'அம்பேத்கரைப் படிக்காமல், பெரியாரைப் புரிந்துகொள்ளாமல், புரட்சி பற்றி பேசுவதால் பயன் எதுவும் இல்லை.' சென்ற சனிக்கிழமை லயோலா கல்லூரியில், சென்னை அரசியல் பள்ளி ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய புனித பாண்டியனின் முழக்கம் இது. தலைப்பு, தேர்தல்களும் மக்களாட்சியும் : சில கண்ணோட்டங்கள்.
புனித பாண்டியன், தலித் முரசு இதழின் ஆசிரியர். சாதியா, அது எப்போதோ ஒழிந்துவிட்டதே என்று அங்கலாய்க்கும் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய முக்கியமான இதழ் தலித் முரசு. (பதினைந்தாவது ஆண்டு இதழ் தற்போது விற்பனையில்). தலித் சமூகத்துக்கு எதிராக ஆதிக்கச்சாதியினர் கட்டவிழ்த்துவிடும் ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது தலித் முரசு.
தீண்டாமை மறைந்துவிட்டது என்று சொல்பவர்கள் பொதுவாக கீழ்வரும் காரணங்களை முன்வைப்பார்கள். இப்போதெல்லாம் 'பிராமணர்கள் மட்டும்' ஹோட்டல் எங்கும் இருப்பதில்லை. கல்லூரி, அலுவலகம், தியேட்டர் என்று அனைத்து இடங்களிலும் அனைத்து சாதியினரும் ஒன்று கலந்து பழகுகிறார்கள். தொட்டாதே தீட்டு என்று யாரும் ஒதுங்கிச் செல்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் நம் பக்கத்து வீட்டில் இருப்பவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதுகூட நமக்குத் தெரியாது. ஒரு காலத்தில் பிராமணக் கொடுமைகள் இருந்தன. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.
ஏதேனும் ஒரு தலித் முரசு இதழை எடுத்து மேலோட்டமாகப் புரட்டினாலே போதும். மேற்சொன்ன வாதங்கள் எவ்வளவு பலவீனமானவை என்பது தெரிய வரும். கயர்லாஞ்சி வரைகூட போகவேண்டாம். நாம் வாழும் பகுதியிலேயே சாதிக் கொடுமைகள் பல நடந்துள்ளன, தொடர்ந்து நடந்து வருகின்றன. சென்னை போன்ற பெரு நகரங்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல.
கிராமம், நகரம், படித்தவர், படிக்காதவர் என்னும் பேதம் எதுவும் சாதிக்கு இல்லை. எந்த அறிவியல் முன்னேற்றத்தாலும், எந்தத் தத்துவத்தாலும், எந்த போராட்டத்தாலும் சாதியை வீழ்த்தமுடியவில்லை. உலகமயமாக்கல் வந்துவிட்டால் தீண்டாமை போன்ற குறுகிய சித்தாந்தங்கள் மறைந்துவிடும் என்று சொன்னவர்கள் இன்று திகைத்து போய் நிற்கிறார்கள்.
'சாதி என்பது நெகிழ்வுத்தன்மை கொண்டது!' என்கிறார் புனித பாண்டியன். தேவையான சமயங்களில் சாதி வளைந்து கொடுக்கும். சற்றே தன் இயல்பை மாற்றிக்கொண்டு நட்பு பாராட்டும். ஆனால், மறைந்துவிடாது. சாதியின் தோற்றம் மாறினாலும் உள்ளடக்கம் மாற்றாது. பிராமணர்கள் மட்டும் என்று போர்டு மாட்டாததற்குக் காரணம் இதுதான்.
