March 21, 2011

'பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தியதில்லை!'

இணையத்தள வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன். தமிழ்பேப்பர் டாட் நெட்டில் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, நம்பக்கூடாத கடவுள் என்னும் பெயரில் கிழக்கில் வெளிவந்துள்ளது. இவரது சமீபத்திய நூல், Breaking India. ராஜீவ் மல்ஹோத்ரா என்பவருடன் இணைந்து இந்நூலை அரவிந்தன் எழுதியிருக்கிறார்.

இந்தியாவின் ஒருமைப்பாடு மூன்று முக்கியச் சக்திகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது என்கிறார் அரவிந்தன்.

1) பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம்.

2) சீனாவின் ஆதரவுடன் செயல்படும் மாவோயிஸ்டுகள் மற்றும் புரட்சிகர மார்க்சிஸ்டுகள்.

3) திராவிட மற்றும் தலித் அடையாளத்துடன் செயல்படும் பிரிவினைவாதிகள். இவர்கள் மேற்குலக நாடுகளின் அரவணைப்புடன் செயல்படுபவர்கள்.

நேற்று கிழக்கு அலுவலகத்துக்கு வந்திருந்த அரவிந்தனுடன் அவரது புதிய புத்தகம் குறித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலின் ஒலிவடிவை கீழே அளிக்கிறேன்.


வேத காலம், மநு, இந்து மதம் பற்றிய அம்பேத்கரின் பார்வை என்று உரையாடல் பல விஷயங்களைத் தொட்டுச சென்றது.

திராவிட இயக்கத்தினரும் பெரியாரிஸ்டுகளும் இடதுசாரிகளும் சொல்வது போல் இந்தியாவில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் ஒருபோதும் இருந்ததில்லை என்கிறார் அரவிந்தன். அதற்கான காரணங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.

பரவலான விவாதத்துக்கு உதவும் என்பதால் அந்த உரையாடலை அவர் அனுமதியுடன் இங்கே பகிர்நதுகொள்கிறேன்.

11 comments:

Anonymous said...

Dear Maruthan !

It is your blog, not Arvindan Neelakantan's.

He has many platforms where he airs his views, for e.g. Tamilhindu.com. But none of them includes popular magazines in TN as they dont want to represent his Hindutva face.

In your blog, you give link to anyone, but I would like to know your views on his views. Isn't your blog yours where I have come to read what you view and opine?

Do you agree with him? If so, why so? if not, why not?

Come on, tell us your opinion. Begin with the defintion of the word 'aathikkam', then, proceed to look into history from millennia ago and upto 1950s ! You seem to have read a lot; and hope, a sumptuous feast will be laid on the table.

சக்தி கல்வி மையம் said...

ம்..ம்..நடத்துங்க..நடத்துங்க..

மருதன் said...

jo.amalan

மநு குறித்து நான் சற்று முன்னால்தான் எழுதினேன். அரவிந்தன் என் கருத்தோடு மாறுபடுகிறார். அந்த வகையில், மநு குறித்தும் பார்ப்பனர்கள் குறித்தும் அவர் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள விரும்பினேன். எனவே இந்த உரையாடல்.

அரவிந்தனின் கருத்துகளோடு நான் துளியும் ஒத்துப்போகவில்லை. அவருடைய Breaking India புத்தகத்தை வாசிக்கப்போகிறேன். என் விமரிசனத்தையும் இங்கே விரிவாகப் பதிவு செய்யப்போகிறேன்.

ஹரன்பிரசன்னா said...

தோழர்,
ஆரிய
பார்ப்பனிய
ஹிந்துத்துவ
சாதிய
பாஸிஸ
மதவாத
அடிப்படைவாத
வலையில் விழுந்துவிட்டீர்களா?

ஐயோ, இனி எப்படி நாட்டில் மழை பெய்யும்?

Anonymous said...

