May 23, 2011

சமச்சீர் கல்வித் திட்டம் தேவையா?


முந்தைய கருணாநிதி அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க ஜெயலலிதா அமைச்சரவை முடிவெடுத்துள்ளதைச் சிலாகித்துப் பாராட்டுகிறார்கள் பலர். 'அதிரடி என்றால் இதுதான்!' என்றார் நண்பர் ஒருவர். 'ஆட்சி நடைபெறுகிறது என்பதை ஒவ்வொரு நாளும்  அம்மா எப்படி உணர்த்துகிறார் பார்த்தீர்களா?'

சமச்சீர் கல்வித் திட்டம் பற்றிய விவாதம் தொடங்கிய தினம் தொடங்கி இன்று வரை அது பற்றிய சர்ச்சைகள் ஓயவில்லை. சமச்சீர் கல்வியை ஆதரித்தும் நிராகரித்தும் பலர் தங்கள் கருத்துகளைத் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மூன்று வகைகளில் அடக்கலாம்.

1)  சமச்சீர் கல்வித் திட்டம் அவசியம் வேண்டும்
2)  வேண்டும், ஆனால் இப்போதுள்ள பாடத் திட்டத்தின்படி வேண்டாம்
3)  வேண்டவே வேண்டாம்!

அவசியம் வேண்டும் என்று சொல்பவர்கள் முன்வைக்கும் காரணம் இது. கல்வித் துறையிலும் மக்கள் இயக்கத்திலும் ஈடுபடும் பலரது கனவுத் திட்டம் இது. அரசு பள்ளிகளுக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் இடையில் உள்ள கல்வித் தர வேறுபாட்டைக் களைந்து அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்தில் பாடங்கள் சொல்லித்தருவது அவசியம். வசதி இருந்தால்தான் நல்ல படிப்பு கிடைக்கும் என்னும் நிலை அநாகரீகமானது. கல்வி என்பது அனைவருக்குமானது. இதில் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கக்கூடாது.

இரண்டாவது வகையினர், சமச்சீர் கல்வியை ஆதரிக்கிறார்கள். அதே சமயம், கருணாநிதி அரசு கொண்டுவந்த கல்வித் திட்டத்தை மேம்படுத்தவும் விரும்புகிறார்கள். மெட்ரிக் பள்ளித் திட்டத்துக்கு இணையாக அரசுப் பள்ளித் திட்டம் உயர்த்தபட வேண்டும் என்பது இவர்கள் வாதம். இவர்களில் சிலர் ஜெயலலிதா அரசின் தற்போதைய முடிவை ஏற்கிறார்கள்.  கருணாநிதியை மையப்படுத்தும் செம்மொழிப் பாடல் போன்றவற்றை நீக்கிவிட்டு, நிபுணர்கள் பரிந்துரையுடன் கூடிய மேம்பட்ட பாடத்திட்டம் அமைக்கப்பட்டால் அதை வரவேற்க இவர்கள் தயாராக இருக்கிறார்கள். 

முதல் பிரிவினருக்கும் இரண்டாவது பிரிவினருக்கும் இடையில் வித்தியாசங்கள் அதிகம் இல்லை. எப்படிப்பட்ட பாடத்திட்டம் அமைக்கப்படவேண்டும் என்பதில் மட்டும்தான் கருத்து வேறுபாடு.  

சமச்சீர் கல்வித் திட்டம் வேண்டாம் என்று சொல்பவர்களின் வாதத்தை ஆராய்வோம். கீழே இருப்பவர்களை மேலே கொண்டு வருவதற்குப் பதில் மேலே உள்ளவர்களைக் கீழே இழுத்துவிடுகிறது சமச்சீர் கல்வி.அனைவருக்கும் ஒரே கல்வி என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. கல்வியில் தர வேறுபாடுகள் இருப்பது தவிர்க்கவியலாதது. படிக்கும் மாணவர்கள் இடையில் கற்கும் திறனில் வேறுபாடுகள் இருப்பதில்லையா? அப்படி இருக்கும்போது, எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வியை எப்படி வழங்குவது? 

