March 27, 2011

'தலித் முரசு' புனித பாண்டியனுக்கு மறுப்பு - 2

முற்போக்கு ஜோதிடர் புனித பாண்டியனின் புரட்சி ஆரூடம்

-- சரவணன்

பகுதி 2

தலித் முரசின் பொய்யையும், புளுகையும், அதன் கம்யூனிச விரோதப் போக்கையும் புதிய ஜனநாயகம் பத்திரிகை அவ்வப்பொழுது அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. சாம்பிளுக்கு தலித் முரசின் வர்க்காஸ்ரமம் என்கிற கட்டுரைக்கான சுட்டி இதோ. கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்துவது, அதனூடாக மார்க்சிய தத்துவத்தையும் இழிவுபடுத்தி, புறந்தள்ளுவது, மக்களிடம் புரட்சி பற்றிய அவநம்பிக்கையை விதைப்பது இது தான் இவர்களின் நோக்கம். இவர்களுக்கு விதிக்கப்பட்ட பணி. 

அதை உறுதி செய்யும் விதமாகத் தான் உரையின் அடுத்தடுத்தப் பகுதிகள் உள்ளன. கம்யூனிஸ்ட் அறிக்கையில் சாதி பற்றி எதுவுமே சொல்லப்படவில்லையாம் ! இந்தியாவில் வர்க்கம் ஒரு பிரச்சினையே இல்லையாம் சாதி தான் முதன்மையான பிரச்சினையாம், எனவே இங்கே புரட்சியே நடக்கப்போவதில்லையாம் ! புரட்சி நடக்கப்போவதில்லை என்பதை விட நடக்கக்கூடாது என்பது தான் இவர்களின் விருப்பம், அதற்காகத் தான் தலித் முரசும் புனிதப்பாண்டியனும் வேலை செய்கிறார்கள் என்பது தான் உண்மை.
கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்து இவர் கூறுவதையும் அது உண்மையா என்பதையும் மேற்கொண்டு பார்ப்போம்.

அறிக்கையின் இரண்டாவது பக்கத்திலுள்ள முதல் தலைப்பின் இரண்டாவது பத்தி இவ்வாறு துவங்குகிறது. “வரலாற்றின் முந்தைய சகாப்தங்களில் அனேகமாய் எங்குமே பல்வேறு வகுப்புகளாலாகிய சிக்கலான சமுகப் பாகுபாடு, சமூக அந்தஸ்தின் பன்மடிப் படிநிலை அமைவு இருக்கக்காண்கிறோம். இந்த வகுப்புகளில் அனேகமாய் ஒவ்வொன்றிலும் படிநிலை உட்பிரிவுகளும் இருக்கக்காண்கிறோம்.”

இந்தியாவின் சிறப்புத்தன்மையாக சாதி இருப்பதைப் போன்று உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு சிறப்புத்தன்மைகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் அறிக்கை பட்டியலிடவில்லை, அது சாத்தியமும் அல்ல தேவையும் அல்ல. மாறாக உலகம் முழுவதுமுள்ள வர்க்கம் தவிர்த்த பிற சிறப்புத்தன்மைகள் அனைத்தையும் அறிக்கை சாரமாக குறிப்பிடுகிறது. அதன் ’படிநிலை உட்பிரிவுகள்’ வரை குறிப்பிடுகிறது. சமுகப் பாகுபாடு, சமூக அந்தஸ்தின் பன்மடிப் படிநிலை அமைவு, படிநிலை உட்பிரிவுகள் என்று குறிப்பிடப்படுபவை எல்லாம் நமது நாட்டின் சிறப்பு நிலைமையான சாதிக்கு பொருந்தும்.

கம்யூனிஸ்ட் அறிக்கையில் சாதியை பற்றி குறிப்பிடவில்லை என்று சொல்லி அது இந்திய நிலைமைக்கு பொருந்தாது என்று கூறுவோமானால் அமெரிக்காவில் கருப்பர்களை பற்றி குறிப்பிடவில்லை எனவே அது அமெரிக்க நிலைமைக்கு பொருந்தாது என்றும், பெண்களை பற்றி குறிப்பிடப்படவில்லை எனவே அது உலகத்துக்கே பொருந்தாது என்றும் கூறலாம். அப்படி கூறப்பட வேண்டும் என்பது தான் புனிதப்பாண்டியனின் விருப்பம். ஆனால் உலகத்தில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் மூலதனமும் தான் அதிகமாக விற்பனையாகிறதாம், என்ன செய்ய பு,பா விரும்பும் மக்களாட்சியை மண்ணுக்குள் தள்ளி மூடப்போகும் மண்வெட்டிகளாக இவையே இருப்பது துரதிர்ஷ்ட்டம் தான் !

