காந்தி குறித்து தி கார்டியன் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.
விக்கிபீடியா மூலமாகவும் ரிச்சர்ட் அட்டன்பரோ மூலமாகவும் மட்டுமே காந்தியை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஏற்படுத்தியிருக்கிறது.
காந்தி இப்படிப்பட்டவராக இருப்பார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை, it's shocking என்கிற ரீதியில் சிலர் இந்தக் கட்டுரைக்கு எதிர்வினை புரிந்துள்ளனர். ஒப்பற்ற உன்னத தலைவர் என்றல்லவா எண்ணியிருந்தோம் என்று சிலர் திகைத்திருக்கிறார்கள். சிலர் சீறியிருக்கிறார்கள். நாம் அதிகம் மதித்த ஒரு நபர் என்பதற்காகவே அவர் மீது இப்படி சேறு பூசலாமா? மற்றவர்கள் செய்யாததையா இவர் செய்துவிட்டார்? சிலர் காந்தியைத் தாங்கி பிடித்திருக்கிறார்கள். அவர் சொன்னதில் என்ன தப்பு? அபத்தமாக எதையும் அவர் சொல்லிவிடவில்லையே!
பெண்கள் பற்றி காந்தியின் சிந்தனைகள் எவ்வாறு இருந்தன? இதுதான் கட்டுரையின் சாரம். மூன்று விஷயங்களை மட்டும் சுருக்கமாகப் பார்க்கலாம்.
1) ஒரு பெண் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்டால், தாக்கப்பட்டால் அதற்குக் காரணம் அந்தப் பெண்தான்.
2) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனது மனிதத்தன்மையை இழந்துவிடுகிறார்.
3) ஒரு தகப்பன், தன் குடுமபத்தின் மானத்தைக் காக்க, பாலியல் வன்முறைக்கு ஆளான தன் மகளைக் கொன்றுபோடலாம்.
இந்தக் கடைசி கருத்தை மட்டும் போனால் போகட்டும் என்று பிற்காலத்தில் சற்றே தளர்த்திக்கொண்டிருக்கிறாராம் காந்தி.
கட்டுரையின் கடைசி வரி இது. நினைவிருக்கட்டும். புனிதர் என்று யாரும் இங்கே இல்லை.
0
யாரோ ஒரு Michael Connellan ஏதோ ஒரு நாட்டில் இருந்துகொண்டு எதையோ சொன்னால் அதை எப்படி நம்புவது என்று சிலர் கேட்கலாம். காந்தியின் படைப்புகளில் இருந்து அவர் எழுத்துகளிலேயே இந்தக் கருத்துகளைத் திரட்டித்தர முடியுமா என்று பார்க்கிறேன்.
12 comments:
//கட்டுரையின் கடைசி வரி இது. நினைவிருக்கட்டும். புனிதர் என்று யாரும் இங்கே இல்லை.//
காந்திக்கும் ஒரு மறுபக்கம் இருக்கும்....
//ஒரு பெண் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்டால், தாக்கப்பட்டால் அதற்குக் காரணம் அந்தப் பெண்தான்.//
ஆகா! என்ன ஒரு கண்டுபிடிப்பு!
நோபல் பரிசு கொடுங்கப்பா!
//பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனது மனிதத்தன்மையை இழந்துவிடுகிறார்.//
மிருகத்தில் எந்த லிஸ்டில் சேர்க்கலாம்னு எதாவது சொல்லியிருக்காரா!?
//ஒரு தகப்பன், தன் குடுமபத்தின் மானத்தைக் காக்க, பாலியல் வன்முறைக்கு ஆளான தன் மகளைக் கொன்றுபோடலாம்.//
அடப்பாவிகளா!?
காட்டுமிராண்டிக கூட அப்படி செய்யமாட்டானுங்களே!
//இந்தக் கடைசி கருத்தை மட்டும் போனால் போகட்டும் என்று பிற்காலத்தில் சற்றே தளர்த்திக்கொண்டிருக்கிறாராம் காந்தி.//
அடடே! மகாத்மான்னு சும்மாவா கூப்பிடுறானுங்க! என்ன ஒரு தாராள மனசு!
