January 17, 2011

யாரும் படிப்பதில்லை!

விடியல் பதிப்பாசிரியர் சிவாவிடம் நேற்று நடந்த உரையாடலில் இருந்து சில பகுதிகள்.

கே: கூட்டம் இந்த முறை அதிகமிலலையே! உங்கள் விற்பனை எப்படி இருந்தது?

சிவா: வழக்கமான விற்பனைதான். எத்தனை கூட்டம் இருந்தாலும், எங்கள் கடை தேடி எத்தனை பேர் வருவார்கள் என்று எனக்குத் தெரியும். அப்படியே உள்ளே நுழைவார்கள். முதல் வரிசையைப் பார்வையிடுவார்கள். சில புத்தகங்களைப் புரட்டுவார்கள். பிறகு, கிளம்பிவிடுவார்கள். என்ன செய்வது? வீட்டில் உள்ள அலமாரி நிரம்பியிருக்கும். மேற்கொண்டு வாங்கி சிரமப்படவேண்டாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

கே: என்ன காரணம்? கனமான விஷயங்களை வாசகர்கள் படிப்பதில்லையா?

சிவா: நிச்சயம் படிப்பதில்லை. மீடியாவில் பாப்புலர் ஆக்கப்படும் புத்தகங்களை மட்டுமே வாசகர்கள் வாங்குகிறார்கள். மீடியாவில் எப்படிப்பட்ட புத்தகங்கள் பாப்புலர் ஆக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். எங்களிடம்கூட அப்படிப்பட்ட புத்தகங்கள் உளள்ன. நான்கைந்து தேறும். ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், எரியும் பனிக்காடு, சே குவேரா அருந்ததி ராய். இவைதான் அதிகம் விற்பனையாகின்றன. மற்ற புத்தகங்களை சீரியஸ் ரீடர்ஸ் எனப்படுபவர்கள்தான் வாங்குகிறார்கள்.

ஆனால், அவர்களும்கூட அந்தப் புத்தகங்களைப் படிக்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. சே குவேராவின் எழுத்துகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற பலரும் அதை ஓர் அலங்காரப் பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள். எல்லோருக்கும் சே குவேராவைத் தெரிந்திருக்கிறது. எல்லோரும் அவரைப் பற்றி விவாதிக்கிறார்கள். எனவே, நானும் ஒன்று வாங்கிக்கொள்கிறேன். இதுதான் அவர்கள் மனநிலை. பொதுவாக, புத்தகங்கள் அலங்காரப் பொருள்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. நீங்கள் மிக நல்ல புத்தகங்களைக் கொண்டு வருகிறீர்கள் தோழர் என்று பாராட்டிவிட்டு ஒன்றிரண்டு கனமான புத்தகங்களை வாங்கிக்கொண்டு செல்வார்கள். அவ்வளவுதான். படிப்பதில்லை.

கட்சி சார்ந்து இயங்கும் சில பதிப்பங்கள் இருக்கின்றன. அவர்கள் வெளியிடும் புத்தகங்களை உறுப்பினர்களே பெரும்பாலும் வாங்கிவிடுவார்கள். வாங்கிக்கொண்டு போய் வீட்டில் வைத்துவிட்டால் வேலை தீர்ந்தது. சிறிது காலம் கடந்ததும், அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் அந்தப் புத்தகங்களை அள்ளி எடுத்து கடையில் போட்டுவிடுவார்கள். இப்படி பல நல்ல புத்தகங்கள் வாசிக்கப்படாமலேயே கிடக்கின்றன.

கே: கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிவா: பணம் படைத்த நடுத்தர வர்க்க மக்களுக்கு கிழக்கு புத்தகங்கள் தீனி போடுகின்றன. இன்று எல்லோரும் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை. இந்த விவாதங்களில் பங்கேற்க வேண்டுமானால், சரியோ, தப்போ ஏதாவது பேசியாகவேண்டும். எனவே எளிமைப்படுத்தப்பட்ட கிழக்கு புத்தகங்களை அவர்கள் வாங்குகிறார்கள். கிழக்கு புத்தகங்கள் மேம்போக்கானவை, ஆழம் அற்றவை.

கே: நீங்களும் அப்படிப்பட்ட புத்தகங்களைப் போடலாமே?

சிவா: (சிரிக்கிறார்) எனக்கு இது பழகிவிட்டது. சிறிய புத்தகங்களையோ, மேலோட்டமான புத்தகங்களையோ என்னால் கொண்டு வரமுடியாது. தலையணை அளவு புத்தகங்களையே நான் விரும்பி கொண்டு வருகிறேன். யார் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் நான் அவற்றை வாசித்துவிடுகிறேன். பல புத்தகங்களை எங்களால் மறுபதிப்பு செய்ய முடியவில்லை. ஆனால், இந்தத் தடைகள் அனைத்தையும் மீறி, செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.


எதிர்பார்த்த கூட்டம் திரளவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்து. விலைவாசி, விடுமுறை சுற்றுலா, அரங்கு நிகழ்ச்சிகள் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த முறையும் மாணவர்களை அதிகம் பார்க்கமுடியவில்லை.


பலருக்கு, புத்தகம் என்றால் அகராதி மட்டுமே.

Good Book அரங்கில் கூட்டம் அலை மோதியது. நாவல்கள் அதிகம் விற்பனையாயின. அயல்நாடுகள் நிராகரித்த புத்தகங்களை டன் கணக்கில் எடை போட்டு வாங்கி, ஸ்டிக்கர் ஒட்டி, கடை போட்டு விற்கிறார்கள்.

ஆ. சிவசுப்பிரமணியனின் முக்கியமான நூல் இது. காலச்சுவடு வெளியீடு.

அரங்குக்கு வெளியே, பணியாற்றும் ஓவியர்.

திரை!