என் மகனை/மகளை நல்ல பள்ளியில் சேர்க்கவே நான் விரும்புகிறேன். எல்லோருக்கும் அளிக்கப்படும் கல்வி அல்ல, கூடுதல் தர முக்கியத்துவம் வாய்ந்த கல்வியை அவர்களுககு அளிக்க விரும்புகிறேன். கூடுதல் டொனேஷனும் கூடுதல் பள்ளிக் கட்டணமும் செலுத்த நான் தயாராக இருக்கிறேன். சமச்சீர், சமத்துவம் என்பதெல்லாம் இடது சாரிகளின் வெற்று அரசியல் கோஷம். கேட்க நன்றாக இருக்குமே ஒழிய நடைமுறைக்கு உதவாது. நாளை என் குழந்தை நன்றாக மேல்படிப்பு படிக்கவேண்டும். நல்ல உத்தியோகத்தில் அமரவேண்டும். நிறைய சம்பாதிக்கவேண்டும். அதற்குத் தேவை தனிச்சிறப்பு வாய்ந்த மெட்ரிக் கல்வி.

சமச்சீர் கல்வியை இந்தப் பிரிவினர் கடுமையாக எதிர்த்தனர். பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டபோது இவர்கள் அவசரமாக தங்கள் குழந்தைகளை
CBSE பள்ளிகளுக்கு மாற்றும் முயற்சியில் இறங்கினர். நல்ல படிப்பு என்றால் மெட்ரிக். அது இல்லை என்று ஆகிவிட்டபடியால், CBSE.  'எங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லையா என்ன?'

நேற்று வெளிவந்த அரசு அறிவிப்பு நிச்சயம் இவர்களுக்குப் பெருத்த ஆறுதலை அளிக்கப்போகிறது. நேற்றே தொலைக்காட்சியில் பலர் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். 'இனி பயமின்றி மெட்ரிக் பள்ளிகளிலேயே என் குழந்தையைப் படிக்கவைப்பேன்.'

அந்த அளவுக்கு அரசுப் பள்ளிகள் மீதும் அரசுப் பாடப் புத்தகங்கள் மீதும் பயம்! நல்ல கல்வி அங்கே கிடைப்பதில்லை என்று காரணம் சொல்லப்பட்டாலும் உண்மை காரணம் அதுவல்ல. அரசுப் பள்ளி அனைவருக்குமானது. பல்வேறு பிரிவுகளில் இருந்தும் மாணவர்கள் அங்கே வந்து பயில்கிறார்கள். பெரும்பாலானவ்ர்கள் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குப் போதிக்கப்படும் கல்வித் தரம் நிச்சயம் அடிமட்ட அளவில்தான் இருக்கும். அவர்களுக்கு அது போதுமானதாக இருக்கலாம். என் எதிர்பார்ப்புகள் வேறு.

ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், என் குழந்தைகள் பெரும்பாலானோரிடம் இருந்து வேறுபட்டு இருக்கவேண்டும். இந்த வேறுபாட்டுக்காக நான் கூடுதல் கட்டணம் செலுத்த தயார். இந்தக் கூடுதல் கட்டணத்தைக் கட்ட கூடுதலாக உழைக்கவும் தயார். மெட்ரிக் பள்ளிகள் இந்த 'வேறுபாட்டை' மார்க்கெட்டிங் செய்துதான் இதுநாள் வரை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றன. உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும் பெருகிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரையும் இவர்கள் டார்கெட் செய்கிறார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை கல்வி என்பது ஒரு புராடெக்ட். பற்பசை போல. உப்பு போல. அரிசி போல. ரேஷன் அரிசிக்கும் பொன்னி அரிசிக்கும் வித்தியாசம் வேண்டும் அல்லவா? கல் உப்பைக் காட்டிலும் ஐயோடைஸ்ட் உப்பு உயர்வானது அல்லவா? அரசே ஐயோடைஸ்ட் உப்பை அளித்துவிட்டால், அதுவரை அதனை பிராண்டிங் செய்து அதிக விலைக்கு விற்று வந்தவர்கள் எதிர்க்க மாட்டார்களா?

