II 213
'ஏனெனில், இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி, ஒரு கல்விமானையும் பாதை தவறி செல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்துக்கும் கோபத்துக்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உள்ளவர்கள்.'
II 214
'ஒருவர் தனது தாயாருடனோ, சகோதரியுடனோ அல்லது மகளுடனோ ஒரு தனிமையான இடத்தில் உட்கார்ந்திருக்கக் கூடாது. ஏனெனில், உணர்வுகள் சக்தி வாய்ந்தவை. அது ஒரு கல்விமானைக்கூட அடிமைப்படுத்திவிடும்.'
II 215
'பெண்கள் அழகை எதிர்பார்ப்பதில்லை. அது போன்றே வயதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவன் ஓர் ஆணாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அவர்கள், அழகுடைய ஓர் ஆணுக்கு மட்டுமின்றி, அழகற்றவருக்கும் தங்களை விட்டுக் கொடுக்கிறார்கள்.'
IX 14
'ஆண்களின் பாலான தங்களுடைய வெறி ஆர்வத்தின் வாயிலாக, தங்களுடைய மாறத்தக்க மனோநிலையின் வாயிலாக, இயல்பான ஈவிரக்கமற்ற இயல்பின் வாயிலாக அவர்கள் - இந்த உலகில் எவ்வளவு கவனமாக பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தாலும் தங்கள் கணவன்மார்களிடம் விசுவாசமற்றவர்களாகி விடுகிறார்கள்.'
IX 15
'உலகத்தைப் படைத்தவர் பெண்களை எவ்வாறு படைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டுள்ள நிலைமையில், ஒவ்வொரு ஆணும், அவர்களைக் காவல் காப்பதற்கு மிகவும் உறுதியாகத் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.'
IX 16
'(அவர்களை உருவாக்கும்போது) கடவுள் பெண்களுக்கு அவர்களின் பதவி, நகைகள் ஆகியவற்றின் மீது அவர்களுக்குப் பிரேமையையும் மற்றும் தூய்மையற்ற விருப்பங்கள், ஆங்காரம், நேர்மையற்ற தன்மை, தீங்கான கெட்ட நடத்தை ஆகியவற்றை உடையவர்களாகவும் படைத்தார்.'
IX 17
இந்துக்களுக்குச் சட்டம் வழங்கிய மநுதான் பெண்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று வாதிடும்போது அம்பேத்கர் மேற்கண்ட மநுஸ்மிருதிகளை எடுத்தாள்கிறார். மநுவுக்கு முந்தைய காலத்தில் பெண்கள் உயர்ந்த நிலை வகித்ததையும் மநுவுக்குப் பிறகு பெண்களின் நிலை சீரழிய ஆரம்பித்ததையும் அம்பேத்கர் ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
வேதகாலத்துக்குப் (கிமு 1500) பிறகு 'இந்திய மாதர்களின் நிலை மிகவும் சீரழிந்துவிட்டதென்பது உண்மையே' என்கிறார் லாலா லஜபதிராய். அதற்கான காரணமாக இவரும் மநுவையேச் சுட்டிக் காட்டுகிறார். காதரீன் மேயோவின் மதர் இந்தியா நூலுக்கு அவர் எழுதும் மறுப்பில் (இந்திய விடுதலைப் போராட்டம்) கீழ்வரும் ஸ்மிருதிகளை அவர் அளிக்கிறார்.
அத்தியாயம் IX
'குழந்தைப் பருவத்தில் பெண் தந்தைக்கு அடங்கி நடக்கவேண்டும். யௌவனப் பருவத்தில் புருஷனுக்கு அடங்கியிருக்கவேண்டும். புருஷன் இறந்தபிறகு, மக்களுக்கு அடங்கியிருக்கவேண்டும். பெண்களுக்கு ஒருபோதும் சுதந்தரம் கிடையாது.
'வீட்டு வேலைகளைப் பெண்கள் செவ்வையாகவும் சந்தோஷமாகவும் செய்யவேண்டும். வீட்டுப் பாத்திரங்களை அவர்கள் சரியாக சுத்தம் செய்யவேண்டும். தம்மிஷ்டப்படி ஒரு செலவும் செய்யக்கூடாது.
