July 16, 2010
சாரு நிவேதிதாவுக்கு மறுப்பு
சென்ற வார ஆனந்த விகடனில், மனம் கொத்திப் பறவை என்னும் புதிய தொடரின் முதல் அத்தியாயத்தில், சாரு நிவேதிதா, க்யூபா குறித்தும் ஃபிடல் காஸ்ட்ரோ குறித்தும் எழுதியிருந்தார். க்யூபாவுக்கு அவர் நண்பர் ஒருவர் சென்றிருந்தாராம். அங்கே அவருடைய லுங்கி களவாடப்பட்டுவிட்டதாம். தவிரவும், ஃபிடலின் ஆட்சியில் இருக்கப் பிடிக்காமல் பலர் அங்கிருந்து ஓடிவிட விரும்பினார்களாம். இப்படிப்பட்ட ஒரு நாட்டில் எப்படி வாழ்வது என்று பெரும் அங்கலாய்ப்புடன் சாரு எழுதியிருந்தார். வலைப்பதிவில் இந்தக் கட்டுரை காணக்கிடைக்காததால், இணைப்பு கொடுக்கமுடியவில்லை. இதை எழுதும் கணத்தில், என்னிடம் ஆனந்த விகடன் இதழ் இல்லாததால், அவர் வார்த்தைகளை அப்படியே இங்கே மீள்பிரசுரம் செய்ய இயலவில்லை. முன்னதாக, ஸ்டாலின் மற்றும் மாவோ காலத்திய 'படுகொலைகள்' குறித்தும் சாரு எழுதியிருக்கிறார்.
உங்களுக்கும் ஜெயமோகனுக்கும் இடையில் லடாயாமே, ஏன் இப்படிக் கேவலமாக அடித்துக்கொள்கிறீர்கள் என்று ஒரு வாசகர் சாருவிடம் ஒருமுறை கேட்டிருக்கிறார். அவ்வளவுதான், கோபம் கொண்டு பொங்கிவிட்டார் சாரு. ஏய் அறிவிலி, உனக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்? எங்கள் இருவருக்குமான சண்டையின் இருபதாண்டு வரலாறு தெரியுமா? சமூகப் பின்னணி தெரியுமா? ஆச்சா, போச்சா என்று குதிக்க ஆரம்பித்துவிட்டார். பிரசுரிக்க இயலாத கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை வேறு. தன்னிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க அந்த நபரை, 'செருப்பால் அடிக்கவேண்டும்' என்று உடனுக்குடன் தண்டனையும் அளித்தார். உயர் ரக இலக்கிய விவாதங்களில் இனி 'தெருநாய்கள்' நுழையக்கூடாது என்று ஓர் எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிட்டார். பிறகு, வழக்கம் போல் வலைப்பதிவில் இருந்து தூக்கிவிட்டார். முழு விவரம் இங்கே.
இதிலிருந்து நாம் பெறும் பாடம் என்ன? ஏன் சண்டை போடுகிறீர்கள் என்று சாருவைப் பார்த்து ஒருவர் கேட்கவேண்டுமென்றால், அவர் முதலில் சாருவின் சண்டை குறித்த இருபதாண்டு கால வரலாறை முழுவதுமாகப் படிக்கவேண்டும். அப்படியே படித்துவிட்டு கேட்டாலும், நேர் பதில் வரும் என்று சொல்வதற்கில்லை. மேலதிக மிரட்டல்களும், அசிங்கமான திட்டுகளும் கிடைக்கக்கூடும். ஆனால், அதே சாரு நிவேதிதா, க்யூபாவை தன் விருப்பம்போல் தாக்கி எழுதலாம்.
இது சாரு நிவேதிதா தொடர்பான பிரச்னை மட்டுமல்ல. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என்று அறியப்பட்ட பலரும் க்யூபா குறித்தும் சீனா குறித்தும் சோவியத் யூனியன் குறித்தும் மிகவும் மேம்போக்கான கருத்துகளையே கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கருத்துகளின் அடிப்படையில், மிகக் காட்டமான குற்றச்சாட்டுகளை இவர்கள் அந்நாடுகள் மீது முன்வைக்கிறார்கள்.
ரிச்சர்ட் லெவின்ஸ் (Richard Levins) என்பவர் எழுதிய, How to Visit a Socialist Country என்னும் கட்டுரை இந்தச் சிக்கலை விரிவாக ஆய்வு செய்கிறது.
ஐரோப்பாவில் இருந்தோ வட அமெரிக்காவில் இருந்தோ வரும் பயணிகள், க்யூபாவின் கிராமப்புற பகுதிகளுக்கு வந்தால், அங்கே, ஏழைமையையும் பழுதடைந்த கட்டடங்களையும் குழி விழுந்த சாலைகளையும் தரிசிப்பார்கள். சாலைகளில் பழைய காலத்து கார்கள் உருண்டுகொண்டிருக்கும். ஒருவேளை, லத்தீன் அமெரிக்காவில் இருந்தோ, வளரும் நாடுகளில் இருந்தோ வந்தால், அவர்கள் வேறு சில காட்சிகளைக் காணலாம். பிச்சைக்காரர்கள் இல்லாத தெருக்கள். உணவுத் தட்டுப்பாடு அறியாத முகங்கள். பயமில்லாமல் இரவு நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லும் மனிதர்கள். (Circles Robinson, Havana Times, September 2008.)