அம்பேத்கரை ‘புரட்சியாளர்’ என்று கூறும் பு.பா புரட்சியெல்லாம் இங்கே நடக்காது என்றும் பேசியிருக்கிறார். புரட்சியே நடக்காது என்று சொல்கிற அளவிற்கு பேசுகிறார் என்றால் இவருக்கு எவ்வளவு கம்யூனிச வெறுப்பு இருக்க வேண்டும் ? மேலும் நடக்கும் நடக்காது என்று சொல்ல இது என்ன ஜோதிடமா, இவர் என்ன ஜோதிடரா ? அம்பேத்கர் புரட்சியாளரா இல்லை சீர்திருத்தவாதியா என்றால் அவர் சீர்திருத்தவாதி தான். சொகுசு அறையில் உட்கார்ந்துகொண்டு பிராஜெக்ட்டுக்காக பத்திரிகை நடத்தும் பு.பா புரட்சியாளர்களை ஆன்மீகவாதிகளோடு ஒப்பிடுவார் ஆனால் அம்பேத்கரை புரட்சியாளர் என்பார். புனிதப்பாண்டியனுக்கு புரட்சிகர அரசு தேவை இல்லை என்றால் அது அமையும் முன்பே மக்களாட்சி நடக்கும் அமெரிக்காவுக்கு ஓடிப் போகட்டும்.

இறுதியாக, தலித் மக்களுக்காக பேசுவதாக சொல்லிக்கொண்டு திரியும் புனிதப்பாண்டியனும், தலித் முரசும் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் ? சந்தேகமின்றி மேட்டுக்குடி வர்க்கத்தின் பிரதிநிதிகள் தான் இவர்கள். அதனால் தான் இவர்களுக்கு வர்க்கம் என்று பேசினாலே பிடிப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு பதிலாக முதலாளி வர்க்கத்தின், (அதுவும் இருபதாம் நூற்றாண்டு முதலாளி வர்க்கத்தின்) கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.

தலித் மக்களின் அடிமை விலங்கை கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களால் மட்டும் தான் உடைத்தெறிய முடியும். இந்த நாட்டில் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் மட்டும் தான் அதை சாதிக்க முடியும். சாதியை மட்டுமல்ல தேசிய இன ஒடுக்குமுறை, ஆணாதிக்கம் உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியால் மட்டும் தான் ஒழித்துக்கட்ட முடியும்.

புரட்சி பத்தாண்டுகளில், அல்லது இருபது ஆண்டுகளில் கூட நடந்து விடலாம், ஆனால் சாதியை எப்போது ஒழித்துக்கட்டுவது ? அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் ? கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதியை ஒழிக்க யாருமே முயற்சிக்கவே இல்லையா ? பல தலைவர்களும் சாதியை ஒழிக்க பாடுபட்டிருக்கிறார்கள். பல கருத்துக்களும் சாதி ஒழிப்பிற்காக போராடியிருக்கின்றன. சாதி தான் ஒழியவில்லை. ஆனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்த புவிப்பரப்பில் எத்தனையோ புரட்சிகள் நடந்துவிட்டன? பல சமூக அமைப்புகளும் மாறிவிட்டன. இந்த எதார்த்தத்தை ஏற்கும் பட்சத்தில் எது முதலில் சாத்தியம் ? புரட்சியா சாதி ஒழிப்பா என்றால் புரட்சி தான் சாத்தியம்.

எனவே, புரட்சிக்கெதிராக சாதியை நிறுத்தும் மேற்கண்ட இந்த வாதத்தை அனைத்திற்கும் பொருத்தலாம். ஆணாதிக்கத்தை ஒழித்தால் தான் புரட்சி சாத்தியம் என்று பெண்கள் பேசலாம். இன ஒடுக்குமுறையை ஒழித்தால் தான் புரட்சி சாத்தியம் என்று தேசிய இனச்சிறுபாண்மையினர் பேசலாம். எனவே, சாதியை ஒழித்தால் தான் புரட்சியை நடத்த முடியும் என்று பேசுவது முட்டாள்தனம். புனிதப்பாண்டியன் வகையறாக்கள் முதலில் சாதியை ஒழிக்காமல் புரட்சியை நடத்த முடியாது என்று பேசுவதும், பிறகு புரட்சியே நடத்த முடியாது என்று பல்டியடிப்பதும் சாதி ஒழிப்பிற்கான அவர்களின் ஒரு வழிமுறையோ கொள்கையோ அல்ல, மாறாக, புரட்சிக்கு மக்களை அணி திரள விடாமல் தடுக்கும் உத்தியாகும். அது தான் அவர்களின் உண்மையான கொள்கையுமாகும்.

