July 7, 2011

ஆகவே இங்கிலாந்தை எதிர்க்கவேண்டும்! : தாமஸ் பெய்ன்

இங்கிலாந்து போன்ற பெரிய சக்தியின் நிழலில் இருந்தால்தான் நம்மால் பாதுகாப்பாக இருக்கமுடியும். அவர்களை எதிர்ப்பது பைத்தியக்காரத்தனமானது என்று சில அமெரிக்கர்கள் வாதிட்டபோது தாமஸ் பெய்ன் கீழ்கண்டவாறு பதிலளித்தார்.
இங்கிலாந்து நமக்கு பாதுகாப்பளித்து வந்தததாக நாம் பெருமையடித்துக் கொள்கிறோம். ஆனால் அந்தப் பாதுகாப்பு அதன் நலன்களை வளர்க்கவே ஒழிய நம் மீது ஏற்பட்ட பாசத்தினால் அல்ல என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. நமது நலனுக்காக நமது விரோதிகளிடமிருந்து பிரிட்டன் நம்மைப் பாதுகாக்கவில்லை. தனது நலனுக்காக தனது விரோதிகளிடமிருந்து பாதுகாத்தது. அந்த நாட்டின் விரோதிகளுக்கு நம்மீது எந்தவிதத்திலும் பகைமை இல்லை. ஆனால் நாம் பிரிட்டனுடன் சேர்ந்திருக்கும் வரையில் அந்நாட்டின் பகைவர்கள் நம்மீது பகைமை பூண்டுதானிருப்பார்கள். பிரிட்டன் நமது கண்டத்தின் மீதுள்ள ஆதிக்க ஆசையைத் துறந்தாலோ, அல்லது பிரிட்டனுடன் உள்ள உறவை நாம் அறுத்துக்கொண்டாலோ, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் தேசங்களுடன் போர் தொடுத்தாலும் அந்நாடுகளுடன் நாம் நேசமாக வாழலாம்.
இங்கிலாந்து நம் தாய் நாடு அல்லவா? அவர்களை எதிர்ப்பது என்பது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம் அல்லவா? இல்லை என்றார் பெய்ன்.
பிரிட்டன் நமது தாய் நாடல்லவா என்கின்றனர் சிலர். அவ்வாறானால், அதன் நடத்தைக்கு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். விலங்குகள்கூட தங்கள் குட்டிகளை விழுங்குவதில்லை. காட்டுமிராண்டிகள் தங்கள் குடும்பத்தாருடன் போர் தொடுப்பதில்லை...

அரசரும் அவரை அண்டிப் பிழைப்பவர்களும் ‘பெற்ற நாடு, தாய் நாடு’ எனும் பதங்களை ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் உபயோகிக்கும் முறையில் உபயோகித்து வருகின்றனர். போப்பாண்டவரையும், அவரது பரிவாரங்களையும் அந்த மதத்தினர் ‘தந்தை’ என்றழைப்பதைப் போல் எதையும் நம்பும் மக்களுடைய விசுவாசத்தைப் பெறுவதற்காக முடியரசுப் பற்றுள்ளவர்கள் பிரிட்டனுக்குத் ‘தாய்நாடு’ என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.