'வீட்டிலுள்ள புருஷர்கள் இரவும் பகலும் பெண்களைத் தமது பாதுகாப்பில் அடக்கி வைத்திருக்கவேண்டும்.'
பெண்களின் முதல் முக்கியத் தொழில், திருமணம் செய்துகொள்வது. ரிக் வேதம், பத்தாம் அத்தியாயத்தில் 36வது சூத்திரம் விவாக மந்திரம் பற்றியது. விவாகத்தின்போது ஒரு மணமகனும் மணமகளும் கூறும் மந்திரங்கள் பின்வருமாறு.
மணமகன் :
'வாழ்நாள் நலம் பெறும் பொருட்டு உன்னை வலக்கையால் பாணிக்ரகணம் செய்கிறேன். உன் கணவனான என்னோடு மூப்பெய்தும் வரை வாழ்வாயாக. நாமிருவரும் சேர்ந்து இல்லறம் நடாத்தும் பொருட்டு ஆரியமான், பகன், காவித்ரன், பரமோதி முதலிய தேவர்கள் உன்னை எனக்குத் தந்தருளினார்கள்.'
மனைவி, கணவன் வீட்டை வந்தடைந்தவுடன் பின்வருமாறு நல்வரவு கூறப்படுகிறாள்.
'பொருட் செல்வமும், மக்கட் பேறுமடைந்து பல்லாண்டு ஷேமமாய் வாழ்வாயாக. கண்ணும் கருத்துமாய் இல்லறம் நடத்துவாயாக. புருஷனிடம் அன்பாயிருப்பாயாக. முதுமைப் பருவத்து இம்மனைக்கு நாயகியா யிருப்பாயாக. இம்மனைவிட்டு ஒரு நாளும் நீங்கா திருப்பாயாக. புத்திர பௌத்திரர்களைப் பெற்று சுகம் பெறுவாயாக.'
பெண்களின் முக்கியத் தொழில், 'சுத்த ரத்தமுள்ள சந்ததிகளைப் பெற்றெடுப்பதே' என்கிறார் மநு. சுத்த ரத்த சந்ததிகளை உருவாக்குவது எப்படி என்பதை மநுவே விளக்குகிறார்.
1. சதிபதிகளை ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுக்கவேண்டும்
2. சுய ஜாதியில் விவாகம் செய்துகொள்ளவேண்டும்
3. பெண்கள் கற்புக்கு உயர்ந்த லட்சியங்கள் ஏற்படுத்தவேண்டும்
4. மனைவி மீது புருஷனுக்குப் பூரண அதிகாரம் அளிக்கவேண்டும்
5. புறச்சாதி மணத்தால் விளையும் தீமைகளைக் கண்டிக்கவேண்டும்
6. கலப்பு விவாகத்தில் பிறக்கும் சந்ததிகளை கீழ்ச்சாதியாக மதிக்கவேண்டும்.
'இவைகளை (இந்த புஸ்தகங்களையும் சாதிரங்களையும்) ஒப்புக் கொள்ளுகிறவனும் உண்மையான சநாதன ஹிந்து என்று சொல்லிக் கொள்ளுகிற எவனுக்கும் பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி பேச உரிமை இல்லை என்பதே தான் எனது அபிப்பிராயம்.' என்கிறார் தந்தை பெரியார்.
'வேறு எந்தக் காரியத்துக்காகவும் இந்து மதத்தை ஒழிக்காமல் தாட்சண்யம் பார்ப்பதாயிருந்தாலும் பெண்களுடைய சுதந்திரத்தை உத்தேசித்தாவது இந்து மதமென்பது அழிய வேண்டியது மிக்க அவசியமாகும்.'
