January 9, 2011

பத்ரி யாரை ஆதரிக்கிறார்?


ஸ்பெக்ட்ரம் ஊழல். ஸ்பெக்ட்ரம் சர்ச்சை. இந்த இரண்டில் எது சரி? 1857 சிப்பாய் கலகம். 1857 சிப்பாய் புரட்சி. இந்த இரண்டில் எது சரி? இரண்டாவது கேள்விக்கான விடைதான், முதல் கேள்விக்கான விடையும்.

பத்ரியின் ஸ்பெக்ட்ரம் புத்தகம் சர்ச்சைக்கு உள்ளானதற்கு முதல் காரணம் அதன் தலைப்பு. சுதந்தர இந்தியாவின் மாபெரும் ஊழல் என்று ஊடகங்கள் அலறிக்கொண்டிருக்கும் சமயத்தில், இது சர்ச்சை மட்டுமே என்று தலைப்பில் சொல்லிவிடுகிறார் பத்ரி. ஆனால், புத்தகம் சொல்லவரும் விஷயங்கள் பல.

புத்தகத்தின் முதல் அறுபது சதவீதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பின்னணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மார்கோனி, மின்காந்த அலைகள், ரேடியோ, தந்தி, தகவல் தொடர்புச் சாதனங்களின் தோற்றம், வளர்ச்சி என்று பலவற்றையும் பத்ரி தொட்டுச் செல்கிறார். 'ஸ்பெக்ட்ரம் : அதன் அறிவியலும் தொழில்நுட்பமும்' என்று இந்தப் பகுதிக்குப் பெயரிடலாம்.

இரண்டாவது பகுதி, இந்தியத் தொலைதொடர்பு பிரிவு பற்றியது. இது புத்தகத்தில் இருபது சதவீதம் இடம்பெறுகிறது. இந்தத் துறையின் முன்னோடிகள் யார், அவர்கள் பின்னணி என்ன, தொலைதொடர்பில் தனியார் நிறுவனங்களின் வரவு, ஸ்பெக்ட்ரம் ஒளிக்கற்றையின் தேவையும் அவசியமும், ஸ்பெக்ட்ரம் ஏலம் ஆகிய விஷயங்கள் இந்தப் பகுதியில் இடம்பெறுகின்றன.

மூன்றாவது மற்றும் இறுதி பகுதி, சர்ச்சையா ஊழலா என்னும் கேள்விக்குப் பதில் தேடுகிறது. ஸ்பெக்ட்ரம் குறித்த தன் நிலைப்பாட்டை பத்ரி முன்னதாக தன் பதிவில் எழுத, அதுவே பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இன்றுவரை அந்தப் பதிவுக்குக் காட்டமான பின்னூட்டங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பதிவின் தொடர்ச்சியே, புத்தகம்.

ஒரு வசதிக்காக பத்ரியின் கருத்தை இப்படிச் சுருக்கிக்கொள்ளலாம். 'ஊடகங்கள் குறிப்பிடும் அளவுக்கு (1,76,000 கோடி) இதில் பணம் சம்பந்தப்படவில்ல. CAG தவறாக இந்த எண்ணிக்கையை அடைந்துள்ளது. எனில், எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது என்பதை இப்போது சொல்லமுடியாது. காரணம், அதற்கான உறுதியான சான்றுகள் இதுநாள் வரை வெளிவரவில்லை.' இந்த நிலைப்பாட்டுக்கு ஏன் வந்து சேர்ந்தேன் என்பதை பத்ரி இந்தப் புத்தகத்தில் படிப்படியாக விவரிக்கிறார்.

எனில், இது திமுகவுக்கு ஆதரவான புத்தகமா என்றால் பகுதியளவில், ஆம். இது மாயப்பணம், இவ்வளவு ஊழ்ல் நடந்திருக்க வாய்ப்பேயில்லை என்னும் அவருடைய வாதத்தை மட்டும் கட் பேஸ்ட் செய்து திமுக பிரசாரம் செய்யலாம். (ஏற்கெனவே ஆரம்பிக்காமல் இருந்திருந்தால்). ஆனால், திமுக தொடர்ந்து பத்ரியை நம்பிக்கொண்டிருக்கமுடியாது. காரணம், ராசா உள்ளிட்டவர்கள் லஞ்சம் வாங்கியது தெரியவந்தால், அதற்கான அறிவியல்பூர்மான Empirical evidence கிடைத்துவிட்டால், பத்ரி ராசாவையும், திமுகவையும், காங்கிரஸையும் அம்பலப்படுத்தி தாக்க தயங்கமாட்டார். ஆனால் எவிடென்ஸ் கிடைக்கும்வரை, ஸ்பெக்ட்ரம் சர்ச்சை என்றே புத்தகத்தின் தலைப்பும் நீடிக்கும்.

இன்னொரு உதாரணம். ரிலையன்ஸ் பற்றி விவாதிக்கும்போது, வெளியூர் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றிக் காட்டி அரசை முன்னர் ஏமாற்றியது பற்றி பத்ரி குறிப்பிடாததன் காரணமும் இதுவேதான். அதற்கான வலுவான evidence அவரிடம் இல்லை.