அமெரிக்காவின் தாய்நாடு ஐரோப்போவேயொழிய, இங்கிலாந்தல்ல. ஐரோப்பாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அரசியல் அல்லது மத சுதந்திரத்தை விரும்பி இங்கு வந்தவர்களுக்குப் புது உலகமாகிய நம் நாடு அபயமளித்து வந்திருக்கிறது. அவர்களெல்லாம் தாயின் அன்புமிக்க அரவணைப்பிலிருந்து இங்கு ஓடிவரவில்லை. கொடிய அரக்கனிடமிருந்து தப்பி ஓடிவந்தனர். எந்தக் கொடுங்கோன்மைக்குப் பயந்து ஆதியில் மக்கள் பிரிட்டனிலிருந்து ஓடிவந்தனரோ, அம்மக்களுடைய சந்ததிகளை இன்றைய ஆங்கில ஆட்சியினரும் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர் என்பது உண்மை.
நாம் யாவரும் ஆங்கிலேயரின் சந்ததிகள் என்றே வைத்துக் கொள்ளுவோம். அதனால் என்ன ஏற்படுகிறது? இன்று பிரிட்டன் நமக்கு நேரடியான விரோதியாகவே வந்துவிட்டதனால் அதற்கும் நமக்கும் முன்பிருந்த உறவு எல்லாம் அற்றுவிட்டது. அந்நாட்டுடன் ஒன்றுபட வேண்டியது நம் கடமை என்று கூறுவது வெறும் கேலிக்கூத்தாகும். இப்போதுள்ள ஆங்கில அரசனின் மூதாதையான அந்நாட்டை வெற்றி கொண்ட முதலாவது வில்லியம் ஒரு பிரெஞ்சுக்காரன். இங்கிலாந்திலுள்ள பிரபுக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிரெஞ்சு வழித் தோன்றியவர்கள். இங்கிலாந்தும் நாமும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் எனும் வாதப்படி பார்த்தால் இன்று பிரிட்டனைப் பிரான்ஸ் ஆளவேண்டும்.
இங்கிலாந்து நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பது உண்மைதான். சரி இதனை ஏன் நாம் பொறுத்துக்கொள்ளக்கூடாது? வாழ்வில் நாம் சந்திக்கும் எண்ணற்ற பல  துயரங்களில் ஒன்றாக இதனை ஏன் நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது? காலனியாதிக்கத்தை எதிர்த்து போராடுவது நம் உடனடித் தேவையா? அது அவ்வளவு முக்கியமானதா?
அவர்கள் செய்யும் தீமைகளை மறந்துவிடலாம், அல்லது பொறுத்துக் கொள்ளலாம் என நீங்கள் கருதுவீர்களானால், உங்கள் வீடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டதா? உங்கள் கண்முன் உங்கள் சொத்து  அழிக்கப்பட்டதா? உங்கள் மனைவியும் குழந்தையும் படுக்கப் பாயின்றி, உண்ண ரொட்டித் துண்டின்றி நிர்க்கதியாக விடப்பட்டிருக்கின்றனரா? அவர்கள் கையால் உங்கள் பெற்றோர், அல்லது குழந்தை கொல்லப்பட்டிருக்றனரா? அவர்கள் மடிந்த பிறகு நீங்கள் நிராதரவாக விடப்பட்டிருக்கிறீர்களா? என்று கேட்கிறேன். இம்மாதிரி தீமைகளுக்கு நீங்கள் உட்படவில்லையென்றால், கஷ்டப்பட்டவர்கள் போல் பதில் கூற உங்களுக்கு உரிமையில்லை. ஆனால், இம்மாதிரி தீச்செயல்களுக்குட்பட்டும் நீங்கள் கொலையாளிகளுடன் கைகுலுக்க விரும்பினால் நீங்கள் கணவன், தந்தை, நண்பன், காதலன் எனும் உறவுகொள்ள உரிமையற்றவர்கள். வாழ்க்கையில் உங்கள் நிலை, அல்லது அந்தஸ்து யாதாயிருப்பினும் நீங்கள் கோழையுள்ளம் படைத்தவர்கள். பிறருக்குத் தாளம் போடும் குணம் படைத்தவர்கள்.இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தில் இருந்து விடுபடுவதே நம் முதல் தேவை என்பதை பெய்ன் அழுத்தமாகப் புரியவைக்கிறார்.
பிரிட்டன் தாய் நாம் குழந்தைகள் என்னும் அர்த்தமற்ற பேச்சால் நம் சந்ததிகள் சமர்புரிந்து சாகவேண்டாம்...சுதந்தரமில்லாமல் விடுவது நமது சந்ததியர்களைப் போர் புரிய விட்டுவிடுவதற்கு ஒப்பாகும். சற்றும் நிதானிக்காமல் உடனடியாக நாம் பிரிவினைக்கு ஏற்பாடு செய்தால் இந்நாட்டை உலகோர் பார்த்துப் போற்றிப் புகழும் நிலைக்குக் கொண்டுவந்து விடலாம்.
முந்தைய கட்டுரைகள் :

1) தாமஸ் பெய்ன் 1
2) தாமஸ் பெய்ன் 2

9 comments:

எழில் said...

பயனுள்ள கட்டுரை மருதன்

Anonymous said...

சென்னையில் சிறுவனை சுட்ட ராணுவ அதிகாரி அவனை வேண்டுமென்ற சுடவில்லை என்றும், பயமுறுத்துவதற்காக வேறு திசையில் சுட்டதாகவும் அது த‌வறிப் போய் அச்சிறுவன் மேல் குண்டு பட்டுவிட்டதாகவும் சொல்லியுள்ளார்.


