அவர் பெயர் நூர். ஆப்கனிஸ்தான் வாசி. நண்பர்களுடன் சேர்ந்து பீடி புகைத்துக்கொண்டே அரசியல் பேசிக்கொண்டிருந்தார். கும்பலாக வந்தார்கள். பிடித்து கீழே தள்ளி நாலு சாத்து சாத்தினார்கள். எட்டி உதைத்தார்கள். அப்படியே வாரி ஜீப்பில் போட்டு கொண்டு போய் உள்ளே தள்ளினார்கள். விசாரணை தொடங்கியது. உண்மையைச் சொல் துப்பாக்கிகளை எங்கே வைத்திருக்கிறாய் என்றான் ஒருவன். எந்தத் துப்பாக்கியை என்றார் நூர். பளாரென்று ஒரு அறை விழுந்தது. நான்கு பேர் நூரின் மீது ஏறி நின்று மிதித்தார்கள். அவர் உடைகளைக் களைந்தார்கள். ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஏவிவிடப்பட்டது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நூர் அலறியடித்துக் கொண்டு அத்தனை 'உண்மைகளையும்' கக்கிவிட்டார்.
ஆம், தாலிபன்களிடம் பயிற்சி பெற்றிருக்கிறேன். அவர்களுக்கு டிபன், காபி வாங்கித் தந்திருக்கிறேன். ஆயுதங்கள் கடத்திக்கொடுத்திருக்கிறேன். இன்னும் நான்கு போட்டவுடன் அவர் தன் வாக்குமூலத்தை நீட்டித்துக்கொண்டார். அல் காயிதாவுக்கு இன்ஃபார்மராக இருந்திருக்கிறேன். ஸ்பெயின் குண்டுவெடிப்பில் ஈடுபட்டிருக்கிறேன். அமெரிக்கர்கள் எனக்கு எதிரிகள். அமெரிக்கர்களுக்கு எதிராக மாபெரும் சதிவேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். வேறு என்னென்ன ஒப்புக்கொள்ள வேண்டுமோ சொல்லுங்கள், எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன்.
அமெரிக்கா நடத்தி வரும் சிறைச்சாலைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது க்யூபாவில் உள்ள குவாந்தணாமோ பே. ஈராக் அபு காரிப் நினைவிருக்கிறது அல்லவா? அதையே விஞ்சிவிடும் அளவுக்கு பல நவீன ரக சித்திரவதைகளை அமெரிக்கா தனது கைதிகள் மீது தொடர்ந்து இங்கே பிரயோகித்து வருகிறது.
சாம்பிள் வேண்டுமா? ஒரு நாற்காலியில் உட்கார வைப்பார்கள். கண்கள் செருகி தலை சாயும்வரை காத்திருப்பார்கள். பிறகு பளீரென்று கன்னத்தில் ஒரு அறை விழும். அதிர்ந்து போய் நிமிர்ந்து உட்காரும் வரை காத்திருப்பார்கள். சிறிது நேரம் ஒன்றும் செய்ய மாட்டார்கள். மீண்டும் அசதியுடன் கண்களை மூடும் போது, துப்பாக்கிக் கட்டையால் மண்டையில் இடிப்பார்கள். தொடர்ந்து பல மாதங்கள் தூங்க விடாமல் இப்படியே அலைக்கழிக்கப்பார்கள். அல்லது அசந்து தூங்கும்போது எட்டி உதைத்து எழுப்பி, இன்னொரு செல்லுக்கு அழைத்துச்சென்று உட்காரவைப்பார்கள். இங்கேயாவது தூங்கலாம் என்று கண்களை மூடும்போது, உதைத்து எழுப்பி பழைய செல்லுக்குக் கூட்டிப்போவார்கள்.
ஒரு ஸ்டூலின் முனையில் தொடர்ந்து 15 மணி நேரம் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். தலையை சாய்த்தாலோ, உடல் லேசாக நடுங்கினாலோ தீர்ந்தது கதை. ஐந்து, ஆறு பேர் ஒன்றாகச் சேர்ந்து ஒரே நேரத்தில் மிருகத்தமனாகத் தாக்குவார்கள். பைத்தியம் பிடித்துவிடும். அல்லது செத்துவிடலாம் என்று தோன்றும்.
விடமாட்டார்கள். நாள் கணக்கில், வாரக் கணக்கில் பட்டினி போடுவார்கள். திடீரென்று, ஒரு நாள் ரொட்டித் துண்டை வீசி எறிவார்கள். நாய்களுக்கு வீசுவதைப் போல. பாய்ந்து வந்து ரொட்டியை பிடுங்கும்போது, குச்சியால் தட்டிவிட்டு கத்துவார்கள். 'உனக்கும் அல் காயிதாவுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா?' 'ஆமாம், ஆமாம், ஆமாம்' என்று கத்தலாம் போல் தோன்றும்.
தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து தண்ணீரில் மூழ்கடிப்பார்கள். மூச்சு திணறும்போது வெளியில் இழத்து, ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள் மீண்டும் உள்ளே தள்ளி அமுக்குவார்கள். நடு இரவில் எழுப்பி பனியில் நிற்க வைப்பார்கள். தொடை நடுங்க விரைப்பாக நின்றுகொண்டிருக்கும்போது, குளிர்ந்த நீரை மேலே ஊற்றுவார்கள்.
மேற்படி சமாச்சாரங்கள், சாம்பிள்கள் மட்டுமே. புதிது புதிதாகச் சித்திரவதை உத்திகள் தொடர்ந்து அங்கே உற்பத்தியாகிக்கொண்டிருக்கின்றன. மனநோய் முற்றிப்போகும் வரை சித்ரவதைகள் தொடரும். 'உண்மையை ஒப்புக்கிறேன். நான்தான் ஒசாமா பின் லேடன்.' என்று அடிவயிற்றிலிருந்து பேயாகக் கத்தும் வரை ஓயமாட்டார்கள். ஒருவேளை நான்தான் பின்லேடனோ என்று அடைபட்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் மெய்யாகவே குழப்பம் வந்துவிடும்.
நானூறு மில்லியன் டாலர் செலவு செய்து குவந்தணாமோ தளத்தை உருவாக்கியிருக்கிறது அமெரிக்கா. 2002ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. இங்கிருக்கும் கூண்டுகளை கேம்ப் எக்ஸ்ரே என்று அழைக்கிறார்கள். கைதிகளுக்கு ஆரஞ்சு நிற ஆடைகள் வழங்கப்படுகின்றன. விசாரிக்கும்போது முகத்தையும் மூடிவிடுவார்கள்.
உலகின் மிக அராஜகமான சிறைச்சாலை இதுதான் என்கின்றன மனித உரிமை அமைப்புகள்.
நாங்களா? கொடுமையா? இங்கேயா? சிறை நிர்வாகிகள் மறுக்கிறார்கள். அதை துன்புறுத்துவது என்று சொல்லமுடியாது. விசாரிக்கிறோம். அவ்வளவுதான். இரும்பு இதயம் கொண்ட தீவிரவாதிகளிடம் மெதுவார்த்தைகள் பேசமுடியாது அல்லவா? ஆகவே சில சமயங்களில், சற்றே எல்லை மீறவேண்டியிருக்கிறது. மற்றபடி, பீச் ரிசார்ட் போலதான் இந்தக் கூடத்தை வடிவமைத்திருக்கிறோம். அவ்வப்போது டிவிடியில் படம் போட்டுக்காட்டுகிறோம். கூடைப்பந்து விளையாடுவதற்கும்கூட அனுமதி வழங்கப்படுகிறது. இங்கே இருப்பதற்கு அவர்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
கேம்ப் 7 என்று ஒரு பிரிவு. இங்கே அதிபயங்கர தீவிரவாதிகள் என்று கருதப்படுபவர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை இங்கேதான் வைத்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே ஒருவருக்கும் அனுமதி இல்லை. கேம்ப் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று பிரிவுகளில்தான் பெரும்பாலான பிற கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் 250 பேர் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும். அவ்வப்போது, கைதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். கேம்ப் நான்கில் இருந்து கேம்ப் ஐந்துக்கு. ஐந்தில் இருந்து ஆறுக்கு. இப்படியாக. குற்றவாளிகள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்றவாறு இந்த இடமாற்றம் அமைகிறது.
