December 8, 2010

புதிய புத்தகம் : முதல் உலகப் போர்

மனித குலத்தின் பெயராலும், நாகரிகத்தின் பெயராலும், என் மக்களுக்கு எதிராக நான் இந்தப் பிரகடனத்தைச் செய்கிறேன். ஜெர்மனியை அழிக்கும் பணியில் நாம் ஈடுபட்டிருப்பதை நான் கண்டிக்கிறேன்.

ஒரு மாதம் முன்பு வரை, ஐரோப்பா அமைதியாகவே இருந்தது. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவன் ஜெர்மானியனைக் கொன்றுவிட்டால், அவன் தூக்கிலிடப்படுவான். இப்போது, பிரிட்டனைச் சேர்ந்த ஒருவன் ஜெர்மானியனைக் கொன்றுவிட்டால், ஜெர்மானியன் ஒருவன் பிரிட்டனைச் சேர்ந்தவனைக் கொன்றுவிட்டால் அதனை தேசபக்தி என்று அழைக்கிறோம்...

இன்று, கொடூரமான கொலைகள் பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் செய்தித்தாள்களில் தேடிக்கொண்டிருக்கிறோம். இயந்திரத் துப்பாக்கிகளால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் (ஜெர்மானியர்கள்) கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறோம்...

அமைதியை விரும்பிய, மனிதத்தன்மை கொண்ட மக்களும்கூட, போர் அலையில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டனர். ரத்த வெறியும் வெறுப்பும் மண்டிக்கிடக்கிறது. போரிடும் நாடுகளில் உள்ள ‘தேசபக்தர்கள்’ இந்த மிருகத்தனத்தை ஆதரிக்கிறார்கள். சிந்திக்கும் திறனையும் இரக்கத்தையும் அவர்கள் மறந்துவிட்டார்கள்.

பெர்ட்ரண்ட் ரஸல்
ஆகஸ்ட் 15, 1914

4 comments:

Anonymous said...

Vaazhthugal Marudhan

சுடர் said...

இரண்டாம் உலகப் போர் படித்திருக்கிறேன். நல்ல புத்தகம். இதையும் வாசிக்க தூண்டியிருக்கிறீர்கள். முதல் உலகப் போர் பற்றி அதிக புத்தகங்கள் பார்த்ததிலலை.

Unknown said...

how can i download this full book...........bcoz i couldn't able to buy this book in shops

மருதன் said...

Madhu, இந்தப் புத்தகத்தை டவுண்லோட் செய்வது சாத்தியமில்லை. உங்களுக்கு அருகில் இருக்கும் புத்தகக் கடைகளில் கேட்டுப் பாருங்கள். அல்லது, எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு புத்தக நிலையத்துக்கு வாருங்கள்.