நான் என் சிறுவயதில் மாங்காய் அடிக்க கல் எறிவேன். மாங்காயை குறி வைத்து எறிந்தால் மாங்காயே விழாது. ஆக, ஏதோ ஒரு திசையில் கல்லை எறிந்தால் அது போய் மாங்காய் மேல் பட்டு அது விழும். இதை வைத்து பார்க்கும் போது அந்த ராணுவ அதிகாரி சொல்வதில் உண்மை இருக்க வாய்ப்புண்டு என்பது புரிகிறது.


ஆகவே நீங்கள் யாரையாவது உண்மையிலேயே சுட விரும்பவில்லை எனில் அந்த குறிப்பிட்ட நபரை குறி வைத்து மட்டுமே சுடுங்கள். அப்போதுதான் குண்டு அவரை விட்டு விட்டு வேறு திசையில் போய் விழும். தப்பித்தவறி வேறு எங்கேயோ சகட்டுமேனிக்கு சுட்டு தொலைத்து மட்டும் விடாதீர்கள்.

NO said...

Thomas Paine was one of the greats that walked this earth. This mighty man stood against all tyranny, state or individual and was dead against the heaven given rights of kings and monarchs.
Tom breathed democracy and without doubt was one of the early giants to talk about individual liberty and humanism.

His case against organized religion trying to influence public affairs was the reason for the founding fathers of USA bringing an amendment in the constitution to separate Church and state. His tirade against the church and clergy is well known. The downside of his zeal was that the other great ones like Thomas Jefferson, John Adams were scared of Tom due to his views on religion.

While the above great thinkers were also politicians like Tom, but when the time for evaluation came, Thomas Paine always chose to be the thinker for he always chose to speak the truth.
Truth for Tom was the liberty and individual rights that all human beings should have. Any force that chooses to constrict this was according to him, sacrilege! Let it be the wrong direction the French revolution took or the slow move towards dictatorship that Napoleon had started. The moment Tom saw such enterprise taking a turn towards anarchy and dictatorship, he raised his voice against it. Many a times he came close to loosing his life for such defense of liberty.

But he never cared. For this man lost all his friends and benefactors for the sake of liberty.

He was 59 when he died and around six people were there at his funeral. With the all the Churches in USA not allowing his body to be buried, I believe he was buried in a private property under a tree.

NO said...

The great one who taught the world how holy individual rights and liberty are went to grave with just a hand full of people around him.

Now, centuries after this great man had gone most historians and liberal people now know how important this man's contribution was. What he preached with mission are now in the charters of United Nations and in all freedom loving countries.

Tom may have died without many to weep for him. But his legacy continues. His thoughts enshrined forever and his zeal to fight against tyranny and oppression will live as long as humanity is there.

Having said that, its surprising to see people like Marudhan writing about Thomas Paine. For if Thomas had been alive now or by the time the communists had taken power in Russia he would have been the first one to raise the voice against it. For the tyranny and oppression that communism generates in a short period is worse than any king or queen would embark on.

Being the case, its sheer hypocrisy that Marudhan lauds Thomas (I believe he lauds for If it were criticism he might have written differently). A known admirer of murderers like Stalin and Mao do not have any moral authority to write about Tom in glowing terms.

If one indeed does it, in this case Mr. Marudhan, it means that the admiration he has for communism, Maoism and Stalinism is totally out of place, if not immoral!!

Tom, Bapuji, John Adams, Ben Franklin and several others belong to a list of greats who showed humanity the right and rational path and not the path of murder and destruction that Marudhan’s guru’s had laid out!!!

மருதன் said...

நோ : பிரிட்டனின் காலனியாதிக்கத்துக்கு எதிராகவும் பரம்பரை ஆட்சி உரிமைக்கு எதிராகவும் தாமஸ் பெய்ன் எழுதியவை முக்கியமானவை என்பதால் அவற்றில் இருந்து சில பகுதிகளை இங்கே பிரசுரித்தேன்.

தாமஸ் பெய்ன் மீது விமரிசனங்களே இல்லையா என்றால் உண்டு. மன்னராட்சிக்கு எதிராக, காலனியாதிக்கத்துக்கு எதிராக அவர் ஜனநாயகத்தை முன்னிறுத்தினார். ஆனால், அவர் கொண்டாடிய ஜனநாயகம் இன்று எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

காலனியாதிக்கத்தின் அத்தனை துன்பங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் சுரண்டல்களையும் ஜனநாயகம் வீழ்த்திவிடும் என்று தாமஸ் பெய்ன் நம்பினார். இதை என்னால் ஏற்கமுடியாது.

