதங்கள். ஒவ்வொரு அத்தியாயமாக எழுதி அலுவலகம் வந்து நேரில் அளிப்பார், S.P. சொக்கலிங்கம். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் சொக்கலிங்கம். ஆங்கிலத்தில்கூட காப்புரிமையை எளிமையாக அறிமுகம் செய்யும்படியான புத்தகம் இல்லை என்றார். சட்ட சஞ்சிகைகளில் (Law Journal) பல கட்டுரைகள், தலையங்கங்கள் எழுதியிருக்கிறார். இது அவருடைய முதல் புத்தகம். அடிப்படைச் சட்டங்கள், அரசியல் தொடர்பான மேலும் சில புத்தகங்களை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

பேட்டண்ட், டிரேட் மார்க், காப்பிரைட், டிசைன்ஸ் இந்த நான்கையும் அறிவுசார் சொத்துரிமைக்குள் (Intellectual Property Rights) அடக்கிவிடலாம். எழுத்து, இசை, வடிவம், பாடல்கள், ஓவியம், கலைப்பொருள்கள் என்று நாம் புதிதாக உருவாக்கும் எந்தவொரு படைப்பையும் சட்டப்படி பதிவு செய்துகொள்ளமுடியும். இதனால் என்ன பயன்? உங்கள் படைப்புகளை இன்னொருவர் உங்கள் அனுமதியின்றி எடுத்தாளும்போது, உங்களால் சட்டப்படி அதனை தடுத்து நிறுத்தமுடியும். நஷ்டஈடு கோரமுடியும்.

அடிப்படையில் இருந்து தொடங்குகிறது இந்தப் புத்தகம். பாஸ்மதி அரிசிக்காகவும் வேம்பு, மஞ்சளுக்காகவும் இந்தியா நடத்திய போராட்டங்களையும் புத்தகம் விவரிக்கிறது. காப்புரிமை மீறல்கள் எவை என்பதையும் புத்தகம் தெளிவாக வரையறுக்கிறது.

நிற்க. காப்பிரைட்டுக்கு எதிராக Copyleft என்றொரு சித்தாந்தம் உருவாகியிருக்கிறது. யாரும், எதையும் பயன்படுத்தலாம் என்பது இவர்களது வழி. ஒரு படைப்பு எதற்காக ஒரு படைப்பாளியிடம் (அல்லது ஒரு நிறுவனத்திடம்) முடங்கிப்போகவேண்டும் என்று கேள்வி எழுப்பும் காப்பிலெஃப்ட் குழுவினர் தங்கள் படைப்புகளை மக்கள் உபயோகத்துக்காகப் பொதுவில் திறந்துவைக்கிறார்கள். (Linux இலவசமாக கிடைக்கும் ஒரு மென்பொருள். விண்டோஸின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. இதுபோல் மேலும் பல, Free Open Source மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன). காப்பிலெஃப்ட் குறித்து இங்கே. தொடர்புடைய, GNU General Public License குறித்து இங்கே.

1917 புரட்சிக்குப் பிறகு, சோவியத் ரஷ்யா பதிப்புரிமைச் சட்டங்களைத் திருத்தி அமைத்தது. மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்கும் இருந்த இடைவெளியை இட்டு நிரப்புவது நோக்கமாக இருந்ததால், தகவல்களை அனைவருக்கும் பொதுவில் வைக்க சோவியத் அரசு முடிவுசெய்தது. 1919 மே மாதம் தொடங்கி அரசாங்கம் ஒரு தனிப் பிரிவைத் தொடங்கி அனைத்து பதிப்புப் பணிகளையும் மேற்பார்வையிட ஆரம்பித்தது. தரமான நல்ல புத்தகங்கள், பல்வேறு தலைப்புகளில் வெளிவர ஆரம்பித்தன. மொழிபெயர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிற உலக மொழிகளில் இருந்து ரஷ்ய மொழிக்கும், ரஷ்யாவில் இருந்து பிற மொழிகளுக்கும் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டன.
தாஸ்தாயவெஸ்கி, செகோவ், புஷ்கின், டால்ஸ்டாய், டர்கனேவ் உள்ளிட்ட ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்டன.