புனித பாண்டியன் இடதுசாரிகள் மீது சில விமரிசனங்களை வைக்கிறார். வர்க்கப் போராட்டத்தைக் காட்டிலும் முக்கியமானது சாதி ஒழிப்பு. 'மார்க்ஸையும் எங்கெல்ஸையும் லெனினையும் நான் குற்றம் சொல்வதாக நினைக்கவேண்டாம். வர்க்கப் பேதமுள்ள சமூகங்களில் அவர்களுடைய கருத்துகள் எடுபட்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் நிலைமை வேறு. இங்கு வர்க்கம் அல்ல சாதியே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.'
'சாதி Safety Valve போல் இங்கு செயல்படுகிறது. சாதியை ஒழிக்காமல் எந்தவொரு புதிய தத்துவத்தையும நீங்கள் இங்கே செயல்படுத்தமுடியாது. சாதியை ஒழிக்கவேண்டுமானால் இந்து மதத்தை முதலில் ஒழிக்கவேண்டும்.'
புனித பாண்டியனின் உரையை இங்கே பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
5 comments:
புனிதப்பாண்டியன் சொல்லிவிட்டாரே. இந்து மதத்தை மட்டும் ஒழித்துவிட்டால் எல்லாம் சுபிட்சம் அடைந்து நாடு சூப்பராகிவிடும் என்று.
போங்கள், போய், இந்துமதத்தை மட்டும் ஒழித்துக்கட்டுங்கள். சவுதி அரேபியா, அமேரிக்கா போன்ற அதிஉன்னதமான மனித உரிமையை தங்கள் கவட்டைக்கு வைத்து பாதுகாக்கும் நாடுகள் உங்களுக்கு எல்லாவிட உதவிகளும் செய்யும். உங்கள் கவட்டைக்குள் அவர்கள் நன்கு சீவி வைக்கும் "மனித உரிமையை" நீங்களும் அவர்கள் செருகிய இடத்திலேயே வைத்து பாதுகாக்கலாம்.
இந்து மதத்தை மட்டுமே விமர்சனம் செய்யலாம். இஸ்லாம் மதத்தை ஒழிக்க வேண்டுமெனச் சொன்னால் கொன்று விடுவார்கள்.
இஸ்லாமில் ஜாதி ஏது என சின்னப்புள்ளத் தனமாக அல்லது கேனத்தனமாக கேள்வி கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
கிறிஸ்தவர்கள் எல்லாம் பரமபிதாவின் நேரடிக் குழந்தைகள். அவர்களுக்கு பாவமே செய்யத்தெரியாது என நீங்கள் நம்பிக்கொண்டிருந்தால் தினமும் செய்தித்தாள் பார்ப்பதில்லை எனப் பொருள். உலகின் முதல் பாவிகள் மற்றும் என்னற்ற சாதிப்பிரிவுகள் கொண்டது கிறிஸ்தவம்.
உங்களுக்கு கம்யூனிசம் பற்றி என்ன தெரியும் என்பதும் எங்களுக்குத் தெரியும் மருதன்.
இந்துக்களையும், பார்ப்பணர்களையும் எதிர்ப்பவன் இன்றைக்கு முற்போக்குவியாதி, ராமசாமி நாயக்கர் வந்த பகுத்தறிவுவியாதி, ஜாதிகளே இல்லாத கம்யூன் அமைத்து வாழும் கம்யூனிஸவாதி, இப்படியெல்லாம் உங்களைச் சொல்வார்கள் என நினைத்து அந்தப் பட்டத்திற்கு முயலும் உங்களை பரிதாபமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
உண்மையான கம்யூனிஸ்ட் என்பவன் சமூகத்தை நேசிப்பவன். ஆனால் சக தோழனையே கொன்றழித்தவர்கள்தான் கம்யூனிஸ்ட்டுகள். உங்களுக்கும் தெரிந்திருக்கும். இல்லையெனில் சொல்லுங்கள் கட்டுரைகள் அனுப்புகிறேன். அந்தக் கொள்கையிலிருந்து ஆரம்ப நாளிலிருந்து இன்றுவரை முழுவதும் விலகியவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே.. ஆனால் ஊருக்கு உபதேசம் செய்ய மட்டும் கிளம்பி விடுவார்கள்.
