January 4, 2011

கிழக்கில் பெண் எழுத்தாளர்கள்


மீந்து போன இட்லி மாவை என்ன செய்வது? தேர்க்கோலத்துக்கு எத்தனை நேர் புள்ளி, எத்தனை சந்து புள்ளி? வெஜிடபிள் பிரியாணியில் எத்தனை டீ ஸ்பூன் உப்பு தூவ வேண்டும்? டிவி சீரியல் நாயகி இறுதியில் என்ன ஆவார்? எதையாவது பூசி ஏழு நாளில் சருமத்தை மினுமினுப்பாக்க முடியுமா?

'பெண்களுக்காக' ஊடகங்கள் அலசும் முக்கியப் பிரச்னைகள் இவைதான். விளைவு? வாஷிங் மெஷின், டிவி, கிரைண்டர், கணவர், குழந்தைகள். இந்த வட்டத்தைத் தாண்டி பெரும்பாலான பெண்கள் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. ஒரு perfect housewife ஆக மாறினாலே போதும் என்னும் மனநிலை பலருக்கும் வந்துவிடுகிறது. பொதுவாகவே, யாரும் சிந்திக்காமல் இருக்கவேண்டும் என்றுதான் ஊடகங்கள் விரும்புகின்றன. எனவேதான், இருபத்து நான்கு மணி நேரமும் அழுமூஞ்சி சீரியல்களையும் கேளிக்கைகளையும், நகை, புடைவை விளம்பரங்களையும் அவை வழங்கிக்கொண்டிருக்கின்றன. அன்றாட வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் பற்றிய ஆழமான விவாதங்கள் அதிகம் எழுப்பப்படவில்லை.

கிழக்கு பதிப்பகம் இதற்கு விதிவிலக்கல்ல. பெண்கள் பற்றிய, பெண்கள் எழுதிய புத்தகங்கள் மிக மிகக் குறைவாகவே இதுவரை கிழக்கில் வெளிவந்துள்ளன. (நலம் வெளியீடு, பெண்களின் மருததுவப் பிரச்னைகள் தொடர்பான சில நூல்களைக் கொண்டு வந்துள்ளது. மருத்துவர் ஷாலினி உள்ளிட்ட சில மருத்துவர்க்ள் இந்தப் பிரிவில் எழுதியுள்ளனர்). கிழக்கு பதிப்பகம் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை, ஐந்து புத்தகங்களே பெண்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன.


இந்த ஐந்தில், இரண்டு (1,3) Stereotype சுயமுன்னேற்ற நூல்கள்.


ஆரம்பம் 50 காசு சற்றே மாறுபட்ட புத்தகம். காதல் திருமணம் தோல்வியில் முடிவடைய, இரு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு இவரிடம் வந்து சேர்கிறது. தெரிந்தது சமையல் ஒன்றுதான் என்பதால் அதிலிருந்து தொடங்கினார். காலி ஹார்லிக்ஸ் பாட்டிலில் ஊறுகாய் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். பிறகு, மெரீனா கடற்கரையில் ஒரு kiosk. இதற்கு அரசாங்க அனுமதி வாங்குவதற்குள் முழி பிதுங்கிவிடுகிறது. பிறகு, தனியார் நிறுவனங்களில் கேண்டீன் நடத்தும் பொறுப்பை ஏற்கிறார். நாளடைவில், ஒரு மாபெரும் உணவு சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைக்கிறார். இதற்கிடையில், கணவனின் ஓயாத தொல்லை, பல்வேறு பிரச்னைகள். அனைத்தையும் முறியடித்து, பேட்ரீஷியா எப்படி வெற்றி பெற்றார் என்பதைப் புத்தகம் விவரிக்கிறது. சுவாரஸ்யமான எழுத்து வடிவத்துககுக் காரணம், ஜெ. ராம்கி.

தமிழ் சுஜாதாவின் தமிழக சுற்றுலா வழிகாட்டி, தமிழகத்தில் பார்க்கவேண்டிய முக்கிய இடங்கள் பற்றிய தகவல்களை தொகுத்து அளிக்கிறது. பெண்மனம் என்னும் தலைப்பில் இவர் தமிழ்பேப்பரில் தொடர் கட்டுரைகள் எழுதிவருகிறார். பிராடிஜி பிரிவின் ஆசிரியர்.

கீதா பிரேம்குமார் என்பவர் பெண்களுக்கான தொழில்முனைவோர் கையேடு ஒன்றை உருவாக்கி அளித்திருக்கிறார். 2011ல் அதில் வேலை செய்யவேண்டும்.

பெண்கள் குறித்த, பெண்கள் எழுதிய மேலும் பல நூல்களைக் கிழக்கில் கொண்டு வரவேண்டியது அவசியம். குறிப்பாக, சுயமுன்னேற்றம் தவிர்த்த புத்தகங்கள்.

3 comments:

ரவி said...

இந்த தலைமுறை பெண்களின் மனவள மாற்றம் பற்றி எதாவது எழுதுங்கப்பா நானும் தெரிஞ்சுக்கறேன்.

மருதன் said...

தகுந்த எழுத்தாளர்கள் கிடைத்தால், நிச்சயம் செய்வோம் ரவி.

Anonymous said...

இவ்வளவு புத்தகங்கள் போட்ட கிழக்கில் ஐந்தே பெண் எழுத்தாளர் புத்தகங்களா? அதிர்ச்சியாக இருக்கிறது. சுப்ரஜா