July 11, 2011

ஸ்ட்ராண்ட் புத்தகக் கண்காட்சி - பெங்களூரு


பெங்களூரு ஸ்ட்ராண்ட் புத்தக நிலையம் நடத்திய புத்தகக் கண்காட்சியில் சென்ற வாரம் கலந்துகொண்டேன். ஜூலை 8 தொடங்கிய இந்தக் கண்காட்சி ஜூலை 17 வரை நடைபெற உள்ளது. புதிய, பழைய, அரிய புத்தகங்களை விற்பனை செய்து வரும் புகழ்பெற்ற நிறுவனம் இது. 


இலக்கியம், அறிவியல், பொது அறிவு, வர்த்தகம் என்று பல பிரிவுகளில் புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 


வண்ணப் படங்களுடன்கூடிய காபி டேபிள் புத்தகங்கள் 200, 300 ரூபாயில் கிடைக்கின்றன. குறிப்பாக, நேஷனல் ஜியாகிரஃபிக் வெளியீடுகள், அறிவுக் களஞ்சியம் போன்றவை. 

நான் பார்த்தவரை, இந்த வண்ணப் புத்தகங்களைப் பலரும் புரட்டிப் பார்த்துவிட்டு You get everything in net yaar என்று நகர்ந்துவிடுகிறார்கள். சமையல் புத்தகங்களில் இருந்து சில ரெசிபிக்களைத் தேர்ந்தெடுத்து அங்கேயே நின்று படித்துக்கொண்டிருந்தார்கள்.


நவீன த்ரில்லர், கிளாஸிக்ஸ், வர்த்தகம் உள்ளிட்ட புத்தகங்களுக்கு (நான் பார்த்தபோது) நல்ல வரவேற்பு இருந்தது. அட்டையை மாற்றி, ஃபாண்டை மாற்றி, படங்கள் போட்டு வெவ்வேறு வடிவில் பல பதிப்பகத்தினர் டால்ஸ்டாயையும் ஜேம்ஸ் ஜாய்ஸையும் டிக்கன்ஸையும் கொண்டு வந்து இறக்கிக்கொண்டே இருக்கிறார்கள். 

நாவல்களைப் பொறுத்தவரை இந்திய எழுத்தாளர்களின் நூல்களை இரண்டு, மூன்று முறை யோசித்துப் பார்த்தபிறகே கையில் எடுக்கிறார்கள். John Katzenbach என்பதாக ஒரு பெயர் இருந்தால் உடனே எடுத்து ஒரு புரட்டு. உடனே பில்லிங். உடனே சிட்டிபாங்க் கார்ட்.

என் சிபாரிசு : படங்கள் கொண்ட பெரிய சைஸ் புத்தகங்கள், அட்லஸ். 

1 comment:

தீக்கனல் said...

// John Katzenbach என்பதாக ஒரு பெயர் இருந்தால் உடனே எடுத்து ஒரு புரட்டு. உடனே பில்லிங். உடனே சிட்டிபாங்க் கார்ட்.//

:-)