October 2, 2010

மனுநீதியின் வெற்றி

நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவதற்கு காப்மேயர் வழங்கியதைக் காட்டிலும் சுலபமான ஒரு தீர்வை அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. புதிதாக ஒன்றுமில்லை. தமிழ் சினிமா லாஜிக்தான். கெடுத்தவனுக்கே பெண். இடித்தவனுக்கே கோயில்.

ஐந்நூறு ஆண்டு கால மசூதியை இடித்து, உள்ளே ராமர் சிலையை கொண்டுவந்து வைத்த இந்து தீவிரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல. எதை இடித்தார்களோ, அதை அவர்களுக்கே சட்டப்படி அளித்திருக்கிறது அலகாபாத் நீதிமன்றம். இது வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல என்று அத்வானி அண்ட் கோ கள்ளச்சிரிப்பு சிரிக்கும்போதே தெரிந்துவிடுகிறது. இது அநீதியின் சிரிப்பு. மனு தர்மத்தின் சிரிப்பு. சோ கால்ட் செக்யூலரிசத்தின் சிரிப்பு.

...

6 comments:

அருள் said...

அயோத்தி: நடந்தது இதுதான்!

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_02.html

சுதிர் said...

அபாரமான எழுத்து நடை. ரொமிலா தாப்பர் நேற்று ஹிந்துவில் எழுதிய கட்டுரையை படித்தீர்களா?

மருதன் said...

படித்தேன் சுதிர். வரலாற்றாசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் என்று பலரும் அயோத்தி தீர்ப்பை விமரிசித்திருக்கிறார்கள். வரலாற்றைப் புறக்கணித்துவிட்டு இத்தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது என்பதே அவர்கள் கருத்து

ரமேஷ் said...

நல்ல கட்டுரை மருதன். அயோத்தி தீர்ப்பு பற்றி தொடர்நது பலர் மாறுபட்ட கருததுகளை சொல்லி வருகிறார்கள். கண்டனத்துக்கு உரிய தீர்ப்பு இது. அத்வானி போன்ற இந்துத்துவ தீவிரவாதிகள் சட்டப்படி தண்டிக்கப்பபட வேண்டும்

Anonymous said...

Nice write up.

gemini275 said...

நீதிமன்ற தீர்ப்பை கண்டிப்பதும் விமர்சிப்பதும். நீதிமன்ற அவமதிப்பே அன்றி வேறு அல்ல. அறிவுஜீவிகள் தீர்ப்பில் திருப்தி இல்லாவிடில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யட்டும் அதை தவிர்த்து கோர்ட்க்கு வெளியில் இவ்விதம் எழுதிக்கொண்டு இருப்பது தவறே. ஏனெனில ஏற்கனவே ஜனநாயக கட்டமைப்பு கடுமையாக ஆட்டம் கண்டுள்ள நிலையில் இத்தகைய செய்கை மேலும் ஊறு விளைவிக்கும்