மெட்ரிக் பள்ளிகளின் வெற்றி, வாடிக்கையாளர்களையும் (பெற்றோர்களையும்)  தங்கள் போராட்டத்தில் இணைத்துக்கொண்டதுதான். இப்படி அரசு அடிக்கடி குறுக்கீடு செய்துகொண்டிருந்தால் பிசினஸ் பாழ் என்பதால் தங்கள் பிரசார இயந்திரங்களை அவர்கள் முடுக்கிவிட்டிருக்கிறார்கள். இப்போது அவர்களது கோரிக்கை சமச்சீர் கல்வி வேண்டாம் என்பது மட்டுமல்ல, கல்வியை தனியார்மயமாக்கவேண்டும் என்பதும்.

1) அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம் என்பது ஏற்கத்தக்கதல்ல. பாடத்திட்டங்கள் பலவாறாக இருக்கவேண்டும். சில பாடத் திட்டங்களும் தேர்வு முறையும் பிறவற்றை விட கடினமாக இருக்கலாம்.

2)  மெட்ரிக் பாடத் திட்டம் அரசுப் பாடத்திட்டத்தை விட தர அளவில் மேம்பட்டதாக இருப்பதில் தவறில்லை.

3)  அரசின் கட்டுப்பாட்டில் கல்வி இருப்பதால்தான் அரசுப் பள்ளிகளின் தரம் குறைவாக இருக்கிறது. இதைத் தவிர்க்க ஒரே வழி, கல்வியைத் தனியார்மயமாக்குவதே.

மேற்படி கருத்தை பத்ரி தன் வலைப்பதிவில்  (கமெண்ட்ஸ் பகுதியில்) முன்வைத்துள்ளார்.  (இது பற்றி தனிப் பதிவு எழுதுவதாகவும் சொல்லியிருக்கிறார்).

ஆக, அரசுப் பாடப் புத்தகங்கள் தரக் குறைவாக இருந்தால் அதை சீர்செய்யவேண்டும் என்று இவர்கள் கோரவில்லை. அரசுப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவரவேண்டும் என்பதல்ல இவர்கள் எதிர்பார்ப்பது. அந்தத் துறையை அப்படியே எடுத்து தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிடவேண்டுமாம்! எல்லாவற்றையும் அரசே செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறு என்கிறார்கள் இவர்கள். 'தொலைபேசித் துறையில் தனியார்கள் வந்துவிட்டதால் மக்களுக்கு நன்மைதானே ஏற்பட்டுள்ளது? (2ஜி வேறு கதை போலும்!). மருத்துவம் முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டிலேயே இருந்திருந்தால் இன்று என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும்?'

இவர்கள் முன்வைக்கும் இறுதித் தீர்வு இதுதான். மின்சாரம், குடிநீர், சாலை அமைத்தல், ராணுவம் என்று ஒவ்வொரு துறையாக அரசு கழற்றிவிடவேண்டும். அரசு தலையீடற்ற, கட்டுப்பாடற்ற Laissez-faire பொருளாதாரக் கொள்கையை முழுமையாக இந்தியாவில் அமல்படுத்தப்படவேண்டும். சிம்பிள்!

கல் உப்பு வாங்குபவர்களின் கதி? 'இது காம்படிட்டிவ் உலகம் சார். எல்லாரையும் பார்த்து கவலைப்பட்டுக்கிட்டிருக்கமுடியாது. யார்கிட்ட திறமை இருக்கோ, யார்கிட்ட வசதி இருக்கோ அவன்தான் மேலே வரமுடியும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்!'

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

16 comments:

Anonymous said...

All can't be left to the market. Public choice and privatization may go hand in hand in developed countries where market is matured enough. But, for developing countries like ours, govt must hold key sectors including the education. We have to find ways to increase competitiveness within the govt. Privatization is not the panacea for all ills.
-Parames.

Jaya said...