'பெண்கள் விடுதலைக்கு வெளியில் வருபவர்கள் பெண் சம்மந்தமான இந்துமத தர்மத்தையும், சாஸ்திரத்தையும், புராணத்தையும், இதிகாசத்தையும் நீதிக் கதையையும் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் வர வேண்டும். அப்படிக்கில்லாமல் மேற்கண்ட அழுக்கு மூட்டைகளைச் சுமந்து கொண்டு யார் எங்கு போய் பெண்கள் சுதந்திரம் பேசினாலும் அது கட்டுப்பாடு உள்ள அடிமை பிரகாரமாகத்தான் முடியுமே தவிர அது சிறிதும் விடுதலையை உண்டாக்காது.
'மற்றும் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி எழுத்து வாசனையுண்டாக்கி அவர்கட்கு அரிச்சந்திர புராணத்தையும், நளாயினி கதையையும், இராமாயணத்தையும், பாரதத்தையும் படிக்க வைத்தால் பின்னும் அதிகமாக அடிமைகள் ஆவார்களா? சுதந்தரமடைவார்களா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள்.'
'மற்றும் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி எழுத்து வாசனையுண்டாக்கி அவர்கட்கு அரிச்சந்திர புராணத்தையும், நளாயினி கதையையும், இராமாயணத்தையும், பாரதத்தையும் படிக்க வைத்தால் பின்னும் அதிகமாக அடிமைகள் ஆவார்களா? சுதந்தரமடைவார்களா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள்.'
16 comments:
ராம்சாமி நாயக்கர் நாசமாய்ப் போகட்டும். மனுதர்மம்தான் என்ன அழகாகப் பெண்களை படம்பிடிக்கிறது!இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, மூவாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மனு இன்னும் உங்கள் வலைப்பதிவு வரை வந்துக்கொண்டிருக்கிறார். நாயக்கர் இன்னும் எத்தனைநாள் நிற்பார் என்று பார்ப்போம்.
CLICK THE LINK AND READ.
விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...
.
இந்து மதத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் பிரமாதமான கட்டுரை. மதத்தை ஒழிப்போம் என்பதே சர்வதேச மகளிர் தினத்தின் முழக்கமாகவும் இலட்சியமாகவும் இருக்கவேண்டும். நன்றி மருதன்
Manu is not hinduism and hindusim is not just Manu
காலத்துக்கு ஒவ்வாத கருத்துகளை மனு மட்டும்தான் சொன்னார் என்ற உங்கள் கண்டுபிடிப்பு உலக அதிசயத்துக்கு இணையானது. உங்களால் வேறெப்படியும் பேசமுடியாது என்பது தெரிந்ததே.
இத்தோடு நிற்காமல் பைபிள் மற்றும் குரானில் உள்ள முற்போக்குக் கருத்துகளையும் பகிர்ந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அருமையான கண்டுபிடிப்பு மருதன்.. போஸ்ட் போடுறதுக்கு ஒண்ணுமே இல்லையா? இப்படி இந்துக்கள் மூலையில் தூக்கி கடாசிவிட்ட புத்தகத்தை தூசிதட்டி படித்ததற்கே உங்களுக்கு நியாயமாய் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
அப்படியே ஹரன்பிரசன்னாவின் கோரிக்கையையும் நிறைவேற்றினால் மத்தவங்க பெண்களைப் பற்றி என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கலாம் பாருங்க..
தோழர் மருதன் மனது வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஜெயக்குமார்
யஜுர் வேதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்
“அஹமன்ருதாத் ஸத்ய மு பைமி”
நான் பொய்யை உதறிவிட்டு உண்மையை மட்டும் ஏற்பேனாக
மாறுதல்கள் தவிர்க்க முடியாதவை. அதற்குக் கலாச்சாரம் எந்த விதத்திலும் விதிவிலக்கு அல்ல. அத்தனை ஆயிரம் வருஷங்களுக்கு முன் இன்னதெல்லாம் கலாச்சாரம் என்று சொல்லப்பட்ட பல விஷயங்கள் இன்று ஆப்சலீட்!
இல்லாத கதாநாயகன்!!