நிறைய புகார்கள் வருகிறதே, எதற்கும் பரிசோதனை செய்து பார்ப்போம் என்று எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சிலர் குவந்தணாமோ சிறைச்சாலையை தரிசித்திருக்கிறார்கள். இன்முகத்துடன் அவர்களை வரவேற்று சுற்றிக்காட்டியிருக்கிறார்கள் சிறை நிர்வாகிகள். டிவிடி இருந்தது. கூடைப்பந்து மைதானம் இருந்தது. கைதிகள் வாசிப்பதற்காக ஒரு அலமாரியில் செய்தித்தாள்கள் சீராக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட ஒரு பகுதியை சுற்றிப்பார்க்க மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மிகவும் வற்புறுத்தியபோது, தயங்கித்தயங்கி திறந்து காட்டியிருக்கிறார்கள். உள்ளே சில அடிகள் எடுத்து வைப்பதற்குள் அதிர்ந்துவிட்டார்கள் எஃப்.பி.ஐ. அதிகாரிகள். இத்தனை அநாகரீகமாக, இத்தனை பயங்கரமாக எந்த கைதிகளும் இதுவரை நடத்தப்பட்டதில்லை. குறிப்பாக, பெண் காவலர்கள் ஆண் கைதிகளை விசாரிக்கும் முறை அவர்களை அருவருப்படையச் செய்திருக்கிறது. இந்த விஷயங்கள் வெளியில் தெரிந்தால் தேசத்தின் மானம் போய்விடும் என்று ரகசியமாக மேலிடத்துக்கு மட்டும் அறிக்கை சமர்பித்திருக்கிறார்கள். எங்கோ லீக் ஆகி, எப்படியோ இந்த விஷயம் மே 2005ல் வெளிவந்துவிட்டது.
ஜூலை 2005ல் ராணுவ மேஜர் ஜெனரல் ஜியாஃப்ரி மில்லர் என்பவர் பற்றி ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. முகமது அல் கஹ்தானி என்னும் கைதியை இவர் நடத்திய விதம் சரியில்லை. பெண்கள் அணியும் உடைகளை எடுத்து வீசி அணியச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். அந்த உடைகளை அணிந்துகொண்டு சிறையை வலம் வரச் செய்து அவமானப்படுத்தியிருக்கிறார். இன்னொரு கைதியையும் இவரையும் ஒன்றாக இணைத்து, நீங்கள் இருவரும் இனி காதலர்கள், எங்கே டூயட் ஆடுங்கள் பார்ப்போம் என்று நாற்காலி போட்டு உட்கார்ந்து இருவரையும் ஆட வைத்து ரசித்து மகிழ்ந்திருக்கிறார்.
எண்ணற்ற குற்றச்சாட்டுகள். கட்டுக்கட்டாகப் புகார்கள். மனித உரிமை காவலர்களின் தொடர் போராட்டம். அனைத்தையும் மீறி இந்த சிறை இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒபாமா அமெரிக்காவுக்கு அளித்திருக்கும் நீண்ட வாக்குறுதி பட்டியலில் குவந்தணாமோ பே சிறை இடம்பெற்றிருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் இந்த சிறைச்சாலை ஒரு மோசமான அத்தியாயம். உலகம் எங்கிலும் இருந்து பெரும் எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டிருப்பதை நான் அறிவேன். நான் ஆட்சிக்கு வந்தால், உடனடியாக, இந்த சிறைச்சாலையை இழுத்து மூடுவேன்.
ஆனால் இது சாத்தியமில்லை என்கிறார்கள் சிறை அதிகாரிகள். சொல்லவேண்டுமே என்பதற்காகச் சொல்லியிருப்பார். ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் இதை மூடமுடியாது. அப்படியே மூடினாலும் வேறு எங்காவது கிளையைத் திறந்துவைத்துவிட்டுதான் இதை மூடமுடியும். இது ஒபாமாவுக்கும் தெரியும்.
(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை)
December 29, 2008
December 23, 2008
டிக்கெட் சாப்பிட்ட சிறுவன்
நேற்று மாலை நடைபெற்ற கிழக்கு மொட்டைமாடிக்கூட்டத்தைப் பற்றி நண்பர் ஹரன் பிரஸன்னா இங்கே விரிவாக எழுதியிருக்கிறார். யுவ கிருஷ்ணா (லக்கி லுக்) எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகத்தை அறிமுகம் செய்து வைத்து உரையாடினார் சோம. வள்ளியப்பன். நான் எழுதிய மால்கம் எக்ஸை வெளியிட்டவர் பா. ராமசந்திரன். த.மு.எ.ச. இயக்கத்தைச் சேர்ந்தவர்.பெற்றுக்கொண்டவர் வெங்கடேஷ்.

சமீபத்தில் பார்த்த குறும்படத்தின் கதையை விவரித்தார் பா. ராமசந்திரன். பேருந்து ஒன்றில் வெள்ளையர்கள் சிலர் ஏறுகிறார்கள். அவர்கள் அமரும் இருக்கைக்குப் பக்கத்தில் சில கறுப்பினச் சிறுவர்கள் உற்சாகத்துடன் கதை பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஐயோ தொட்டால் தீட்டு வந்துவிடுமே என்னும் பயம் வெள்ளையர்களுக்கு. முகத்தைச் சுளித்துக்கொள்கிறார்கள். சங்கடத்துடன் நெளிகிறார்கள்.
சிறுவர்களுக்கு இது தெரிந்துவிடுகிறது. இது அவர்களுக்குப் புதிதல்ல. வெள்ளையர்கள் கற்றுத்தந்திருக்கும் பாடம் இது. உன் தோலின் நிறம் கறுப்பு ஆகவே நீ இழிவானவன்.
அவமானத்தால் வாடிப்போகும் அந்த சிறுவர்கள் ஏதாவது செய்யமுடியுமா என்று பார்க்கிறார்கள். டிக்கெட் பரிசோதகர் பேருந்துக்குள் நுழைகிறார். சட்டென்று ஒரு சிறுவன், அருகில் இருந்த வெள்ளையரின் கையில் இருந்த டிக்கெட்டை பிடுங்கி வாயில் போட்டு மென்று விழுங்கிவிடுகிறான்.
எங்கே டிக்கெட் என்று பரிசோதகர் கேட்டபோது திருதிருவென்று விழித்த அந்த வெள்ளையர் கறுப்பினச் சிறுவனைச் சுட்டிக்காட்டி, அவன் சாப்பிட்டுவிட்டான் என்கிறார். நம்ப மறுத்த அந்த பரிசோதகர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார். கேள்வி மேல் கேள்வி. ரசித்து ரசித்து சிரிக்கிறார்கள் சிறுவர்கள். என்னையா அவமானப்படுத்திறாய்? உனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.
மால்கம் எக்ஸின் கோபம் இந்த சிறுவர்களின் கோபத்தைப் போன்றதுதான். அடித்தால் திருப்பி அடி என்றார் அவர்.