9 Out 10 ppl, said the same lines, when i asked them.

'இது காம்படிட்டிவ் உலகம் சார். எல்லாரையும் பார்த்து கவலைப்பட்டுக்கிட்டிருக்கமுடியாது. யார்கிட்ட திறமை இருக்கோ, யார்கிட்ட வசதி இருக்கோ அவன்தான் மேலே வரமுடியும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்!'

- Enna modumai sir ithu...
- Jaya

Anonymous said...

Parames should write comments in tamil language.

marudhan sir,
you just inform to people about tamileditor.org

go to settings. then click comments. see comment form message box. it is empty now in yours. within it paste this


[a href="http://tamileditor.org/"]ஆங்கில வழியில் தமிழை டைப் செய்ய‌[/a]

click save settings.

please change [ and ] to < and >

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

மூணாம் முறையாக
முடிசூடி வந்திருக்கும்
அம்மா முதல்வருக்கு
அன்பான வணக்கமுங்க.

அரசியலில் நேர்எதிராய்
அணிமாற்றம் சகஜமுங்க
பதவியில் இருப்பவர்க்கும்
பணிமாற்றம் சகஜமுங்க

எல்லாமே மாறிவரும்
என்பதுதான் நிஜமுங்க
நல்லதைத் தொடருங்க
அல்லதை விட்டுருங்க

கல்வி ஒண்ணுதான்
கடைத்தேறும் வழியின்னு
உலகமே உணர்ந்திருக்கு
நான்சொல்ல வேணாங்க

வேறெங்கும் இல்லாத
விசித்திரமாய்த் தமிழ்நாட்டில்
ஐந்துவகைக் கல்விமுறை
அநியாயம் நடந்துச்சுங்க

‘சமச்சீர்க் கல்விமுறை
சரியான முறை’யின்னு
மக்களில் பெரும்பாலோர்
மனசார நம்புறோம்’ங்க

கல்வி முதலாளிங்க
கொள்ளை அடிச்சதெல்லாம்
குடிமுழுகிப் போச்சுன்னு
குமுறித் தீத்தாங்க

சமச்சீர்க் கல்விமுறை
சமுதாய மாற்றுமுறை
தெரிஞ்சோ தெரியாமலோ
திட்டமிட்டுத் தந்தாங்க!

பலகோடிப் புத்தகங்கள்
பள்ளிக்கூடம் வந்தாச்சுங்க
வேண்டாத பக்கங்கள
விட்டுவிடச் சொல்லிடுங்க

பழைய கல்விமுறை
பழையபடி வேணாம்’ங்க!
பள்ளிக்கூடம் திறக்கிறத
தள்ளிப்போட வேணாம்’ங்க!

நினைச்சதை நினைச்சபடி
துணிச்சலோட மாத்துவீங்க!
களைகளைக் களைஞ்சிடுங்க
செடிகளைக் காத்திடுங்க!

பத்தாம்’ப்பு வாத்தியாரின்
பணிவான வேண்டுகோள்’ங்க!
--- நா.முத்து பாஸ்கரன்
துணைத் தலைமை ஆசிரியர்
அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி
புதுக்கோட்டை -622 004
செல் : 94431 93293
Blog: www.valarumkavithai.blogspot.com

virutcham said...

சமச்சீர் கல்வி பற்றிய என் கருத்தை ஏற்கனவே பத்ரி பதிவில் கூறி இருக்கிறேன். இப்போ சமீபத்தில் தொ.கா பார்த்த ஒரு படத்தின் காட்சி ஓன்று நினைவுக்கு வருகிறது. அரசு வைத்திருக்க வேண்டிய கல்வித் துறையை தனியாரிடம் விட்டு மதுக்கடைகளை தன்னிடமும் அரசு வைத்திருப்பது தான் நாட்டின் சீரழிவுக்குக் காரணம் என்று ஒரு வசனம் வரும். அருமையான வசனம்.

Jayadev Das said...