21 comments:

srikrishnan said...

இ​தே விசயம் குறித்து என்னு​டைய பார்​வை​யை கீழ்கண்ட லிங்கில் கட்டு​ரையாக எழுதியுள்​ளேன் வாய்ப்பிருந்தால் படிக்கவும்
http://naatkurippugal.wordpress.com/2011/01/18/cinema-books-popcorn/

மருதன் said...

srikrishnan: உங்கள் பதிவைப் பார்த்தேன். நல்ல அலசல். நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள விஷயங்களை நான் கவனத்தில் கொள்கிறேன். நன்றி. தெளிவான நடையில், மாறுபட்ட கோணத்தில் உங்கள் கட்டுரை அமைந்துள்ளது. வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள்.

Nat Sriram said...

வாழ்த்துக்கள் மருதன்..கிழக்கு புத்தங்கள் மேம்போக்கானவை என்ற சிவா கருத்தை கிழக்கின் ஆஸ்தான எழுத்தாளாராக இருக்கும்போதிலும் எந்த அசௌகரியமும் இன்றி பதிவு செய்ததற்கு (வெளிப்படையாக சொன்னால், எனக்கு உங்கள் சேகுவேரா புத்தகம் அப்படி தான் பட்டது) . இது கிழக்கில் நிலவும் கருத்து சுதந்திரத்துக்கான ஒரு சோறு பதமாக கொள்கிறேன்.

மருதன் said...

Nataraj: உங்கள் கருத்துக்கு நன்றி. சே குவேரா பற்றி நான் எழுதிய புத்தகத்தின் நோக்கம், அவருடைய வாழ்வையும் போராட்டங்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்துவது. சே குவேரா பற்றி நான் இன்னொரு புத்தகம் எழுதப்போகிறேன். அது நீங்கள் விரும்புவது போல் ஆழமாக இருக்கும். சேவின் அரசியல் கருத்துகள், அவற்றின் இன்றைய தேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய புத்தகமாக அது அமையும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்யுங்கள். எனக்கு அவை உதவும்.

அருண் பிரபு said...

கிழக்கின் தொண்ணூறு சதவீத புத்தகங்கள் மேம்போக்கானவையே.

ஹிட்லர், நெப்போலியன், அலெக்சாண்டர், குமரிக்கண்டம், சே குவேரா, என நான் படித்த அனைத்தும் அப்படிப்பட்டவையே. இனிமேல் கிழக்கு புத்தகங்கள் வாங்கும் எண்ணம இல்லை.

இம்முறை வாங்கிய ஒரு அற்புத காவியம் "இலியட்"- நாகூர் ரூமி எழுதியது. மிக அருமை.நாகூர் ரூமி நேர்த்தியான எழுத்தாளர் என்பது உணர முடிந்தது.

உலோகம் ஒன்றும் சிறப்பானதாக இல்லை. மூன்று நாளில் படித்து முடித்து விட்டேன். கமர்சியல் ஹிட். அவ்வளவே.

நிலமெல்லாம் ரத்தம் பரவாயில்லை. கிழக்கு இதே போன்று புத்தகம் போட்டால், தற்போது பெற்ற Rs.25 கூப்பன் கூட பயன் படுத்தி புத்தகம் வாங்க மாட்டேன்.

ArunPrabu said...

கிழக்கின் பாணியை பின்பற்றி மேலும் இரு பதிப்பகங்கள் வளர்ந்து வருகின்றன. சிக்ஸ்த் சென்ஸ் அவைகளில் ஒன்று.

வரலாறு எழுதும் போது, அதில் இருக்க வேண்டிய செறிவும், தரமும் இல்லை. Boldness missing when I went through the covers of 'Hitler'. முதல் உலகப்போரும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.அனைத்தும் நுனிப்புல் மேய்வது தான். பள்ளியில் சமூக அறிவியல் பாடத்தில் படித்ததை விட விவரம் இருந்தால் மகிழ்ச்சி.

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.

கிழக்கின் புத்தகம் பலவும் செய்தித் தாள்களில் வரும் சிறப்பு கட்டுரை போலவே இருக்கின்றன. சமீபத்தில் ஒரு வலை பதிவில், அடுத்த புத்தக காட்சியில் கிழக்கு "நீரா ராடியா" பற்றி கூட புத்தகம் போட்டுவிடும் என்று நையாண்டி செய்திருந்தார்கள்.

பிறர் விரும்புவது பற்றி தெரியவில்லை. அனால் நான் பேசிய பலரும், நானும் விரும்புவது சிறந்த
இலக்கியத் தரம் வாய்ந்த திரைப்படம் பார்த்த உணர்வை தருவதையே.

என்னை போன்ற வாசகனின் கருத்துக்களை "Constructive Criticism" ஆக எடுத்து கொண்டு கிழக்கு புதிய திசையில் பயணத்தை சீரிய வழியில் தொடரும் என நம்புகிறேன்.

இல்லையேல் கிழக்கு திசையில் எனது பயணம் இராது.

மருதன் said...

ArunPrabu : நிச்சயமாக! உங்களைப் போன்றவர்களின் கருத்துகள் முக்கியமானவை என்பதால் அவற்றை ஆரோக்கியமான முறையில் பரிசீலிக்கவே விரும்புகிறேன்.

முதல் உலகப் போரை நீங்கள் வாசிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அவகாசமும் வாய்ப்பும் கிடைத்தால் வாசித்துப் பார்த்துவிட்டு உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள். ஹூ ஜிண்டாவின் அரசியல் வாழ்க்கை குறித்தும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். இந்த இரண்டுமே, பள்ளிப் புத்தகங்களில் நீங்கள் வாசித்திருக்கமுடியாதவை என்று நம்புகிறேன். நீங்கள் எதிர்பார்க்கும் செறிவும் தரமும் அவற்றில் உள்ளனவா என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

ArunPrabu said...