மால்கம் எக்ஸ் தொடர்பாக எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு நான் திருப்திகரமாக பதிலளித்தேனா என்று தெரியவில்லை. மேடையில் பேசி எனக்குப் பழக்கமில்லை. திணறிவிட்டேன். ஆகவே, அந்தக் கேள்விகளைத் தொகுத்து இங்கே பதிலளிக்கிறேன்.

ஒரு கோப்பை சூஃபி
திங்கள் அன்று இரண்டு புத்தகங்கள் கிழக்கு மொட்டை மாடியில் அறிமுகப்படுத்தப்பட்டன. பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்த்த வோல்ட்டேரின் கேண்டீட். அறிமுகப்படுத்தி உரையாடினார் மாலன். நாகூர் ரூமியின் சூஃபி வழி. பா. ராகவன் அறிமுகப்படுத்தினார்.
சூஃபிஸத்தை மத நோக்கில் அணுகவேண்டியதில்லை, அது எல்லோருக்கும் பொதுவான வாழ்க்கை முறை என்றார் பாரா. ஆனாலும், விவேகானந்தர், பரமஹம்ஸர், ஆண்டாள் என்று அவர் சொன்ன உவமைகள் அனைத்திலும் இந்து மதக்கூறுகள் இடம் பெற்றிருந்தன. இவர்கள் அனைவரும் சூஃபிகள்தான் என்றார் அவர்.
இஸ்லாம் தொடங்குவதற்கு முன்னரே சூஃபிஸம் (அப்போது இந்தப் பெயர் இல்லை) அறிமுகமாகிவிட்டது என்றும் இஸ்லாம் தழைத்தபிறகும் சூஃபி தனியே வளர்ந்துகொண்டுதான் இருந்தது என்றும் குறிப்பிட்டார் நாகூர் ரூமி. இஸ்லாத்தில் இருந்து சூஃபிஸத்தைத் தனியே பிரித்தெடுக்க எப்போதும் முயற்சிகள் நடந்துவந்திருக்கின்றன.
அன்று நடைபெற்ற விவாதங்கள் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு சூஃபியும் ஒவ்வொரு விதமாக உலகத்தை அணுகியிருக்கிறார். அவர்கள் பார்வை வேறுபடுகின்றன. அவர்கள் முன்வைக்கும் தத்துவம் வெவ்வேறானவை. பௌத்தத்தோடு ஜென் தொடர்பு கொண்டிருப்பது போல், இஸ்லாத்தோடு சூஃபி தொடர்புகொண்டிருக்கிறது. சார்ந்திருக்கிறதா என்பது கேள்விக்குரியது. சூஃபி இறை நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஆனால், பொதுவான சடங்குகளை, சம்பிரதாயங்களை, கற்பிதங்களை கேள்விக்கு உள்ளாக்குகிறது. பரிகசிக்கிறது. சின்ன சின்ன கதைகள் மூலம் சில எளிமையான தத்துவங்களைக் கட்டமைக்கிறது.
கிட்டத்தட்ட அனைத்து மதங்களிலும் நாத்திகக் கூறுகள் அடங்கியிருக்கின்றன. இந்து மதத்தின் மீது பற்றுள்ளவர்களில் சிலர் சிலை வழிபாட்டை நிராகரிக்கிறார்கள். சம்பிரதாயங்களை, சடங்குகளை நிராகரிக்கிறார்கள். முருகன், ராமன் எல்லாம் சும்மா ஆனால் மேலான பரம்பொருள் ஒன்று அங்கே உண்டு என்று வானத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். கோவிலுக்குப் போய்தான் வணங்கவேண்டும் என்றில்லை, எங்கும் இறைவன் வியாபித்திருக்கிறார் என்கிறார்கள்.
காந்தி, திலகர், விவேகானந்தர் ஆகியோர் இந்து மதத்தை சீர்திருத்த முயன்றவர்கள். ஓவ்வொரு மதத்திலும் இப்படிப்பட்ட தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள். இஸ்லாம் உள்பட. மதம் என்னும் நிறுவனம் வளத்துடனும் பலத்துடனும் நீடித்து வாழ இதுபோன்ற சீர்திருத்தங்கள் அவ்வப்போது தேவைப்படுகின்றன. Dogmatic ஆக இருந்தால் வளர்ச்சி தடைபடும். அந்த வகையில், மதவாதிகளின் நோக்கமும் சீர்திருத்தவாதிகளின் நோக்கமும் ஒன்றேதான். மதம் தழைக்கவேண்டும். எப்படித் தழைக்கவேண்டும் என்பதில்தான் கருத்து வேறுபாடு.
சீர்திருத்தப்பட்ட மதம், சீர்திருத்தப்படாத மதம். இரண்டையும் நான் நிராகரிக்கிறேன். சூஃபி வழி, கேண்டீட் இரு நூல்களையும் பற்றி பின்னர் இங்கே விரிவாக எழுதுகிறேன்.

December 20, 2008
அறிவிப்பு : மால்கம் எக்ஸ் நூல் அறிமுகம்
ஜனவரி புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு கிழக்கு அலுவலக மொட்டை மாடியில் அடுத்த வாரம் முழுவதும் தினமும் மாலை 6.00 மணிக்கு சில முக்கிய நூல்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
வரும் செவ்வாய் அன்று (23.12.05) எனது மால்கம் எக்ஸ் நூல் அறிமுகப்படுத்தப்படுகிறது. புத்தகத்தைப் பற்றி பா. ராமச்சந்திரன் (துறைமுகத் தமிழ்ச்சங்க செயலாளர், த.மு.எ.ச மாநிலக் குழு உறுப்பினர்)பேசுகிறார்.

பிற நூல்கள் பற்றிய விவரங்கள் இங்கே.

December 15, 2008
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 160 ஆண்டுகள்
வெளிவந்து 160 ஆண்டுகள் கழிந்துவிட்டன. என்றாலும் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. எதிர்க்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. முதலில் வெளிவந்தது 1848ம் ஆண்டில். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த அறிக்கை பெர்லினில் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கு பிறகு பல்வேறு மொழிகளில் பல்வேறு பதிப்புகள் வந்துவிட்டன. தேவை இன்னமும் குறைந்தபாடில்லை.
1883ல் வெளிவந்த ஜெர்மானிய பதிப்பின் அட்டையில் காரல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவருடைய பெயரும் இருந்தன. அதன் முன்னுரையில் எங்கெல்ஸ் தெளிவுபடுத்தினர். உண்மையில் இது மார்க்சின் தனிப்பட்ட படைப்பு. அறிக்கையின் அடிப்படை சாரம் முழுக்க முழுக்க மார்க்சையே சாரும். தவிரவும், லண்டனில்
கம்யூனிசத்தை அப்போதைய உலகம் எப்படிப் பார்த்தது என்பதை அறிக்கையே வெளிப்படுத்துகிறது. கம்யூனிசம் என்னும் பூதம் ஐரோப்பா முழுவதையும் சுற்றிவருவதாக பீதி கிளம்பியிருக்கிறது. காவல் துறையினர், உளவாளிகள், அரசாங்கங்கள், மன்னர்கள் என்று அனைவரும் கம்யூனிசத்தைக் காட்டி மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? கம்யூனிசம் என்பது ஒரு சக்தி என்பதை ஐரோப்பிய நாடுகள் ஒப்புக்கொள்கின்றன.
இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது. கம்யூனிசம் என்றால் என்ன? கம்யூனிஸ்ட்களின் லட்சியம் என்ன? நோக்கம் என்ன? நம் பார்வை எப்படிப்பட்டது? அனைத்தையும் நாம் பட்டவர்த்தனமாக அறிவித்தாகவேண்டும். நம் நிலையை நாம் தெளிவுப்படுத்தியாகவேண்டும். ஆகவே, இந்தப் பிரகடனம்.
வசீகரிக்கும் சில முக்கிய லட்சியங்களை அறிக்கை அடுக்கியது. குழந்தைகள் அனைவருக்கும் இலவச கல்வி. குழந்தைத் தொழிலாளர்கள் என்று ஒருவரும் இருக்கமாட்டார்கள். நகரத்துக்கும் கிராமத்துக்குமான இடைவெளி குறைக்கப்படும். பிறகு, அழிக்கப்படும். நகரம், கிராமம் என்று பேதமில்லாமல் மக்கள் பரவலாக வசிப்பார்கள். தரிசாகக் கிடக்கும் நிலங்கள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும். தகவல், போக்குவரத்து ஆகியவற்றை அரசாங்கம் நிர்வகிக்கும். வங்கிகள் தேசியமயமாக்கப்படும். தனிச்சொத்துரிமை கிடையாது.
கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்யவேண்டும்? மக்களிடையே உண்மையை பரப்பவேண்டும். பணக்காரர்களும் ஏழைகளும் எப்படித் தோன்றுகிறார்கள் என்பதை புரியவைக்கவேண்டும். ஒரு வர்க்கமாக தொழிலாளர்கள் ஒன்றிணையவேண்டிய அவசியத்தை உணர்த்தவேண்டும். தற்போதைய அரசியல் அமைப்பை எதிர்த்து போராடுபவர்களுக்கு கம்யூனிஸ்டுகள் உதவிசெய்யவேண்டும்.
கம்யூனிசப் புரட்சி ஆளும் வர்க்கத்தை நடுநடுங்கசெய்யவேண்டும். தொழிலாளர்கள் இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளைத் தவிர. பெறுவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!
லாபம், மேலும் லாபம் என்று பணத்தைத் துரத்திக்கொண்டிருந்த முதலாளிகளை இந்த அறிக்கை இம்சித்தது. தொழிலாளர்கள் இந்த அறிக்கையை வாசித்து புதிய தெம்பையும் நம்பிக்கையையும் பெற்றார்கள். இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா என்று ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல்லாயிரக்கணக்கானவர்கள் புதிய வெளிச்சத்தை கண்டனர். இது நம் தலைவிதி, கடவுள் நமக்கு கொடுத்தது இவ்வளவுதான் என்று ஏழைமையை வேறு வழியின்றி சகித்துக்கொண்டிருந்தவர்கள், துணிந்து கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை வீட்டுக்குப் போ என்று நினைத்த மாத்திரத்தில் கழுத்தைப் பிடித்து தள்ளும் நிலை மாறியது. ஏன் என்ன காரணம் என்று தொழிலாளி திருப்பிக் கேட்க ஆரம்பித்தார். வேலை நேரங்கள் திருத்தி அமைக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் உருவெடுத்தன. ஆண்களுக்குத் தனி பெண்களுக்குத் தனி என்றிருந்த ஊதிய முறை மாற்றிமைக்கப்பட்டது.
1917 அக்டோபரில் லெனின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட ரஷ்யப் புரட்சி, கொடுங்கோல் ஜார் ஆட்சியை வீழ்த்தியது. புதிய சோவியத் யூனியன் மலர்ந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கம்யூனிஸ்ட் தேசங்களாக மாறின. 1949ல் சீனா கம்யூனிஸ்ட் நாடானது. 1959ல் க்யூபா. மிகச் சமீபத்தில், நேபாளம். இந்த தேசங்களில் சில உயிர்ப்புடன் கம்யூனிசத்தைப் பாதுகாக்கின்றன. சில தவறவிட்டுவிட்டன. ஆனால், கம்யூனிசம் உயிர்ப்புடன் இருக்கிறது.
பிபிசி சர்வே ஒன்றை நடத்தியது. உங்கள் பார்வையில் உலகத்தை மாற்றியமைத்த பெருமகனார் யார்? காந்தி, மண்டேலா, மார்ட்டின் லூதர் என்று பலரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், மக்கள் முன்வைத்த பெயர் காரல் மார்க்ஸ். வரலாறு, அரசியல், தத்துவம், பொருளாதாரம், இலக்கியம், கலை என்று மார்க்சியம் செழுமைப்படுத்தியுள்ள துறைகள் ஏராளம்.
உலகை இன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பூதம், ஏகாதிபத்தியம். வால் மார்ட் சரிந்துகிடக்கிறது. விலைவாசி உச்சத்தில். லாபத்துக்காக தேசங்கள் ஒன்றோடொன்று போரிட்டுக்கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கல் என்னும் சிலந்தி வலைப்பின்னலில் பூச்சிகள் போல் ஏழைகள் சிக்கிக்கிடக்கிறார்கள். சிக்கலில் இருந்து விலகிக்கொள்ள மாத்திரமல்ல, சிலந்திகளைப் பற்றி விலாவரியாகத் தெரிந்துகொள்ளவும் இந்த அறிக்கை அவசியம்.
அறிக்கையின் முழுவடிவம் இங்கே.
கல்கியில் சென்ற வாரம் வெளிவந்த என் கட்டுரை. (நன்றி : கல்கி)

அயர்லாந்து 800 ஆண்டுகாலப் புரட்சி
என். ராமகிருஷ்ணனின் அயர்லாந்து அரசியல் வரலாறு சமீபத்தில் கிழக்கில் வெளிவந்துள்ளது. எனக்குத் தெரிந்து தமிழில் அயர்லாந்து பற்றி விரிவாக யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. எஸ்.வி. ராஜதுரை ஒரு புத்தகம் எழுதியிக்கிறார். நான் இன்னும் வாசிக்கவில்லை.
ரஷ்யப் புரட்சியைப் போலவே அயர்லாந்து போராட்டமும் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காந்தியின் அறவழிப் போராட்டம் வேண்டாம், ஐரிஷ் மக்களைப் போல் நாமும் போராடுவோம் என்று அழைப்பு விடுத்தார் சுபாஷ் சந்திர போஸ்.
இந்தியாவைப் போலவே அயர்லாந்தும் பிரிட்டனின் காலனி நாடுதான். முதல் உலகப் போரை (1914-1918) ஐரிஷ் மக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். பிரிட்டனுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முடுக்கிவிட்டார்கள். இங்கே இந்தியாவில் காந்தி, நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். போரில் ஈடுபட்டிருக்கும்போது பிரிட்டனை எதிர்ப்பது சரியல்ல அவர்களுக்கு உதவவேண்டிய சமயம் இது என்றார்.
புத்தகத்தின் பின் அட்டை வாசகங்கள் கீழே.
அப்போதைய இங்கிலாந்தின் படைபலத்தோடு ஒப்பிட்டால் அயர்லாந்து சுண்டைக்காயைவிடச் சிறியது. மிதிக்கக்கூட வேண்டாம், தடவினாலே தடமின்றி போகும் அளவுக்குப் பூஞ்சையான தேசம் அது. அயர்லாந்து மக்கள் ஆட்டு மந்தைகள். அவர்களை அடக்கி அடிமைப்படுத்துவதில் தவறேதுமில்லை. இப்படித்தான் நினைத்தது இங்கிலாந்து. எதிர்பார்த்தபடியே சிறு எதிர்ப்பும் இன்றி அடங்கி சுருண்டுபோனது அயர்லாந்து.