சுற்றுலாப் பயணிகளுக்கு க்யூபா வேறு வகையில் காட்சியளிக்கிறது. சகலமும் கிடைக்கும் கடைத்தெருக்கள். ஒரே பொருளுக்கு க்யூபர்களுக்கு ஒரு விலையும் வெளிநாட்டவர்களுக்கு அதிக விலையும் வசூலிக்கும் கடைக்காரர்கள். சிறிய உணவகங்கள். மொய்க்கும் சுற்றுலா வழிகாட்டிகள். Ginateras என்று அழைக்கப்படும் க்யூபப் பாலியல் தொழிலாளர்கள். ஹவானா சுருட்டுகள். மது வகைகள்.
பிற நாடுகளில் இருந்து வரும் அரசுப் பிரதிநிதிகள் க்யூபாவைச் சற்றே நெருங்கி வந்து பார்க்கிறார்கள். கலை, கலாசார நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார்கள். க்யூபாவின் மருத்துவத்துறை பற்றியும், கல்வி தரம் பற்றியும் தெரிந்துகொள்கிறார்கள். தொழிற்சாலைகளுக்குச் செல்கிறார்கள். வேலை வாய்ப்புகள் குறித்தும், ஆண், பெண் சமத்துவம் குறித்தும் தெரிந்துகொள்கிறார்கள். ரேஷன் அமைப்புகளுக்குச் சென்று பார்வையிடுகிறார்கள். வளம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்கிறார்கள்.
இவர்களில் க்யூபாவை முழுவதுமாகத் தெரிந்துகொண்டவர்கள் யார்? அல்லது, இவர்கள் கண்டதில் எது நிஜ க்யூபா?
க்யூபாவில் வீடில்லாதவர்கள் என்று யாருமில்லை. ஆனால், 16 சதவீதத்தினர், தரக்குறைவான வசதியற்ற (sub-standard) குடியிருப்புகளில் இருக்கிறார்கள். ஏழைகள் இருக்கிறார்கள். அமெரிக்கா அளவுக்கு இங்கே கிரிமினல் குற்றச்செயல்கள் நடைபெறுவதில்லை என்றாலும் உங்கள் வீட்டையும் வண்டியையும் நீங்கள் பூட்டிக்கொள்ளத்தான் வேண்டும்.
க்யூபர்களுக்கு அங்கலாய்க்கும் குணம் அதிகம் என்கிறார் கட்டுரையாளர் ரிச்சர்ட் லெவின்ஸ். அவர்கள் ஃபிடல் காஸ்ட்ரோவைக் கடுமையாக விமரிசிக்கிறார்கள். திட்டுகிறார்கள். க்யூபாவில் இருக்க நேர்ந்தது குறித்து குறைபட்டுக்கொள்கிறார்கள். க்யூபா என் விருப்பங்களை முழுமையாக நிறைவேற்றவில்லை என்கிறார்கள். ஃபிடல் ஒரு சர்வாதிகாரியா என்றால் ஆம் என்கிறார்கள். அமெரிக்காவுக்குத் தப்பிச் செல்கிறீர்களா என்றால், ஓ என்கிறார்கள்.
க்யூபாவை மதிப்பிடுவதற்காக நுணுக்கமான கேள்விகள் அடங்கிய படிவங்களைச் சிலர் கொண்டு வருகிறார்கள். கல்வியறிவு, அரசியல் சுதந்தரம், பத்திரிகை சுதந்தரம், தேர்தல் முறை, இனப் பாகுபாடு என்று நீள்கிறது இவர்கள் பட்டியல். க்யூபர்கள் அளிக்கும் விடையை வைத்து, ஒவ்வொரு துறையின் கீழும் ஒன்றிலிருந்து பத்து வரையிலான எண்களை இவர்கள் பதிவு செய்கிறார்கள். பிறகு, மொத்தமாகக் கூட்டி, கழித்து, வகுத்து ஒரு முடிவெடுக்கிறார்கள். க்யூபா ஒரு சோஷலிச நாடு என்று. க்யூபாவில் கம்யூனிசம் இல்லை என்று. க்யூபாவில் அரசியல் சுதந்தரம் உண்டு என்று. அல்லது, இல்லை என்று. க்யூபர்கள் ஃபிடலை விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள் என்று. சந்தர்ப்பம் கிடைத்தால், எத்தனைச் சதவீதம் பேர் க்யூபாவைவிட்டு வெளியேற சித்தமாக இருக்கிறார்கள் என்று.
ஒரு சமயம், சர்வதேச சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்காக க்யூபா வந்த அமெரிக்கப் பெண் பிரதிநிதி ஒருவர், கூட்டம் நடைபெறும்போது திடீரென்று எழுந்து, சத்தம் போட்டு கேட்டாராம். 'க்யூபாவில் ஊடக அடக்குமுறை கடுமையாக இருக்கிறதே, இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?' என்ன, ஏது என்று விசாரித்தபோது, அவர் சொன்னார். 'நான் தங்கியிருக்கும் ஹொட்டேலில் ஒரு டிவி இருக்கிறது. அதில் க்யூபாவிஷன் சானல் 6-ஐ அழுத்தினேன். திரையில் எதுவும் இல்லை. சரி டிவியில் பிரச்னை என்று சானல் மாற்றினால், பிபிசி வருகிறது, சிஎன்என் வருகிறது. ஆனால், க்யூபாவிஷன் மட்டும் வரவில்லை. நானும் எத்தனையோ முறை பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லை. க்யூபர்கள் பார்க்கும் அதே தொலைக்காட்சியை வெளிநாட்டவர்களாகிய நாங்கள் ஏன் பார்க்கக்கூடாது? ஏன் எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது? எனில், நீங்கள் எதை மறைக்க விரும்புகிறீர்கள்?'