நன்றி மருதன். தற்போதைய நிலையில் நிறைய வாசகர்கள் விலையை பற்றிக் கவலை படுவதில்லை. Rs.250, Rs.300, Rs.350, Rs.400 என ஒரு புத்தகத்துக்கு செலவு செய்து வாங்குதல் அவர்களுக்கு ஒரு விடயமே இல்லை. தரம் தான் முதல். தகவல் தொழில் நுட்ப துறையில் இருப்போரும், ஏனைய வரலாறு பாடமாக படிக்காதோரும் நல்ல ஆழமான வரலாற்று புத்தகங்களையே விரும்புகிறார்கள்.

ஆங்கிலத்தில் தலைவர்களின் புத்தகங்களை வாங்காமல் தமிழில் வாங்குகிறார்கள் என்றால் அவர்களுக்கு படிக்க தெரியாமல் அல்ல. அவர்களது முதல் விருப்பம் தமிழ் தான் என்பதை கருத்தில் கொண்டு அவர்களை நீங்கள் உங்கள் பால் இழுத்துக்கொள்ள வேண்டும்.

தங்களது பெரிய சே குவேரா புத்தகம் பற்றி அறிந்ததும் ஆனந்தம். விரிவாக எழுதுங்கள்.வாங்கும் முதல் ஆள் நானாக இருப்பேன்.
மீண்டும் நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்
அருண் பிரபு

Anonymous said...

மனிதனின் மனதில் inbuiltஆகவே மகிழ்ச்சியை மட்டுமே எதிர்நோக்கும் புத்தி உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி தனக்குள் ஒரு image வைத்திருக்கிறான். எந்த imageஐ வைத்துக் கொண்டால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்குமோ அந்த imageஐயே மனிதன் தன்னைப் பற்றி தனக்குள் வைத்துள்ளான். அதனால்தான் ஒவ்வொருவனும் தன்னைத் தானே சிறப்பானவனாய், நல்லவனாய், அறிவாளியாய் நம்பிக் கொண்டிருக்கிறான். தன்னைப் பற்றி தானே வைத்திருக்கும் imageஐ இருக்கிப் பிடித்துக் கொள்ளவே மனித மனம் சதா விரும்புகிறது. அந்த imageஐ இருக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் வரை எவ்வளவு புத்தகம் படித்தாலும்
அவை முழுமையாக தன்னை அறிதலுக்கு உதவக் கூடியனவா என்பது என் சந்தேகம்.

ஏன் என்றால் அந்த image 'to feel oneself good' என்ற basic விருப்பம் ஒன்றின் அடிப்படையில் அமைந்தது. அதை பிடித்துக் கொண்டிருக்கும் வரை மனம் தனக்கு தெரியாமல் தன்னையே ஏமாற்றும் வேலையைத் தான் செய்யும்.

தாங்கள் அறிவாளி ஆகி விட விரும்பி புத்தகங்களை வாங்கும் பெரும்பாலோர் சுய ஏமாற்றிகள்தான். I think books won't help these kind of people...

I would like to see your opinion...

...d or M....

yeskha said...

கிழக்கு புத்தகங்கள் சிலவற்றை நான் ஸ்டால்களிலோ, கடைகளிலோ நின்றபடியே முழுமையாகவே படித்திருக்கிறேன்.. மிக வேகமான நடை என்று ஒருபுறம் சொன்னாலும், ஒரு ஃபாஸ்ட் ஃபுட் போல உடனடியாக ஜீரணமாகிப்போகும் விதத்தில் உள்ளன. இன்னும் கொஞ்சம் அழுத்தம் தேவைதான்.

NO said...

நண்பர் திரு மருதன் அவர்களே,

நீங்க ஒரு கம்யூனிஸ்ட் என்று தெரிகிறது. சே குவேரா போன்றவர்களை பற்றி படிப்பவர்கள் இருவகை. ஒரு வகை, விபரம் தெரியாமல் ஆனால் சமுதாய
மாற்றத்திற்காக நாம எதாவது செய்யவேண்டுமே என்ற நினைப்பு கொண்டு இருந்தும் வரும் நல்ல வருமானத்தை, வாழ்க்கையை இழக்க விரும்பாத அதே
சமயம் இதோ பார் நான் மாற்றத்தின் ஒரு அங்கம் என்று அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்த துடிப்பவர்கள். இரண்டாம் வகை, நான் கம்யூனிஸ்ட் நான்
கம்யூனிஸ்ட் என்று இளம் வயதிலேயே அவதாரம் எடுத்துவிட்டு, அதிலிருந்து விடுபடமுடியாமல், தன்னின் சிவப்பியத்தை அப்பப்போ, மற்றவர்களுக்காகவும்,
அவர்களுக்காகவும், reinforce செய்பவர்கள்.

முதல் கோஷ்டி வாங்கிய சே குவேரா புத்தகம், சுமார் பத்து பக்கங்கள் படிக்கப்படும். பின்னர் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் பார்வைக்காக அலமாரியில் அடுக்கப்படும். இரண்டாவது கோஷ்டி கொஞ்சம் உள்ளே இறங்குவார்கள். மற்றவர்களிடம் அதை பேசுவதற்காக ஒரு நாலு தடவை படித்திருப்பார்கள்.

படித்தவர்கள் இப்படி இருக்க, சே குவேராவைப்பற்றி எழுதுபவர்கள் - அதாவது நல்லவிதமாக - எப்படி பட்டவர்கள் என்பது நான் முற்றிலும் புரிந்து கொண்ட ஒன்று. நீங்கள் சே குவேராவைப்பற்றி எழுதிருக்கிரீர்களா? இந்த பதிவில் நீங்கள் சொல்லியதைப்பார்த்தால், எழுதப்போவதாக எனக்கு புரிகிறது.