உலகத்திலுள்ள அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் மார்க்சியத்தால் மட்டும் தான் ஒழித்துக்கட்ட முடியும். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைச்சங்கிலிகளையும் மார்க்சியத்தால் மட்டும் தான் அறுத்தெறிய முடியும். ஏனெனில் மார்க்சியம் மட்டும் தான் சரியான தத்துவம், ஏனெனில் உலகத்திலேயே மார்க்சியம், மட்டும் தான் அறிவியல் பூர்வமான தத்துவம். புனிதப்பாண்டியன் இதை ஏற்கிறாரா இல்லை மறுக்கிறாரா ? மார்க்சியம் அறிவியல் இல்லை என்று மறுக்கத்துணிவிருந்தால் இதே தளத்தில் மறுக்கட்டும். இல்லை மார்க்சியம் அறிவியல் பூர்வமான தத்துவம் தான் என்பதை ஏற்றுக்கொண்டால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் பொருந்தும் அந்த அறிவியல் இந்தியாவுக்கு மட்டும் ஏன் பொருந்தாது என்பதை விளக்க வேண்டும். அது அறிவியல் என்றால் அதனால் சாதியை மட்டுமல்ல அதை விட சிக்கலான உறவுகளையும் நிர்மூலமாக முடியும்.

புரட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மட்டுமல்ல அவர்களுடைய விடுதலைக்கு எதிராக செயல்படும் தலித் முரசு கும்பல் போன்ற ஏகாதிபத்திய கைக்கூலிகளையும் ஒழித்துக்கட்டும். அத்தகையதொரு புதிய ஜனநாயகப்புரட்சிக்காக களத்தில் இறங்கி மக்களைத் திரட்டுவோம். அனைத்துவகை ஒடுக்குமுறைகளுக்கும் முடிவு கட்டுவோம்.
புரட்சி ஓங்குக !!

ஊழலை ஒழிக்க விரும்புவோர் அவசியம் படிக்கவும்:

ஊழல் ஊழல் என்று ஏதோ சொல்கிறாரே என்ன தான் சொல்கிறார் என்று பார்த்தால் புனித பாண்டியன் புதியதொரு கண்டுபிடிப்பையே நிகழ்த்தியிருக்கிறார். பரலோகத்திலிருக்கும் எங்கள் பரமபிதாவே இது உண்மை தானா ? உண்மைதான். விசயம் என்னவென்று கேட்கிறீர்களா ? காதை இப்படி கொஞ்சம் பக்கத்தில் கொண்டு வாங்க இது சாதாரண விசயம் இல்லை மாபெரும் கண்டுபிடிப்பு. ஊழல் இருக்குல்ல ஊழல் அந்த ஊழலின் ஊற்றுக்கண்ணே சாதி தானாம். அதனால சாதியை ஒழிக்காமல் ஊழலை எப்படி ஒழிக்க முடியும் ? ஒழிக்க முடியாது என்று அர்த்தபுஷ்ட்டியுடன் உதட்டை பிதுக்குகிறார் பு.பா. என்னே ஒரு அறிவு, என்னே ஒரு அறிவு! சார் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார் ! அப்படின்னா, அடிக்கடி ஏறிக்கிட்டு இருக்கே இந்த பெட்ரோல் விலை அதுக்குங் கூட இந்த சாதி தான் காரணமுங்களா ? அடுத்த மாசம் பத்திரிகையில் எழுதுங்க படிச்சி தெரிஞ்சிக்கிறோம்.

20 comments:

ஊரான் said...

சரவணன் கேட்டுக் கொண்டதன் பேரில் எனது வலைப்பூவில் மீள்பதிவு செய்துள்ளேன்.

ஊரான்
www.hooraan.blogspot.com

Anonymous said...

யோசிக்க வைக்கும் கட்டுரை. பகிர்ந்தகொண்டதற்கு நன்றி மருதன்

சுதிர் said...