தங்கள் மொழி, இனம், கலாசாரம், அடையாளம் அனைத்தும் சிறிது சிறிதாக அழிக்கப்படுவதைக் கண்ணால் கண்டு துடிதுடித்து நின்றனர் ஐரிஷ் மக்கள். வழிகாட்ட தலைவர் இல்லை. எதிர்த்து நின்று போராடுவதற்குப் படைபலம் இல்லை. ஒன்றுபடுத்தவும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் வலிமையான அரசியல் சித்தாந்தம் எதுவும் இல்லை. தேசம் காக்கப்படவேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மீட்பர் ஒருவர் வருவார், நிலைமை தாமாகவே மாறும் என்று கன்னத்தில் கைவைத்துக் கிடப்பதால் பலன் ஏதும் இல்லை. சிறு துரும்பையாவது கிள்ளிப்போடலாமே!
இப்படித்தான் தொடங்கியது அந்த வீரம்செறிந்த போராட்டம். சுமார் 800 ஆண்டு கால இடைவிடாத போராட்டத்தின் இறுதியில் அயர்லாந்து சுதந்தரம் அடைந்தது. உரிமைகளுக்காகக் கொடிபிடிக்கும் உழைக்கும் மக்களின் உந்துசக்தியாகத் திகழும் மகத்தான போராட்ட வரலாறு அது.

December 13, 2008
மாவோ : என் பின்னால் வா!
கடுமையைப் பிரயோகிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. இப்போதே நாலு தட்டு தட்டி வைக்கவேண்டும். இல்லாவிட்டால், ஒட்டுமொத்தமாக அழிந்துபோகவேண்டியதுதான். செம்படைவீரர்களைத் திரட்டினார்.
தோழர்களே, உங்களிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறேன். நீங்கள் அனைவருமே என் தோழர்கள்தாம். ஆனால், உங்களில் சிலர் நம் இயக்கத்துக்கு விரோதமான வழியில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள். அது தவறான பாதை என்று உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆகவே, எது சரி எது தவறு என்று உங்களுக்குத் தெரியப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். கவனிக்கவும். மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கமாட்டேன். அவ்வப்போது சில விதிமுறைகளை உங்களுக்கு வழங்குவேன். வழுவாமல் நடந்துகொள்ளுங்கள்.
மூன்று கட்டளைகளைப் பிறப்பித்தார் மாவோ. உங்கள் தளபதி எதைச் சொன்னாலும் அதை அப்படியே செய்யவேண்டும். மலையில் இருந்து குதி என்றால் குதித்துவிடவேண்டும். துப்பாக்கியை உன் தலையில் பொருத்தி சுடு என்றால் சுட்டுவிடவேண்டும். ஏன் எதற்கு என்று அநாவசியமாகக் கேள்வி கேட்கக்கூடாது. இரண்டாவது கட்டளை. விவசாயிகளிடம் இருந்து எதையும் கைப்பற்றக்கூடாது. அவர் இதை எடுத்துக்கொண்டார் அதை எடுத்துக்கொண்டார் என்று ஏதாவது புகார் வந்தால் சம்பந்தப்பட்ட நபர் (அவர் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி) மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்.
மூன்றாவது கட்டளை முக்கியமானது. நிலப்பிரபுக்கள் நம் எதிரிகள். உண்மைதான். அவர்கள் சுருட்டி மடக்கி வைத்திருக்கும் பொருள்கள் மக்களுக்குச் சொந்தமானவை. கைப்பற்றப்பட்ட அத்தனை பொருள்களுக்கும் சம்பந்தப்பட்ட வீரர்கள் கறாராகக் கணக்கு வைத்திருக்கவேண்டும். ஒன்று விடாமல் அத்தனை பொருள்களையும் அரசாங்கத்திடம் சேர்ப்பிக்கவேண்டும். இதில் எந்தவித தகிடுதத்தங்களும் இருக்கக்கூடாது.

மேலும் எட்டு விதிமுறைகளை மாவோ உருவாக்கினார்.
1) சீன வீடுகளில் உள்ள மரக்கதவுகளை எளிதாகக் கழற்ற முடியும். இரவு நேரங்களில் கதவைக் கழற்றி அடுக்கிவைக்கப்பட்ட மரக்கட்டைகளுக்கு மேலே வைத்து கட்டிலைப் போல் பயன்படுத்துவார்கள். மக்கள் ராணுவத்தினரை வீட்டுக்கு வரவேற்று உபசரித்து இரவு நேரங்களில் அவர்களை வீட்டில் தங்கவைப்பது வழக்கம். ஒரு வீட்டை விட்டு வெளியேறும்போது, கதவை மீண்டும் அதன் இடத்தில் பொருத்தி வைத்துவிட்டுத்தான் வெளியேறவேண்டும். இது என்ன அத்தனை முக்கியமா? நாம் பொருத்தாவிட்டால் வீட்டில் இருப்பவர்கள் பொருத்திக்கொள்ளப்போகிறார்கள் என்று நினைத்து அசட்டையாக இருந்துவிடக்கூடாது. அடிப்படை ஒழுங்கு காப்பாற்றப்படவேண்டும். உதவி செய்பவர்களுக்கு உபத்திரம் அளிக்கக்கூடாது.
2) இரவு நேரங்களில் வரும் செம்படை வீரர்கள் உறங்குவதற்கு வைக்கோல் பாய் வழங்கப்படுவது வழக்கம். காலை எழுந்ததும் அப்படியே கிளம்பிவிடாமல், வைக்கோல் பாயைச் சரிவர சுருட்டி அதன் உடைமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டுதான் திரும்பவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் மக்களின் நன்மதிப்பை சம்பாதித்துக்கொள்ள முடியும்.
3) செம்படை வீரர்கள் என்றால் கடவுள் என்று அர்த்தமில்லை. விவசாயிகளைவிட, மக்களைவிட எந்த வகையிலும் நாம் உயர்ந்தவர்கள் கிடையாது. யாரும் நம்மைவிட தாழ்ந்தவர்கள் கிடையாது. இந்த ராணுவ உடுப்பும் மிடுக்கும் அதிகாரமும் பணியில் இருக்கும் வரைதான். தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால் மற்றவர்களும் நாமும் சமமே. உங்களுக்கு மக்களுடைய உதவி தேவை எனில், பணிவுடன் அவர்களை அணுகவேண்டும். எனக்கு இது தேவை அளிக்க முடியுமா என்று கேட்கவேண்டும். அதே போல், முடிந்தவரை மக்களுக்கு உதவவேண்டும். தண்ணீர் எடுத்து வந்து தரலாம், வீட்டு வேலைகள் செய்யலாம், வீடுகளைப் பழுது பார்க்கலாம், ஆடு மாடுகளைக் கவனித்துக்கொள்ளலாம்.
4) சில சமயம் பிறரிடம் இருந்து கடன் வாங்கி நம் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறோம். காலணி வாங்குவதற்கோ, உடுப்புகளைச் சரிசெய்து கொள்வதற்கோ நமக்குப் பணம் தேவைப்படுகிறது. நம் எதிரிகளைப் போல் நமக்கு எல்லா வசதிகளும் கிடைப்பதில்லை. கம்யூனிஸ்ட் கட்சி செல்வந்தர்களைக் கொண்டு நடத்தப்படுவது கிடையாது. ஆகவே கடன் வாங்குகிறோம். இந்தக் கடனை திரும்பச் செலுத்துவதுதான் நாகரிகம். திரும்பச் செலுத்தாமல் அந்தப் பகுதியைவிட்டு அகலக்கூடாது.