அப்படி இல்லாமல் நீங்கள் முன்னமே எழுதியிருந்தால், my sincere condolences.

Souls that rejoice, celebrate and deify the ones that made a life and career out of virulence, voilence, vendetta keep loosing their humanity in the same way as the ones that is celebrated!!
These souls that write such of course know blood, pain and destruction. Yet they do not know what it means when such theories of anhilation are applied on fellow humans.

கொலையின் தன்மையையும், ரத்தத்தின் வன்மையையும் அறிந்தவர்கள், அது தனது சகோதர மனிதனின் உள்ளிலிருந்து நசுக்கி எடுக்கப்பட்டது என்பதை புரிந்தும் புரிந்து கொள்ளாதவர்கள். அந்த நசுக்கலில் ஞாயத்தை மட்டும் பார்த்து, ஆனால் அந்த நசுக்கலின் பாதையை, முறையை , அது துடிக்க செய்த உயிரினத்தின் ஓலங்களை, சற்றும் புரிந்துகொள்லாதவர்கள். மொத்தத்தில் மரண ஓலம் என்றால் என்ன, வன்முறை ஏற்ப்படுத்தும் வலி என்றால் என்ன, கொலைகுள்ளான ஒரு மனிதனின் கூப்பாட்டில் மறைந்திருக்கும் வேதனையும் வலியும் என்ன என்பதை ஓரம் தள்ளி விட்டு, அந்த கொலைகாரனின்
ஞாயத்தை பேசுபவர்கள்.

சே குவேரா போன்ற ஒரு மனிதத்தன்மையின் விரோதிக்கு காவடி தூக்கும் உங்களைப்போன்றவர்கள், maybe உங்கள் பதிப்பாளர்களுக்கு சில புத்தகங்கள் வேண்டுமானாலும் விற்றுக்கொடுக்கலாம். ஆனால் நீங்கள் அதல் மூலம் மூழ்கடிக்க முயலும் மனிதத்தன்மைகள், உங்களைப்போன்றவர்களின்மேல் எப்பொழுதும் இருக்கும் இரத்தக்கரைகள்தான்!!!

Stalin, Mao, Che, Polpot, KimilSung, Choi-Bal-Sen, Enver Hoxa, Nikolai Causecu, Genrich Yagoda, Nikolai Yezhv, Laverenty Beria..................................................... எழுத உங்களுக்கு நிறைய
மகான்கள் இருக்காங்க சார். எல்லோரைப்பற்றியும் உயர்த்தி எழுதுங்க, நல்லா புத்தகம் விற்கும், நீங்களும் நல்லா தூங்கலாம்.!!

NO said...

An ounce of action is worth a ton of theory

The state is nothing but an instrument of opresssion of one class by another - No less so in a democratic republic than in a monarchy!

நண்பர் திரு மருதன் -
மேலே உள்ளது யார் சொன்னது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்பொழுதுதான் உங்கள் வலைப்பதிவில் நீங்கள் இந்த மகானைப்பற்றியும் எழுதியிருக்கிறீர்கள் என்று!

Friedrich Engels - The man who financed the guru of such like you with gains he attained from the very same system the guru and his friend denounced so vehemently!!
Wonderfull right; the feeling of not having to work for anything and yet speak for the rights on behalf of those who actually worked.

The ounce of action என்பது எங்கெல்சை பொறுத்தவரை துணிவியாபாரம் மட்டுமே. அதாவது துணிவியாபார மற்றும் துணி தாயாரிப்பின் மேற்ப்பார்வை மட்டுமே.
அதாவது வந்த துட்டை எண்ணுவது மட்டுமே. அதாவது, வேலை செய்பவனின் வேலையால் வந்த துட்டை எண்ணுவது மட்டுமே.

தன்னின் நண்பன் கத்தை கத்தையா,பேப்பர் பேப்பராக பல வருடங்களாக எழுதித்தள்ளியதை, அவர் கொஞ்சம் வேலை ஏதாவது செய்திருந்தால் அவர் எழுதிய டன் கணக்கான சமாச்சாரங்களை விட அது மேன்மை என்று எடுத்துக்கொள்ளலாமா? There were never even an ounce of intention or action in his life that would give any impression of him trying to live a life for the ones that worked on his factory or elsewhere! The one ounce of benevolence that may have oozed thro this modern capitalist was channelled towards sustaining another man who again was producing nothing more than tons and tons of theories!!!!

அத்துடன் நிற்காமல், இவர் ஜனாயகம் பற்றி பேசுகிறார்! ஆதாவது ஜனாயகம் என்பதே இல்லாத ஒரு காலாகட்டத்தில், அதன் தீமையை பற்றி பேசுகிறார்! அதுவும் ஜனநாயகத்தின் ஒடுக்குமுறைபற்றி பேசுகிறார்! ஜனநாயகத்திற்கும், முடியாட்ச்சிக்கும் ஒரே அர்த்தத்தை கற்பிக்கிறார்!

ஒடுக்கப்பட்ட மக்களின் மீது கரிசனம் கொண்ட இவர்தான் அக்கா தங்கைகளான மேரி மற்றும் லிசி பர்ன்ஸ் உடன் திருட்டுத்தனமாக உறவை வளர்த்து கொண்டு, இது வெளியே தெரியக்கூடாது என்று மான்செஸ்டர் நகரில் விடு வீடாக அவர்களை இடம் மாற்றிக்கொண்டிருந்தார்.
இதை போல சின்ன வீடுகள் வைத்துகொள்ள அவருக்கு கிடைத்த பணத்தின் மூலம் அவர் வெறுப்பதாக சொன்ன அதே முதாளிளிதுவமே என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

மருதன் அவர்களே, உங்களுக்கு தெரியுமா???