க்யூபர்கள் மிகக் கடுமையான சவால்களைச் சந்தித்து பொருளாதாரத் தடைகளைக் கடந்து வந்தவர்கள் என்று அவருக்குத் தெரியாது. ரிமோட்டை அழுத்தி, அழுத்தி விதவிதமாக டிவி நிகழ்ச்சிகளை இருபத்து நான்கு மணி நேரமும் பார்த்துக்கொண்டிருக்கும் அளவுக்கு க்யூபர்கள் வசதியானவர்கள் இல்லை என்பது அவருக்குத் தெரியாது. இருபத்து நான்கு மணி நேரமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவேண்டுமானால், அவற்றைத் தயாரிக்க எவ்வளவு செலவாகும் என்று அவருக்குத் தெரியாது. கடுமையான தட்டுப்பாடுகளுக்கு மத்தியில், அதற்கான அவசியம் என்ன என்று அவருக்குத் தெரியாது.
பல வீடுகள் இருளில் மூழ்கிக்கிடப்பதை அவர் பார்த்திருப்பார். ஆனால், பள்ளிக்கூடங்களில் மட்டும் விளக்கொளி இருந்ததை அவர் கவனித்திருக்க மாட்டார். மக்கள் வீட்டு உபயோகப் பொருள்கள் பெறுவதற்காக விரிசையில் நிற்பதை அவர் கவனித்திருப்பார். கிழிந்த ஆடைகளை மக்கள் செப்பனிட்டுக்கொள்வதைப் பார்த்திருப்பார். அதிகாலையில் ஆசிரியர் பணியில் இருக்கும் ஒருவர், மாலை நேரத்தில் கரும்புத் தோட்டத்தில் பேண்ட்டை மடக்கிவிட்டபடி நின்றுகொண்டிருப்பதையும் பார்த்திருப்பார். எரிபொருள் நிரப்பமுடியாமல் தூசி படிந்து நிற்கும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை அவர் பார்த்திருப்பார். பொது வாகனங்களில், கூட்டம் அதிகம் இருப்பதையும் பலர் அலுவலகத்துக்கு நடந்து அல்லது மிதிவண்டியில் செல்வதையும் அவர் பார்த்திருப்பார்.
இந்தப் பிம்பங்களை வைத்து அவர் ஒரு முடிவுக்கும் வந்திருப்பார். தன் முடிவுக்கு வலு சேர்க்கும் வகையில், மறுக்க முடியாத ஆதாரங்களையும் அவரால் திரட்டியிருக்கமுடியும்.
க்யூபாவில், ராணுவ அதிகாரிகள் பலர் அரசு அலுவலகங்களில் கோப்புகள் பார்த்துக்கொண்டிருப்பதை வெளிநாட்டவர்கள் சிலர் கவனித்திருக்கிறார்கள். சிலரிடம் பேசினார்கள். புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள். ஊர் சென்று சேர்ந்ததும், தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்தார்கள். எப்படி? க்யூபாவில், ராணுவத்தின் கை மேலோங்கியிருக்கிறது. எங்கெங்கு காண்கிலும் அவர்கள்தாம். அரசியல்வாதிகளைவிட, ராணுவத்தினரால்தான் அந்நாடு வழிநடத்திச்செல்லப்படுகிறது.
க்யூபாவில் ராணுவம் என்றொரு பிரிவு தனியே செயல்படுவதில்லை என்று அவர்களுக்குத் தெரியாது. இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ அமெரிக்காவிலோ இருப்பது போல் அங்கே ராணுவம் என்று ஓர் அமைப்பு இல்லை. சிலருக்கு, பாதுகாப்புப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் பணி முடிந்ததும், பிற அரசுப் பணிகளைச் செய்யவேண்டியிருக்கும். ராணுவத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் ஓர் அதிகாரி, உணவு விநியோகத் துறையிலும் பணியாற்றுபவராக இருப்பார். துப்பாக்கியை ஓரங்கட்டிவிட்டு, பேனாவையும் ரசீது நோட்டையும் அவர் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.
க்யூபா போன்ற ஒரு நாட்டால், ஆயிரக்கணக்கானவர்களை ராணுவப் பணிக்காக ஒதுக்கி வைக்கமுடியாது. எப்போது, யார் தாக்குவார்கள் என்று கன்னத்தில் கை வைத்து காத்திருக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்தமுடியாது. என்றாலும், அவர்கள் தயார் நிலையில்தான் இருக்கவேண்டும். நிலைமையைப் புத்திசாலித்தனமாகச் சமாளிக்க, ஒரு பகுதியினரைப் பாதுகாப்புப் பணிக்கும் ஒரு பிரிவினரை பிற அரசுப் பணிகளுக்கும் அரசு பயன்படுத்திக்கொள்கிறது.
புரட்சி என்பது நடந்து முடிந்துவிட்ட ஒரு சங்கதி அல்ல. அது தொடர்ச்சியானது. சோஷலிசமும் அப்படியே. ஒரு சோஷலிச நாட்டைக் கட்டமைப்பது என்பது மக்களின் தொடர்ச்சியான உழைப்பை, பங்களிப்பைக் கோரும் மிகப் பெரிய செயல். இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரும் ஒத்த கருத்துடையவர்கள் அல்லர். அவர்கள் செலுத்தும் உழைப்பு ஒரே அளவுடையதாக இருக்காது. அவர்களுடைய நோக்கம் ஒன்று போல் இருக்காது. க்யூபா என்றில்லை, உலகிலுள்ள எந்தவொரு நாட்டிலும் இதுதான் நிலை.