5) யாருடைய உடைமைகளையும் சேதப்படுத்தக்கூடாது. ஒருவேளை உங்களை அறியாமல் பிறருடைய பொருள்கள் சேதம் அடைந்துவிட்டால், அல்லது எதிரிகள் நம் மக்களின் உடைமைகளைச் சேதப்படுத்திவிட்டால், அந்தச் சேதத்தை ஈடுகட்டுவது நம் அனைவருடைய கடமையாகும். நமக்கென்ன போச்சு என்று விட்டேத்தியாக இருந்துவிடக்கூடாது.
6) ஏழைகளிடம் நேர்மையுடன் நடந்துகொள்ளவேண்டும். அவர்களை ஏமாற்றினால் யாருக்கும் தெரியப்போவதில்லை. ஆனால், ஒரு சிறந்த ராணுவ வீரனுக்கு நேர்மை அடிப்படையானது.
7) சில சமயம் மக்கள் தானாக முன்வந்து உங்களுக்குச் சில பொருள்களை அளிப்பதுண்டு. மக்களின் பெருந்தன்மையைக் குறிக்கும் செயல் அது. சில சமயங்களில் நம் உடுப்புகளைக் கண்டு பயந்தும்கூட அவர்கள் சில உடைமைகளை நம்மிடம் அளித்துவிடுவதுண்டு. சுரண்டும் அதிகாரிகளின் மத்தியில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் அவர்கள். அதிகாரிகளை விரோதித்துக்கொண்டால் பிழைப்பு நடக்காது என்று தெரிந்து அவர்கள் இதுபோன்ற பரிசுகளை அவ்வப்போது வழங்குவதுண்டு. அதை நாம் நமக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நாம் மற்றவர்களைப் போன்றவர்கள் அல்லர் என்பதை அவர்களுக்கு உணர்த்தியாகவேண்டும். வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குண்டான பணத்தைக் கொடுத்துவிடுங்கள்.
8) சுத்தம். அது முக்கியம். மக்களுடன் இணைந்து தங்கும்போது, அவர்கள் வீடுகளில் இருந்து போதிய இடைவெளி விட்டு கழிப்பறைகளை உருவாக்கி பயன்படுத்தவேண்டும்.
இந்த விதிகளோடு முடிந்துபோகவில்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது விதிகளை உருவாக்கிக்கொண்டிருந்தார் மாவோ. மக்களிடம் இருந்து சிறு புகார் எழுந்தாலும், அதை குறித்துவைத்துக்கொண்டார். அந்த ராணுவ வீரனின் பெயர் என்ன, அவன் பார்ப்பதற்கு எப்படி இருந்தான் போன்ற விபரங்களைச் சேகரித்துக்கொண்டார். பிறகு, விசாரணை நடத்தி தவறு செய்த வீரனை கண்டுபிடித்து முறைப்படி தண்டித்தார்.
மாவோ, அடிப்படை ஒழுக்கம் பற்றிய விதிகளை மட்டும் உருவாக்கவில்லை. ராணுவ விதிகளையும் சேர்த்தே உருவாக்கினார். எதிரிகளுடன் சரிக்குச் சமானமாக நின்று போராடவேண்டும். எந்த நிலையிலும் சண்டையை நிறுத்திக் கொள்ளக்கூடாது. வெற்றி அல்லது வீர மரணம். இரண்டில் ஒன்றை அடையும் வரை போராட்டம் தொடரவேண்டும்.
பிறகு, மக்களை ஆயுதபாணியாக்குவது குறித்த விதி. விவசாயிகளின் பணி முடிந்ததும் ஓரிடத்தில் கூட்டி வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. துப்பாக்கியை குறிபார்த்து இயக்கும் பயிற்சி. மறைந்திருந்து தாக்கும் உத்தி. எதிரிகளிடம் சிக்கிக்கொள்ளாமல் மறைந்திருக்கும் உத்தி. வெடிகுண்டுகளை வீசுவதற்கும் பாய்ந்து வரும் வெடிகுண்டிடம் இருந்து தப்பிக்கும் கலை. இன்னமும் நிறைய.

சே, காஸ்ட்ரோ, லெனின் - சில குறிப்புகள்
‘...ஒருபக்கம் வெடிமருந்துகள், ஆயுதங்கள். மற்றொரு பக்கம் மருந்துகள். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே நான் சுமந்துசெல்லவேண்டும். இப்படி ஒரு சங்கடமான சூழ்நிலையில் நான் மாட்டிக்கொள்வது இது தான் முதல் முறை. நான் இப்போது என்ன செய்யவேண்டும்? ஒரு மருத்துவனாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு புரட்சிக்காரனாகவா? இரண்டு பெட்டிகளுமே என் கால்களுக்கு கீழே கிடக்கின்றன. பேசாமல் கீழே குனிந்து ஆயுதங்கள் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டு கரும்பு தோட்டத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன். ஃபாஸ்டினோ முழுங்காலிட்டு அமர்ந்தபடி இயந்திரத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்கிறான். தோழன் அல்பெண்டோஸா என்னோடு கரும்புத் தோட்டத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறான்.
திடீரென்று துப்பாக்கி வெடிக்கத்தொடங்கியது. கணநேரத்திற்கும் குறைவான ஒரு பொழுதில் அது நடந்துவிட்டது. என் நெஞ்சில் வலி. என் கழுத்தில் காயம். நான் இறந்துவிட்டேனோ என்று கூடத் தோன்றியது. அல்பெண்டோஸாவின் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. இது .45 காலிபர் துப்பாக்கியின் வேலை! ’என்னே சாகடித்துவிட்டார்களே!’ என்று அல்பெண்டோஸா கத்திக்கொண்டிருந்தான். அவனுக்கு வலியும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வந்தது. உடனே தனது துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத்தொடங்கினான். நான் அப்படியே தரையில் படுத்துக்கொண்டேன். நூன் ஃபாஸ்டினோவிடம் கத்தினேன். ’என் கதையை முடித்துவிட்டார்கள்!’ ஃபாஸ்டினோ தொடர்ந்து சுட்டுக்கொண்டேயிருந்தான். அவன் ஒரு முறை என்னைத் திரும்பிப்பார்தான். அவனைப் பொறுத்தவரையில் நான் இறந்துவிட்டேன்....’
- சே குவேரா
Episodes of the Cuban Revolutionary War 1956-58, by Ernesto Che Guevara. In the Militant, Vol. 59, no. 48, 25 December 1995
‘ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சகட்ட வளர்ச்சி. ஏகாதிபத்தியம் தழைத்துவிட்டால் தனி மேலாதிக்கம் நிலைபெற்றுவிடும். சர்வதேச அமைப்புகள் உலகத்தின் பிரதேசங்களை கூறுபோடத் தொடங்கும். உலகின் வளமான பகுதிகள் அனைத்தையும், முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் பிரித்தெடுத்துக்கொள்ளும். சிறிய பலகீனமான நாடுகளை, பெரிய பலம்பொருந்திய நாடுகள் ஒடுக்கி ஆளும். ஒப்பீட்டளவில், மிகச்சில நாடுகளே ஏகாதிபத்தியத்தன்மையைக் கொண்டிருக்கும் என்றாலும் அவை பலம் பொருந்தியதாக இருக்கும்... ஏகாதிபத்தியம் என்பது ஒட்டுண்ணியைப் போன்றது... அது மிக விரைவாக வளரும். மிக விரைவாக தனது அழிவைச் சந்திக்கும். ஆனால் ஏகாதிபத்தியத்தியம் உதிர்ந்தால் முதலாளித்துவமும் உதிர்ந்துவிடும் என்று சொல்லமுடியாது. ஏகாதிபத்தியம் உயிர்ப்புடன் இருக்கும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அழிவுகள் ஏற்படுவதுண்டு. முதலாளித்துவத்தின் சில கூறுகள் சேதமடையவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், முதலாளித்துவம் வளர்ந்துகெண்டேதானிருக்கிறது. முன்பை விட வேகமாக. அதிவேகமாக...’