இவற்றைப் பற்றி பத்ரி எழுதவேண்டுமானால், நாம் சில விஷயங்களைச் செய்தாகவேண்டும். திமுக முதல் காங்கிரஸ் வரையிலான பெரிய தலைகள் லஞ்சம் வாங்கியதற்கும், அம்பானி குழுமம் ஏமாற்றியதற்கும் ஆடியோ, வீடியோ சாட்சியங்களை தேடிப்பிடித்துஎடுத்துவரவேண்டும். முடிந்தால், சம்பவத்தை நேரில் பார்த்த சிலரை கொண்டுவந்து நிறுத்தவேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்து, சுத்தியலால் நீதிபதி மேஜையைத் தட்டி தீர்ப்பும் வழங்கிவிட்டால், பத்ரியின் புத்தகத்தின் தலைப்பு ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று மாறும். அம்பானியின் ஊழல் விவகாரம் பற்றியும் பத்ரி எழுத ஆரம்பிப்பார்.

பி.கு : லாபியிங் சர்ச்சை என்னும் தலைப்பில் பத்ரி அடுத்து ஒரு பதிவு எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன். அல்லது, ஒரு சிறு புத்தகம்.

0

ஞாயிறு கண்காட்சியில் திரண்டு வந்த கூட்டம்.

குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு!

Oasis அரங்கில் Left word பத்தகங்கள் கிடைக்கின்றன.


வாசகர்களுக்குக் கையெழுத்திடும் பா. ராகவன். இவருடைய காஷ்மீர், ஆர்.எஸ்.எஸ் இரண்டும் கிழக்கின் டாப் செல்லர்ஸ்.



சில நல்ல புத்தகங்கள் மட்டுமே Good Book Library அரங்கில் எஞ்சியிருக்கின்றன.

நடைபாதையில் பைரேட்டட் புத்தகங்கள்.


சமையலையும் சமையல் புத்தகங்களையும் தொடர்ந்து நேசிக்கும் பெண்கள்.


பாரதி புத்தகாலயத்தில் இருந்து வந்த ஓர் அறிவிப்பை இங்கே அளிக்கிறேன்.

The General Secretary of CPI(M) Com. Prakash Karat will release three volumes of Karl Marx's Capital published by Leftword and Venkatesh Athreya'sMarxian Political Economy (in Tamil) published by Bharathi Puthagalayam.
Date: 10/01/2011
Time: 2 pm
Venue: Chennai Book Fair, Stall Number F2.

4 comments:

Badri Seshadri said...

ரிலையன்ஸ் சர்வதேச அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகள் என்று மாற்றிக் கொடுத்தது பற்றி நான் எழுதாதற்குக் காரணம் அது இந்தப் புத்தகம் எடுத்துக்கொண்ட தலைப்புடன் தொடர்புடையதல்ல என்பதால். அதனால் நேரடியாக பாதிக்கப்பட்டது பி.எஸ்.என்.எல் மட்டுமே. அதனை பி.எஸ்.என்.எல் கையாண்டது. விளைவாக என்ன நடந்தது என்பது பற்றி இப்போது ஞாபகம் இல்லை. தேடிப் பார்க்கவேண்டும்.

மற்றபடி, லாபியிங் பற்றியும் எழுதப்போகிறேன். ஆனால் புத்தகமாக அல்ல. பதிவுகளாக. எழுத வேறு சிலவும் இருக்கின்றன.

Anonymous said...

இன்று பிரகாஷ் காரத் வருகிறாரா? தகவலுக்கு நன்றி. மதியம் வந்து பார்ர்ககிறேன்

S.Rengasamy - cdmissmdu said...

பத்ரி உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் எந்தப் பிரச்சினையையும் அறிவியல் பூர்வமாக அணுகுவார்.ஸ்பெக்ட்ரம் பற்றி அறிவியல் பூர்வமாக அறிந்துகொள்வதே இதைப் போன்ற பிரச்சினைகளுக்கு வரும் காலங்களில் முற்றுப்புள்ளி வைக்கும். ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பேசும் ஒரு இயக்கத்தவரிடம் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று A 4 அளவில் ஒரு போஸ்டர் தயாரித்து அவர்கள் மாநாட்டில் விநியோகம் செய்யச் சொன்னேன். அவர்களுடைய பதில் உற்சாகமாக இல்லை. இறைஞ்ச நாயக்கர் பெரிய நாயக்கர் என்று ஒரு மொழி உண்டு.புரியுதோ புரியவில்லையோ ஆதரித்தோ எதிர்த்தோ பேச வேண்டும். அதுவெல்லாம் ஒரு magical awareness உருவாக்க உதவலாம்.ஆனால் அதையும் தாண்டிய critical awareness தான் எதையம் நிலைத்து நின்று போராட உதவும். I appreciate Badri's attempt to explain the Spectrum issue.
Lobbying is also not a dirty word. it is an academic discipline and it is incorporated in social work - community organization syllabus...almost all us are involved in lobbying...லாபீயிங் என்ற "காது கடி வைத்தியத்தை" பண்ணாதவர்கள் நம்மில் மிகக் குறைவு. யார், எதற்காக, ஏன் பண்ணுகிறார்கள் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்

ahamed5zal said...

Dear marudhan sir,
Thanks for regular updates from book fair show..first of all, i say thanks to you and entire team. But i feel, i am unlucky fellow becos i am not able to participate in book fair show.. During mt vacation, i will come to kizhakku office and i will meet u sir.. I will request autograph from u, para sir, chokkan sir, and badri sir...

Kizhakku rocks..