காரணம், ஜனநாயகம் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யவில்லை. மாறாக, இன்னமும் அதிகப்படுததியிருக்கிறது.

இதுபோன்ற விமரிசனங்களைத் தாண்டி தாமஸ் பெய்னின் படைப்புகளில் உள்ள ஏற்கத்தக்க அம்சங்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

எழில் said...

தமிழில் தாமஸ் பெய்ன் எழுத்துக்கள் கிடைக்கிறதா?

மருதன் said...

எழில் : அரசியல் என்றால் என்ன? என்னும் தலைப்பில் சந்தியா பதிப்பகம் தாமஸ் பெய்னின் சில கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறது. இது ஒரு நல்ல அறிமுகப் புத்தகம். பெய்னின் முழுமையான படைப்புகள் தமிழில் வந்ததில்லை என்றே நினைக்கிறேன். ஆங்கிலத்தில் வேண்டுமானால் இணையத்திலேயே கிடைக்கும். முன்னதாக லிங்க் தந்திருக்கிறேன்.

Anonymous said...

@No
Mr.No,

try to write comments in tamil...you already have scolded marudhan in some other comments...i want to know y u r scolding him...as u write in english I dont get any patience to read it...i'm poor in english vocabulary....

use http://tamileditor.org/

to type tamil via english...

@Marudhan

உங்கள் பிளாகில் மிகவும் சீரியசாக வீ.புஷ்பராஜ் என்பவர் முன்பு கமெண்ட் செய்வாரே...அவர் எங்கே? அவர் ஏன் கமெண்ட் எதுவும் செய்வதே இல்லை?

NO said...

//as u write in english I dont get any patience to read it...i'm poor in english vocabulary....//

அன்பான அனானி - தமிழில் வந்த என் மறுமொழிகளை நீங்கள் படித்ததில்லை என்று புரிகிறது. சில சமயங்களில் ஆங்கிலம் வரும். அவ்வளவே!

// ...you already have scolded marudhan in some other comments...//

திரு மருதனை ஏன் திட்டுகிறேன் என்பதற்கு இவரின் பதிவுகளில் முன்னர் நான் எழுதிய மறுமொழிகளை படிக்கவும். தெளிவாக சொல்லி இருக்கிறேன்! ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால், மாவோ மற்றும் ஸ்டாலினின் துதிபாடிகள் நேர்மையான சிந்தனையாளர்களாக இருக்க முடியாது! அதுவும் ஒரு முக்கியமான தமிழ் பதிப்பு தளத்தின் எடிட்டராக இருக்கவே கூடாது!!
ஆட்டோ சங்கரை ஆண்டவனே என்று துதிப்பவர் அருவெருப்பானவரே!அவரே நேர்மையும் நாணயமும் என்ற பத்திரிகையை நடத்தினால் அதைவிட
அடாவடி எங்கேயும் கிடையாது!! Thats why!!

//காரணம், ஜனநாயகம் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யவில்லை. மாறாக, இன்னமும் அதிகப்படுததியிருக்கிறது.//

நண்பர் திரு மருதன்,
நீங்கள் விரும்பும் கம்யூனிசம் செய்த தாழ்வுகளை (ஏற்றம் என்பதே செய்யாத ஆனால் உலகிற்கே
நல்லது செய்யும் என்று ஒரு பொய் உண்டென்றால் அது கம்யூனிசம் மட்டுமே) விட ஜனநாயகத்தால் உண்டான ஏற்ற தாழ்வுகள் எவ்வளவோ மேல்.
அதை விட, இந்த ஏற்ற தாழ்வென்பது ஜனநாயகத்தால் வந்தது அல்ல. உங்களுக்கு எகனாமிக் அறிவும் பத்தாது சரித்திர அறிவும் பத்தாது! You are just a political commentator who wants to tow the line of some politically correct process prevailing at that time. What the whole world has thrown out as stupid mess is what intellectuals in India are citing as a "save all" formula. Hence Mr. Marudhan's line of writing will reflect only that!!! For he believes intellect is something that has been invented only abroad, specifically in Victorian England and Czarist Russia!!