அது மட்டும் இல்லை, அவரின் நண்பர்களுக்கு அதாவது அவருக்கு வேண்டிய business associates களுக்கு சாமரம் போட, சந்தோஷப்படுத்த பல தனி வீடுகளையும் அறைகளையும் வைத்திருந்தார்! போதாக்குறைக்கு நேரம் கிடைக்கும்பொழுதேல்லாம் அவர்களுடன் ஆல்பர்ட் கிளப்பில் கும்மியடித்துவிட்டு பின்னர் நரி அடிக்க வேட்டைக்கு போவார். முதலாளித்துவத்தின் மேல், அது தரும் பணத்தின் மேல், அது தரும் சுகத்தின் மேல் அவருக்கு அவ்வளவு பேரயும்!

Maybe, அந்த contradictions அவரின் குற்றமுள்ள நெஞ்சை குறுகுறுக்க செய்ததினால் என்னவோ, இதை எல்லாம் எதிர்த்து, அதாவது இவரைப்போன்றவர்களை
எல்லாம் எதிர்த்து எழுதிய தன் நண்பனுக்கு காசு கொடுத்து தன் பாவத்துக்கு பரிகாரம் தேடினார்! அதாவது செய்யுற திருட்டைஎல்லாம் செய்திட்டு, பெருமாள்
கோவில் உண்டியில்ல பத்து பவுனு போட்டானாம் செட்டி எகிற கதையாட்டம்!!

இன்னுமும் நிறைய இருக்கு இந்த மகானை பற்றி. ஆனால், அதை வெள்ளை அடிக்க உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை அதை யாரும் கண்டுக்க போவது இல்லை மேலும் இதனால் அவரின் ஆத்தமா சாந்தி மேல் சாந்தி அடைந்து கொண்டே இருக்கும்!! So நான் ஏன் அதை கெடுக்கவேண்டும்?

(ஆனால் ஒண்ணு; எங்கெல்ஸ், மத்த "புரட்சி" வீரர்களை போன்று யாரையும் கொன்றதாக தெரியவில்லை. மார்க்ஸ்சுக்கு துட்டு குடுத்து தானும் வாழ்க்கையை
அனுபவிக்க மட்டும் செய்தாரு. ஒரு ஆயிரம் ஆத்துமாக்கள போட்டு தள்ளியிருந்தா, அவரும் ஸ்டாலின் இல்ல சே-குவேர ரேஞ்சுக்கு வந்திருப்பாரு. பாவம், அவருக்கு விபரம் பத்தல, மருதன் மாதிரி சரித்திர முதிர்ச்சி பெற்ற பண்டிதர்கள் எல்லாம் வருவாங்கன்னு அவருக்கு எப்படி தெரியும்)

NO said...

நண்பர் திரு மருதன்,

கோபித்துக்கொள்ளாதீர்கள் நண்பரே, எனக்கு ஏதாவது சப்ஜெக்ட் திடீரென்று படிக்க நேரிட்டது, அதில் விடயங்கள் தோன்றியதென்றால், அதைப்பற்றி எழுதுபவர், எழுதபட்டது எல்லாவற்றையும் கொஞ்ச நேரம் போட்டு புரட்டுவேன். அதுவும் உங்களை போன்று புரட்சி புயல்கள் எழுதும் சமாச்சாரம் என்றால் எனக்கு அல்வா மாதிரி! ஒரு வழி செய்து விட்டுதான் மறு காரியம்!

அதுவும் தப்பு தப்பாக தப்பு தப்பான மனிதர்களை பற்றி (அதாங்க சே-கு, காஸ்ட்ரோ இவங்கள) புரட்சிகரமாக நீங்கள் எழுதியதால் இன்னைக்கு மருத-சே-குவேராவின் பெருமை பாடும் விழா நடத்த முடிவு செய்துள்ளேன். (என்னதான் சே-குவேரா ரசிகர் மன்ற மூத்த உறுப்பினர் ஆனாலும் நீங்க ஒரு ஜென்டில் மேன் என்பது புரிகிறது ஏனென்றால் நான் எழுதிய இரண்டு பின்னூட்டங்களையும் அழிக்காமல் உடனே போட்டு விட்டீர்கள். நன்றி)

நீங்கள் எழுதிய புத்தக பட்டியலை பார்த்தேன்! அதில் சரித்திரம் எல்லாம் எழுதியிருக்கிறீர்கள்! அய்யோ பாவம் சரித்திரம்.
உண்மையை சொல்லவேண்டுமென்றால் நீங்கள் எழுதியதை, அதாவது உங்கள் சரித்திரங்களை நான் இதுவரை படித்ததில்லை. இருந்தும் சேவின் தோழன் எழுதும் சாமாச்சாரம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். அந்த காலத்தில் நியூ செஞ்சுரி புக் ஹௌசில், அதாவது அருமை சோவியத் யூனியன் காசு போட்டு வெளியிட்ட progress publishers இன் பிரச்சார ஏடுகள் பலவற்றை படித்திருக்கிறேன். ஏன், அன்பு ஸ்டாலின் முதல் வம்பு கிம் இல் சுங் எழுதியது வரை எல்லாமே படித்திருக்கிறேன். அவர்கள் பொய்களும் உங்களின் மெய்களும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பது எனக்கு புரியும்!

அரசியல்

1) ஃபிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம் - யாருக்கு சார்??? பாவப்பட்ட கியூபா மக்களுக்கா??? வெட்கமில்லாமல் ஒரு நாட்டையே குட்டிச்சுவ்ராக்கிய ஒரு கடைந்தெடுத்த சர்வாதிகாரி, இவர்!! சிம்ம சொப்பனமா? இல்லை சும்மா ஒரு சமர்ப்பணமா? ஆமாம் சார், அருமையான தீவு அது. பாடிஸ்டா அயோக்கியந்தான்.
அதுக்காக ஒரு கொலைகார அயோக்கியன் நல்லவனா? பாடையில் போகிற நிலைமை வந்தாலும், தான் செய்வதுதான் சரி என்று நாட்டு வளங்களை
மொத்தமாக குட்டிச்சுவராக்கிய ஒரு fossilized மனிதரை புகழ்ந்து ஒரு புத்தகம்!!!! நல்ல சரித்திரம் போங்க!