டைட்டானிக் படத்தில் ஸ்வேன் என்ற பெயரில் வரும் கேரக்டர்தான் ஹீரோ. அந்த நடிகரின் உண்மையான டான் பீட்டர்சன். சுவீடன் நாட்டை சேர்ந்த அவர் ஒரு பெரும் நடிகர். குறிப்பாக டைட்டானிக் படத்தில் டி காப்ரியோ என்ற ஓர் இதர நடகரிடம் அவர் சீட்டாத்ததில் தோற்கும் பொழுது அவர்காட்டும் முகபாவங்கள்
ஆஹா அற்புதம். அருமையான சீட்டு விளையாடுவார் அவர். ஆட்டத்தில் தோற்கும் பொழுதுகூட அவர் சுவீடன் மொழியில் ஏதோ பேசி பிறகு அவர் ஒருவரை அடிக்க எத்தனிப்பார். ஆஹா, டைட்டாணிக்கே இதுதான் என்று சொல்லலாம். அதுவும் சீட்டாட்டத்தில் அவர் தோர்த்ததால் டைட்டானிக் ஓட ஆரம்பித்தது. அதுவும் சுவீடிஷ் மொழியில் அருமையாக அவர் திட்டியதால் அந்த கதையே நகர்ந்தது. ஸ்வேன் ஒரு முக்கிய புள்ளி. அவர் சுவீடிஷ் மொழியில் சொல்லுவதை நீங்கள் கவனித்தால் புரியும் டைட்டானிக்கின் மொத்த கரு. ஸ்வேன் சரா புறா என்று டிகாப்ரியோவிடம் தோற்ற ஆளை வாயாலேயே விளாசுவார். பல முகபாவங்களை காட்டுவார். அதிலிருந்தே டைட்டானிக்கில் நடித்த அத்துணை பாத்திரங்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம். ஏன் டைட்டாநிக்கையே புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் அந்த படத்தில் ஸ்வேன்நின் பங்கு, முக்கியத்துவம் மற்றும் ஆளுமை அவ்வளவு சிறப்பானது!
ஸ்வேன் டிகாப்ரியோவிடம் தோற்றதால் சீட்டு ஆட்டத்தின் தீய விளைவுகளை புரிந்து கொள்ளலாம். அதே சமயம் அப்படி தோற்றதால்தானே கப்பல் ஓடியது. ஆதலால் அதில் நன்மையையும் உள்ளது என்றும் சொல்லலாம். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ஸ்வேன்நின் இருப்பு, பாவனைகள் எல்லாமே டைட்டானிக் படம் போகும் பாதை முதலிலேயே சொல்லி விடுகிறது. அவர் சுவீடிஷ் மொழியில் திட்டுவது அந்த படத்திற்கு வலு மட்டும் சேர்க்கவில்லை, அந்த படமே அப்படிதானே என்று அருமையாக காட்டுகிறது.
மொத்தத்தில் ஸ்வேன்தான் டைட்டானிக், டைட்டாநிக்தான் ஸ்வேன்!!!!!!!!!!!!
என்ன மருதன் சார், ரொம்ப குழப்பமாக இருக்கா? (நீங்க டைட்டானிக் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், என்னதான் அமெரிக்க பாசிச ஏகாதிபதிய
காலநியவாதிகளை உங்களுக்கு பிடிக்காது என்றாலும் டைட்டானிக் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்)!!!!!
வேற ஒன்றும் இல்லை சார் மனுவும் அவனின் நீதியும், ஸ்வேன்நும் அவனின் சுவீடிஷ் பேச்சும் ஒன்று!!!
இல்லாத கதாநாயகர்கள் பேசும் முக்கியமில்லா வார்த்தைகளை கேட்டு அதுதான் படம் என்று சொன்னால், அவன் படம் பார்க்க வந்தவன் இல்லை, சும்மா திட்ட வந்தவன்!!!
ஸ்வேன் - டைட்டானிக்கில் இல்லாத கதாநாயகன், மனு - இந்து மதத்தில் இல்லாத கதாநாயகன்!