அரசுப் பள்ளிகள்...!!! நகைப்புதான் வருகிறது. நீங்கள் ஒரு சர்வே எடுங்கள், அரசு பள்ளிகளில் பணி புரியும், ஆசிரிய ஆசிரியைகளில், எத்தனைபேர் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார்கள் என்று. 2% கூட தேறுமா என்பதே சந்தேகம். அதற்காக அரசுப் பள்ளிகள் மோசம் என்று அர்த்தமா? இல்லவே இல்லை. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு என்று யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இப்போதும் சென்னை அண்ணா பல்கலைக் கழகம், ஐ.ஐ.டி எல்லாம் அரசு கல்வி நிறுவனங்கள் தானே, என் எந்த தனியார் கல்லூரியும் இவற்றின் தரத்துக்கு ஈடாக நெருங்கக் கூட முடியவில்லை? சென்னை எக்மோர் குழந்தைகள் இருதய மருத்துவ மனைக்கு வட இந்திய மக்கள், பணக்காரர்களாக இருந்தும், இங்கே வந்து காத்திரும்து, பிளாட் பார்மில் படுத்திருந்து கூட வைத்தியம் செய்து கொண்டு போகிறார்களே, அது எப்படி? முறைப் படி மேம்படுத்தினால், அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் தனியாரை விட எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல, மாறாக பல மடங்கு மேலானவர்கள் என்று நிரூபிக்க முடியும் ஆனால், தனியார் பிழைக்க இவற்றை இந்த நிலையிலேயே வைத்துள்ளார்கள். That's all.

Nirmal said...

If we strictly implement restricted Fee restriction as per Justice Givindarajan report, Equality in Education will automatically come. Having Free Education as fundamental right as per our constitution you can not privatize Education.

Anonymous said...

// 'இது காம்படிட்டிவ் உலகம் சார். எல்லாரையும் பார்த்து கவலைப்பட்டுக்கிட்டிருக்கமுடியாது. யார்கிட்ட திறமை இருக்கோ, யார்கிட்ட வசதி இருக்கோ அவன்தான் மேலே வரமுடியும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்!'//

இதற்கு மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

மருது said...

நீங்கள் கூறிய மூன்று வகையில் முதல் வகையறா மட்டும் தனி, இரண்டாம் வகையறாவும் மூன்றாம் வகையறாவும் ஒன்றே ..

இரண்டாம் வகையறாவினர் சமரச வாதம் பேசி விசயத்தை நீர்த்துப் போகச் செய்து விடுவர்.

நல்ல பதிவு.

Jay Rajamanickam said...

உங்கள் கட்டுரைகளிலேயே இது தான் மிக அருமையானது. சமச்சீர் கல்வியில் உங்கள் கருத்தே எனது கருத்தும். "நா ம் மினரல் வாட்டர் குடிக்கிறோம், இப்போ இவனுகளும் குடிப்பானுகளாம்!" - இப்படிபட்ட மனநிலை உள்ளவர்கள் தான் சமச்சீர் கல்வியை எதிர்க்கிறார்கள். சமச்சீர் கல்வியிலும் தரம் வாய்ந்த பாடத்திட்டத்தை கொண்டுவர முடியும். அரசு பாடத்திட்டம் ஒன்றும் கேவலமான திட்டமல்ல. அதில் படித்து தான் எவ்வளவோ பேர் விஞ்ஞானிகளாகவும், அதிகாரிகளாகவும், தலைவர்களாகவும் உயர்ந்துள்ளார்கள். நானும் எனது நண்பர்கள் பலரும், எங்கள் ஜூனியர், சீனியர்களும் அரசு ஆங்கில வழி கல்வியில் படித்து வெளிநாடுகளில் ஆராய்ச்சி பட்டம் பெற்று, உலகின் தலைசிறந்த பல பல்கலைகழகங்களில் ஆராய்ச்சியாளர்களாக இருக்கின்றோம். அதைவிட அரசு தமிழ் வழி கல்வியில் படித்து எவ்வளவோ பேர் மிகப் பெரிய பதவிகளில் உள்ளனர். சர் சி.வி. ராமன், அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞானி அண்ணாதுரை ஆகியோர் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல.