சோஷலிசப் பாதையில் க்யூபா செல்லவேண்டிய பாதை நீண்டது என்பது சிலருடைய ஏக்கமாக இருக்கலாம். வழுக்கிக்கொண்டு ஓடும் கார் ஒன்றை வாங்கவேண்டும் என்பது சிலருடைய ஏக்கமாக இருக்கலாம். எப்படியாவது அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டால் வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் தடையின்றி நுகரலாமே என்று கன்னத்தில் கை வைத்து சிலர் ஏங்கலாம். இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கும். ஒரு ஏக்கம் இருக்கும். ஒரு பார்வை இருக்கும்.
க்யூபர்கள் அனைவருக்கும் கல்வி, மருத்துவம் இலவசம். வேலையில்லாதவர்கள் என்று அங்கே யாருமில்லை. அதே சமயம், சற்றே வசதியான ஹோட்டல்களில் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே தங்குமிடம் கிடைக்கிறது. க்யூபர்களில் சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. (உதாரணத்துக்கு, புதிதாகத் திருமணமானவர்கள்). இது ஒரு வகை ஏற்பாடு. அழகிய க்யூப வரைபடத்தைக் கடையில் இருந்து வாங்க, ஒரு க்யூபன் 10 டாலர் தரவேண்டும். அயல் நாட்டவர், 100 டாலர் தரவேண்டும்.
ஏனென்றால் ஒவ்வொன்றுக்கும் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.
இந்தக் காரணங்களை ஆராயும் அளவுக்குச் சுற்றுலாப் பயணிகளுக்கு நேரமோ விருப்பமோ இல்லை. குறிப்பிட்ட இடத்தைக் குறித்தோ குறிப்பிட்ட மக்கள் குறித்தோ இவர்கள் ஆழமாக அறிந்திருக்கமாட்டார்கள். ஆனாலும், இவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அந்த முடிவு, ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானமான முன்முடிவு என்பதன்றி வேறென்ன?
க்யூபாவை அல்லது சீனாவை அல்லது சோவியத் யூனியனை யாரும் விமரிசனமே செய்யக்கூடாது என்பதல்ல. விமரிசிப்பதற்கு முன்னால், அந்நாட்டைப் பற்றி ஓரளவுக்கேனும் தெரிந்துகொள்ளவேண்டாமா? மேலோட்டமாகக் கண்ணில் தென்படுவதற்கு அப்பால் இருப்பதை காண முயற்சிக்கவேண்டாமா?
இறுதியாக, ஒரு விஷயம். க்யூபா, க்யூபர்களின் நாடு. க்யூபாவை புரிந்துவைத்திருப்பவர்கள் க்யூபர்கள். புரட்சியை நடத்தியது அந்நாட்டு மக்கள். அதற்காக ரத்தம் சிந்தியவர்கள் அவர்கள். அவர்களுக்கு ஃபிடல் காஸ்ட்ரோவைத் தெரியும். சே குவேராவைத் தெரியும். புரட்சி என்ன சாதித்தது என்றும், என்ன சாதிக்க தவறியது என்றும் அவர்களுக்குத் தெரியும். இதுவரை கடந்த தூரம் என்ன, இன்னும் கடக்கவேண்டியது எவ்வளவு என்று அவர்களுக்குத் தெரியும். க்யூபாவை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
அவரே ஒரு பிக்பாக்கெட் தானாம், அவரிடம் எவனாவது வெளிநாட்டுகாரன் மாட்டியிருந்தால் இந்தியாவை பற்றி என்ன நினைத்திருப்பான்!?
hahaha @ Vaal;
Good post Maruthan! Forward this article to AV...
மருதன்,
இது சாருவிற்கு மட்டும் அல்ல சுஜாதா தொடங்கி உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் எல்லாம் அந்த அந்த நாட்டில் சில வருடங்கள் தங்கி அறிந்து பழகியா புத்தகங்கள் போடுகிறீர்கள்? 16 புத்தகத்தை ஆராய்ந்துவிட்டு 17வது புத்தகம் எழுதுகிறீர்கள்.
வரலாற்றை படித்து அறிந்துகொள்வது வேறு , பயணப்பட்டு , வாழ்ந்து, புரிய முயற்சிப்பது வேறு.
பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்
http://etamil.blogspot.com/2009/01/blog-post.html
ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் ..
http://www.varalaaru.com/Default.asp?articleid=482
ஆ.வி மதனின் சறுக்கல் : அறிவுக்கெட்டத்தனமான அறிவுக்கு விளக்கம்
http://tbcd-tbcd.blogspot.com/2007/12/blog-post_28.html
ஆய் மதனின் உளறல்கள்....அடவுலே இருக்க விட மாட்டாய்ங்க போலிருக்கே !!
http://tbcd-tbcd.blogspot.com/2009/03/blog-post_08.html
*****
// இறுதியாக, ஒரு விஷயம். க்யூபா, க்யூபர்களின் நாடு. க்யூபாவை புரிந்துவைத்திருப்பவர்கள் க்யூபர்கள். புரட்சியை நடத்தியது அந்நாட்டு மக்கள். அதற்காக ரத்தம் சிந்தியவர்கள் அவர்கள். அவர்களுக்கு ஃபிடல் காஸ்ட்ரோவைத் தெரியும். சே குவேராவைத் தெரியும். புரட்சி என்ன சாதித்தது என்றும், என்ன சாதிக்க தவறியது என்றும் அவர்களுக்குத் தெரியும். இதுவரை கடந்த தூரம் என்ன, இன்னும் கடக்கவேண்டியது எவ்வளவு என்று அவர்களுக்குத் தெரியும். க்யூபாவை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். //
அப்புறம் நீங்கள் எதற்கு இந்தப் பதிவு போட்டீர்கள். சாருவை அவர்கள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா?