(லெனின், ஏகாதிபத்தியம்: ’முதலாளித்துவத்தின் வளர்ச்சியடைந்த நிலை’ எனும் நூலிலிருந்து)
‘...எனது குழந்தைப் பருவத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு மத்தியில் வாழும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுடைய குழந்தைகளுடன் சுற்றவும் விளையாடவும் செய்தோம். அதைப் பற்றி நான் பிற்காலத்தில் நிறைய யோசித்திருக்கிறேன். நான் எனது குழந்தைப் பருவத்தில் பார்த்ததை எனது வாழ்நாள் முழுவதிலும் நினைவில் வைத்துள்ளேன். அந்தக் காட்சிகள், அந்த நினைவுகள், அதன் பதிவுகள் ஆகியவைதான் ஒருவேளை அவர்களிடம் எனது அனுதாபத்தையும், ஆதரவான போக்கையும் தோற்றுவித்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் நல்ல மாணவனா? இல்லை, நான் நல்ல மாணவனில்லை. இன்றைய தலைமுறையினருக்கு நான் நல்ல மாணவனில்லை. எனது வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது எனது மனம் வேறெங்கோ சுற்றிக்கொண்டிருக்கும். ஆசிரியர் ஒரு பாடத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது, யார் யாருக்கு என்ன தெரியும் - மலைகளைப் பற்றி, விளையாட்டு பற்றி என்ன தெரியுமென்றும் அல்லது மற்ற இளைஞர்கள் என்ன சிந்திப்பார்களோ அவை பற்றி என் மனம் சிந்தித்துக் கொண்டிருக்கும்...’
- செப்டம்பர் 4, 1995இல் ஆலா மாக்னா பெருமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையிலிருந்து.
‘... மனித சமூகத்தை, வரலாற்று நடைமுறைகளை மற்றும் நான் தினமும் கண்ட பாகுபாடுகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். வர்க்க பேதங்களை, அதாவது ஏழைகள் பட்டினியாகவும், மற்றவர்கள் தேவைக்கு மேல் வைத்திருப்பதையும் புரிந்து கொள்ள உங்களுக்கு வரைபடமோ, ஒரு தொலைநோக்கியோ தேவையில்லை. என்னைவிட யாரால் இதை நன்றாக அறியமுடியும்? நான் இந்த இரண்டு நிதர்சனங்களையும் அனுபவித்திருக்கிறேன். இன்னும் சொன்னால், அவை இரண்டின் பங்காகவும் பலிகடாவாகவும் நான் இருந்தேன். நான் எப்படி எனது அனுபவங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பேன்? ஒரு நிலச்சுவாந்தாரின் நிலை மற்றும் நிலமற்ற, வெறுங்காலுடனான விவசாயியின் நிலையை எப்படி புரிந்து கொள்ளாமல் இருப்பேன்?...’
- ஃபிடல் காஸ்ட்ரோ
‘...ஒரு மார்க்சிஸ்ட்டாக மாறுவதற்கு முன், எங்கள் நாட்டு வரலாற்றையும் மார்த்தியையும் அதிகம் போற்றுபவனாக இருந்தேன். நான் மார்த்தியின் சீடனாக இருந்தேன். அதேபோல் இருவரும் ஒருவரையொருவர் அதிகம் பிரதிபலித்ததாக நினைக்கிறேன். மார்த்தி ஒருவேளை மார்க்ஸின் சூழ்நிலையில் வாழ்ந்திருந்தால் மார்க்ஸ் போன்ற அதே எண்ணங்களுடன் அதே வழியிலும் வாழ்ந்திருப்பார் என முழுமையாக நான் நம்புகிறேன். மார்த்தி மார்க்ஸ் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவரைப் பற்றி ஒரு முறை கூறும்போது ‘அவர் பலவீனமானவர்களுடன் சேர்ந்தார். எனவே மதிக்கப்பட வேண்டியவர்!‘ என்றார்.’
- ஃபிடல் காஸ்ட்ரோ
‘.. எனது புரட்சி வாழ்க்கையிலும், புரட்சிக் கொள்கைகளிலும் நான் மக்களை முழுமையான சுய தியாகத்தோடும் உண்மையோடும் கடுமையான நிலைகளையும், கடுமையான தேர்வுகளையும் சந்தித்தேன். அவர்கள் பரிசுபெறும் எண்ணத்துடனோ, தண்டனை பெறும் எண்ணத்துடனோ செயல்படவில்லை என்பது பாராட்டத்தக்கது. பற்றுதல்தான் தியாகிகளை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன். பலன் பெற நினைப்பதாலோ, தண்டனைக்கு பயப்படுவதாலோ ஒருவர் தியாகியாகி விடுவதாக நான் நினைக்கவில்லை. இந்தக் காரணத்துக்காக ஒருவர் வீரராக மாறிவிடுவதில்லை...’

December 11, 2008
பாம்பு மனிதர்
எழுத விருப்பம் என்று சொல்லி வந்தார் குணசேகரன். அமர வைத்து பேசிக்கொண்டிருந்தேன். நேரு, எமர்ஜென்சி, காரல் மார்க்ஸ், சோழர்கள், தோழர்கள், சிப்பிக் காளான், சிங்கப்பூர், லாலா லஜபதி ராய், பழங்குடிகள், பறவைகள், சங்க இலக்கியம் என்று நிறைய பேசினார். பாம்புகள் பற்றியும். சரி இங்கிருந்தே ஆரம்பியுங்கள் என்றேன்.
வாரத்துக்கு நான்கு முறை அலுவலகம் வந்துவிடுவார். முந்தைய தினம் சேகரித்த தகவல்களை ஆர்வத்துடன் விவரிப்பார். எடுத்து வைத்திருக்கும் குறிப்புகளைக் காண்பிப்பார். இரவோடு இரவாக அவற்றைச் செம்மைப்படுத்தி, மறுநாள் காலை கொண்டுவந்து கொடுத்துவிடுவார்.
பாம்பு எப்படி படம் எடுக்கும்? நாகத்துக்கு அந்தப் பெயர் வந்தது ஏன்? விஷத்தை வைத்து என்னென்ன செய்வார்கள்? எப்படி பாம்பைக் கையால் பிடிப்பார்கள்? கடிக்காதா? கடித்தால் என்ன செய்வார்கள்? பாம்பு பால் குடிக்குமா? முட்டை? கை விரல்களைக் குவித்து, நாக்கைச் சுழற்றி, கண்களை உருட்டி படம் எடுத்து பாகம் வரைந்து விளக்குவார்.
இருளர்களின் குடியிருப்புகளைத் தேடிச்சென்று மணிக்கணக்கில் பேசியிருக்கிறார். எட்கர் தர்ஸ்டன் தொடங்கி சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் வரை அனைத்தையும் வாசித்திருக்கிறார். இந்தியப் பழங்குடி இனங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார். முழுநேரப் பணி வாசிப்பதும் எழுதுவதும். மானுடவியல் குறித்து அவரிடம் இருந்து மேலும் பல புத்தகங்களை எதிர்பார்க்கிறேன். அந்த வரிசையில், முதலில் இருளர்கள்.
இருளர்கள் : ஓர் அறிமுகம் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே.