ப்ரி கேஜிக்கு (pre kg) ஐந்து இலக்கங்களில் வருடம் இருமுறை பணம் கட்டுபவர்கள் தான் இம்மாதிரியான எதிர்ப்பை கிளப்புகிறார்கள். நாடு எப்படி போனாலும், தான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள்.

சமச்சீர் கல்வித் திட்டம், நம் நாடு முன்னேற்றப் பாதையில் போவதை குறிக்கின்றது. அதை தடுக்க நினைக்கிறார்கள் நவீன பார்ப்பனர்கள் (மேற்கூறிய சமச்சீர் கல்விமுறையை எதிப்பவர்கள், ஜாதியல்ல).

எழில் said...

பத்ரி நிச்சயம் தனியர்களை தான் ஆதரிப்பார் இது தெரிந்தது தானே. நாடடை நிர்வாகம் செய்யும் வேலையையும் அம்பானி, டாடாவிடம் கொடுத்து விடலாமே. நிம்மதியாக இருக்கும்.

Anonymous said...

எனக்கு ஒரு சந்தேகம்.

சமச்சீர் கல்வி தேவையா தேவை இல்லையா? அது சரியா தவறா?


நேரடியாக நீங்களாகவே கடைசியில் சொல்லியிருக்கலாம்...

Anonymous said...

மருதன் தன் குழந்தைகளை எந்த பாட திட்டத்தில் படிக்க வைக்கிறார்? தமிழ் வழி அரசு பள்ளி கல்வியா அல்லது வேறா? எப்போதும் அரசை குற்றம் சொல்லும் எழுத்தாளர்கள் நிலை அறியவே இந்த கேள்வி...

Anonymous said...

தமிழ் புத்தகங்களில் கலைஞர் தன் புகழை தானே பாடி தன்னை பாராட்டி தானே எடுத்த விழாக்களை பாடங்களாக வைத்திருக்கிறாரோ என்னவோ?

kavitha said...

Mr. Marudhan,
what about your children? In which school they are studying - GOVT ??
Before talking about the entire peoples' mentality and about educational system - tell about yourself.
BTW - read pa.ra's blog which has content from 10th std book.

திருச்சிராப்பள்ளி தமிழச்சி said...

ஐயா பெரியவர்களே, முதியவர்களே, அறிவாளிகளே, எல்லோருக்கும் என் முதற்கண் வணக்கம்.
சபாஷ், நான் சின்னப்பையன். உங்களுடன் போட்டி போடும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.

நீங்கள் ‘சமச்சீர் கல்வி’ வேண்டுமா, வேண்டாமா என்று நாடளாவில் நாட்கணக்கில் பட்டிமன்றம் நடத்தி நீதிமன்றம் வரை சென்று வந்ததைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ‘சமச்சீர்’ என்ற சொல்லுக்கு ஒருவனுக்கும் அர்த்தம் தெரியவில்லை என்று கேவலப்படுத்தத்தான் தோன்றுகிறது. மன்னிக்கவும். போட்டி என்று ஆன பின், வயது வித்தியாசமில்லாமல் தான் பேசவேண்டிருக்கிறது.

நான் இங்கு சொல்ல போகும் கருத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ‘அறிவாளிகள்’ வயிற்றிலும் புளியைக் கரைக்கலாம். ‘சமசீர்கல்விக்கும்’ கருணாநிதியின் ‘சமச்சீர் கல்விக்கும்’ ஏகப்பட்ட வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில் பல காலங்களுக்கு முன் நான் எழுதியதை திருப்பி எழுதும் நிலைக்கு உங்களின் அறிவிலித்தனமான பேச்சுக்கள் தள்ளிவிட்டது.
‘சமச்சீர் கல்வி’ என்பதின் உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளங்களில் காணலாம்.
1. http://www.kelvi.tk
2. http://arivuu.files.wordpress.com/2011/08/sivavidya.pdf
மேலுள்ளவைகளைப் படித்து விட்டு வாரும். சமச்சீர் கல்வி பற்றி எந்த அளவிற்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார், முதலில் ‘சமச்சீர் கல்வி’ என்றால் என்ன என்பதை அறியும். கல்வித்துறையில் பணிபுரியும் முட்டாள்களே மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். கருத்துக்களைத் திரிக்காதீர்கள். திரித்தால், என்போன்றவர்களிடம் கேவலப்பபட்டுப் போவீர்கள். செய்யுமுன் சிந்தித்து செயல்படுங்கள். கால் செருப்பு தூக்கப்போனால் பிறகு செருப்படி வாங்கவேண்டியதுதான்.
———————————————————

