வருண் காந்தி தண்டிக்கப்படவேண்டியவர் மட்டுமல்ல உதாசீனப்படுத்தப்படவேண்டியவரும்கூட. அவர் எதை விரும்பினாரோ அதையே மீடியா வழங்கிக்கொண்டிருக்கிறது - பரபரப்பான பப்ளிசிட்டி. பா.ஜ.க, வருண் விவகாரத்தில் அசைந்து கொடுக்காமல் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இஸ்லாமிய எதிர்ப்புதான் பாஜகவின் அரசியல் சித்தாந்தம். முன்னர் மசூதியை இடித்தார்கள். அது போதாது, வழிபடுபவர்களின் மண்டையையும் சேர்த்தே உடைக்கவேண்டும் என்று வருண் சொல்கிறார். சரிதானே என்று சும்மா இருந்துவிட்டது பாஜக. அத்வானி முதல் வாஜ்பாய் வரை பலரும் பல சமயங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசி வந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டமான ஓர் அறிமுகம் தேவை என்பதால்தான் வருண் காந்தி முஸ்லீம்களைத் தாக்கி பேசினார். பரபரப்பான ஓர் இளம் தலைவர் தேவை என்பதால்தான் வருண் காந்தியைத் தாங்கிப்பிடிக்கிறது பாஜக. இது அரசியல். வெறுப்பை மட்டுமே விதைத்து நடத்தப்படும் அரசியல் விளையாட்டு. இந்த விளையாட்டின் ஹீரோ வருண்.
6 comments:
மருதன் சரியாக சொல்லியுள்ளீர்கள். அதனால்தான் வருணை, மீடியாக்கள் பா.ஜ.க.வின் "போஸ்டர் பாய்" என்றும் "இந்துத்துவாவின் புதிய லோகோ" என்றும் "நியோ மோடி" என்றும் அழைக்கிறது. எப்படி அழைத்தால்தான் என்ன பா.ஜ.க.வின் கண்ணெல்லாம் பிரதமர் நாற்காலி மீது மட்டுமே! ஹீட்லரும், முசோலினியும் எப்படி தோற்கடிக்கப்பட்டார்களோ அப்படித்தான் இந்துத்துவாவும் தோற்கடிக்கப்படும் நமது மக்களால்.
மருதன் நீங்கள் சொல்வது தவறு... இந்து மதம் இப்பொழுது மிகவும் சோதனை கட்டத்தில் உள்ளது.. எங்கே பார்த்தாலும் மதமாற்றம் சத்தமிலாமல் நடந்து கொண்டிருக்கிறது. வருன் மாதிரி இளைஞர் சக்தி ஹிந்து மதத்திற்கு தேவை... இன்னும் எத்தனைவருடம் இந்த சிறுபான்மை மக்கள் என்ற சொத்தை கான்செப்ட் சொல்விர்களோ தெரியவில்லை...
மருதன் நீங்கள் சொல்வது தவறு... இந்து மதம் இப்பொழுது மிகவும் சோதனை கட்டத்தில் உள்ளது.. எங்கே பார்த்தாலும் மதமாற்றம் சத்தமிலாமல் நடந்து கொண்டிருக்கிறது. வருன் மாதிரி இளைஞர் சக்தி ஹிந்து மதத்திற்கு தேவை... இன்னும் எத்தனைவருடம் இந்த சிறுபான்மை மக்கள் என்ற சொத்தை கான்செப்ட் சொல்விர்களோ தெரியவில்லை...
இவர்களின் அராஜகம் ஒழியதா? ஒழிக்கமுடுயதா? காங்கிரசால் சத்தியமா முடியாது. வேறு யார்?மதவேறியர்களையெல்லாம் மதம் பிடித்த யானையின் முன் நிறுத்த வெண்டும்.
வழிபடுபவர்களின் மண்டையை யார் உடைத்தாலும் தவறு. ஆனால் இதுபோன்ற கருத்துகளெல்லாம் எப்போது ஹிந்து தொடர்புள்ள ஒரு விஷயம் அகப்படுகிறதோ அப்போது மட்டுமே பேசப்படுகிறது. நளினிக்கு தூக்கு, மதானிக்கு தூக்கு என்றெல்லாம் செய்திகள் அடிபடும்போது, ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையையும் நிறுத்த குரல்கள் எழுவது போல.
வளர்ச்சிப் பாதையில் நாட்டை கொண்டு செல்ல எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போதும், வெறுப்பை விதைக்கும் அரசியல்வியாதிகள் தான் நமக்கு கிடைக்க பெறுகிறார்கள்.
Post a Comment