வேறு யாரும் சிக்கவில்லையா அநீக்கு.. இப்படி திராவிடர்கள் - பழங்குடிகள் - இஸ்லாமியர் ஆகிய இனத்தின் மீது வன்மம் தெறிக்க தீ வைத்து இந்த அநி-அநீதி இழைத்துள்ளார். ... அதாவது அவரதுக் கூற்றுப்படி பிரமாணர்கள் எல்லாரும் நல்லவர்கள் - முஸ்லிம்கள், திராவிடர்கள், பழங்குடிகள் தான் பிரச்சனைக்குறியவர்கள் ..... சூப்பர் சிந்தனை.. மருதனிடம் இருந்து இதனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ... உலகில் ஒவ்வொரு கணமும் புதிரைத் தாங்கி வருகிறது என சூளுரைத்து டிவி வாங்கியவருக்கு.. உலகின் ஒவ்வொரு செயலுக்குமான எதிர்ச் செயல் வரும் என்ற தத்துவம் தெரியாமல் போய்விட்டது ... என்ன செய்ய sensational ஆக எழுதி வியாபாரம் செய்வதில் வல்லவர்கள் கிழக்கத்தார் ....... தொடருக

Anonymous said...

ஆரிய
பார்ப்பனிய
ஹிந்துத்துவ
சாதிய
பாஸிஸ
மதவாத
அடிப்படைவாத
வலையில் விழுந்துவிட்டீர்களா?

ஐயோ, இனி எப்படி நாட்டில் மழை பெய்யும்...?

என்ன அப்படி சொல்லவிட்டிர்கள் பிரசன்னா....
சோ இருக்கிறார்... துக்ளக் இருக்கிறது...
சுப்ரமணிசாமி இருக்கிறார்.... ஜெயலலிதா மாமி இருக்கிறார்...
ரமேஷ் இருக்கிறார்.... தினமலர் இருக்கிறது....
கமல் ஹாசன் இருக்கிறார்... அவரது பிரமாண களவாணித்தனம் இருக்கிறது...
நாடு முழுவதும் கோவில் கர்ப்ப கிரகங்கள் இருக்கிறது.. அங்கே உங்கள் மாமாக்கள் இருக்கிறார்கள்...
இந்திய அரசு சின்னமான் நான்கு தலை சிங்கத்தில் இன்னும் பூணூல் மட்டும் தான் மாட்டபடவில்லை..
இலங்கையில்.. உங்களுக்காக ராஜபக்சே இருக்கிறார்.... இந்து இருக்கிறது...எத்தனை சிருங்கேரி மடங்கள் இருக்கிறது... கலாநிதி மாறன் இருக்கிறார்.. அவரது பிராமண மனைவியும் இருக்கிறார்.. அவரது தாத்தா இருக்கிறார்.. மற்றும் அவரது குலக்கொழுந்துங்கள்.. அவர்கள தற்சமயம் பிரமாணீயத்தை கடைபிடித்து நீங்கள் விரும்பு நிலபிரபுத்துவம் செழிக்கிறது. எல்லாவற்றையும் உங்கள் சன் டி வி இருக்கிறது....

என்ன ஸார் நீங்க.... சப்ப மேட்டர் மழை அதுக்கு போய் இப்படி கவலைபடுறீங்க..... உங்க அக்ரஹாரத்துல யாரவது... ஒரு அம்பி வயலின் வாசிச்சா.... அந்த ராகத்த கேட்டு மழை சோன்னு... கொட்டாதோ......

வஜ்ரா said...

இடதுசாரிகள் செய்யவேண்டியதை இந்துத்வாவாதிகள் செய்கிறார்கள் என்று இடதுசாரிகள் சொல்லும்போதே மார்க்ஸ்வாதிகள் மரணப்படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகள் என்பது தெரிந்துவிட்டது. பார்ப்பானீயம், பார்ப்பான தகரம், பார்ப்பான பித்தளை என்று இன்னும் பழைய ஈயம்பித்தாளையையே தட்டிக்கொண்டிருக்கிறார் மருத'ர்'. பேச வேறு விசயமே காணோம் அவரிடம்.