சரவணனின் கருதது ஏற்றுக்கொள்ள கூடியதே. அதே சமயம் புனித பாண்டியனின் வாதங்களும் சரியாக இருப்பது போல் படுகிறது. சாதியை ஒழிப்பது முக்கியம் அல்லவா? புரட்சி ஏற்பட்டால் தான் சாதி ஒழியும் என்பது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை

முத்துவேல் said...

சாதியை ஒழிக்க எந்த கட்சியிடமும் செயல் திட்டம் இல்லை என்கிறார் புனித பர்ண்டியன். மகஇக விடம் அப்படிப்பட்ட செயல் திட்டம் இருக்கிறதா? இருந்தால் வெளியிட வேண்டியது தானே.

Anonymous said...

புரட்சிசிசிசிசி எப்போ வரும் சார்?

கும்பானி said...

அருமையான பதிவு ..

இதற்கு புனித பாண்டியனின் பதில் என்ன ?..

விடுதலை said...

புரட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மட்டுமல்ல அவர்களுடைய விடுதலைக்கு எதிராக செயல்படும் தலித் முரசு கும்பல் போன்ற ஏகாதிபத்திய கைக்கூலிகளையும் ஒழித்துக்கட்டும்.

Anonymous said...

லூசு கோமாளி விடுதலையே,

நீ கம்யூனிஸ்டு இல்லை போலிக்கம்யூனிஸ்டுன்னு சொன்னா உனக்கு கோவம் பொத்துக்கிட்டு வருதா ?
-
உன்னோட கோமாளி பாசிஸ்ட் கட்சியை பத்தி இன்னைக்கு கீற்றுல ஒரு பதிவு வந்திருக்கு போய் படி படிச்சிட்டு சூடு சொரணைன்னு ஒன்னு இருந்தா பதில் சொல்லு அவங்களுக்கு பதில் சொல்லு

ஹரன்பிரசன்னா said...

இந்த மறுப்புக் கட்டுரையில் ஏன் அடிக்கடி தேவனே, பரமபிதாவே என்றெல்லாம் வருகிறது?

superlinks said...

ஏனெனில், தேவனால் தான் அவர்கள் இயக்கப்படுகிறார்கள்.

Anonymous said...

காந்தி, சாரு, விவசாயிகள் தற்கொலை போன்ற கேட்டரிகரி பெயர்களை நீக்கியது பயன் இல்லாதது என்று நினைக்கிறேன். சாருவை விடுங்கள். காந்தி போன்ற பெயர்களை கேட்டகரியில் இருந்து நீக்க வேண்டாமே...கேட்டகரியை சுருக்க விரும்பி ரொம்பவும் சுருக்கி விட்டீர்கள்.

geethappriyan said...

மிக ஆக்கபூர்வமான கட்டுரை

Anonymous said...

http://umarudhran.blogspot.com/2011/02/blog-post.html

Anonymous said...

http://umarudhran.blogspot.com/2011/02/blog-post.html

Anonymous said...

http://guhankatturai.blogspot.com/2011/04/blog-post_12.html

Siraju said...

இக்கட்டுரைகளையெல்லாம் முதலில் படிக்கவும், பின் மறுப்பு தெரிவிக்கவும்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13898:2011-03-27-17-37-03&catid=26:india&Itemid=135

superlinks said...

///இக்கட்டுரைகளையெல்லாம் முதலில் படிக்கவும், பின் மறுப்பு தெரிவிக்கவும்///

இதை நீங்கள் மார்க்சிஸ்ட் கட்சியிடம் போய் சொல்லுங்கள்,அதாவது கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்கிற போலிக்கம்யூனிஸ்டுகளிடம் போய் சொல்லுங்கள் அவர்கள் தான் இதைச்செய்தது.

அவர்களின் இணையக்கோமாளி யார் என்று தெரிய வேண்டுமா ? இந்த பதிவில் ஏழாவது பின்னூட்டமிட்டுக்கும் விடுதலை தான் அந்த கோமாளி.

விடுதலை said...

கீற்று புரோக்கர் நந்தன்,
மலமுரசு(தலீத்துகளைப்பற்றி அவர் எழுத என்னதகுதி இருக்குது)சீரஜ் அண்னே,மகஇக கைகூலிகளுக்கு.

எப்படி எல்லாம் சுப்பரா காமெடி பண்றிங்கோ...! தாங்கமுடியல...? இதப்படிங்கோ செத்த..


ஊடகவாதிகள் சிலருக்கு ஒரு வகை மனநோய் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. அதைத் தணித்துக் கொள்வதற்காக அவ்வப் போது அவர்கள் நாடுகிற ஒரு போதைதான், மார்க்சிஸ்ட்டுகள் மீது புதிய புதிய அவதூறு களைக் கட்டவிழ்த்துவிடுவது.