2) சே குவேரா: வேண்டும் விடுதலை - ஹி ஹி ஹி - வேண்டும் விடுதலை - Yes from the legacy of this murderous rogue who used the name of the poor and revolution to cloud his crimes and sadism!!! நிறைய இருக்கு இன்னும்!!

3) ஹியூகோ சாவேஸ்: மோதிப்பார்! - தாரிக் அலி எழுதுவதை நீங்கள் நிறைய படிப்பீர்கள் போல. காஸ்ட்ரோ ஆச்சு, சாவேஸ் ஆச்சு, எங்க சார் அஹமிதினஜாத்?? மூன்றாவது திருடன் பெயரைக்கானுமே? வளர்ந்து வரும் சர்வாதிகாரி அண்ணன் சாவேஸ்! இவர் என்ன சார் அப்படி நல்லது செய்துட்டாறு??
வெனிஜுவேலா கொஞ்சம் கொஞ்சமா கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆகிக்கொண்டிருக்கு! மற்றொமொரு க்யுபா! எண்ணெய் இருப்பதால் இந்த ஆளு தாக்கு பிடிக்கிறாரு! எவ்வளவு நாளைக்கு பார்க்கலாம்! ஆனால் பாருங்க இவரைப்போன்ற சர்வாதிகார திருடர்களுக்கு வெள்ளை அடிக்க
காத்துக்கொண்டிருக்கும் கும்பல் இருக்கே. என்ன, உங்களைப்போன்றவர்களுக்கு USA பிடிக்காது. அவங்களை எதிர்ப்பது எவனாயிருந்தாலும், அவன் அயோக்கியனாக இருந்தாலும். உடனே அவன் உங்களுக்கு ஹீரோ! இதுல மோதிப்பார் வேற!

NO said...

4) சுபாஷ்: மர்மங்களின் பரமபிதா - Is it about Subash Bose?? அதை நீங்க எழுதி இருக்கீங்களே! அதுதான் புரியல? அவருக்கும் உங்களுக்கும் வேலைக்கு ஆகாதே. அவருதான் பாசிச அடிவருடின்னு கட்டம் கட்டிட்டீங்களே? நீங்க என்ன எழுதிநீகன்னு படிச்சா புரியும்! ஆனால் நல்லது ரொம்ப இருக்காதுன்னு தெரியும்! ஏதாவது முடிச்சு போட்டு ஒரு grey வர்ணம் பூசியிருப்பீர்கள்! சுத்தாமான கம்யூனிஸ்ட் இல்ல?

5) லெனின்: முதல் காம்ரேட் - புரட்சி எல்லாம் முடிந்து பின்னர் , உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் கூட மாறுவேடத்தில் வந்து இறங்கிய மாகத்த்மா! ஸ்டாலினை வளர்த்து விட்டு, கடைசியில் அதன் வீரியத்தை புரிந்து ஆனாலும் பேசமுடியாமல் கையை ஆட்ட முடியாமல், பெண்டாட்டியை (Krupskya) தவிர யாரையும் பார்க்க முடியாமல் அந்த ஸ்டாலினால் பூட்டி வைக்கப்பட்ட பெரும் காம்ரடு!!! உங்களின் தெய்வம், உங்கள் வாழ்க்கையின் ஆதாரம். ஒரு சரித்திர எழுத்தாளராக இருந்து, அதுவும் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருந்த உங்களின் முதற்கடவுளை பற்றி நீங்கள் எழுதாமல் இருப்பதுதான் ஆச்சரியம்! நாலாயிர பிரபந்தம் போல ஆண்டவன் பெயரை சொல்லி ஆடி இருப்பீர்கள், வேறென்ன? இந்த துதி பாடலுக்கு நீங்கள் வைத்த பெயர் சரித்திரம்!

6) திப்பு சுல்தான்: முதல் விடுதலைப் புலி - தெரியுமே! மத நல்லினகத்திர்க்கு இவருதானே! கேரளா வர்மாவும் அவங்க வழி வந்தவங்களும் சொன்னா நீங்க கேட்கவா போறீங்க? இந்தியாவில் ஒரு மகாராஜா இல்லை ஒரு பாதுஷா!!!

7) மாவோ: என் பின்னால் வா - வந்ததும் தெரியும், அவரும் அவுங்க ஆட்களும் ஆடின ஆட்டமும் தெரியும். மாவோ- கொலை கள மும்மூர்த்திகளின் முதன்மையானவர்! ஸ்டாலினுக்கே சாகடிப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்தவர்!

8) முகமது யூனுஸ் - எதுக்கு சார் உங்களுக்கு இதெல்லாம் - பால் பாட் பற்றிய நல்ல புத்தகம் என்னிடம் இருக்கு. வேண்டுமென்றால் தருகிறேன். அதை மொழி பெயருங்கள். பால் பாட் - என் பின்னால் வரதே என்று பெயர் ஏதாவது கொடுங்கள். கொலை காரர்கள் பற்றி எழுதும் பொழுது உங்களுக்கு எதற்கு சார் யூனுஸ் ஐயா பற்றி?

இன்னும் வரும்...................

NO said...

இரண்டாம் உலகப்போர் !!!!