சூழ்நிலைதான் பழக்க வழக்கங்களைத் தீர்மானிக்கிறது. ஐயோ பல்லி என்று பயந்து அலறுபவர்கள் வாழும் அதே பூமியில்தான் ஒரு கையில் கருநாகத்தைத் தலைகீழாகத் தொங்கவிட்டபடி மற்றொரு கையால் பீடி புகைத்துக்கொண்டிருக்கிறார்கள் இருளர்கள். அது அவர்களுடைய வாழ்க்கை முறை. பூஞ்சையாக இருந்தால் பிழைக்க முடியாது. ஆகவே அவர்கள் தங்கள் சூழ்நிலையோடு ஒன்றிவிட்டார்கள்.
கொடிய விஷமுள்ள பாம்பை அகற்ற இருளர்களின் உதவி வேண்டும். பாம்பின் விஷம் வேண்டுமென்றால் இருளர்கள் வேண்டும். பாம்பு ஆராய்ச்சியா? தகவல்கள் வேண்டுமா? இருளர்களிடம் ஓட ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் கண்டுபிடிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள்.
இன்று உலகளவில் பாம்பினங்கள் பற்றிய நூல்கள், ஆய்வுகள் முதலானவை நூற்றுக்கணக்கில் வெளி-யாகின்றன. அதிலும் இந்திய அளவிலான பாம்பு இனம் தொடர்பான நூல்களிலும், ஆய்வுகளிலும் இருளரின் பங்களிப்பு கணிசமானது. ஆய்வாளர்கள் தங்கள் படைப்புகளில் தங்களை மாத்திரமே முன்னிலைப்படுத்திக் கொள்கின்றனரே தவிர நிழலாக இருந்து உதவி செய்யும் இருளர்கள் பற்றிய தகவலை வெளியிடுவதில்லை. இதனால் குறிப்பிட்ட இனப் பாம்புகள் பற்றிய தகவல் தொகுப்பில் ஆய்வாளரே கண்டறிந்ததாக பதிவு செய்யப்-படுகிறது. இது இருளர்கள் மீதான கருத்துச் சுரண்டலாகும்.
0
இந்தியா பாம்புகளின் தேசம் என்று அழைக்கப்படுகிறது. பாம்பாட்டிகளின் நாடு என்றும் சொல்லப்படுகிறது. இந்த மதிப்பீட்டை முன்வைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியா என்றாலே பாம்புகள் என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்ததற்குக் காரணம் இருளர்கள். இருளர்கள் பற்றிய ஆங்கிலேயரின் பிரமிப்பு.
பாம்பை வைத்து வித்தை செய்பவர்கள் இருளர்களா? கிடையாது. இருளர்கள் வித்தை காட்டிப் பிழைப்பதில்லை. ஆனால் இருளர்களிடம் இருந்து பாம்பை வாங்கிச் செல்லும் சிலர் இவ்வாறு நடந்துகொள்வதுண்டு.
சுரைக்காயைப் பக்குவம் செய்து அதன் கனத்த தோலில் மேலும் கீழும் வாகாக சிறிய புல்லாங் குழல்களைச் செருகி அதை பாம்பின் முன்பாக ஆட்டுவிப்பார்கள். இந்த கருவியே மகுடி எனப்படும். பாம்பு இதிலிருந்து வரும் இசைக்காக மயங்கி ஆடுவதில்லை. மேலும் கீழும் ஆடும் மகுடியின் திசையை எச்சரிக்கையோடு படமெடுத்து அசை-வதையே இசைக்கு பாம்பு படமெடுத்து ஆடுவதாகக் கூறுவர்.
பாம்புகளால் மெல்லிய உணர்வுகளையும் உணர இயலும். மகுடியின் ஒலி எழுப்பும் மெல்லிய அதிர்வுகளை மட்டுமே பாம்புகளால் உணர முடியும். பாம்புகளுக்குக் காதுகள் இல்லை. ஆனால், நீண்ட தொலை-வில் வரும் உருவத்தையும் கூர்மையாக பார்க்கும் திறன் அதன் கண்களுக்கும் உண்டு. மெல்லிய சருகு அசைந்தால்கூட பாம்பு தன் உடலால் அந்த அசைவை கண்டுபிடித்துவிடும்.
பாம்புகள் பல வகைப்படும். பாம்பின் விஷமும் பலவகைப்படும். அதே போல்தான் விஷங்களின் சுவையும். பாம்புகளின் மணமும் மாறுபட்டவை. உணவு முறைகள் மாறு-பட்டவை. பாம்புகளை துல்லியமாக அறிந்தவர்கள் இருளர்கள். நாகப்பாம்பு பாம்பினங்களில் உயர்வானது என்று இருளர்கள் கருதுகிறார்கள். நாகம் தீண்டிவிட்டால் உடனே விஷம் பரவிவிடும். கோப குணம் அதிகம். எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் நாகம் என்னும் பெயர் இந்த வகை பாம்புக்கு அளிக்கப்பட்டது. உலோக வகைகளில் துத்தநாகம் என்பது ஒரு வகை. இதன் பயன்பாடு பிற உலோகங்களைக் காட்டிலும் அதிகம் என்பதை இங்கே நினைவுகூறலாம்.
நாகர்களை அவ்வாறு அழைப்பதற்குக் காரணம் அவர்களது தொன்மை. அரவம் என்றால் பாம்பு. அரவர் என்ற சொல் தமிழரைக் குறிப்பதாகும். அரவரும், நாகரும் தமிழர்களே. மனித உடலில் இயங்கும் இரத்தக் குழாய்கள் வளைந்து நெளிந்து செல்லும் பாம்பின் உருவைக் கொண்டிருப்பதால் ரத்தத்தை அரக்கம் என்றும் குறிப்பிடுவார்கள்.
அரவக்குறிச்சி, அரவங்குடி, அரவங்காடு (கேரளா) மற்றும் அரவக்கிரி (வேங்கடமலை) போன்ற பகுதிகளின் பெயர்களை உற்று நோக்கும்போது இருளர்களும் நாகர்களும் அங்கே வாழ்ந்திருக்கிறாரகள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
வாசத்தை நுகர்ந்து பார்த்தே பாம்பின் வகைகளை கண்டறிந்துவிடுவதால் இருளரை பாம்பு கண்ட சித்தன் என்றும் அழைப்பதுண்டு.
0
கருத்தமேனி. உரம் வாய்ந்த கைகள். எப்போது வேண்டுமானாலும் நெகிழ்ந்து விழலாம் என்ற நிலையில் இடுப்பில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஒரு வேட்டித் துண்டு. வாயில் புகை கக்கும் பீடி. குழி விழுந்த கண்கள். பார்வையில் துல்லியம். தோளிலே ஒரு தொங்கு பை. கையில் நீளமான கழி. அதன் முனை ஆங்கில ஒய் எழுத்து போல் தோற்றமளிக்கும். பேசும்போது கடைசி சொல்லை மட்டும் இழுத்து இழுத்து பேசும் லாகவம். எந்த கட்டுப்பாட்டுக்கும் உட்படாத சுதந்திரமான மனோநிலை. இருளர்கள் தனியொரு பிறவிகள்.
பொதுவாக அடர்ந்த காட்டுப் பகுதியில்தான் இருளர்களின் குடியிருப்புகள் அமைந்திருக்கும். அல்லது ஊரின் ஒதுக்குப்புறத்தில். நீர்நிலைகள் இருக்கும் பகுதியை விரும்பி தேர்ந்தெடுப்பார்கள். மனிதர்கள் தங்கள் வாழ்வைத் தொடங்கியது நதிக்கரையில்தான் என்பதை இங்கே நினைவுப்படுத்திக்கொள்ளலாம்.

Subscribe to:
Posts (Atom)