இப்போது இந்த நோய்க்கு ஆட்பட்டிருப்பவர் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ பத்திரிகையின் செய்தியாளர் ப்ரியா தம்பி. வேறு சில பிரச்சனைகளில் தனது கருத்தோடு மார்க்சிஸ்ட் கட்சி யின் நிலைப்பாடு ஒத்துவரவில்லை என்ப தால், அந்த இயக்கத்தின் மீது சகதி வீசுவது என்ன ஊடக நெறியோ?

மேற்குவங்கத்தில் 32 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறி, “17 ஆயிரம் பேர் கொல் லப்பட்ட பரிதாபம்” என்ற குறிப்புடன் “மார்க் சிஸ்டுகள் நடத்திய இனப்படுகொலை” என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்திய விடுதலைக்கு முன்பு, ஒன்றுபட்டிருந்த வங்கத் தில் நாமசூத்திரர்கள் என்ற தலித் மக்கள் வாழ்ந்து வந்தனர். வங்கப் பிரிவினைக்குப்பின் அவர்கள் கிழக்கு பாகிஸ்தானின் (இன்றைய பங்களாதேஷ்) குடிமக்களாகினர். எண்ணற்ற படுகொலைகளும், கொடுமைகளும் அரங்கேற்றப் பட்ட இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது இருநாடுகளிலும் மதச் சிறுபான்மை மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருநாடு களுக்கு அகதிகளாக குடிபெயர்ந்தனர். கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த இந்து மக்களோடு இந்த தலித்துகளும் சேர்ந்து வந்தனர்.

பெரும்பகுதியினர் பாதுகாப்பு பகுதியாகிய சுந்தரவனத்தில் தங்கினார்கள். மேற்குவங் கத்தில் ஜோதிபாசு தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த இடது முன்னணி அரசு, அவர்களிடம் வனப்பகுதியிலிருந்து வெளி யேறுமாறு கேட்டுக்கொண்டது. கொஞ்சமும் வன்முறை பயன்படுத்தப்படாமல் கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து காலப்போக்கில் கணிசமானோர் பங்களாதேஷ் நாட்டிற்கே திரும்பிச் சென்றனர். பலர், அப்போது மத்திய அரசின் திட்டத்தில் மத்தியப்பிரதேசம் உள் ளிட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட அகதி முகாம்களுக்குச் சென்றனர். மற்றவர்கள் மேற்குவங்கத்திலேயே தங்கி விட்டார்கள்.

‘குமுதம் ரிப்போர்ட்டர்’ கட்டுரை, இந்த நிகழ்வை அப்படியே உருமாற்றி, சாதி இந்துக் களின் வெறுப்புக்கு உள்ளான நாமசூத்திரர் களை ஜோதிபாசு அரசின் காவல்துறையும், மார்க்சிஸ்ட்டுகளும் சேர்ந்து படுகொலை செய்ததாகவும், எஞ்சியோரை விரட்டியடித் தாகவும் சித்தரிக்கிறது. தனிப்பட்ட வன்மமும், கற்பனைத்திறனும் கலந்த கட்டுரையாக் கத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு.

நடந்தது என்னவென்றால், ஜோதிபாசு அரசு நாட்டிற்கே முன்னுதாரணமாகத் தொடங் கிய நிலச்சீர்திருத்தத்தின் கீழ் இந்த தலித்து கள்அகதி மக்களுக்கும் நிலம் வழங்கப்பட்டது. அவர்களிடம் வாக்களித்திருந்தபடி குடி யுரிமை உள்ளிட்ட அங்கீகாரங்களை வழங்கு கிற தொடக்கமாக அது அமைந்தது.

“மேற்கு வங்கத்தில் எப்போதுமே - குறிப்பாக மார்க்சிஸ்டுகளாலும், இதர இடது சாரிகளாலும் - சாதிப் பாகுப்பாட்டின் அடிப் படையில் பிரச்சனைகளை கையாளப் பட்டதில்லை,” என்று அந்தத் தோழர்கள் பெருமையோடு குறிப்பிடுகிறார்கள்.

கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது போல் உண்மையிலேயே அப்படியொரு படு கொலை நடந்திருக்கும் என்றால், அது எவ்வ ளவு பெரிய பிரச்சனையாக கிளப்பிவிடப்பட் டிருக்கும்! இடது முன்னணி அரசுக்கு எதிராக ஈறு கிடைத்தால் கூட அதைப் பேனாக்கிப் பெருமாளாக்கத் துடிக்கிற பெரும் வர்த்தக ஊடகங்கள் இவ்வளவு பெரிய சம்பவத்தை விட்டு வைத்திருப்பார்களா?

சாதிய மோதல்களால் மற்ற பல மாநிலங் கள் திணறிக்கொண்டிருக்கும் போது மேற்கு வங்கம் அதற்கு அப்பாற்பட்டதாக, அனைத்து மக்களின் ஒற்றுமைப் பூங்காவாக திகழ்ந்து வந்திருக்கிறது என்பதையும் நாடறியும். அந்த இணக்கச்சூழலை சீர்குலைக்க மம்தா - மாவோயிஸ்ட் கூட்டணி தன்னால் முடிந் ததை எல்லாம் செய்து பார்த்து வருகிறது.

சில தனிப்பட்ட “அரசியல் சாரா” (?) அமைப் புகளும், அவர்களுக்கு சாதகமான சில பத் திரிகைகளும் அவ்வப்போது இப்படி ஒரு பிரச்சனை நடந்ததாக தூசு கிளப்ப முயன்ற துண்டு. அப்போதெல்லாம், இடது முன்னணி அரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் முறையாக பதிலளித்து வந்துள்ளன. இணையத்தளத்திலும் அந்த பதில்கள் கிடைக்கின்றன. நேர்மையான எழுத்தின் மீது மரியாதை உள்ளவர்கள் என்றால் குமுதம் ரிப்போர்ட்டரும் அதன் ரிப்போர்ட்டரும் இந்த பதில்களையும் எடுத் துப் போட்டிருப்பார்கள். ஏற்கெனவே வேறொரு தமிழ்ப் பத்திரிகையில் வெளிவந்த நீண்ட கட்டுக்கதையின் சுருக்கத்தை வெளியிட் டிருக்க மாட்டார்கள்.

விடுதலை said...

அந்த வேறொரு பத்திரிகைக்கு மார்க் சிஸ்ட்டுகள் மீது என்ன கோபம்? அண்மைக் காலமாக மார்க்சிஸ்ட் கட்சியும், அதன் வழி காட்டலில் இயங்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தலித் மக்களின் உற்ற தோழர்களாக, அவர்களது பிரச்சனைகளில் தலையிட்டு, அவர்களையும் திரட்டிப் போராடி வெற்றிகளை சாதித்து வருகின்றன. தீண்டாமைக்கு எதிராக மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்புவதில் உத்தப்புரம் சுவர் இடிப்பு, அதன்பிறகும் அங்கு தொடரும் போராட்டம் ஆகியவை சிறந்த முன்னுதாரணங்களாகத் திகழ் கின்றன. இது, தலித் மக்களுக்கு தாங்கள்தான் ‘காவலர்கள்’ என்று இவர்கள் காட்டிக்கொள் ளும் நோக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி யுடன்தான் இப்படியொரு அவதூறு.

ஒட்டுமொத்தத்தில் இன்றைய உலக மயச்சூழலில் உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப் பரேட்டுகள், தங்களுக்கு சவாலாக இருக்கிற மார்க்சிஸ்ட்டுகளை எப்படியாவது தனிமைப் படுத்த விரும்புகிறார்கள். மம்தா பானர்ஜி தொடர்பாக அமெரிக்க தூதரகம் அனுப்பிய பரிந்துரை குறித்து வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் ஆவணங்கள் இதற்கு ஒரு சாட்சி. குமுதம் ரிப்போர்ட்டர் கதையும் அப்படியொரு மார்க்சிஸ்ட் அவதூறு சேவையைத்தான் செய்கிறது. “படுகொலைக்குக் காரணமானவர்கள் வர லாற்றின் கறைபடிந்த பக்கங்களில்தான் இடம்பெறப் போகிறார்கள்” என்று அந்தக் கட் டுரை முடிகிறது. நடக்காத ஒரு படுகொலை பற்றிக் கற்பனையாக எழுதி ஒரு வரலாற்று இயக் கத்தின் மீது கறை படியச் செய்யப் போகிறவர் களுக்குத்தான் அந்தப் பக்கங்கள் காத்திருக் கின்றன.

Siraju said...

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக உங்களால் சாதியை புடுங்கி களைய எறிய முடியாத போது, ஊழலை மட்டும்......