நண்பர் திரு மருதன்,

மாவோ, லெனின் போன்றவர்களைஎல்லாம் பற்றி எழுதுகிறீர்கள். மேலும், முதலாம், இரண்டாம் உலகப்போர் பற்றியெல்லாம் வேறு!
நீங்க இந்தியாரன்னு எனக்கு திடீருன்னு ஒரு சந்தேகம்! ஏன் என்றால், இந்தியா இது வரை ஒரு மூன்று பெரிய யுத்தங்களும், ஒரு நான்கைந்து சிறிய யுத்தங்களையும் சந்தித்துள்ளது! அதைத்தவிர, ஹைதராபாத் போலிசு ஆக்ஷன் போன்ற உள்நாட்டு அதிரடிகளையும் பார்த்த்ருக்கிறது! அதை பற்றி நீங்கள் ஒன்றும் எழுதுவாதக உத்தேசம் இல்லையா? நேர உலகப்போருக்கு போயிடீங்க?

புரிகிறது.

கம்யூனிஸ்ட் புரட்சிகளுக்கு ஒரு சீனாக்காரனோ, சோவியத் வெள்ளைக்காரனோ குனிஞ்சு நிமர்ந்தாதான் பிடிக்கும்! தவறில்லை. அந்நியர்களிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது என்பது அமெரிக்க கம்பனிகளுக்கு எடம்கொடுப்பது மட்டும்தான் என்பது நம்ம அகராதியில் உள்ளது! அத்தை செய்தால் திட்டு விழும் உங்களிடமிருந்து! அதே சீனாக்காரனோ, நம்மை அழிக்க நினைத்த மாவோ கும்பலோ, நம்மை நன்றாக பயன்படுத்திகொண்ட செத்துப்போன சோவியத் சிங்கங்களோ உங்க அகராதியில நல்லவங்க! அவங்க ஏதாவது சண்ட போட்டாதான் வீரம்! அதே நம்ம செய்ஞ்சா பிற்போக்கு சக்திகளின் பாசிச அடாவடித்தனம்! அதுதானே உங்களை நம்நாட்டு போர்வீர்களின் சரித்திரத்தை பறை சாற்றி சொல்ல தடுக்கிறது!
இந்திய ரானுவீரன், ஒரு பாசிச ஆளும் வர்கத்து கைகூலிதானே! அப்படி இருக்க உங்களுக்கு வங்காள மக்கள் காப்பு போர், கார்கில் போர் போன்றவை பற்றி எல்லாம் ஏன் கவலை?? அது பாசிசம்! ஸ்டாலினும் மத்த பாசிஸ்டுகளும் போரிட்டு அதில் புரட்சிகர சிவப்பு சூரியன்கள் வென்றதுதான் உண்மை போர். அதுதான் சரித்திரம்!!!

அருமையான லாஜிக்!!

இந்த கேவலமான லாஜிக்த்தான் உங்களின் இந்திய சரித்திர வெறுப்பிற்கு காரணம் என்று புரிகிறது!!!

சரி விடுங்க.

NO said...

இரண்டாம் உலகப்போருக்கு வருவோம்!

இந்த Molotove-Ribbentrop ஒப்பந்தம் பற்றி என்ன நீங்க நினைகிறீங்க சார்??
அப்புறம் இந்த incident பற்றி நீங்க எழுதிருகிரீர்களா, அதாவது

22nd June 1941:- Very Late evening:
Phone rings at Stalin's house. An NKVD officer picks it up!

Officer: Who is this?
The voice at the other end: I am General Zukhov here. Its urgent
Officer: OK. What do you want?
Z: I want to speak to comrade Stalin
O: Who told you that Stalin is here
Z: Call Stalin on the line immediatly
O: Sorry. Please come thro proper channels
Z: Cant you here me, its an emergency, there is a war, call comrade Stalin
O: War? Please come thero politbeau.........
Z: You fool the the Germans are bombing our cities.......
After couple of minutes, some one else comes on line and asks with a gruff office. Zhukov recognises the voice immediatly
Z: Comrade , we have a serious situation...Keive and many other border towns have been completely bombed... Luftwaffe is bombing everything and we need to attack back..
There is only silence on the other end
Z: Comrade Stalin, can you hear me, for godsake, Germans are into our country and we are being bombed. We need to attack immmediatly....
Stalin, with heavy breathing: Call the others....lets meet.......

The point of this conversation as recorded by Marshall Zukhov in his memoirs, illustrates why the second world war became what it was (Zukhov was one of the lucky fewin the Army that survived Stalin's purges and was able to publish these memoirs).

இதைப்பற்றி நீங்கள் என்ன எழுதினீர்கள் என்று தெரியவில்லை! ஆனால் ஸ்டாலினின் கொட்டத்தினை வெள்ளை அடிக்கும் கம்யூனிஸ்ட்கள் இதையெல்லாம்
மறைத்து சரித்திரம் எழுதுவார்கள் என்பது எனக்கு தெரியும்! இரண்டாம் உலகப்போரின் மூல காரணங்களில் ஒன்று ஸ்டாலின் மற்றும் சில பல
கம்யூனிஸ்ட்களின் இரெட்டை வேடம் மட்டுமே! ஹிட்லர் ஒரு அயோக்கியன், கொலைகாரன், காட்டுமிராண்டி. அதில் சந்தேகமே இல்லை.

ஆனால் அவனை முதலில் அரவணைத்து, அவனுடன் பரிமாற்றம் வைத்துக்கொண்டு பின்னர் நம்பி மோசம்போனது ஸ்டாலின்!

இன்னுமும் நிறைய இருக்கிறது. நீங்கள் இதையெல்லாம் பற்றி என்ன எழுதி இருப்பீர்கள் என்று நேரம் கிடைத்தால் படிக்கிறேன்!

Anyhow, going by your communist credentials, iam more or less sure, those would be higly biased and damaging to every one except Stalin and his rogue comrades. Most propbably, I guess, your villain list apart from the Nazis, Japs and Italians will be the British, French and the American Imperialist!!! Soviets and their fraudulent conduct and murder of thousands in the second world war would have been buried deeply by you!!