விமர்சனத்தில் உள்ள ஓட்டையைச் சொல்லலாம். இது எதோ எங்க ஏரியா உள்ள வராதே என்று சொல்வதைப் போல் உள்ளது. சாருக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாமல்.
இதே போல் இந்தியவைப் பற்றிச் சொல்லேதே, அமெரிக்காவைப் பற்றி புத்தகம் போடாதே என்று சொல்லலாம்.
என்ன கொடுமை இது மருதன் ?
சாரு ஆராயமல் எழுதியதை கண்டிப்பதை வரவேற்கிறேன்.
ஆனால் நீங்களும் வழக்கம் போல் ‘க்யூபாவின் மிலிட்டரி’ பற்றியெல்லாம் தவறான தகவல்கள் தருகிறீர்கள்?
Para மிலிடரிக்கும் இராணுவ படைகளுக்கும் வித்தியாசம் உண்டு. க்யூபாவின் para மிலிடரி பொதுமக்களின் பல்வேறு தேவைகளையும் தீர்மாணிக்கிறது. அது சோஷலிஸ அரசாங்கங்களின் அடிப்படைதான். இதற்கும் பொருளாதாரத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
1989ல் இராணுவ வளர்ச்சியினால் நடந்த சீர்கேட்டினால் (போதை கடத்தல், லஞ்ச லாவண்யம்) மிகப்பெரிய போராட்டமே நடந்தது. Cuasa 1 பற்றி படித்துப் பாருங்கள். சோவியத் சிதறியதால் வலுவிழந்து போன க்யூபன் இராணுத்தை தற்பொழுது பாகிஸ்தான தத்தெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
ஸ்டான்லி மாணிக்கம் என்பவர் தன் blogல்(http://arivuputhiran.blogspot.com/)ஜெயமோகனை விமர்சித்து எழுதியுள்ளதாக சாரு ஒரு பதிவை போன மாதம் அப்டேட் செய்திருந்தார்.(பின்னர் அந்த பதிவை சாரு தூக்கி விட்டார்.) அதில் ஜெயமோகனின் மகனை மனநோயாளி என்று அந்த ஸ்டான்லி மாணிக்கம் எழுதியிருந்தார். அது ஸ்டான்லி மாணிக்கமா அல்லது அது சாருவேவா அல்லது அது சாருவின் பினாமியா என்ற சந்தேகம் அந்த பதிவை படித்தவர்களுக்கு இருந்தது. இப்போது என்னவென்றால் ஸ்டான்லி மாணிக்கம் என்ற அந்த நபரின் blogஏ delete செய்யப்பட்டிருக்கிறது...
Hi Marudhan,
Sorry for not writting in Tamil.
I have quite many friends who are from Russia and former USSR countries like Estonia. Whenever you go and ask about soviet times to them, they say it was like a hell. Well, their conditions were not improved much now, but they have the freedom now.
I guess, instead asking a person who has visited Russia/china or other communist countries, it would be better idea to check with the persons who are going through it :)
i have asked this question to my chinese friends, they want to come out of China, if given a chance. Well, conditions are not like what we hear from indian communnist journals and books. I hope you would accept.
Martina Navratilova once said, "Whenever people go into politics and they try to say that Communism was a good thing, I say, 'Go ahead and live in a Communist country then, if you think it's so great.' ". I remind you Martina was born and brought up in an communist country.
This is to know if you are publishing my comment :)
நீ இத்தனை நாள் எழுதி என்ன கிழித்துவிட்டாய் அல்லது என்ன புரட்சி சமுதாயத்தில் உன்னால் ஏற்படட்து என்ற கேள்வியை எழுத்தாளார்கள் எதிர்க்கொள்ள பயந்து அந்த கேள்வி வரும் திசையான கம்யுனிஸ கோட்பாட்டாளர்களாயும் கம்யுனிஸ தத்துவத்தையும் வீண் பழி சுமத்தி கவிழ்க்க பார்க்கிறார்கள். நல்ல எழுத்தாளர்களுக்கே இந்த நிலமை என்றால் சாரு பாவம் 'பாப்கார்ன்' எழுத்தாளாரால இவ்வளாவு தான் எழுத முடியும்..
சாரு நிவேதிதா போன்ற எழுத்து வியாபாரம் செய்கிற பைத்தியக்காரர்களுக்கெல்லாம்
இவ்வளவு பெரிய பதில் தேவையில்லை. குடித்து விட்டு உளறியுள்ளார் என்பது
எல்லோருக்குமே தெரியும். நாகரீகம்
இல்லாத பேர்வழிக்கு தொடர் எழுத
வாய்ப்பளித்த விகடன் அதனை நிறுத்த வேண்டிய அவசியத்தை சாரு நிவேதிதாவே உருவாக்கி விடுவார்.
சாரு மாதிரியானவர்களுக்கு இத்தனை விரிவாக எழுத வேண்டிய அவசியம் இல்லை மருதன். உதாசீனம் செய்யலாம். அல்லது கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் ஒரு விஷயம். கியூபா பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது
After Nithyananda event, Charu has become a real super star :-) First he wrote for reporter. now vikatan
New informations about cuba,innum therinthu kollum aarvam kodukkirathu.
Algore doc also appriciated cuban public health system is better than us.
Cuba la pala nalla vishayangalum irukkirathu. Arivu jeevikal kankalukku therivathillai.
மருதன்,
Good comparative view. Thanks for sharing.
Just like any other country, Cuba has its positive and not so positive attributes.