அறிவை வ‌ள‌ர்த்துக் கொள். இது ஒவ்வொருவ‌ரும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கூறும் அறிவுரை. உங்க‌ள் குழந்தைக‌ளை எங்க‌ள் ப‌ள்ளிக்கு, க‌ல்லூரிக்கு அனுப்புங்க‌ள். நாங்க‌ள் அவ‌ர்க‌ளின் அறிவை வ‌ள‌ர்த்து விடுகிறோம். இது திருட்டுக் க‌ய‌வாளி ஆசிரிய‌ கொள்ளைக்கூட்ட‌ங்க‌ளின் பொய்யுரை. அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ஒருவ‌ன் ப‌ல‌ ஆண்டுக‌ள் ப‌ள்ளி சென்று, புத்த‌க‌ங்க‌ள் ப‌ல ப‌டித்து, பாட‌ங்க‌ள் ப‌ல‌ ப‌யின்று, தேர்வுக‌ள் ப‌ல எழுதி, ப‌ட்ட‌ங்க‌ள் ப‌ல பெற‌வேண்டுமா? தேவையில்லை. உன்னிட‌ம் சிந்திக்கும் திற‌னிருக்கிறதா? அது போதும். நான் காட்டும் வ‌ழியில் சிந்தித்துப் பார். வ‌ள‌ரும் உன் அறிவு.

கேள்வி: ஒன்றைப்ப‌ற்றி என் அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?

ப‌தில்: ஒன்றைப்ப‌ற்றி அறிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌வைக‌ளை அறியும்போது அதைப்ப‌ற்றிய‌ உன் அறிவு வ‌ள‌ரும்.
ஒன்றைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

.
.
.
விதிப்ப‌டி பொருளா? பொருட்ப‌டி விதியா? எதுவும் விதிப்ப‌டிதான் என்கிறது அறிவிய‌ல். விதிப்ப‌டிதான் விமான‌ங்க‌ள் உருவாக்கப்ப‌டுகின்ற‌ன‌. விதிப்ப‌டிதான் ஏவுக‌ணைக‌ளும், ராக்கெட்டுக‌ளும் உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌ன. விதிப்ப‌டிதான் ர‌யில் என்ஜினும், உன் இத‌ய‌மும் இய‌ங்குகிற‌து. நீ உண்ணுவ‌து செரிப்ப‌தும் விதிப்ப‌டிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும். பூமி சூரிய‌னைச் சுற்றுவ‌தும் விதிப்ப‌டிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்ப‌டிதான் இய‌ங்குகிற‌து. விதிப்ப‌டிதான் எதுவும் தோன்றி ம‌றைகிற‌து. விதிப்ப‌டிதான் உன் பிற‌ப்பும், இற‌ப்பும். விதிப்ப‌டிதான் திட்ட‌ங்க‌ள் உருவாக்க‌ப்படுகின்ற‌ன‌. விதிய‌றியாத‌வ‌ன் திட்ட‌மிட்டு ஏவுக‌ணைக‌ளையும், விமானங்க‌ளையும், ராக்கெட்டுக‌ளையும், ர‌யில் என்ஜின்க‌ளையும், க‌ணிணிக‌ளையும் உருவாக்குவ‌தில்லை.

பொருளுக்குப் பொருள் மாறுபடும் எதுவும் விதியாகாது. விதி நேரத்திற்கு நேரம் மாறுபடக்கூடிதல்ல. இடத்திற்கு இடம் மாறுபடுவதும் விதியல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்றும் பாகுபாடில்லை. விதியில் புதுமையைப் புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப் பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என் விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.