சரித்திரம் நல்ல சரித்திரம்!!!!

Anonymous said...

@மருதன் - உங்கள்ளுக்கு மேலும் சில தலைவர்களையும்(!?) நினைவு படுத்துகிறேன்.
தற்போது நடக்கும் எகிப்து பிரச்சினையின் நாயகன் - ஹோசினி முபாரக் பற்றி - "முபாரக் : வெளியே போ" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதலாம்.

கொடுங்கோலனையும், புரட்சியாளனையும் எழுதும் உங்களுக்கு இன்னொருவன்.
ராஜபக்சே பற்றியும் எழுதலாம். அவனுக்கு புற்று நோயாமே.

இருக்கவே இருக்கிறார் - நீரா ராடியா. சீக்கிரம் போடுங்க.

சிலியில் சமீபத்தில் நடந்த சுரங்க விபத்து பற்றி புத்தகம் எழுதும் எண்ணம் இல்லையோ உங்கள் பதிப்பகத்தாருக்கு.
எனக்கு தலைப்பு வைக்க தெரியவில்லை.

உங்களுக்கும் உங்கள் பதிப்பகத்தாருக்கும் புத்தகம் எழுதுவது கை வந்த கலை போலும்.

"விரைவாக புத்தகம் எழுதுவது எப்படி? " என்று கிழக்கு பதிப்பகத்தார் ஒரு
புத்தகம் போடலாம்.

எழுதுங்கள், எழுதி குவியுங்கள்.
முட்டாள் மக்கள் வாங்கட்டும்.
வாங்கி குவிக்கட்டும்,

Anisha Yunus said...

//கிழக்கு புத்தகங்கள் சிலவற்றை நான் ஸ்டால்களிலோ, கடைகளிலோ நின்றபடியே முழுமையாகவே படித்திருக்கிறேன்.. மிக வேகமான நடை என்று ஒருபுறம் சொன்னாலும், ஒரு ஃபாஸ்ட் ஃபுட் போல உடனடியாக ஜீரணமாகிப்போகும் விதத்தில் உள்ளன. இன்னும் கொஞ்சம் அழுத்தம் தேவைதான். //


அதே எண்ணமே எனக்கும். மாணவர்கள், அவசரமாக அள்ள நினைக்கிறவர்களுக்கு வரப்பிரசாதம்.
:)

Anonymous said...

உங்களின் 'இரண்டாம் உலகப் போர்' மற்றும் 'இந்திய பிரிவினை' புத்தகங்களை படித்திருக்கிறேன். இன்னும் சில கிழக்கு புத்தகங்களை படிக்க வாங்கியிருக்கிறேன். கிழக்கு புத்தகங்கள் பொதுவாக தெரிந்துக் கொள்ளவேண்டிய விசயங்களை நன்றாக கொடுக்கின்றது.

உதாரணமாக இரண்டாம் உலகப் போர் ஏன் ஆரம்பித்தது, எப்படி நடந்தது, எப்படி முடிந்தது, முக்கிய நிகழ்வுகள் என்ன என்ற விசயங்கள் பொது மக்களுக்கு போதுமானவை. அதில் அதீத ஆர்வம் உள்ளவர்கள் வேண்டுமானால் இன்னும் ஆழமாக படிக்க விரும்பலாம்.

சே குவேராவின் கதையை படித்தால் போதும். அவரைப் போன்று போராளியாக விரும்புபவர்கள் வேண்டுமானால் அவருடைய சித்தாந்தங்களை ஆழ்மாக படிக்கலாம். அந்த வகையில் கிழக்கு பதிப்பகத்தின் பணி பாராட்டப் பட வேண்டியதே.

அந்த விடியல் கடையின் புகைப்படத்திலிருந்து அவர்கள் பெரும்பாலும் கம்யூனிச புத்தகங்களை விற்பவர்கள் என்று கருதுகின்றேன். பெரும்பான்மையான மக்களுக்கு (எனக்கும்) கம்யூனிஸம் ஒரு போரான (bore) விசயம். இந்தியர்கள் கம்யூனிஸ்ட் என்றால் சண்டைக்காரர்கள், கூச்சல்காரர்கள் என்று தான் நினைப்பார்கள். இந்தியாவில் கம்யூனிஸம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அப்படி இருக்கையில் கம்யூனிஸ புத்தகங்கள் விற்பனையாவது கஷ்டம் தான். வேண்டுமென்றால் சே குவாரா கதையை மற்றும் படிப்பார்கள். சிலர் மார்க்ஸ், லெனின் புத்தகங்களை படிக்கலாம். ஆனால் மற்ற கம்யூனிஸ தலைவர்களை படிப்பதற்கு வாய்ப்பே இல்லை.

இப்போது நமது நாட்டிற்குத் தேவை குழந்தைகள் புத்தகங்களும், சினிமா படங்களும். அவர்களுக்குத் தான் இங்கு அறிவைப் பெரும் வாய்ப்புகள் மிக கம்புயாக உள்ளது. விடியல், கிழக்கு போன்றோர் குழந்தைகள் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Unknown said...

தாங்கள் சே பற்றி எழுதும் புத்தகத்தின் தலைப்பு ????

nanaji sugirtharaja said...

நாற்பது தாண்டிய என் போன்றவர்களுக்கு ெதளிவான அச்சு ஒரளவு மங்கலான தாளில் இருந்தால் மட்டுமே படிக்க இயல்கிறது .லே ஸர் பிரிண்Hள் என மெல்லிய எழுத்துக்கள் கண் வலிக்கிறது. பதிப்பகங்கள் நல்ல புத்தகம் கட்டுப்படியாகும் விலை இதைத் தான் பார்க்கிறார்கள. Readable ஆக அனைவருக்கும் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்