திரு மருதன் மற்றும் அவர் சார்ந்த அறிவு ஜீவிகள் - ஒண்ணுக்கு போகும் குழியில் கைவிட்டு, கிடைத்ததை அள்ளி, அவங்க வீட்டு சமையல் நல்லா இல்லை என்று அலறும் பேர்வழி!!!
திரு பத்ரி - சமையல் கலை புத்தகம் எழுத சாக்கடை வாருபவரை அமர்த்தும் அறிவார்ந்த ஆளுமை!
Without a shred of knowledge or understanding on how a religion and its associated beliefs evolved and what were its really important cannons and what are not its, a gentleman who purports to be an editor goes on a ranting spree. Neither his approach nor his intellect are scholarly and all his observations and associated content are wedded to such idiotic political corretcness thereby giving truth a clean burial.
Mr. Marudhan and his ilk are the products of communist inspired rat breeding. Eventhough the edifice of red crashed long ago, their corpse still have rotten flesh left and that feeds so many rats. The excreta that was in the stomach of that red corpse is still licked upon by those to relish the memory of those putrid and obnoxious days. Such is the feeling of warmth for a Stalin or a Mao, their intellect or the lack of it is directed towards those that does not care a fig for their fantasy. In this case "those" is Hindu religion and Indian culture. It does not allow Stalin's to be worshipped. So Mr. Marudhan's natural enemy is that! He is prepared to look at the most insignificant and condemn the whole!!
திரு மருதன் விமர்சனம் செய்ய வரவில்லை, திட்ட வந்தவர்!! தீக்கதிரிலோ அல்லது யாரும் படிக்காத, படிக்க முடியாத குப்பை கிளரும் சிவப்பு ஏடுகளில் மட்டுமே எழுதும் தகுதி உடையவர்!!!
ஆனால் பாருங்க திரு மருதனை மட்டும் பார்த்து நான் கிழக்கு பதிப்பகமே மோசம் என்று சொல்லுபவன் இல்லை! ஏனென்றால் கக்கூசில் கைவிட்டு ஜோசியம்
சொல்லும் கலை எனக்கு தெரியாது, தெரியவும் வேண்டாம்! ஆதலால் சொல்லுவது ஒன்றுதான்!! பாவம் திரு பத்ரி!!! (ஒரு வேளை போன ஜன்மத்தில் அவர் ரஷ்யாவில் பொறந்து ஸ்டாலின் அவரை மட்டும் போடாமல் விட்டு விட்டதனால் இந்த ஜன்மத்தில் ஸ்டாலின் துதிபாடி ஒருவருக்கு வெலை போட்டு தந்து விட்டாரோ என்னமோ! எவன் கண்டான்!)
(சற்று கடுமையான வார்த்தைதான் திரு மருதன். Unfortunately you deserve it. You need not publish my comment if you feel bad about it)
Nice post Maruthan. Manu has been responsible all basic trouble in our society today. But 90% of the hindus today know Geetha, mahabharatha or ramayana from the TV serials alone and have comfortably forgot the ills that its scared texts beholds. At the same times the chauvinism that holds woman as lesser humans is present in many religions. Hope everyone begin to treat every other individual equally irrespective of caste, creed, sex or religion.
Hinduism is a breeding place for all caste illness. As Ambedkar pointed out, we need to eradicate this disease house.
