மீடியா டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன், ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் இணைந்து ஜூலை 9 அன்று நடத்திய கருத்தரங்கில் புகழ்பெற்ற எழுத்தாளரும் இடதுசாரி சிந்தனையாளருமான தாரிக் அலி The State of Journalism in the 21stCentury: Celebrities, Trivia and Whistleblowers என்னும் தலைப்பில் உரையாற்றினார். 2014ம் ஆண்டு இதழியல் மாணவர்களுக்காக சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெருமளவு கூட்டம் திரண்டுவிட்டதால் பார்வையாளர்கள் பலருக்கு நிகழ்ச்சியின் இறுதி வரை அமர இடம் கிடைக்கவில்லை.
தாரிக் அலியின் உரை ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அதற்குப் பிறகு கேள்வி பதில் பகுதி. காத்திரமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தாலும் சரளமான நடையில் அபாரமான உச்சரிப்பில் இடையிடையே நகைச்சுவை கலந்து உரை அமைந்திருந்ததால் ஒரு விநாடிகூட யாருக்கும் சோர்வு தட்டியிருக்காது என்று நம்புகிறேன். ஒரே ஏமாற்றம், எடுத்துச் சென்று ஒலிப்பதிவுக் கருவி இயங்காததுதான். எனவே, நினைவில் தங்கியிருந்ததை வைத்தும் இடையிடையே எடுத்த குறிப்புகளின் அடிப்படையிலும் இதனை எழுதுகிறேன். குறைகள், குற்றங்கள் என்னுடையவை. இன்னும் ஓரிரு நாள்களில் யூட்யூபில் இந்த உரை முழுவதுமாகப் பதிவேற்றப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
2 comments:
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தற்போதிய பிரண்ட்லைன் இதழில் அவருடைய பேட்டி வந்திருக்கிறது.
Post a Comment