அருமை :-) அருமை :-)
உங்கள் சிம்ம சொப்பனம், சே குவேரா இரண்டு்ம் படித்திருக்கிறேன். கிளாசிக். சாரு போன்றவர்கள் இப்படி ஏதாவது ஏடாகூடமாக எழுதினால் தான் அத்தேசம் பற்றி இன்னும் விரிவான தகவல்கள் இப்படி மறுப்புகளாக வரும்
Why dont you write a book on the massacres commited by stalin, mao and castro and justify them?
நமது நேரத்தை நல்ல விசயங்களில் செலவழிக்கலாமே.
//எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என்று அறியப்பட்ட பலரும் க்யூபா குறித்தும் சீனா குறித்தும் சோவியத் யூனியன் குறித்தும் மிகவும் மேம்போக்கான கருத்துகளையே கொண்டிருக்கிறார்கள்//
ஆழமான கருத்தை நான் சொல்லாவிட்டால் நான் எழுத்தாளரல்ல என்றாகிவிடும்.
க்யூபாவும் சீனாவும் ஜனநாயகத்தைக் கொண்டாடிய/கொண்டாடும் நாடுகளின் முதன்மையானவை.
சே குவேரா ஜீவகாருண்யர். அவர் முன்னால் ஒரு மான் நொண்டி நடந்தால்கூட மனம் உடைந்து போவார்.
படுகொலை என்றே சொல்லே க்யூப, சீன அகராதியில் கிடையாது.
ஃபிடல் காஸ்ட்ரோ அகிம்சையே மூச்சாக வாழ்ந்தவர். அவரது வாழ்க்கையைப் பார்த்து, காந்தியைக் கொண்டாடும் நாடுகள் வெட்கப்படவேண்டும்.
திருடு என்பதே கிடையாது. வீட்டையும் வண்டியையும் பூட்டிக்கொள்ளாததால், ஜனநாயக சோஷலிச நாடு என்பதால், தங்கள் உபயோகத்துக்கு யாராவது எதையாவது எடுத்துக்கொண்டு போயிருப்பார்கள். நீங்கள் இன்னும் வீட்டைப் பூட்டாமலே வைத்திருந்தால், கொண்டு போனவர் சந்தடிச் சாக்கில்லாமல் அதே போல் கொண்டு வந்தும் வைப்பார். ஏனென்றால் க்யூப சீன நாடுகள் ஜனநாயக சோஷலிஸ நாடுகள்.
ஆகா, அதோ பார் அந்த அரசர்தான் எத்தனை அழகான ஆடைகளை அணிந்திருக்கிறார். அம்மணம் என்று எவன் சொல்வது?
உங்க " சிம்ம சொப்பனம் " படிச்சதிலே
இருந்து நான் மிகவும் நேசிக்கும்
தலைவர் பிடல் காஸ்ட்ரோ
ஒரு உதாரணதுக்கு..
என் பையனின் பேச்சுப்போட்டிக்கு
" நான் விரும்பும் தலைவர் "
தலைப்பு குடுத்தாங்க..
நான் பிடல் காஸ்ட்ரோ பத்தி
எழுதி குடுத்தேன்..
அடுத்த நாள் அவங்க ஸ்கூல்ல
" நான் விரும்பும் இந்திய தலைவர் "
தலைப்பை மாத்திட்டாங்க..
ம்ம்.. அப்படி இருக்கும் போது..
இந்த சாரு இப்படி பிடல் காஸ்ட்ரோவை
பத்தி அரையும் குறையுமாக தெரிந்து
வெச்சிட்டு எழுதுவதை ( உளறுவதை )
வன்மையாக கண்டிக்கிறேன்..
ஹரன் பிரசன்னா,
நீங்க சாருவோட கையாளா?
திரு.கல்வெட்டு,
உங்களுக்கு என்னதான் பிரச்சினை? கிழக்கு சம்மந்தப்பட்ட அனைவரையும் கடுமையாக விமர்சிக்கின்றீர்கள்.
மருதன் க்யூபாவைப் பற்றி தன் பார்வையை தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.
நீங்கள் அவருடைய கருத்திலிருந்து மாறுபட்டு இருக்கலாம்.ஆனால் இது கொஞ்சம் அதிகமோ என்று தொன்றுகிறது.
மருதன் க்யூபாவில் வாழ்க்கை நடத்தியிருக்கிறாரா என்று கேள்வி கேட்கிறீர்கள்.
எல்லாவற்றிலும் நேரிடையான அனுபவம் இருந்தால் மட்டும்தான், அப்போதுதான் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் போலிருக்கிறது.
அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
நீங்கள் விமர்சிப்பதை குறை கூற எனக்கு உரிமை இல்லை.ஆனால் அதை கொஞ்சம் மென்மையாக செய்தால் நன்றாக இருக்கும்.
சுவாரஸ்யமான கட்டுரை மருதன். ஒரு சந்தேகம். கம்யூனிஸ் அரசு கோரும் இத்தனை கட்டுப்பாடான வாழ்க்கைக்கு உயர்ந்த நோக்கங்கள் இருந்தாலும் மக்களின் அடிப்படை விழைவுக்கு எதிரானது அல்லவா அது. பொருளை நுகரும் ஆசை தானே உழைப்பை தூண்டுகிறது. நுகர்வும் உற்பத்தியும் ஒரு சக்கரம் போல இயங்கும் பட்சத்தில் அல்லவா நாட்டின் பொருளாதாரம் செழிக்கும். மக்களுக்கான சம உரிமைகளை மறுக்கவில்லை என்றாலும் இன்றைய நவகாலனிய உலகின் விசைக்கு எதிர்திசையில் கம்யூனிஸ அரசுகள் எத்தனைக் காலம் தான் பயணிக்க முடியும். தியாகம் செய்வது மக்கள் திரளின் அடிப்படை வாழ்க்கை உந்துதல் அல்லவே?