Gandhi supported Varnasram and played the role of doctor! He thought the disease could be cured, but could not succeed. Manu still lives!!!!!!!!!!!!1
Gandhi supported Varnasram and played the role of doctor! He thought the disease could be cured, but could not succeed. Manu still lives!!!!!!!!!!!!1
மருதன், சொந்தப் பெயரில் வருவதற்கு கூட பயப்படும் நோ போன்றவர்களின் கீழ்த்தரமான கமெண்டுகளை ஏன் நீங்கள் அப்ருவ் செய்கிறீர்கள்? லாஜிக்கலாக எதிர்ககவேண்டியது தானே? எதற்காக கீழ்த்தரமான வாசகங்களை நோ பயன்படுத்தவேண்டும்? கோபம் உள்ள அளவுக்கு விவேகம் இல்லாததாலா? நீங்கள் சில கமெண்டுகளை தடை செய்யவேண்டும் என்று நான் நினைக்கிறேன்
மருதன், உபநிடதங்களில் கார்கி, மைத்ரேயி என்று இரண்டு மாபெரும் பெண்கள் வருவார்கள். அவர்கள் பெண் ரிஷிகள். அவர்களை ஆண் ரிஷிகளுக்கு மேல் உபநிடதங்கள் கொண்டாடுகின்றன. வேதம் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரண்டாக பிரிக்கப்படும். கர்ம காண்டம் போகத்தை எப்படி அடைவது என்று வழிகாட்டுகிறது. அதில் தான் யாகம் கிரியைகள் என்று வருகின்றது. நீங்க வேதத்தில் சொன்னதாக சொல்லும் கருத்துக்களும் அதில் தான் அடங்கும். ஞான காண்டம் என்பது தான் உபநிஷதங்கள். அது கடவுளை எப்படி அடைவது என்று சொல்லும் பகுதி. அப்பகுதியில் ஆண் பெண், ஜாதி போன்ற பிரிவினைகள் கிடையாது. வேதத்தை பொருத்தவரை உபநிடதங்கள் தான் அழியாத் தன்மை உடையது. மற்றது எல்லாம் அந்த அந்த காலத்துக்கு ஏற்ற அறிவுரைகள் மட்டும் தான். அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
அந்த அந்த காலத்திற்கு ஏற்ப சீர்திருத்தவாதிகளும், தீர்க்கதர்சிகளும் தோன்றி சில கருத்துக்களை முன் வைப்பார்கள். அதை சமுதாயம் பின்பற்றும். அது மாதிரி தான் மனுவும். அவர் கூறியதை இப்போது பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
நீங்க கண்ட கண்ட கீழ்தரமான ஆன்மீக புத்தகங்களை படிக்காமல், விவேகானந்தர், ராமகிருஷ்ணர் புத்தகங்களை படியுங்கள். குறிப்பா விவேகானந்தரின் மனு பற்றி கருத்துக்களை படியுங்கள்.
நம்ம ஆளுங்களோட கெட்ட பழக்கம் இதுதான். பகவத் கீதை, உபநிடதங்கள் போன்றவற்றை படிக்க மாட்டார்கள். காலாவதியான மனுவை படித்துவிட்டு ஒட்டு மொத்த இந்துக்களையும் குறை சொல்லுவார்கள். இது ஒரு ஃபேசனாகவே ஆகிவிட்டது.
கம்யூனிஸம் என்றால் காரல் மார்க்ஸையும் லெனினையும் படிக்கிறீங்கள. அது மாதிரி இந்து மதத்தைப் பற்றி அதிகாரம் உள்ளவர்களான விவேகானந்தர் போன்றோர்களின் கருத்துக்களை படிக்கனும். சும்மா மூன்றாம் தரம் ஆன்மீகப் புத்தகங்களை படிக்க கூடாது. இப்போதைய சமுதாயத்திற்கு ஏற்ற கருத்துக்களை விவேகனந்தரும் ராமக்கிருஷ்ணரும் சொல்லி, வாழ்ந்துட்டு போயிருக்காங்க. அதனால மனுக்கு விடைகொடுங்க. இந்து மதம் அப்டேட் ஆயிடுச்சுங்க. நீங்க இன்னும் பழைய வேர்சனையே பிடிச்சிகிட்டு இருக்கீங்க.
பார்ப்பனியம் சமுதாயத்தை ஒடுக்கி வைத்திருந்தது உண்மை தான். விவேகானந்தரும் அதைப் பற்றி பல இடங்களில் பேசியுள்ளார்.
நம்ம நாட்டு பெண்களின் நிலைமைக்கு, அந்நிய படை எடுப்புகளும் காரணம். குறிப்பாக முஸ்லீம்களின் படையெடுப்பு.
இப்போது நமக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. இனி முன்னேறி போக வேண்டியது தான்.
Post a Comment