பிழைகளற்ற மிக நேர்த்தியான படைப்புகள் அவை. முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம் இரண்டும் எண்ணற்ற பல முக்கிய படைப்புகளை தமிழுக்கு அளித்தன. மார்க்சிய, லெனினிய சித்தாந்தத்தைப் பரப்புவது ஒரு நோக்கம் என்றாலும் அது மட்டுமே இறுதி இலக்கு அல்ல. இலக்கியம்,அறிவியல், கணிதம், இயற்பியல், தொழில்நுட்பம் என்று பல துறைகளில் பல நல்ல புத்தகங்கள் வெளிவந்தன.

காப்பிலெஃப்ட், காப்பிரைட் யுத்தத்தைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தககம் உதவும்.

9 comments:

தீக்கனல் said...

ரஷ்யாவிலும் அதே போல் சீனாவிலும் புரட்சிக்கு பிறகு பதிப்புரிமை எப்படி இருந்தது என்று விரிவாக எழுதுங்கள்

Anonymous said...

The neem,turmeric controversy has nothing to do with copyright.Copyright is known as
பதிப்புரை in tamil whereas காப்புரிமை is used for patent.This is not clear in the post.If the book is on copyright use பதிப்புரை as that is in vogue and well understood.There is more to intellectual property rights (IPRs) than what you have mentioned.For example Geographical Indications
is also covered under IPRs.Does any one or any expert review such books for Kizaku. Please write more about the author as it would give an idea about his/her qualification, experience and expertise.Copyleft is not the opposite of copyright. Please understand this. Copyleft also respects rights of authors.

மருதன் said...

Anonymous : வேம்பு, பாஸ்மதி அரிசி விவகாரங்களை காப்புரிமையோடுதான் தொடர்புபடுத்தி எழுதியிருக்கிறேன். பதிப்புரிமை குறித்து நான் சொல்லியிருப்பது தனி. Geographical Indications குறித்தும் தொழில்சார் வடிவங்கள் குறித்தும் Semiconductor Integrated Circuits Layout-Design குறித்தும் இந்தப் புத்தகம் ஓர் அறிமுகத்தை தருகிறது. வாசித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி.

ரமேஷ் said...

நல்ல அறிமுகம் மருதன்.படிக்க ஆவலாக உள்ளேன்

Anonymous said...

I am a law student. hope this book will help me to undersand copyrights and patents. thanks for nice post

Anonymous said...

Thanks for the reply.The book's cover says காப்புரிமை but shows trade marks etc.What is the book about- Is it about patents or copyrights or intellectual property rights.The title is misleading if the contents are about all these.
'வாசித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்'
If i get a chance to read (which is remote) let me think about giving my comments.

Anonymous said...

can you give more details about the author-chokkalingam.Does he teach at law college, madras.

மருதன் said...

Anonymous :

1) As far as I know, Mr. Chockalingam is contributing to law journals and delivering lectures, besides his regular practice work. His contact mail ID is : chockalingam.sp@gmail.com.

2) The subject book introduces Intellectual Property Rights -- including Patents, Copyrights, GI etc. There are appropriate case references too.

3) Feedback from readers like you will help us in our endeavors. Thanks.

Anonymous said...

http://www.flipkart.com/search/a/books?query=kaapurimai&vertical=books&dd=0&autosuggest%5Bas%5D=off&autosuggest%5Bas-submittype%5D=default-search&autosuggest%5Bas-grouprank%5D=0&autosuggest%5Bas-overallrank%5D=0&Search=%C2%A0&_r=HDmfBnrN76s7UQjB0CBWbg--&_l=pMHn9vNCOBi05LKC_PwHFQ--&ref=53d6c1cb-544e-4189-9baa-f987ca95dfc9&selmitem=Booksu can get this book from here....u can opt for paying on delivey..