Superb
Write in detail about Cuban politics, military etc.
Karthik Gopal ,
********
விற்பனைக்காக ஒருவர் தகவல்கள் (நிகழ்கால அரசியல் , கடந்த கால வரலாறு) எழுதும் போது உண்மை உழைப்பு இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
அந்த உண்மை உழைப்பு என்பது "100 புத்தகத்தைப் படித்து அதன் தகவகளின்படி 101 ஆக ஒரு புத்தகம் போடுவதுதான்" என்றால் அப்படிச் செய்பவது தொகுப்பு.
மூலப்புத்தகத்தில் இருந்து தகவல்களை சுவராசியமாக தமிழில் தொகுப்பது தவறு இல்லை. அப்படிச் செய்வபர்கள் தொகுப்பு கம்போசர், சம்மரி ரைட்டர் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்.
எனது விமர்சனம் இப்படிச் செய்பவர்கள் குறித்தும் அவர்கள் வழி நெடுக எறிந்து செல்லும் தகவல் குறித்தானது மட்டுமே.
*******
இந்தப் பதிவில் நான் எனது விமர்சனங்களாக வைத்துள்ளது...
மருதன் என்ற ஒருவர் சொல்லும் நிகழ்கால மற்றும் வரலாறுத் தகவல்கள் குறித்தானது மட்டுமே. அதனுடன் மற்ற வியபார ரீதியாக தகவல்கள் புத்தம் போடும் மற்ற் சிலரை சுட்டியாக கொடுத்து இருந்தேன்.
மற்றவர்களை குறை சொல்லும் அவரும் அப்படித்தான் என்பதைச் சுட்டவே இந்தப் பின்னூடம்.
மற்றபடி மருதன் என்பவர் யார் என்பதும் அவருக்கும் கிழக்குவிற்கும் என்ன சம்பந்தம் என்பது இந்தப்பதிவில் எனக்கு தேவையில்லாதது.
****
நான் பத்ரியின் பதிவில் சொன்னவை பத்ரிக்கானது. அவர் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் நிறுவனம் பற்றி அவரிடம் விமர்சனம் வைப்பது அவரின் பதிவில் நடந்த ஒன்று.
நான் பேசும் இடங்களில் உள்ள பதிவையும் அதன் பேசு பொருளையும் அதையொட்டி வரும் எனது பின்னூட்டங்களையும் பார்க்கவும்.
ஒரு இடத்தில் அந்த பதிவிற்கு விமர்சனமாகச் சொன்னது, உலக அளவில் எல்லா இடத்திலும் உள்ள பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் அல்ல. :-(((
**
எனது விமர்சனங்கள் கடுமையாக இருக்கலாம், குற்றச்சாட்டாக இருக்கலாம், நேரடியாக பல நேரங்களில் கிண்டலாக இருக்கலாம். எனக்குத் தெரிந்த முறை அதுதான். :-((
உங்கள் வருத்தத்தை புரிந்து கொள்கிறேன்.
.
தெளிவான நடையில் உங்கள் வாதத்தை முன் வைத்திருக்கிறீர்கள் மருதன். லத்தீன் அமெரிக்க நாடுகள் பற்றி தொடர்ச்சியாக சில பதிவுகள் நீங்கள் இடலாம்.
சாரு நிவேதிதா தவறாக எழுதினால் தான் இந்த விஷயங்களை நீங்கள் விளக்க வேண்டும் என்றில்லை. :-)
உங்கள் சிம்ம சொப்பனம், சே குவேரா இரண்டும் என் ஆல் டைம் ஃபேவரிட்
it's good to appose saru. Chennai police introduced moral policing in meerana beach to control public sex. Great charu oppossed that through vijay tv. he said that we should not disturb people they can only kiss let them kiss. See the great writter giving green signal to kiss in the public. This is first.
2.He read nithayananda's book and written one blog that that is the great book ever written in this world. this is second
3.AS marudhan sir told he will raise a voice where he can get publcity. only in kerala not tamilnadu. This is third
4.i hope people knows vijay tv neeya nanna comedy time by charu.
I completely agree with marudhan sir and appose him. those people creating negative impact in society.
திரு.கல்வெட்டு,
உங்கள் அளவுக்கு பரந்துபட்ட அறிவோ அல்லது தெளிவான பார்வையோ எனக்கு இல்லையென்று ஒப்புக்கொள்கிறேன்.
வரலாறு எழுதும் போது தேவைப்படும் தகுதி குறித்து உங்கள் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன்.
பா.ரா,முகில் மற்றும் மருதன் முதலியோர் எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.
புத்தகங்களின் சில இடங்களில் அவர்களே அந்நிகழ்வில் பங்கேற்றது போன்ற வர்ணிப்பு இருக்கும்.அப்போதெல்லாம் நம்பகத் தன்மையை பற்றி நான் யோசிக்கவில்லை.
கிழக்கு வெளியிட்ட ரகோத்தமனின்(CBI) ராஜிவ் கொலை பற்றிய புத்தகத்துக்கும் ,அதே கிழக்கில் மருதன் எழுதிய "விடுதலைபுலிகள்"(முதலில் வெளியானது) புத்தகத்திற்கும் (தகவல்களில்) முரண்பாடுகள் இருந்தன.
ஆனால் மருதன் அதைபற்றி மறுக்கவும் இல்லை,ஆதரிக்கவும் இல்லை.அதைப் பற்றி எழுதவே இல்லை.