என்னத்தையாவது ஒளறுனமா, கிழக்கு புத்தகமா போட்டு காசப் பாத்தமான்னு இல்லாம இதெல்லாம் என்ன வெட்டிவேலை டிராமா மருதன்??
அதெல்லாம் சரி. புனிதபாண்டியனுக்கு தமிழகத்தின் சாதி வரலாறு தெரியாமல் இருக்கலாம். யாரும் பதில் சொல்லாமலா இருந்தார்கள்.
சாதி ஒழிந்தால்தான் புரட்சி செய்யமுடியும் என அம்பேத்கர் சொல்லி 60 வருசம் ஆகிவிட்டது. உலகம் மாற்றமே இல்லாமல் இருக்கிறதா ?
பெர்க்லியின் மலிவு வெர்சன்தானே இது. மார்க்சு புரட்சி ஜெர்மனியில்தான் வரும் என்றார். லெனின் அதனை ரசியாவில்தான் செய்து காட்டினார். சாமியாடுதல் கம்யூனிஸ்டுகளிடம் இல்லை புனிதபாண்டியனிடம் தான் உள்ளது என்பதற்கு இதனை விட சான்று வேண்டுமா ?
அடுத்து அந்த சாதி விடுதலையை அடைய புனித பாண்டியன் ஏன் இடதுசாரிகள் மீது பாரத்தை சுமத்துகிறார். புனித பாண்டியன் பார்ப்பனர் போல சிந்திப்பார். தலித்துகள் போல களப்பணி செய்ய கம்யூனிஸ்டுகள் வேண்டும். நன்றாக இருக்கிறது புதிய பார்ப்பனீயம்.
ஹிந்து மதத்தில் மட்டும் தான் ஜாதி உள்ளதா மருதன்? சுதிர் போன்றவர்கள் ஜால்ரா அடிப்பதை கண்டு ஒரு மதத்தின் உணர்வுகளை கயபடுததிர்கள் மருதன்.
புனிதபாண்டியன் இந்து விரோதி.கீழக்கரை நகராட்சி தாழ்த்தப்பட்டோர் அதிகம் வாழும் இடத்தில் குப்பைக் கொட்டினால் அதற்கும் இந்து மதமே காரணம் என்று தலித் முரசில் எழுதியிருக்கிறார்கள்.படித்துப் பாருங்கள்.ஆ.இராசா, நீதிபதி பால் தினகரன் விவகாரங்களில் தலித்முரசு என்ன எழுதியது என்று தெரியுமா.
சிபிஎம்,சிபிஐ-முஸ்லீம்களுக்கு ஜால்ரா போடும் கட்சிகள்.
ம.க.இ.க- இந்து மத, பிராமண வெறுப்பினை பரப்பும் அமைப்பு
தலித் முரசு-இந்து மத,பிராமணர்களை,தலித் அல்லாத பிற சாதியினரை மட்டும் விமர்சிக்கும்.பாகிஸ்தான்,அல்கொய்தா பற்றி எழுதாது.
இவர்களில் யாரும் கம்யுனிஸ்ட்கள் கிடையாது.போலி மதச்சார்பின்மை பேசும் இந்த இயக்கங்கள்,பத்திரிகைகளை
நிராகரிக்க வேண்டும்.
மருதன் தலித்முரசை படித்திருந்தால்
புனிதபாண்டியனின் புளுகுகளை பற்றி எழுதியிருக்கலாம்.அவரோ அந்த புளுகருக்கு முக்கியத்துவம் தருகிறார்.
புரட்சி,சாதி அழிப்பு இந்த் இரண்டையும்
பற்றி பெரியாரியாவாதிகளும்,கம்யுனிஸ்ட்களும் பேசுவது மோசடி.
Post a Comment