கூடா நட்பு கொண்டு சீரழிந்த கூட்டம் இந்திய மார்க்ஸிஸ்ட் கூட்டம். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிருத்தவ பாதிரிகள் என்று எங்கெல்லாம் சண்டை போடவேண்டுமோ அங்கெல்லாம் போய் நாக்கைத் தொங்கப்போட்டு வாலாட்டியதால் வந்த வினை.

ராம்புனியானி பற்றி அநீ சொன்னபோது மருதனிடம் பதில் இல்லை. அதே மருதன் தேவைப்பட்டால் இந்த ராம் புல்லுருவியானியின் நரேந்திர மோடி பற்றிய பிதற்றல்களை தன் வலைப்பதிவில் தமிழில் போடக்கூடியவர் தான்.

இன்றைய தேதியில் மானரோசமுள்ள ஒரு இந்தியக்குடிமகன் மார்க்ஸிஸ்டாக இருக்கவே முடியாது.

Anonymous said...

// ராஜீவ் மல்ஹோத்ரா என்பவருடன் இணைந்து இந்நூலை அரவிந்தன் எழுதியிருக்கிறார்.//

நித்தியானந்தாவின் (ரஞ்சிதா) சொம்புதானே இந்த ராஜீவ் மல்ஹோத்ரா?

நான் யார் ? said...

இக்பால் செல்வன் ...

///இப்படி திராவிடர்கள் - பழங்குடிகள் - இஸ்லாமியர் ஆகிய இனத்தின் மீது வன்மம் தெறிக்க தீ வைத்து இந்த அநி-அநீதி இழைத்துள்ளார்.///

அரவிந்தன் நீலகண்டனின் புத்தகத்திலோ அல்லது இந்தப் பேட்டியிலோ, எள்ளளவும் எள்முனை அளவும் வன்மம் யார் பேரிலும் இல்லை, அதிலும் நீங்கள் சொல்லும் திராவிடர், பழங்குடியினர், இஸ்லாமியர் மீது சிறிதும் இல்லை.

அவர் புத்தகத்தில் வைத்திருக்கும் ஆதார ரீதியான வாதங்கள் எல்லாம் ஆரிய இனம் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி அதன்மூலம் குளிர் காய்ந்த காலனீய ஆக்கிரமிப்பாளர்களது உள் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. காலனீய ஆக்கிரமிப்பாளர் என்ற பகுப்பில் நீங்கள் கூறும் எவரும் வருகிறார்களா?

///உலகின் ஒவ்வொரு செயலுக்குமான எதிர்ச் செயல் வரும் என்ற தத்துவம் தெரியாமல் போய்விட்டது ...///

யாருக்கு? தங்களுக்கா, ஒப்புதல் வாக்கு மூலம் என்றால் சரி. ஆனால் அரவிந்தன் நீலகண்டனின் புத்தகமும் சரி இந்தப் பேட்டியும் சரி, காலனீய ஆக்கிரமிப்பாளர்களின் பொய்யுரைக்கான - இரு நூற்றாண்டுக் காலப் பொய்யுரைக்கான - எதிர்விளைவே ... அத்தகு காலனீய ஆக்கிரமிப்பாளர்களின் அடிவருடிகளாக இருந்தவர்களின் அடியொற்றி நடப்போரின் பொய்யுரைக்கான எதிர்விளைவே என்பதை எண்ணிப் பாருங்கள்.

பொள்ளாச்சி ஆறுமுகம் தர்மபூபதி said...

We people are not realizing about hindutva.it's way of life.then communists are always opposing only Hindu religion supposed their policy is always against religion.secondly Dalit organizations are opposing Hindus only to help foreign religions.Ambedkar himself not supporting religions,that's why he selected buddisht .but our Dalit organisatios are trying to help and encouraging conversions to foreign religions.

Amrutha Putran said...

Communism has already dead. Still some people are doing business/politics using the dead body. Catalism will soon get die. Don't dive to it. Be Hindu, understand Hindutva, serve Hindustan. This is the best way for your life. Thanks.