இதற்குப் பிறகுதான் எனக்கு அவர்களின் நம்பகத்தன்மையைப் பற்றிய கேள்வி எழுந்தது
அடுத்த பதிப்பிலாவது தகவல்களை திருத்துவார் என்று நம்புகிறேன்.
கல்வெட்டு said...
"உங்கள் வருத்தத்தை புரிந்து கொள்கிறேன்"
நன்றி
pa.raghavan has floating home tab...if u want floating search tab and a floating tab for contacting the author visit http://www.pax.com/
(for demo see my dummy blog http://thandapayal.blogspot.com/)
google "Cuba" you will find loads of info. அதவிட்டுட்டு ஏன் இப்படி. ஏன் இந்த வன்முறை ஏன் இந்த கட்டுரை ஏன் இதற்கு ஒரு முடிவுரை.
அன்புடன்,
பிரபு ராமகிருஷ்ணன்
லத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்து தனி புத்தகங்கள் எழுதலாம் மருதன். Honduras, Chile, Cuba என்று அமெரிக்கா அத்துமீறி செய்த அயோக்கியத்தனங்கள் அனைத்தும் விரிவாக ஆராய வேண்டும்.
An interesting, long essay. The reference that you had provided provided a deep insight about Castro's Cuba. My appreciations to you for putting this in record. Write more such useful pieces in your blog. It will help the student community.
அருமையான கட்டுரை மருதன்.
to display total number of posts and comments
http://www.blogosys.com/2008/12/how-to-display-total-number-of-posts.html
to learn many blogger hacks use these sites...
http://www.blogosys.com/search/label/Tips%20Triks%20Hacks
http://www.anshuldudeja.com/p/archives.html
மருதன், எப்படி இருக்கின்றீர்கள்? நலமா? நான் இக்பால், ஞாபகம் உள்ளதா? பாலு சத்யா நலமா? உங்கள் வலைப்பூவை இப்போதுதான் முதல்முதலாகப் பார்க்கின்றேன், மன்னிக்கணும். ஆழ்ந்து எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள், தொடர்க.
இக்பால்
to know all of ur referrers
http://ravidreams.net/forum/topic.php?id=23
please place a floating archive tab at the left side of your blog. it will be very much helpful...
get the code here
https://docs.google.com/document/edit?id=16lxKrjEzn2zwHEFKKFlB0GSuF5hcU8CXtyEBfmiIuRc&hl=en&pli=1#
for demo see http://thandapayal.blogspot.com/
(you must place this :))
Maruthan,Ivisit u r blog for the first time. I am nearing 75 with more than 30yrs experience in journalism.I learn more on Cuba from U r fine posting.pl keep it up ...kashyapan.
Charuku vera velavetti iela mr.marudhan,avarku padhil soldratha vittutu neenga comunist countries pathi pudhusa oru book podalam...
Vazhthukal...
Very good analysis and write up. Do write about the political set up of Cuba in detail. Is Raul Castro able to meet the requirements of Cubans like Fidel? Why cant you write a blog about Raul?
K Ramanan
அன்பின் மருதன்,
கட்டுரையின் கடைசி பத்தி குஜராத் மற்றும் மோடிக்கும் பொருந்துமா?
அன்பின் மருதன்
கட்டுரையின் கடைசி பத்தி குஜராத் மற்றும் மோடிக்கும் பொருந்துமா?
மோடியும் ,குஜராத் மக்களும் இந்த கட்டுரையின் கடைசி பத்தியில் சொன்னதைத்தான் சொன்னதாக india today ல் படித்ததாக கவனம்.
Charu is a half-baked bun. His logics and self-praising are same as Nithyananda - all preachings are for others and he doesn't have to follow any. I say this because I have been reading him for 7.5 years and talking to him for 4.5yrs.
Indian Govt also charges 10 times of fee for all central govt tourist attractions for foreigners? Isn't everything same for foreigners and Indian? Then, why the hell do they have to charge in USD? If India can do, I understand and suppor Cuba's action
நீங்கள் எழுதிய “சிம்மசொப்பனம்” படித்தேன், கியூபாவையும் பிடல் காஸ்ட்ரோவையும் புரிந்து கொள்ள உதவியது. புரட்சி என்ற சொல் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொச்சைப் படுத்தப்படுகிறது. Revoultion அல்லது புரட்சி என்பது இருக்கின்ற அமைப்பை தலைகீழாக மாற்றியமைப்பது தான், சோவியத் வீழ்ந்தவுடன் சோசலிசத்தை பிந்தொடற்கிற நாடுகளின் பொருளாதாரம் மிகுந்த நெருக்குதலுக்கு உள்ளாயிருக்கிறது அதற்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தான்.
அந்த தடைகளை அமெரிக்காவின் நுகத்தடியில் இருந்து கொண்டு பிடல் எதிர்கொண்ட விதம் இன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது. மூன்றாவது உலக நாடுகளின் விடுதலைக்காக “சே” விட்டுச்சென்ற பணியையும் பிடல் தொடர்ந்தார் என்ற செய்தி சர்வதேசியவாதிக்கான அடையாளத்தை அவருக்கு அளிக்கிறது.
இன்றும் கல்வியிலும் மருத்துவத்துறையிலும் கியூபாவின் சாதனைகளை ஏகாதிபத்தியவாதிகளாலும் மறுக்கமுடியாது. பொருளாதாரத் தடை முடிவுக்கு வரவேண்டும் அதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றினைந்து பாடுபடும்.
புரட்சி முடிந்துவிடவில்லை...
thanks for sharing the knowledge...........
http://www.tamiloviam.com/unicode/01260605.asp. What is the answer for this
http://www.tamiloviam.com/unicode/01260605.asp. What is the answer for this pls reply to m
Post a Comment