இலங்கை கால்பந்தாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்னும் முதல்வரின் கருத்துக்கு தி இந்து எழுதிய தலையங்கத்தை முன்வைத்து 6 செப்டெம்பர் 2012 அன்று இவ்வாறு எழுதியிருந்தேன்.
//இலங்கை அரசின் மீதான கோபத்தை இலங்கை விளையாட்டு வீரர்கள்மீதும் சுற்றுலாப் பயணிகள்மீதும் வெளிப்படுத்தியது நிச்சயம் தவறுதான். ‘இன்று பள்ளிக்கூட கால்பந்து அணியினரைத் திருப்பியனுப்பினார்கள். நாளை கிரிக்கெட் வீரர்களைத் தடை செய்யச் சொல்வார்கள். இலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் ஆன்மிகக் பயணிகளும் வரக்கூடாது என்று தடை செய்யக் கோருவார்கள். இது ஆபத்தான விளையாட்டு!’ என்னும் தி இந்து எடிட்டோரியலின் கவலையும்கூட நியாயமானதுதான்.//
அதே கட்டுரையில், தி இந்துவின் பக்கச் சார்பு குறித்தும் தெளிவுபடுத்தியிருந்தேன்.
//தமிழர்களின் கல்வீசும் செயல்பாட்டைக் கண்டித்து தலையங்கமும் கார்ட்டூனும் செய்திக்கட்டுரைகளும் தீட்டிய தி இந்து, இதே உக்கிரத்துடன், இதே தார்மிகக் கோபத்துடன் இலங்கையை என்றேனும் கண்டித்திருக்கிறதா? இல்லை எனில், இதுவும்கூட ஒருவகை வெறுப்பு அரசியல்தான் அல்லவா?//
1 comment:
அவங்க எப்படி கண்டிப்பாங்க ஸார். இலங்கையிடம் விருது வாங்கி சோறுண்டவன். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லபட்டதும். அவர்கள் சௌகர்யமாக இருப்பதாக கட்டுரை வடித்தவன்..பெரியார் பாணியில் சொல்வதென்றால் பெயரே இந்து.. வேற எப்படி இருப்பான்..
Post a Comment