வேற்கடலையையும் சாப்பிட்டு ஆட்டுப் பாலையுங்குடித்துவிட்டு நான் இளம் பெண்களுடனொன்றாகப்படுத்து பிரமச்சா ரியம் காத்தனான் என்று சொன்னால் வாகடத்தை படித்தவன் எள்ளிநகையாடுவான்.காந்தியின் மறுபக்கம் அறிந்தால் யாரும் மகான்
என்று கூறமாட்டார்.ஆனால்பணக்
காரன்,பெரியமனிதர் செய்தால்ஏற்றுக்
கொள்ளுகிறபக்குவம்தான் இந்திய மக்களுக்குத்தாராளமாக இருக்கிறதே.
ம.பரணீதரன்.
Gandhi is not a saint.
காந்தியை பற்றி ஒரு தலை பச்சமான தகவல்கள்தான் இதுவரை மக்களிடையே பறப்பபட்டு வந்திருக்கின்றன. மற்றொரு பக்கம் அதிகம் அறிய படாமலே, வெளி உலகிற்க்கு தெரியப்படுத்தபடாமலே வந்திருக்கின்றன. அத்தகவல்களை இங்கு வெளியிட்ட மருதனுக்கு நன்றி. மேலும் இந்த வளை பதிவை விரிவு படுதினால் நன்றாக இருக்கும்.
மகாத்மா காந்தி தன் மனைவி கஸ்தூரிபாவிடம் ஒரு சாடிஸ்ட் போலத்தான் நடந்துகொண்டார் என்பது தெரியும். நாகரிகம் முதிராத அந்தக் காலத்தில் ஆண்களில் 99 சதவிகிதம் பேர் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், அதற்காக இந்தப் புத்தகத்தில் உள்ள அதிர்ச்சியூட்டும் வரிகளை எப்படி 100 சதவிகிதம் உண்மையாக இருக்கும் என்று நம்ப முடியும்? மிகைப்படுத்தப்பட்டிருப்பது போல்தான் எனக்குப் படுகிறது.
காந்தியைப் பற்றிய தமிழருவிமணியன், வாசந்தி மற்றும் முக்கியமாக ஜெமோவின் பதிவுகள் (காந்தியும் தலித் அரசியலும், காந்திய தேசியம், காந்தி எனும் பனியா) உட்பட 4MB pdf வடிவில்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
காந்தியின் வாழ்க்கை நிஜமாகவே திறந்த புத்தகம்தான். அவருடைய வாழ்க்கையை அவரே பல கடிதங்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார். இங்கே சென்று பார்க்கலாம்
சமீபத்தில் ஜெயமோகன் மிக அழுத்தமாக, மிக விரிவாக காந்தியாரைப் பற்றி பல கோணங்களில் எழுதியிருக்கிறார்.
இதையெல்லாம் படிக்கமாட்டேன். மருதன் ஏதோ எழுதியிருக்காராம்... அதப் படிச்சிட்டு காந்தி இம்புட்டுத்தானான்னு சொல்றதுக்கு ஒரு கூட்டம். அதிலும் ஒருத்தர் காந்தி தன் மனைவியை துன்புறுத்தினார். பையன் தற்குறின்னு எழுதறார். காந்தியாருக்கு எத்தனை பையன்கள் உண்டு... அதில் யார் யார் என்ன என்ன செய்தார்கள் என்பதெல்லாம் காந்தி தளத்தில் விரிவாக இருக்கிறது. எதுவுமே படிக்காமல் கருத்து சொல்ல மட்டும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
என்ன செய்யறது... கட்டற்ற இணைய சுதந்திரத்துல இந்த மாதிரி நுனிப்புல் மேயற பழக்கமும் ஒரு விளைவு. மிகவும் வருந்ததக்க விளைவு.
My personal request to Mr. Sridhar narayanan... Being adamant to accept truth means, you're not a genius..
Post a Comment